Wednesday, December 1, 2010

Pucca devotee and a Kuchha devotee ?




விநாயக சீதாராம் என்பவர் ஒரு முறை பண்டார்பூருக்குச் சென்றுவிட்டு சீரடிக்குக் கிளம்பினார். அப்போது பண்டார்பூரில் இருந்த ஒரு இனிப்புகள் விற்கும் கடைக்குச் சென்று பாபாவை தான் கணப் போவதால் நல்ல இனிப்பு பண்டம் தருமாறு கேட்க அவனும் ஒண்ணரை சேர்இனிப்பை தந்தான்.
மறுநாள் பாபாவைக் காணச் சென்ற விநாயக சீதாராமிடம் பாபா ' இந்த இனிப்பை பண்டார்பூரில் இருந்து வாங்கி வந்தாயா?' எனக் கேட்டார். அவரும் ஆமாம் என்றதும் ' அதை பாபா எடுத்துக் கொண்டால் தான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்' என்றும் சீதாராம் கூறினார்.

பாபா அதில் சிறிது எடுத்துக் கொண்டு மீதியை அவரிடம் ஸ்ரீ பண்டுரன்கனின் பிரசாதம் என்று கூறித் தந்தார். பாபா அனைத்து இடத்திலும் இருப்பவர் என்றதால்தானே அது பண்டார்பூர் இனிப்பு என்று தெரிந்து இருந்தது.

இன்னொரு சம்பவம்.

ஒரு முறை சீதாராம் நானா சாஹேப் சந்தோர்கருடன் சீரடிக்குச் சென்றார். வழியில் கோபர்கோனில் இறங்கியவர்கள் கோதாவரி நதியில் குளித்தனர். நானா சாஹேப்பும் அவரும் தேநீர் அருந்தியவுடன், நானா சாஹேப் ஐந்து சேர் பால் வாங்கினார். அதை குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் தந்தார். அதைப் பெறுவதில் ஒரே போட்டி. சீதாராம் கூட்டத்தினரிடம் கூறினார் ' வீணாக அவரை தொந்தரவு செய்யாதீர்கள் . அவர் உதவி கலெக்டர், மேலும் பாபாவின் பக்கா ( உண்மையான ) பக்தர் என்றார். அவர்கள் சீரடிக்குச் செல்ல டோங்கா காத்திருந்தது. ஆரத்திக்குப் போக வேண்டும். ஆகவே விரைவாக அவர்கள் அதில் ஏறி சீரடிக்குச் சென்று பாபாவின் கால்களில் விழுந்து வணங்கினர். ஆரத்தி முடிந்ததும் பாபா சீதாராமிடம் கேட்டார்

' நானா பக்கா (உண்மையான) பக்தன், நீ கச்சா( போலியான ) பக்தனா? அதைக் கேட்ட சீதாராம் ஆச்சரியம் அடைந்தார். பாபா அனைத்தையும் எப்படி அறிந்து கொள்கின்றார் என புரியவில்லை. எங்கோ நடந்தது பாபாவுக்கு எப்படித் தெரியும்? . பாபா தனது பக்தர்களுக்கு நீதிக் கதைகளைக் கூறுவார். அவர்களைநல் வழிக்கு அழைத்துச் செல்வார்.

சீதாராம் ஒருமுறை சந்த் துகாராம் கூறியதை நினைவு கூர்ந்தார் ' ஒரு சன்யாசியை தொட்ட கணத்திலேயே ஒருவருடைய பேராசை எரிந்து விடும். ஆகவே நாம் நம்முடைய குருவின் பாதங்களில் முழு நம்பிக்கையும் வைக்க வேண்டும்'. துக்காராம் கூறினார் ' கைகளும் கால்களும் சந்தனக் கட்டைகள். உடலில் உள்ள மற்ற பாகங்களும் அதற்கு விலக்கு அல்ல. எரியும் விளக்கை சுற்றி இருட்டு இருக்குமா? சக்கரை எப்படிப் பட்டது? அதன் உடல் முழுதும் இனிக்கும் அல்லவா?. ஆகவே ஒரு நல்ல மனிதரிடம் நீ குறைகளைக் காண முடியாது. '

(Translated into tamil by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.