Monday, May 28, 2012

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 36

சாய் அனுபவம் - 36

(Translated Into Tamil by : Mrs. Ramya )


அனைவருக்கும் சாய் தின நல்வாழ்த்துக்கள்.
சத்குருவான சாய் பாபாவை வணங்கி அவரின் நல் ஆசியை பெறுவோம்.அவரின் ஆசியை பெற தகுதியுள்ளவராக நம்மை மாற்ற அவரை தலை குனிந்து வணங்குவோம். ஸ்ரீ சாய் பாபாவின் சரித்திரத்தில் கூறியதாவது, குருவின் ஆசீர்வாதத்தின் அருள் ஒளியானது,அன்றாடம் வாழ்வில் ஏற்படும் பயத்தை அகற்றி நமக்கு விமோசனத்தையும், அவல நிலையை மாற்றி மகிழ்ச்சியையும் தர வல்லது. நம் சத்குருவை எப்போதும் நம் மனதில் நினைத்திருக்க நம் துன்பங்கள் முடிவுக்கு வந்துவிடும்.  மேலும் இழப்புகள் குறைந்து, இவ்வுலகில் இம்மைக்குரிய அவலநிலை அழிந்து விடுகிறது.அதனால் யாரெல்லாம் நல்வாழ்வை தேடி அலைகிறார்களோ அவர்கள், அவர்களது எண்ணத்தை தூய்மைப் படுத்திக் கொள்ளும் விதமாக  நம் பாபாவின் சரித்திரத்தை கவனமாக கேட்க வேண்டும்.
சத்குரு ஸ்ரீ பாபாவை மனதில் திடமாக நினைத்தவாறு , பாபாவின் குழந்தைகள் அளித்துள்ள இன்னும் பல லீலைகளை படிப்போம்.
ஜெய் சாய் ராம்
மனிஷா
 ------------------------------------------------------------------------------------
 


