Mhalsapathy -Sai Baba's intimate devotee -Part 2
பாபா தன்னுடைய பக்தர்களை காப்பாற்றுவதில் பின் தங்கியதே இல்லை. பாபா மகா சமாதி அடைவதற்கு முன்னர் முப்பத்தி இரண்டு வருடங்களாக தனது பக்தர்களுக்கு பல சோதனைகளை வைத்துள்ளார்.
ஒரு முறை மார்கஷீஸ் மாதத்தில் பௌர்ணமி அன்று பாபா தன்னுடைய சக்தியை ஏற்றிக் கொள்வதற்காக மூன்று நாட்கள் சமாதி நிலையில் அமர முடிவு செய்தார். ஆகவே பாபா அனைவரையும் அழைத்துக் கூறினார் ' நான் இன்று முதல் மூன்று நாட்கள் சமாதி நிலையில் இருப்பேன். என்னை எவரும் எழுப்ப முயலாதீர்கள். மூன்று நாட்களுக்குப் பின் நான் எழுந்திருக்காவிடில் அந்த மூலையில் குழு தோண்டி என்னை புதைத்து விட வேண்டும்' என்று கூறி ஒரு மூலையைக் காட்டினார்.

அதற்குப் பின் மல்சபாதியிடம் தன்னை மூன்று நாட்களும் ஜாகிரதையாகக் கவனித்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு, அவருடைய மடியில் தலையை வைத்துக் கொண்டு படுத்து உறங்கினார். சில மணி நேரத்தில் அவர் மூச்சு நின்றது, இதயத் துடிப்பும், உடல் அசைவுகளும் நின்றன.
நாட்கள் நகர்ந்தன. பாபாவுக்கு உயிர் வரவில்லை. படில், குல்கர்னி போன்றவர்கள் இனி பாபா உயிருடன் வர மாட்டார் என எண்ணி பஞ்சநாமா செய்து அவரை அடக்கம் செய்ய ஏற்பாடுகளை செய்யத் துவக்கினர். ஆனால் மல்சபாதி அதற்கு உடன்படவில்லை. அவர் பாபா மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையை இழக்கவில்லை. தன் மடி மீது தலையை வைத்துப் படுத்திருந்த பாபாவின் தலையை எடுக்கவில்லை. அந்த இடத்தை விட்டும் அவர் எங்கும் போகவில்லை. இரவும் பகலும் அப்படியே அமர்ந்து இருந்தார். ஒரு நாள் அதி காலை மூன்று மணிக்கு பாபாவின் உடல் அசையத் துவங்கியது, கை கால்கள் அசைந்தன. சடாலென விழித்து எழுவது போல பாபா எழுந்தார். அனைவரும் அதிசயித்து நின்றனர். மல்சபாதியின் குரு சேவை அத்தனை மகத்தானதாக இருந்தது. அதனால்தானோ என்னவோ மல்சபாதிக்கு மட்டுமே பாபாவை தொடவும், தொட்டு திலகம் இடவும் அனுமதி கிடைத்து இருந்தது.
அதன் பின் ஒரு நாள் பாபா மல்சபாதியின் கனவில் நெற்றியிலும் தொண்டையிலும் இடப்பட்ட திலகத்துடம் தோன்றினார். அதை கண்ட மல்சபாதி பாபா தனக்கும் தினமும் பூஜை செய்து திலகம் இடுமாறு கூறுகின்றார் என நினைத்து தினமும் விநாயகர், ஹனுமார், கண்டோபா போன்றவர்களுக்கு பூஜை செய்த பின் பாபாவிடம் வந்து அவருக்கு தன் கையால் திலகம் இட்டு பூஜை செயலானார். ஆனால் அதை உள்ளூர் முகமதியர்கள் விரும்பவில்லை. அவர்கள் அடுத்த ஊரை சேர்ந்த ஒரு காஸியை அழைத்து வந்தனர். அதனால் மல்சபாதி பயந்து போனார். மறுநாள் இனி பாபாவுக்கு பூஜை செய்யக் கூடாது என்ற நினைப்புடன் மற்ற கடவுளுக்கெல்லாம் பூஜை செய்தபின், மசூதி வழியே வீட்டுக்குத் திரும்பினார்.
வாயிலில் பாபா நின்று கொண்டு இருந்தார். அவர் மல்சபாதியிடம் ' ஏனப்பா இன்று எனக்கு திலகம் இட்டு பூஜை செய்யவில்லை ? ' எனக் கேட்டார். அதற்கு அவர் தான் செய்தால் காஸி கோபமடைவார் என்பதினால் செய்யவில்லை என்றதும் பாபா அவர் முன் வந்து நின்றார்.

