Meeting with Sainath - Experience by Tanmay Nath.
சாயி பாபாவுடன் சந்திப்பு - தன்மேயின்  அனுபவம்  
அனைவருக்கும் சாயிராம்
இன்று நான் தன்மே என்பவர் பாபாவுடன் தனிமையில் பேசியது பற்றி கூறியுள்ள அனுபவத்தை வெளியிடுகிறேன்
மனிஷா
-------------------
சாயிபாபாவின் அனுக்கிரகத்தோடு நான் அமெரிக்காவிற்கு வேலைக்குச் சென்றேன். அந்த இடத்தில் வாழ்கையில் எனக்கு பிடிப்பு இல்லை. நான் நல்ல வேலையில் அங்கு சென்றாலும் என் சொந்த வாழ்கையில் இன்பமாக இல்லை என்ற எண்ணத்தினால் என் மனதில் துயரமும் விரக்தியுமே நிறைந்து இருந்தது. ஆகவே எனக்கு கிடைத்த நேரத்தில் நான் தினமும் சாயி சரித்திரத்தில் இருந்து சில பகுதிகளை தொடர்ந்து படித்து வந்தேன்.
இன்று நான் தன்மே என்பவர் பாபாவுடன் தனிமையில் பேசியது பற்றி கூறியுள்ள அனுபவத்தை வெளியிடுகிறேன்
மனிஷா
-------------------
சாயிபாபாவின் அனுக்கிரகத்தோடு நான் அமெரிக்காவிற்கு வேலைக்குச் சென்றேன். அந்த இடத்தில் வாழ்கையில் எனக்கு பிடிப்பு இல்லை. நான் நல்ல வேலையில் அங்கு சென்றாலும் என் சொந்த வாழ்கையில் இன்பமாக இல்லை என்ற எண்ணத்தினால் என் மனதில் துயரமும் விரக்தியுமே நிறைந்து இருந்தது. ஆகவே எனக்கு கிடைத்த நேரத்தில் நான் தினமும் சாயி சரித்திரத்தில் இருந்து சில பகுதிகளை தொடர்ந்து படித்து வந்தேன்.
அன்று 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி. என்னுடைய லாப்டாப் பழுதடைந்து விட்டது என்பதினால் அதை சரி செய்ய கடையில் கொடுத்து இருந்தேன். என் வாழ்கையில் சுவை இல்லை என நினைத்துப் படித்தேன். தூக்கமே வரவில்லை. மதியம் நான் சரி செய்யக் கொடுத்து இருந்த கடையில் இருந்து அது சரியாகிவிட்டது என்றும் வந்து எடுத்துப் போகுமாறும் தொலைபேசி செய்தி வந்தது. நானும் கடைக்குச் சென்றேன். அந்த இடத்தில் ஒருவர் தன்னுடைய கையில் ஒரு பையை வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டு இருந்ததைக் கண்டேன்.
இந்தியாவை சேர்ந்தவர் போல இருந்த அவருக்கு முப்பது அல்லது முப்பத்தி ஐந்து வயது இருக்கும். அவர் ஏதோ பிரச்சனையில் உள்ளார் என்பதைப் புரிந்து கொண்டு அவரிடம் சென்று பேச்சுக் கொடுத்தேன் . அவர் தான் போக வேண்டிய இடத்துக்கான பஸ் வர இன்னும் மூன்று மணி நேரம் ஆகும் என்பதினால் அங்கு உலாவிக் கொண்டு இருப்பதாகக் கூறினார். அவர் இந்தியாவில் நான் உள்ள இடத்தை சேர்ந்தவர் என்பதினால் ஹிந்தி மொழியில் அவரவரைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது அவர் எனக்கு தந்த ஆறுதலான அறிவுரைகள் சாயிபாபாவே நேரில் வந்து கூறுவது போல இருந்தது. அவர் தங்கு எதோ ஒரு வேலைக்கான தேர்வுக்கு வந்துள்ளதாக தெரிவித்தார். தேவை எனில் தன்னை தொடர்ப்புக் கொள்ளுமாறு முகவரியையும் தந்தார். இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை. அவர் தான் இரண்டு நாளைக்குத்தான் அங்கு வந்துள்ளதாகவும் முதல் நாள் அவரை நான் சந்தித்தது மகிழ்ச்சியாக உள்ளது எனவும் கூறினார்.
அடுத்த நாள் முதல் எனக்கு இனம் தெரியாத அமைதி ஏற்பட்டது. என்னுள் இருந்த விரக்தி மறையத் துவங்கியதைக் கண்டேன். அவரை நான் தொடர்பு கொண்டபோது அந்த வாரக் கடைசியில் மீண்டும் சந்திக்கலாம் என்றார். ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை. அந்த இரண்டு மணி நேரம் என் வாழ்கையில் மறக்க முடியாத நாளாக இருந்தது. அத்தனை நாளும் துயரத்தில் இருந்த நான் என்று எப்படி உற்சாகமாக இருக்கின்றேன் என்பதை நினைத்துப் பார்த்தே. வந்திருந்தது சாயி பாபாவகவே இருந்து இருக்க வேண்டும். நான் பாபாவின் அற்புதங்களை படித்து இருக்கின்றேன். ஆனால் அதை அனுபவ பூர்வமாக நான் அனுபவித்தது இதுவே முதல் தடவை. அவரை நான் மனதார வணங்குகிறேன். இதை அனைவரும் படித்து பாபா எங்கும் உள்ளார் என்பதை புரிந்து கொள்ளட்டும் என்பதற்காக எழுதி உள்ளேன்.
நன்றி
தன்மே நாத்
(Translated into Tamil by Santhipriya )
Loading
 
 
 
 
 
 
 
 
 
 


 
 
 
 
 
 
 
 
 

0 comments:
Post a Comment