ஷீரடி சாய் பாபா - வாழ்ந்துக் கொண்டு
நம்மை என்றுமே காக்கும் உன்னத கடவுள் 

சகோதரி மனிஷா
அனைவருக்கும் பாபா தின வாழ்த்துகள்.
பல சூழலில் நடந்த பாபாவின் லீலைகளை பல பக்தர்கள் சொல்வதை படிக்கும் போது, அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாத வண்ணம் உள்ளது. மனிஷா அவர்களே, நீங்கள் பாபாவால் தேர்வு செய்யப்பட்ட அவரின் குழந்தை. பக்தர்களுக்கும் பாபாவிற்கும் பாலமாக இருந்து பக்தர்களின் ஆன்மீக வாழ்விற்கு துணை புரிந்து கொண்டுள்ளீர்கள்.பாபாவின் விருப்பத்திற்கு இணங்க அவரது லீலையை பகிர்ந்துக் கொள்கிறேன்.ஆன்மீக புத்தகமான ஸ்ரீ சாய் சரித்திரத்தில் சொல்லியப்படி, பல விதமான நோய்களை தீர்க்கும் உன்னத மருந்து தான் உதி.உதிக்கும் மேலாக நாம் பாபா மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கும்,பிரார்த்தனைக்கும் பலனாக அவரிடம் இருந்து கிடைக்கும் சக்தியும்,கருணையுமே நம்மை பல நோய்களில் இருந்து காக்கிறது.உதியை நீரில் கலந்து நாம் குடிக்கும் போது அது மருந்தாக செயல்பட்டு நம்மை காக்கிறது.
நான் கொடுத்துள்ள பாபாவின் படத்தை தயை செய்து தளத்தில் இணைத்துவிடுங்கள்.கடந்த சனிக் கிழமை அன்று இரவு 2 மணி அளவில் கடுமையான வயிற்று வலியால் என் நித்திரை கலைந்துவிட்டது.என்னால் பொறுத்துக் கொள்ள முடியாதபடி ஒரு தொந்திரவு.எனவே 2 முதல் 4 மணிக்கு இடையில் எழுந்துவிட்டேன்.அதிகப்படியான எரிச்சல் ஏற்பட்டதோடு வயிற்றுப் போக்கும் உண்டானது.அந்த சமயத்தில் எனது அலுவலகத்தில் நான் செய்த மிகுதியான வேலையை நினைத்து பார்த்தேன்.. இன்று அலுவலகத்தில், எனது கவனக் குறைவுக்கு ஒரு பாடமாக ஒரு முக்கியமான வேலையை நான் என் பொறுப்பில் செய்து முடிக்க எண்ணி நானாக முன் வந்து எடுத்துக் கொண்டேன்.அதனால் அலுவலகத்தில் இருக்க வேண்டியதாயிற்று.எனக்கு உதவியாக இருப்பவரும், வேலை விஷயமாக வெளியே சென்றிருந்தார்.
ஒரு பாபா பக்தர் என்ன செய்ய முடியும்? மீண்டும் உறங்க செல்லும் முன் நானும் நம் சாய் பகவானிடம் வேண்டி, உதியை தண்ணீரில் கலந்து குடித்து விட்டு, சிறிது உதியை வயிற்றிலும், சிறிதை நெற்றியிலும் இட்டு, இன்று உடலுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாமல், நான் நல்ல முறையில் நாளை காலை அலுவலகத்திற்கு சென்று வேலையை முடித்து, உரிய நேரத்தில் மேலதிகாரியிடம் கொடுத்து விட வேண்டும் என்றேன். மேலும் பாபாவின் மந்திரத்தை ஓயாமல் கூறிக் கொண்டே உறங்க சென்றேன்..
அடுத்த வினாடி என்ன நடந்தது என நம் பாபாவிற்கு தான் தெரியும்.நான் நல்ல உறக்கத்திற்கு சென்று காலை சிறிது தாமதமாக எழுந்தேன். எந்தவித எரிச்சலும் வலியும் இல்லை.பாபா என்னை நல்லவிதமாக அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார்.காலை மிகவும் சாதரணமாக அலுவலகம் சென்றேன்.எந்த வித மருந்தையும் எடுத்துக் கொள்ளவில்லை. மருத்துவரிடமும் செல்லவில்லை. தேவை எனில் அதையும் பாபாவே செய்ய வைப்பார். அன்று அதிகம் எண்ணெய் மற்றும் காரம் இல்லாத உணவை எடுத்துக் கொண்டேன்.