இங்கே தடவு, அங்கே தடவு என தன் நெற்றி, தொண்டை, தலை, கைகள் என அனைத்து இடத்தையும் காட்ட மல்சபாதிக்கு தைரியம் வந்து திலகத்தை என்றும் போலவே தடவி பூஜை செய்தார். அதைக் கண்ட காஸி பேசாமல் அங்கிருந்து திரும்பிச் சென்று விட்டார். அது முதல் பாபாவுக்கு அந்த 'சங்காந்த பூஜை ' தினமும் நடந்தது. அந்த பூஜையை பாபா சமாதி அடையும் வரை மல்சபாதி செய்து வந்தார். அந்த பூஜையை செய்யும் பாக்கியம் மேக்ஹா, தேங்கலே மற்றும்பாபா சாஹேப் ஜோக் போன்றவர்களுக்கும் கிடைத்தது.
பாபா பின்னர் நடக்கப் போவதைகளைக் குறித்து மல்சபாதியிடம் கூறுவது உண்டு. தன்னிடம் வரும் பல பக்தர்களை அவரிடம் அனுப்பினார். ஆகவே சிக்கலான பிரச்சனைகளில் பக்தர்கள் மல்சபாதியிடம் சென்றும் ஆலோசனைக் கேட்கலாயினர். காகா சாஹேப் திக்ஷித் மல்சபாதியைப் பற்றிக் கூறினார் ' அவர் தன்னை உணர்ந்தவர். வாழ்வில் பற்றற்று வாழ்ந்தவர். மகராஜின் பக்தர்களுக்கு அவர் பல நெறிகளை கற்றுத் தந்தார். மகராஜின் மறைவுக்குப் பின் அவரிடம் சென்று பலரும் ஆலோசனை பெற்று பலன் அடைந்தனர்'
பாபாவிடம் நெருக்கமாக இருந்ததினால் அவருக்கு நிறைய இறை அனுபவங்கள் ஏற்பட்டன. ஒரு முறை அவர் கண்டோபா விழாவுக்கு சென்று கொண்டு இருந்த போது ஒரு இடத்தில் தண்ணீர் பஞ்சம் இருந்ததைக் கண்டார். குடிக்க தண்ணீர் கூட இல்லை. அருகில் இருந்த கிணற்றில் சென்று அதைப் பார்த்து பாபாவை வேண்ட, திடீரென கிணற்றில் நீர் வேகமாக ஊறத் துவங்கி அவர்களுடைய தாகம் அடங்க நீர் கிடைத்தது.

இன்னும் ஒரு முறை கண்டோபா விழாவுக்கு காவடி எடுத்துக் கொண்டு மல்சபாதி சென்றார். ஜிஜோரி என்ற இடத்தில் விழா நடந்தது. அந்த ஊரில் அப்போது பிலேகு நோய் பரவி உள்ளது என்ற செய்தி வழியில் சென்று கொண்டு இருந்த போது கிடைத்தது. ஆகவே தொடர்ந்து செல்ல அனைவரும் பயந்தனர். ஆகவே மல்சபாதி சோர்ந்து போய் காவடியை ஒரு ஒதுக்குபுறமாக வைத்துவிட்டு அதன் மீது சாய்ந்தபடி அமர்ந்தார். அப்போது எவரோ அதை கடந்து செல்வது போல இருந்தது. ஆனால் எவரும் காணப்படவில்லை.
அது பாபாவே என்பதை உணர்ந்தவர் மீண்டும் உற்சாகத்துடன் அனைவரையும் அழைத்துக் கொண்டு விழாவுக்குச் சென்றார். நான்கு நாட்கள் அவர்கள் அனைவரும் ஜிஜோரியில் தங்கி இருந்தனர். அவர்களுக்கு எந்த விதத்திலும் எந்த தொந்தரவும் வரவில்லை. ஊர் திரும்பிய மல்சபாதியிடம் பாபா கேட்டார் ' விழா எப்படி நடந்தது. நானும் அங்கு வந்தேனே. நீ காவடி மீது சாய்ந்து கொண்டு இருந்தபோது அந்த வழியாகச் சென்றேனே' என்றார்.

மல்சபாதிக்கு தனக்கு வர இருந்த மரணத்தை பற்றி முன்னமே தெரிந்தது. ஆகவே அவர் காகா சாஹேப் திக்ஷிட்டை மும்பாயில் இருந்து சீரடிக்கு வர வரவழைத்தார் . அவர் வருவதற்காக தன்னுடைய மரணத்தை ஒரு நாள் தள்ளி வைத்துக் கொண்டாராம். அவர் மரணம் அடையப் போகும் செய்தியைக் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த பல மக்கள் அங்கு வந்து கூடி இருந்தனர். 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பன்னிரண்டாம் தேதியன்று பாபாவின் பாதகமலங்களில் அவர் கலந்து விட அவரை லேந்திபாகின் அருகிலேயே தகனம் செய்தனர்.
.....பாகம்-3 .......தொடரும்
(Translated into Tamil by Santhipriya )
Loading
0 comments:
Post a Comment