Sai in Dream Experience Part - 2
திருமதி லலிதா சுரேஷ் தனது சாயி அனுபவம் பற்றிக்
கூறுவதைக் கேளுங்கள்
நான் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரத்துக்குச் சென்று வசிக்கலானேன் . இந்தியாவில் என்னுடைய மகள் பன்னிரண்டாவது வகுப்பு வரை C.B.S.E யில் படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று இருந்தாள். அவளுக்கு ஆஸ்திரேலியா பல்கலை கழகத்தில் பட்டப் படிப்பு படிக்க மனு செய்து இருந்தும் எங்கிருந்து இருந்தும் பதில் வரவில்லை. பனிரண்டாவது வகுப்பு படித்து முடித்து ஆறு மாதம் ஆகிவிட்டது. எங்களுக்கு ஒரே கவலையாகி விட்டது.
அது டிசம்பர் மாதம். ஜனவரி மூன்றாம் தேதி அனைத்து பல்கலை கழகங்களும் திறந்து விடும். சரி நேரிலேயே சென்று சில பல்கழகங்களை பார்க்கலாம் எனக் கிளம்பினோம் . கார் இல்லாததினால் ரயிலில் சென்றோம். ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் பாதையை தவற விட்டுவிட்டோம். என்ன செய்வது என முழித்துக் கொண்டு இருந்தோம். அப்போது ஒரு வயதான மனிதர் எங்கள் அருகில் வந்தார். வந்தவரிடம் ஜார்ஜ் தெருவுக்கு எப்படிப் போவது எனக் கேட்டோம். அவர் ' ஓ, ஜார்ஜ் தெருவிற்குத்தானே போக வேண்டும், வழி சொல்கின்றேன். அதக்கு முன் என்னுடைய புது வருட புத்தாண்டுகள். நீங்கள் நினைத்தது அனைத்தும் இந்த வருடம் முதல் நடக்கும்' என என் கையைப் பிடித்துக் குலுக்கிய பின் அங்கு செல்லும் வழியைக் காட்டினார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. முன்பின் தெரியாதவர் எப்படி இப்படி வாழ்த்துகின்றார் ?
பிறகு அதை மறந்து விட்டோம். சிட்னி பல்கலை கழகத்திற்குச் சென்று அனைத்து பிரிவுகளிலும் விசாரித்தோம். அங்கு பன்னாட்டு அலுவலகத்தை தேடிக் கண்டு பிடித்து பொறியியல் கல்லூரிக்கு இடம் கிடைக்குமா என்றோம். என் மகள் நல்ல மதிப்பெண்கள் எடுத்து இருந்ததினால் உடனே இடம் கிடைத்து விட்டது. மன நிறைவோடு வீடு திரும்பினோம்.
அன்று இரவு என்னுடைய கனவில் பாபா வந்தார், மறைந்தார். வழியில் எங்களுக்கு வாழ்த்து சொனவர் வந்தார். அவரும் மறைந்தார். மீண்டும் பாபா வந்தார் என மாறி மாறி அந்த காட்சி வந்தது. அப்போதுதான் நான் உணர்ந்தேன், எனக்கு வழிகாட்டி அருளியது சாயிபாபாவே என.

(Translated into Tamil by Santhipriya)
Loading
0 comments:
Post a Comment