நம்பிக்கை இருந்தால் மலையையும் நகர்த்த முடியும்.இது நமக்கு துன்பம் வரும் போது சத்குரு பாபாவின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் பிரார்த்தனை மட்டும் காட்ட இல்லை, எந்த நேரமும் அவர் பற்றிய பேச்சு,செயல்,நினைவை கொண்டு இருக்க செய்கிறது.அது என்றும் பொய்யாகாத ஒன்று.கண்டிப்பாக பாபா நம்மை ரட்சிக்கிறார்.சில சமயம் எப்படி என அறிய முடிகிறது.பல சமயம் எப்படி என யாரும் உணர முடியா வண்ணம் உள்ளது.சில சூழ்நிலைகளை நாம் கடந்து செல்ல வேண்டியது உள்ளது.ஆனால் அதை நல்வழியில் நடத்தி செல்பவர் நம் பாபா . அனைவரும் அறிந்திருக்கக் கூடிய ஒரு கதையை நினைவுபடுத்த விரும்புகிறேன் .
கடவுள் நம்பிக்கை புகுத்தப்பட்ட ஒரு பக்தன் கடவுளை காண்பதற்காக அவர் வாழும் மலையின் உச்சிக்கு, பல கரடு முரடு பாதைகளை தாண்டி சென்றான். அவனின் நம்பிக்கை அவனை மலையை உச்சியை அடைய வைத்தது. ஆனால் கடவுளை நாம் காணப் போகிறோம் என்ற ஒரு வித கர்வமும் அவனிடம் இருந்தது. அவன் அவனது பக்தியை மிகவும் உயர்வானது என நினைத்தான். அவனுக்கு பாடம் புகட்ட கடவுள் எண்ணினார்.
உச்சியை அடைய போகும் நேரத்தில் அவன் கால் தடுமாறி, மாலியில் இருந்து கிலே உருண்டு சென்றான். அப்போது கரும் இருட்டாக இருந்தது. ஒரு சிறிய குன்றின் முனை கிடைக்கவே அதை பிடித்து தன்னிடம் இருந்த சக்தியை கொண்டு இரவெல்லாம் தொங்கிக் கொண்டிருந்தான். அவனுடைய நம்பிக்கையை அவன் இழக்கும் னிடத்தில் கடவுள் குரல் அசிரீரியாக ஒலித்தது.
கடவுள் பக்தனை கைகளை விடுமாறும், உன் உயிருக்கு நான் உத்தரவாதம் கொடுக்கிறேன் எனவும் கூறினார்.அதை நம்பாத பக்தன் அச்செயலை செய்ய முருத்தான்.எனவே கடவுள் மறைந்துவிட்டார்.எனவே அவன் அதிகம் போராட வேண்டியதாயிற்று.இருள தொடங்கியது. ஆச்சிர்ய தக்க வகையில் தரையில் இருந்து 2 க்கு மேல் தான் அவன் தொங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தான்.கடவுள் சொல்லியும் கேட்காமல் போன தவறுக்கு எண்ணி வருந்தி அழுதான்.கர்வம் மறைந்து உண்மையான பக்தியுடன் கடவுளை பிரார்த்தித்து அவனை மலை உச்சிக்கு கொண்டு வரும்படி வேண்டினான்.
பாபா மட்டுமில்லாது, குருக்கள், நல்ல ஆத்மாக்கள், இஷ்ட தெய்வங்கள் என அனைவரிடமும் உண்மையான பக்தியையும், நம்பிக்கையையும், பொறுமையும் வைத்து வழிபட, அவர்களது கருணையால் இன்னல்கள் மறைந்து பெருங்கடலான இம்மைக் குரிய அவலநிலை மாறி நல்வாழ்வு வாழலாம்.
அனைவரும் நம் சகல சக்திகளை உள்ளடக்கிய சத்குருவான பாபாவை ஆசி வழங்கும்படியும், வாழ்வை எதிர் கொள்ள சக்தியை தரும்படியும், எல்லாவித சுழலிலும் அதை எதிர்க் கொள்ள தேவையான மனத்திடத்தையும்,,அவரை அடைய வழிகளையும் கொடுக்கும்படி உண்மையுடன் வணங்குவோம்.
எங்கும் அமைதி நிலவட்டும்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்
--------------------------------------------------------------------------------

