Sai photo-Experience of Nimmi Ramesh
இது நிம்மி ரமேஷ் என்பவருக்கு 2000 ஆம் ஆண்டு நடந்தது . அவர் கூறுவதைக் கேளுங்கள்
மனிஷா
''நான் ஒரு மருத்துவ மனையில் வேலை பார்த்து வந்தேன். அங்கு என்னுடைய மாமியாருக்கு உடல் நலமில்லை என்பதினால் சிகிச்சைக்கு சேர்த்து இருந்தனர்.
மாலை நான்கு மணி இருக்கும். நான் மாமியாரை பார்க்கச் சென்றேன் . அப்போது சாயிபாபாவின் ஒரு லேமிநேஷன் செய்த படத்தை அவருக்குக் கொடுக்க எண்ணி கடைக்குச் சென்றேன். அப்போது அந்த லேமிநேஷன் செய்யும் கடை மூடப்பட இருந்தது. அடுத்த வாரம் வருமாறு அவர் கூறினார். என் எனில் அங்கு வாரத்துக்கு ஒரு முறைதான் லேமிநேஷன் செய்வார்கள். நானோ இப்போது மாமியாரை பாபாவின் படத்துடன் பார்க்கச் செல்ல வேண்டும். என்ன செய்வது என யோசனை செய்து கொண்டு இருந்தேன். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த முன்பின் தெரியாத ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர் 'அது என்ன பாபாவின் படமா' என என்னைக் கேட்டார். நாம் ஆமாம் என்று கூறியவுடன் அவர் அந்த கடைக்காரனிடம் அதை லேமிநேஷன் செய்து தருமாறு கூறினார். அனைத்தையும் மூடிவிட்ட அவனும் உடனே ஒன்றும்கூறாமல் அதை செய்து தந்தான். அது எப்படி நடந்தது?
அதை எடுத்துப் போய் நான் படுக்கையில் இருந்த மாமியாரிடம் தந்தேன். அவர் மன மகிழ்ச்சி அடைந்து அதை தலையாணிக்கு அடியில் வைத்துக் கொண்டார் . விரைவிலேயே குணமும் அடைந்து வீடு திரும்பினார். இது சாதாரணமான நிகழ்ச்சியே என நினைக்க வேண்டாம். செய்ய மாட்டேன் என்று கடையை மூடியவன் எப்படி எவரோ ஒருவர் கூறியதைக் கேட்டு அதை செய்து கொடுத்தான்? பாபா தான் சேரவேண்டிய இடத்திற்கு தான் நிச்சயமாகச் செல்வார். அதுவே என் நம்பிக்கை. அவர் மீது நம்பிக்கையுடன் நாம் இருந்தால் அனைத்தும் நன்கு நடக்கும்.''
Loading
0 comments:
Post a Comment