Mhalsapathy -Sai Baba's intimate devotee - Part -4
மல்சபாதியின் வீடு சாவடியில் இருந்து நேரே குறுகலான சாலையில் தாஜிம் கான் தர்காவிற்க்கு செல்லும் வழியில் உள்ளது. தர்காவில் இருந்து இடபுறம் திரும்பிச் சென்றால் அந்த குறுகலான சாலை போன்ற இடத்தில் கடைசியில் உள்ளது அவர் வீடு. மல்சபாதி கண்டோபா ஆலயத்தின் பூசாரியாக இருந்தவர். அவர் பாபாவுடனே நிறைய நேரம் இருந்தவர். பாபா மற்றும் தத்யாவுடன் துவாரகாமயியில் இரவு நேரத்தில் தங்கியவர். அவருடைய சமாதி அவருடைய வீட்டிலேயே அமைக்கப்பட்டு உள்ளது. மல்சபாதிக்கு பாபா கொடுத்த சில பொருட்கள் இவை:
1) காப்பினி2) பாபாவின் கைத்தடி
3) பாபாவின் உடி
4) மூன்று வெள்ளி நாணயம்
5) பாபாவின் பாதுகைகள்
இவை அனைத்தும் சாமதி உள்ள அவரது வீட்டில் உள்ளதினால் இது ஒரு புனித யாத்திரை ஸ்தலமாக உள்ளது. மல்சபாதி ஏழை. ஆனால் அவர் பாபாவின் தூய பக்தராக இருந்தார். பாபாவின் அறிவுரைப்படி அவர் எவரிடமும் இருந்து பணம் பெற்றுக் கொண்டது இல்லை. மல்சபாதியின் சந்ததியினர் பாபாவுடைய பொருட்களை பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர்.
நான் சீரடிக்கு சென்றபோது எடுத்த படங்களையும் மற்றவர்களிடம் இருந்து கிடைத்த படங்களையும் கீழே தந்துள்ளேன். எவரிடமாவது வேறு படங்கள் இருந்தால் அதை அனுப்பினாள் பிரசூரிக்க இயலும்.
மனிஷாமல்சபாதிக்கு பாபா கொடுத்த வெள்ளி நாணயம்
மல்சபாதியின் வீட்டிற்குள் உள்ள படம்
மல்சபாதியின் சமாதி
பாபாவின் காப்பினி வைக்கப்பட்டு உள்ள இடம்
மல்சபாதி
மல்சபாதியின் மகன் மார்த்தான்ட் பாபாவின் மடியில்
மல்சபாதியின் மறைந்து விட்ட வயதான மகன்
ஸ்ரீ மார்த்தான்ட் மல்சபாதி நாக்ரேரே
ஸ்ரீ மார்த்தான்ட் மல்சபாதி நாக்ரேரே
ஸ்ரீ மார்த்தான்ட் மல்சபாதி நாக்ரேரேயின் மகனும், மல்சபாதியின் பேரனுமான ஸ்ரீ மனோகர் மார்த்தான்ட் நாக்ரேரே . தற்போது அவர் கண்டோபா ஆலயத்தின் பூசாரி ஆவார்.
ஸ்ரீ மனோகர் மார்த்தான்ட் நாக்ரேரேயின் மகனான
ஸ்ரீ தீபக் மனோகர் நாக்ரேரே.
ஸ்ரீ தீபக் மனோகர் நாக்ரேரே.
இவர் கண்டோன்பா ஆலயத்தில் எப்போதும் காணப் படுகின்றார். ஏழைகளுக்கு உதவுவதில் முன்னால் நிற்பவர். சீரடியில் இருந்து முப்பது கிலோ தொலைவில் உள்ள வாவி என்ற இடத்தில் ஆசிரமம் ஒன்றை அமைகின்றார். மேலும் ஏழைகளுக்கு மருத்துவ வசதி தர மருத்துவ இடம் ஒன்றையும் அமைக்க உள்ளார். அதற்கென அவர் நிறுவி உள்ள டிரஸ்ட்டின் விலாசம் இது. உங்களால் முடிந்த நன்கொடைகளை நீங்கள் அங்கு அனுப்பலாம்.
Shri Khandoba Mandir,
Shirdi,
Tal: Rahata,
Dist: Ahmednagar.
Phone : (02423) 255112,
Resident : 257237, Temple : 258455(Translated into Tamil by Santhipriya)
Loading
0 comments:
Post a Comment