பாபா என்னை ஒரு சாலை 
விபத்திலிருந்து காப்பாற்றினார்

ஓம் சாய் ராம்
அனைவருக்கும் பாபா தின நல்வாழ்த்துக்கள்.
நான் தொழில்நுட்ப கல்லூரியில் இறுதியாண்டு மாணவனாக படிக்கிறேன்.பாபா எப்படி எனது உயிரை காத்தார் என்ற அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.
ஒரு மாலை நேரம் நான் எனது கல்லூரி பேருந்தில் எனது வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தேன்.சுமார் ஒரு மணி நேரம் நான் பயணம் செய்ய வேண்டும்.எனது முஸ்லீம் நண்பன் என்னிடம், கல்லூரியின் இறுதி ஆண்டு என்பதால் ஒரு சின்ன விருந்து உபச்சாரம் கொண்டாடலாம் என்றான். நானும் அதை ஒத்துக் கொண்டேன்.
என் பேருந்தில் உள்ள பெண் தோழிகளையும் அழைத்தோம். சுமார் 8 , 9 பேர்கள் சென்னையில் உள்ள மூலக்கடை பகுதியில் இறங்கினோம்.எல்லாரும் சிறய கடைக்கு சென்று வேண்டியவற்றி வாங்கி உண்டு நன்கு களித்தோம்.எல்லாம் முடிந்ததும் என் தொழி என்னை வீட்டில் இறக்கி விடுவதாக கூறினாள்.முடியாது என் சொல்ல முடியாமல் நானும் ஒத்துக் கொண்டேன்.பின் அவளது இரு சக்கர வாகனத்தில் என்னை பின்னால் உட்கார செய்து அழைத்து சென்றாள், பாதி தூரம் சென்றதும் ஒரு U வளைவு எடுக்க எத்தனித்தாள்.நான் சரியாக உட்காராமல் இருந்ததை உணர்ந்தேன்.எனவே நான் கீழே இறங்கிக் கொள்கிறேன் என்றேன். ஆனால் அவள் வேண்டாம் நான் ஓட்டிவிடுவேன் என்றாள்.ஆனாலும் அவள் வண்டியை ஓட்டாத போது நான் இறங்க முற்பட்டேன்.அதை அறியாத அவள் சட்டென வண்டியை ஓட்டினாள் .அவள் தடுமாறி இருவரும் கீழே அலறலுடன் விழுந்தோம். அப்போது ஒரு லாரி அதிகப்படியான சரக்குடன் எங்களை நோக்கி வந்துக் கொண்டிருந்தது.
இது எல்லாம் வினாடிக்குள் நடந்தது. கீழே விழுந்ததும் ஒரு சில இன்ச் இடைவெளியில் அந்த லாரி வேகமாக வந்தது.நான் பயத்தால் கத்தி கண்களை முடிவிட்டேன்.அந்த வினாடி என் வாழ்க்கை முடிந்துவிட்டது என் நினைத்தேன்.ஆனால் ஆச்சர்யப்படும் வகையில் பக்கத்தில் பலர் இருந்து எங்களை தூக்கிவிட்டனர் . இருவரும் அழுது கொண்டு நிலைமை புரியாமல் நின்றோம்.சாவு நெருங்கியது என் தெரிந்தால் நாம் பயத்தின் உச்சக் கட்டத்திற்கே சென்றுவிடுகிறோம். எனக்கு பயப்படும் வகையில் எந்த காயமும் ஏற்படவில்லை.எனது செருப்பு மட்டுமே அறுந்திருந்தது.எனது தோழியின் காதின் அருகில் சிறிய காயம் ஏற்பட்டது.எங்களை சாவின் நுனியில் இருந்து காப்பாற்றியது பாபா தான்.சரியான நேரத்தில் எங்களை காத்தது நம் பாபாவின் ஆசி மிகுந்த கரங்கள் அன்றி வேறேதும் இல்லை.
அவர் நம் தாய்.நம்மை காப்பவர்.
சாய் ராம்
ஹரி


