A unique experience-Sai devotee Chandbala.
அன்பானவர்களே,
இதை குவைத்தில் உள்ள சந்ரபாலாவின் சார்பில் அவருடைய சகோதரர் சின்ஹா என்பவர் அனுப்பி உள்ளார் . படியுங்கள்.
மனிஷா
-----------------------------
'' நான் எதை குவைத்தில் இருந்து எழுதுகின்றேன். என் தங்கைக்கு நரேந்திர சிங் என்பவருடன் திருமணம் ஆகி உள்ளது. அவர்கள் இருவருமே பாபாவின் பக்தர்கள்.
என்னுடைய சகோதரி ஒரு நாள் பஜனை பாடல்களை டவுன்லோட் செய்து கொள்ளும் நோக்கத்தில் அதன் பெயர்கள் தெரியாமல் பால்கி என முதலில் டைப் செய்தால். அது பழைய ஹிந்தி படமானபால்கியை கொண்டு வந்தது. சரி என அவள் முதல் பாடலைக் கேட்கலாம் என எண்ணி அதை போட்டபோது அதிர்ச்சியாக பாபாவின் படம் ஸ்க்ரீனில் வந்தது. பாபாவுக்கும் பால்கி ஹிந்தி படத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. பாபா தரிசனமா ? அதை நம்ப முடியாமல் அவள் தன்னுடைய மொபைல் போனில் படம் பிடித்துக் கொண்டாள். வந்ததும் உண்மையான பாபாவின் பால்கி பாடல்தான்.
மீண்டும் அடுத்த பாடலை போட்டாள். அதிலும் வந்தது இன்னொரு காட்சியில் பாபாவின் படம். வந்ததும் உண்மையான பாபாவின் பால்கி பாடல்தான். அதையும் படம் பிடித்துக் கொண்டாள். அதை இங்கே காட்டி உள்ளேன்.அதை அவள் என்னிடம் கூறினாள்.. நானும் அதே லிங்கைக் கொண்டு அதே பாடலை அவள் செய்தபடியே , அனால் வந்தது உண்மையான பால்கி படப் பாடலே. இது பற்றி எவராவது எனக்கு விளக்க முடியுமா?
(Translated into Tamil by Santhipriya)
Loading
0 comments:
Post a Comment