Wednesday, October 27, 2010

Baba made him have faith in HIM Part-3




ராமச்சந்திர அம்ருதராவ் தேஷ்முக்கின் அனுபவம்
'' நா சீரடியிலேயே வசிப்பவர். ஆனால் நான் சாயிபாபாவின் ஆலயத்துக்கு சென்றது இல்லை. என்னுடைய மூத்த மகள் 1971 ஆம் ஆண்டு டைபாயிட் ஜுரம் வந்து படுத்துக் கிடந்தாள். அவளை அருகில் இருந்த மருத்துவ மனையில் சேர்த்தோம். என்ன மருந்து தந்தும் அவள் குணம் அடையவில்லை. என்னுடைய மனைவி தினமும் அவளுக்கு பாபாவின் தீர்த்தத்தை இரு வேளையும் தந்து வந்தாள். நாற்பத்தி ஐந்து நாட்கள் ஆகியும் அவள் குணம் அடையாததினால் நாங்கள் அவளை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டோம்.
என் மனைவி பாபாவின் மீதான நம்பிக்கையை இழக்காமல் அன்று முதல் பாபாவின் தீர்த்தத்துடன் உடியையும் கலந்து தந்தாள். அதிசயமாக மருத்துவ மனையில் இருந்து வந்து விட்ட என் மகள் மூன்றே நாளில் குணம் அடைந்தாள்.

என்னுடைய தாயார் தினமும் பாபாவின் ஆரத்திக்குச் செல்வது உண்டு. 1961 ஆம் ஆண்டு அது. காலை நான்கு மணி இருக்கும். காலைக் கடனை கழிக்கச் சென்றவள் தவறி அருகில் இருந்த கிணற்றில் விழுந்தது விட்டாள். எவருமே கவனிக்கவில்லை. ஐந்து மணி ஆனபோதுதான் அங்கு தண்ணீர் எடுக்க வந்தவர்கள் அவளைப் பார்த்து காப்பாற்றி மேலே எடுத்து வந்தனர். அந்த கிணற்றில் இருந்த தண்ணீரின் ஆழம் நாற்பத்து எட்டு அடி. அவளை சோதித்த டாக்டரோ அவள் உடம்பு அதிக குளுமயாகி விட்டதினால் பாபாதான் அவளைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறி விட்டுச் சென்று விட்டார். அத்தனை உயரத்தில் இருந்து விழுந்தாலும் அவளுக்கு உடலில் சிறு காயம் கூட இல்லை. அவள் விரைவில் நலமடைந்தாள். அதற்குக் காரணம் பாபாவின் அருள்தான்.

அதன் பின் நான் தினமும் சாயி சரித்திரத்தை தினமும் மாலையில் படிக்கத் துவங்கினேன். அப்போது ஒரு அதிசயமான காட்சியை அனைவரும் கண்டோம். நான் பாராயணத்தை படித்து முடிக்கும்வரை என் பக்கத்தில் ஒரு தவளை வந்து உட்காரும். பாராயணம் முடிந்ததும் சென்று விடும். அதை அனைவரும் பார்த்தோம். பாபாவே ஒரு தவளை உருவில் வந்து நான் செய்த பாராயணத்தை கேட்டுக் கொண்டு இருந்திருக்கின்றார் என நம்பினோம். பாபா மீது என் நம்பிக்கை வளர்ந்தது.

அடுத்து என்னுடைய மகளின் திருமணம். அவளுக்கு 1974 ஆம் ஆண்டிலேயே திருமணம் செய்து முடிக்க தீர்மானித்திருந்தேன். முடியவில்லை. நான் படுத்து விட்டேன். பொருளாதார நிலை குறைந்தது. மணம் முடிக்கத் தேவையான பணம் இல்லை. பாபாவிடம் வேண்டினேன் ' பாபா என் மகளின் நோயை குணப்படுத்தினாய். தாயாரைக் காப்பாற்றினாய். என் மகளின் திருமணத்திற்கும் , நான் உடல் நலம் அடையவும் நீதான் கருணை புரிய வேண்டும்'.

1975 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் என்னுடைய மூத்த சகோதரன் ஒரு வரனை எடுத்து வந்து என்னுடைய மகளின் திருமணத்தை நிச்சயிக்க திருமணம் ஜூன் மாதம் நடந்தது. ஐநூறு பேர்களை அழைத்து இருந்தோம், வந்ததோ எண்ணூறு பேர்களுக்கு மேல். என்ன செய்வது எனத் தெரியவில்லை. அருகில் இருந்த துவாரகாமயிக்கு ஒடிச் சென்று பாபாவை பிராத்தனை செய்து கொண்டு அங்கிருந்து உடியை எடுத்து வந்து சமைத்து வைத்திருந்த பாத்திரங்களில் தடவினேன். என்ன அதிசயம் வந்தவர்கள் அனைவரும் வயிறு நிறைய சாப்பிட்டுச் சென்றனர். மீதம் இருநூறு பேர்களுக்கு சாப்பாடு இருந்தது. எங்கும் நிறைந்துள்ள பாபாவே என்னுடைய குடும்பத்தின் மானத்தைக் காப்பாற்றி விட்டார் . ''
(Translated into Tamil by Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.