-----------------------------------------------------------------------------


 

சாயின் ஆசிகள்

ஓம் சாய் ராம்.இது என்னுடைய இரண்டாவது சாய் அனுபவம்.என்னுடைய முதல் அனுபவமானது பாபா எனக்கு வங்கி கடன் உதவி புரிந்தது ஆகும். அது ஒரு அற்புதமான அனுபவம் ஆகும்.அவர் எனக்கு நிறைய சிறிய சிறிய அனுபவங்களை கொடுத்துள்ளார்.என்னுடைய இந்த அனுபவமும் அற்புதமான ஒன்று.ஏதேனும் தவறு இருந்தால் மன்னித்துவிடுங்கள்.
சகோதரி மனிஷா
உங்களின் உயரிய சேவைக்கும், எனது முதல் அனுபவத்தை பகிர்ந்தமைக்கும் நான் முதலில் உங்களுக்கு நன்றி சொல்லி எனது அனுபவத்தை தொடங்க வேண்டும்.மார்ச் மாதம் 9 ம் தேதி திடிரென என் தந்தை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும், அதன் அருகில் உள்ள பிள்ளையார்ப்பட்டி கோவிலுக்கும் செல்ல திட்டமிட்டார்.என்னையும் அவருடன் அழைக்க நானும் ஒப்புக் கொண்டேன்.
அதனிடையே நான் எனது மின்னஞ்சல்களை பார்த்துக் கொண்டேன்.ஏன் என் தெரியவில்லை திடிரென ஒரு சோகம் என்னை வாட்டியது, எப்பொழுது என் மனதில் கஷ்டம் என்றாலும் நான் பாபாவின் www.yoursaibaba.com தளத்திற்கு சென்று பரிகாரம் தேடுவது வழக்கம்.
எனவே அந்த தளத்திற்கு சென்று, என் மனதில் தோன்றிய எண்ணை தட்டினேன்.எனக்கு வந்த பதிலை பார்த்து அதிர்ந்து ஆச்சர்யப்பட்டேன்.ஏனெனில் அதில் , நீ இன்று பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும். அதை மதிய உணவிற்கு மேல் வைத்துக் கொள். காலை புறப்பட வேண்டாம் என வந்தது. நான் அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன்.பாபா நம்மை எப்போதும் காக்கிறார். அவர் தான் என்னை இந்த தளத்திற்கு வந்து பார்வையிட செய்தார் என நினைத்தேன்.
ஆனால், அந்த பதிலை பார்த்த பின்னும் சில காரணங்களுக்காக நாங்கள் அதிகாலையே பயணம் மேற்கொள்ள வேண்டி வந்தது.நான் பாபாவின் ஸ்ரீ சாய் சரித்திரத்தை கையோடு எடுத்துக் கொண்டேன்.4 -5 மணி நேர பயணம் என்பதால் சரித்திரத்தை படித்துக் கொண்டு வந்தேன்.எந்த வித ஆபத்தும் எங்களை நெருங்காமல் பார்த்துக் கொள்ளும்படி வேண்டினேன்.
பயணம் செய்யும் போது தான், நான் புரிந்துக் கொண்டேன் ஏன் பாபா நம்மை காலை நேரத்தில் வேண்டாம் என்றார்.ஓட்டுனர் அதிகாலை எழுந்ததால் தூங்கி வழிந்தார்.இரண்டு முறை சாலை விபத்து ஏற்பட்டு இருக்க வேண்டியது.பாபாவின் வார்த்தைகளை கேக்காமல் வந்ததை எண்ணி வருந்தினேன்.எனவே உண்மையான பக்தியுடன் பாபாவை வழி முழுதும் துணைக்கு வந்து எதிர் வரும் துன்பத்தை கடக்க அருளும்படி வேண்டினேன்.
மேலும் பாபாவின் படத்தை எங்காவது காட்டுமாறும், இதனால் அவர் எங்களுடன் துணையாக இருக்கிறார் என நான் அறிந்துக் கொள்வேன் எனவும் அவரை வேண்டினேன்.சிறிது நேரத்தில் நான் தூங்கிவிட்டேன்.கனவில் நான் எங்கேயோ நிறைய பாபா சிலைகளை பார்த்தேன்.
பின் உடனே எழுந்து, மீண்டும் பாபாவை காண ஜன்னல் வெளியே ஆவலுடன் பார்த்துக் கொண்டே வந்தேன்.ஆனால் துரதிஷ்டவசமாக பாபாவை எங்கும் காண முடியவில்லை.11 மணியளவில் நாங்கள் பிள்ளையார்ப்பட்டியை நல்லபடியாக அடைந்து 1 மணி நேரம் தரிசனம் மேற் கொண்டோம்.வெளியே வந்து மதிய உணவு அருந்த ஒரு உணவு விடுதிக்கு சென்று முதல் மேசை காலியாக இருந்ததால் அங்கே அமர்ந்தோம்.
எங்கள் மேசைக்கு அருகில் ஒரு அலமாரியில் நிறைய சாமி சிலைகளும், சாமி புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன.அதில் நான் முதலில் கண்டது நிறைய பாபா சிலைகள் ஆகும்.நான் அளவில்லா மகிழ்ச்சியில் ,இருக்கும் இடத்தை மறந்து ஆனந்தத்தில் என் சாய் பகவானே என்று கத்திவிட்டேன்.அருகில் இருந்தவர்கள் நான் சத்தம் போடுவதை பார்த்தனர்.ஆனால் எதை பற்றியும் கவலைப்படாமல் நான் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன்.
அவைகள் மிகவும் அழகான சிறிய சிறிய சாய் சிலைகள். அதில் பாபா மிகவும் அழகாக புன்னைகித்துக் கொண்டிருந்தார்.அந்த நொடியில் கண்டிப்பாக இதை பக்தர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என நினைத்தேன்.இதனால் அனைவருக்கும் பாபா மீது உள்ள பக்தி அதிகரிக்கும்.
பின் நல்லவிதமாக மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று,பாபாவின் அருளால் நல்ல விஷேசமான தரிசனத்தை பெற்று இரவு 11 மணியளவில் வீடு வந்து சேர்ந்தோம். பாபா நாள் முழுவதும் துணை இருந்ததிற்கு நன்றி தெரிவித்தேன்.
நான் இதில் உணர்ந்துக் கொண்டது, ஒரு குழந்தை தன் தாயிடம் இருக்கும் போது மிகவும் பத்திரமாக இருப்பதாக உணரும்.பாபா தான் நம் தாய். அது போலவே பாபாவை தவிர யாராலும் தன் குழந்தையை இத்தனை அற்புதமாக பார்த்துக் கொள்ள முடியாது.இல்லையெனில், அவர் வார்த்தையை கேட்காத எனக்கு அவர் அருள் புரிந்து இருக்க மாட்டார்.இனி இந்த தவறை என் வாழ்நாளில் நான் செய்ய மாட்டேன்.பாபா என்னுடன் இருந்து எனக்கு வழிக்காட்டியாய் இருக்கிறார் என நான் என்றும் உணர்ந்துக் கொண்டிருக்கிறேன்.அவர் எப்போதும் என் வேண்டுதலை கேட்கிறார், அதற்கு பதலையும் எப்படியோ சொல்லிவிடுகிறார்.
இந்த இன்னொரு அனுபவம் எனக்கு சங்கடா சதுர்த்தி பிப்ரவரி 12 நாள் நடத்தது. இது ஒவ்வொரு மாதமும் பிள்ளையாருக்கான விசேஷ நாளாகும். அன்றும் நான் பாபாவை பற்றி தளத்தில் படித்துக் கொண்டிருந்தேன்.திடிரென என் மனதில், இன்று பிள்ளையாருக்கான நாள்,ஆனால் நாம் பாபாவை பற்றி படித்துக் கொண்டிருக்கிறோமே, இது சரியா ? எனத் தோன்றியது.
பின் ஒரு பக்கத்தை நான் சொடுக்கியதும் வந்த படத்தை பார்த்து அதிர்ந்து போனேன்.பாபா தன் மீது பிள்ளையாரை வைத்திருப்பது போன்ற படம் அது.அதை இங்கே இணைத்துள்ளேன்.பக்தர்களே இங்கே நான் சொல்ல விரும்புவது இந்த தம் www.shirdisaideva.com என் சகோதரி பிரியங்கா ரவுடேலா அவர்களுடையது.

