Wednesday, October 27, 2010

Healed by Udi Part-2

அன்பானவகளே,
இன்று நான் பாபாவின் உடியினால் பயனடைந்தவர்களின் அனுபவங்களைப் பற்றிக் கூறுகின்றேன் . மருந்துகள் வேலை செய்யாத நேரத்தில் பாபாவின் உடி பிரசாதம் எப்படியெல்லாம் அவர்களின் நோய்களை குணப்படுத்தி வந்துள்ளது என்பதை பலரும் கூறி உள்ளனர். அவைகளே கீழே உள்ள அனுபவக் கதைகள்.
மனிஷா
Dear Readers
Today I am posting some of the experiences of devotees who got their ailments cured by using Baba’s udi Prasad. What the medicines could not cure, baba’s udi did wonder to cure their diseases . Read the experiences given blow.
Manisha


பக்தை திவ்யாவின் அனுபவம்
''நான் ஒரு நாள் ஜிம்மிற்குப் (உடல் பயிற்சி) போய்விட்டு வந்தேன். கால் முட்டியிலும், கால் சதைகளிலும் தாங்க முடியாத வலி. அடுத்த பத்து நாள்களும் தீராத வலி. என்ன மருந்து சாப்பிட்டும் குணம் அடையவில்லை. என்ன செய்வது என புரியாமல் குழம்பினேன். அப்போது உங்கள் இணையதளத்தில் பாபாவின் உடி தேனீ கொட்டியவரை காப்பாற்றிய கட்டுரையை படித்தேன். உடனே சென்று உடியை நெற்றியில் இட்டுக் கொண்டு வலி இருந்த இடத்திலும் தடவினேன். தொடர்ந்து மூன்று நாட்கள் நம்பிக்கையுடன் செய்தேன் . பத்து நாட்களாக தீராமல் இருந்த வலி மூன்றே நாளில் பாபாவின் உடியை உபயோகித்ததில் மறைந்தே போயிற்று. ''
இன்னொரு அனுபவம் :-
''என்னுடைய கணவர் அலுவலகத்தில் அவர் மாற்றலானதற்கு கிடைக்க வேண்டிய பணம் ( போனிக்ஸ் என்ற இடத்தில் இருந்து லாவுசவில்லீ என்ற இடத்துக்கு ) திரும்பக் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அவருடைய நிறுவனத்தின் விதியின்படி முப்பது நாட்களுக்குள் பொருட்களை மாற்றிச் சென்ற கட்டணத்திற்கான ரசீதை தராவிடில் பணம் கிடைக்காது. எங்கள் பொருட்களை எடுத்து வந்த நிறுவனம் பத்து நாட்கள் தாமதப்படுத்தி விட்டது. அதனால் அதற்கான கட்டணத்தை திரும்பப் பெரும் படிவத்தை உரிய நேரத்தில் நிரப்பி நிறுவனத்தில் தருவதில் சிக்கல் ஏற்பட்டது. நான் பாபாவை வேண்டிக் கொண்டேன். என்ன அதிசயம். இரண்டே நாட்களில் அனைத்து நடைமுறைகளும் நடந்து முடியஎங்களின் பணம் வந்தது. அது பாபாவின் மகிமையே.''
(Translated into Tamil by Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.