அந்த படத்திற்கு கிழே இருந்த வரிகள், என் மனதில் ஓடிக் கொண்டிருந்த கேள்விக்கு பதிலாக கிடைத்தது. உங்கள் சாய்நாதரை நீங்கள் எந்த வடிவில் காண விரும்புகிறீர்களோ, எந்த கடவுளாக தரிசிக்கிறீர்களோ அவர் அந்த கடவுளாகவே உங்களுக்கு காட்சியளிப்பார் என இருந்தது. நான் மிகவும் மகிழ்ந்து, அப்படி ஒரு எண்ணம் என் மனதில் வந்ததை எண்ணி மன்னிப்பு கேட்டேன்.ஆனால் இந்த சம்பவம் மூலமாக பல விஷயங்களை அவர் உணர்த்தினார்.
இன்று காலை இந்த அனுபவத்தை நான் எழுதுவதும் ஒரு சங்கடா சதுர்த்தி நாளாகும்.பாபாவில் லீலைகள் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை.அவருக்கு என் மனதில் ஆழத்தில் இருந்து நன்றி சொல்கிறேன்.
நன்றி பாபா. அனைவரையும் உங்கள் கருனையுள்ளதால் ஆசிர்வதியுங்கள்.
ஓம் சாய் ராம்.

----------------------------------------------------
பாபாவின் கருணை. அனுபவம் - நித்தி 

நான் பாபாவின் கருணையையும், அவர் எங்கள் வாழ்வில் அளித்த அனுபவத்தையும் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.
அவர் எப்போதும் நம்முடன் துணையாக இருக்கும், எல்லா ஞானமும் பெற்ற எதை போதும் கொடுக்க வேண்டுமோ அப்போது கொடுக்கும் வல்லமை பெற்றவர்.தற்போது நாங்கள் உணர்ந்து அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.
எனக்கு போன வருடம் ஆகஸ்ட் மாதம் திருமணம் நிச்சயமானது.நானா பாபாவையே எனக்கு ஆசி மிகுந்த திருமண நாளை குறிக்குமாறு வேண்டினேன்.வார இறுதி என்பதால் நவம்பர் 20 நாளை குறித்தார்கள்.ஆனால் பாபாவிற்கு வேறு திட்டம் இருந்திருக்கிறது.
ஆனால் எங்களுக்கு அந்த நாளில் எந்த மண்டபமும் கிடைக்கவில்லை.எல்லாமும் ஏற்கனவே மற்றவர்களால் தேர்வு செய்யப்படிருந்தது.எனவே மீண்டும் அனைவரும் ஜோசியரிடம் சென்று வேறு நாட்களை கேட்டனர். அவர் டிசம்பர் மாதம் 1 அல்லது 4 என்றார்.பாபா தன் நாளான வியாழன் அன்று திருமணத்தை வைக்க நினைத்திருக்கிறார். எனக்கு டிசம்பர் 1 ம் தேதி வியாழக் கிழமை பாபாவின் ஆசியில் திருமணம் நடந்தது.
பின் தொடர்ந்து பாபா பல லீலைகளை காட்டி வருகிறார்.
என் திருமணத்திற்கு முன் எனது தாயார் பாபாவிற்கும், ஹனுமனுக்கும் உடை சாத்துவதாக வேண்டி இருந்தார். எனது தாயார் திருமணத்திற்கு ஒரு வாரம் முன் பாபா கோவிலுக்கு உடை அளிக்க சென்றார்.ஆனால் குருக்கள் அவரை நவம்பர் 29 தேதிக்கு வர சொல்லிவிட்டார். அன்று தான் எனக்கு விசேஷ நாளான சகன் நாள்.
காலை 6 குளித்துவிட்டு நானும் பாபா கோவிலுக்கு சென்றேன்.பாபாவிற்கு நாங்கள் கொடுத்த உடை அணிவிக்கப்பட்டது.நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். மனதில் ஒரு மாற்றம். சொல்ல முடியாத ஒரு உணர்வு ஏற்ப்பட்டு எனது கண்களில் கண்ணீர் பெருகியது.பாபா நேரிலேயே நின்று தரிசனம் கொடுப்பது போல நான் உணர்ந்தேன்.பாபா எப்போதும் உடன் இருக்கிறார்.பின் முதல் முறையாக எங்கள் வீட்டு சொந்தக்காரரை கண்டேன்.அவர் கீழ் தளத்தில் பாபா கோவிலை கட்டி வைத்துள்ளார்.அவரும் பாபாவின் பக்தர்.
நான் அவரிடம் எனது பெயரையும், எனது திருமணம் பற்றியும் தெரிவித்து கோவிலை விட்டு கிளம்பினேன்.இங்கே நான் சொல்ல வேண்டியது.நான் பாபாவிற்கும் திருமண அழைப்பிதழ் அனுப்பி அவரை வந்து ஆசீர்வதிக்கும்படி கூறினேன். மேலும் பல ஆச்சர்யங்கள் காத்து இருந்தன.
நான் என்னுடைய சகன் நாளன்று கண்ட எனது வீட்டு உரிமையாளர் திரு சந்திர சேகர் அவர்கள் என் திருமணத்திற்கு வந்தார்.மேலும் பாபா அவரை என் திருமணத்திற்கு செல்லுமாறு கூறியதாக சொன்னார்.
எல்லாமே பாபாவால் நடந்தது.அவர் தான் பாபாவாக வந்தார். அவரை முதல் முறையாக கண்டேன்.அவருக்கு எங்கு திருமணம் என்பதும் தெரியாது.மேலும் அவரை நான் திருமணத்திற்கு அழைக்கவும் இல்லை.அவராக முகவரி கேட்டு தெரிந்து வந்தார்.மேலும் 2 நாட்களுக்கு முன் நான் அவரை வழியில் பார்த்தேன்.எப்படி பாபா அவரிடம் திருமணத்திற்கு போக சொன்னார் என விளக்கினார்.
பாபா எப்போதும் எங்களுடன் இருங்கள். உங்கள் அன்பு,கருணை,ஆசிகளை எங்கள் குடும்பத்தினருக்கு வழங்குங்கள்.உங்க தாமரை பாதங்களில் தலை வைத்து வணங்குகிறேன் .உலகில் உள்ள அனைவருக்கும் அருள் புரியுங்கள்.
ஓம் சாய் ராம்
நிதி
----------------------------------------------------


ஹோலி அன்று பாபா கருப்பான உருவில்
 வந்து என்னை ஆசிர்வதித்தார்

முதலில் மனிஷா அவர்களுக்கும் , மற்ற அனைவருக்கும் இனிய தாமதமான ஹோலி நல்வாழ்த்துக்கள்.என்னுடைய சிறிய ஆனால் குறிப்பிட தகுந்த செ அனுபவத்தை பகிர்ந்துக் கொள்கிறேன்.இதில் ஏதும் தவறு இருந்தால் மன்னித்துவிடுங்கள் பாபா.
அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் பாபாவையும், அவரின் ஆசிர்வாதத்தையும் பல அனுபவங்கள் மூலம் உணர்ந்திருப்பீர்கள்.நானும் பாபாவின் சரித்திரத்தின் மூலம் அவர் அனுபவத்தை ஹோலிக்கு அடுத்த நாள் உணர்ந்தேன்.
இந்த வருடம் ஹோலி பாபாவின் நாளான வியாழன் அன்று வந்தது.நான் காலையிலேயே பாபாவை தரிசிக்க எண்ணினேன்.ஆனால் என் அம்மா, குளித்துவிட்டு சென்றாலும், மீண்டும் ஒரு முறை வந்து குளிக்க வேண்டி வரும்.ஏனெனில் சாலையில் இந்த சமயத்தில் பயணம் செய்வது சிரமம் என்றார்.மேலும் ஹோலி பண்டிகை காலம் என்பதால் எனது பாதுகாப்பு கருதியும் பயப்பட்டார்.எனவே நான் கோவிலுக்கு செல்லும் எண்ணத்தை கைவிட்டேன்.
மாலை ஒரு 5 மணியளவில் நான் பாபாவை தரிசிக்க கோவிலுக்கு சென்றேன். ஆனால் ஹோலி என்பதால் கோவில் 4 மணிக்கே பூட்டப்பட்டு இருந்தது. பாபா என்னை காலையே வர செய்ய எண்ணினாரோ என நினைத்து பாபாவிடம் இருந்து விடை பெற்று சென்றேன்.பாபா புன்னைகைத்துக் கொண்டிருப்பதை பார்த்து எனக்கும் மகிழ்ச்சியாகவே இருந்து.
அடுத்த நாள் காலை எனது அம்மா சான்வஜ் செய்ய எண்ணி , என்னை ரொட்டி வாங்கி வரும்படி கூறினார். நான் கடைக்கு சென்று இரண்டு பொட்டலம் ரொட்டி வாங்கி திரும்பும் போது அங்கே நான்கு கருப்பு நாய்கள் சிறு சிறு தொலைவில் அமர்ந்திருந்தன.எனது வீட்டிற்கு வரும் சாலையில், ஒரு குட்டி கருப்பு நாய் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது.பார்ப்பதற்கு பாவமாக இருந்தாலும் நான் வீட்டிற்கு சென்றுவிட்டேன். ஒரு கால் மணி நேரம் கழித்து என் அம்மா இரண்டு பொட்டலம் ரொட்டிகள் தேவையில்லை எனவும், ஒன்றை கொடுத்து விட்டு வேறேதும் வாங்கி வருகிறேன் என கிளம்பினார்.நான் அவரை வேறு வேலையை பார்க்க சொல்லிவிட்டு நானே திரும்பவும் கடைக்கு புறப்பட்டேன். மீண்டும் அந்த நாய்க் குட்டியை பார்த்தேன். இம்முறை பரிதாபப்பட்டு ரொட்டி பொட்டலத்தை திறந்து நாய்க்கு ஒன்றை ஊட்டினேன்.பின் வீட்டிற்கு வந்து விட்டேன்.
பின் குளித்துவிட்டு பூஜை அறையில் பூஜைக்காக அமர்ந்தேன்.எனக்கு எப்போதும் ஒரு பழக்கம் என்னவென்றால் பாபாவின் சரித்திரத்தை ஏதாவது ஒரு பக்கத்தை எடுத்து படிப்பது. அன்று எடுத்த கதை மிகவும் பெரியதாக இருந்ததால், அதை விடுத்து வேறு பக்கத்தை புரட்டினேனே. பாகம் 9 வந்தது.அதை படித்துவிட்டு ஆரத்தி எடுத்தேன். பின் நான் படித்த கதை திடிரென என் மனதில் ஓடியது.அதில் திருமதி தர்கத் ஒரு பசியான நாய்க்கு ரொட்டித்துண்டுகளை கொடுத்ததற்கு பாபா அவரை ஆசிர்வதித்து, எப்போதும் பசியோடு இருப்பவர்களுக்கு உணவு கொடுங்கள்.நான் அந்த உருவத்திலும் வரலாம் என்று சொல்கிறார்.இதை படித்து என் மனம் மகிழ்ச்சியில் மிதந்தது.பாபா தான் நாய்க்குட்டி உருவத்தில் வந்து என்னை ஆசிர்வத்தித்தார்.
மிக நீளமான விளக்கத்திற்கு மன்னிக்க வேண்டும்.நான் எத்தனை வார்த்தைகளை பயன்படுத்தினேன் என எண்ணவில்லை.என் மனதில் ஓடியதை அப்படியே எழுதினேன்.இது சிறிய அனுபவமாக இருந்தாலும், பகதர்கள் அதை படித்து எப்படி பாபா ஆசி வழங்கிறார் என்பதை உணருவார்கள்.
ஓம் சாய் மகாதேவா

----------------------------------------------

உங்களை நேசிக்கிறேன் சாய் 
ஓம் சாய் ராம்.
இது மிகவும் சிறிய அனுபவம்.ஆனாலும் சாய் மேல் கொண்ட பாசத்தினால் இதை பகிர்ந்துக் கொள்கிறேன்.
1 .ஒரு வியாழன் அன்று எனது ஊரான கோடாவில் (ராஜஸ்தான்) இரவு ஆரத்தியில் கலந்துக் கொண்டேன். பூஜை நடந்து முடிந்ததும் குருக்கள் அனைவருக்கும் பூக்களை கொடுத்துக் கொண்டிருந்தார். நான் பாபாவிடம் நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன், நீங்களும் என்னை நேசித்தால் உங்களிடம் உள்ள அந்த விஷேசமான மலரை எனக்கு கொடுங்கள் என்றேன். பின் பாபாவின் பாதத்தை தொட்டு வணங்கும் போது, குருக்கள் பாபாவின் பழைய மாலையை மாற்றினார்.அப்போது பாபாவிடம் வைக்கப்பட்ட ரோஸ் நிற ரோஜா என் மீது விழுந்தது.நான் கேட்ட மலரையே எனக்கு கொடுத்து பாபா ஆசி வழங்கினார்.பாபாவின் அன்பினால் கிடைத்த அந்த மலரை நான் நெகிழ்வுடன் எடுத்திக் கொண்டேன்.
2 .நேற்று எனது ஊரில் பாபா கோவிலில் ஆரத்திக்கு சென்ற போது மிக நீளமான வரிசை இருந்தது.ஆரத்தியும் ஆரம்பிக்கப்படும் நிலையில் இருந்தது..நான் பாபாவிடம் நான் உங்கள் அருகில் வந்து மலர்களை கொடுக்கும் வரை ஆரத்தித் தொடங்ககாமல் பார்த்துக்க் கொள்ளும்படி வேண்டி கெஞ்சி கூறினேன்.என்ன ஆச்சர்யம்.நான் பாபாவின் அருகில் சென்று மலர்களை காணிக்கையாக கொடுத்த பின் ஆரத்தி ஆரம்பம் ஆனது.
நான் பாபாவை மிகவும் நேசிக்கயார்.அவர் தான் எனக்கு எல்லாமும்.
சாய்ராம்.
(Uploaded by Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.