Friday, October 15, 2010

Mhalsapathy- Baba's intimate devotee Part-1


அன்பானவர்களே,
பாபாவுடன் பல பக்தர்கள் நெருக்கமாக இருந்து உள்ளார்கள். அவர்களில் ஒருவரே மால்சபதி என்பவர். அவர் சாயி பாபாவை சாயி என்று அழைத்தவர். பாபாவுடன் அவருக்கு இருந்த தொடர்புகள் அனுபவங்களை இதன் மூலம் வெளியிடுவதில் பெருமை படுகின்றேன்
மனிஷா

பாபா சீரடிக்கு வந்தது முதல் அவர் மகா சமாதி அடைந்தது வரை அவருடைய பக்கத்தில் இருந்தவரே மால்சபதி என்பவர். தனது குடும்ப வாழ்கையைத் துறந்து விட்டு பாபாவுடனே வந்து இருந்தவர் அவர்.
அவருடைய உண்மையான பெயர் மால்சபதி சிம்னாஜி நாகரே என்பது.
அவருடைய பிறப்பு குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றாலும் அவர் மரணம் அடைந்த பொது அவருக்கு எழுபத்தி ஐந்து இருக்கலாம் என நினைகின்றனர். அவர் தட்டான் தொழில் செய்து வந்தவர். அவருடைய வம்சாவளியினர், முன்னோர்கள் என அனைவரும் வெகு காலமாக சீரடியில்தான் இருந்து உள்ளனர். அவருக்கு சுமார் ஏழு அல்லது ஏழரை ஏக்கர் நிலம் இருந்தது. அவருடைய வீட்டில் பதினைந்து அறைகள் இருந்தனவாம்.
பூனாவில் இருந்த ஜீஜுரி என்ற இடத்தில் உள்ள காண்டீரை என்ற தேவதையே அவர்களுடைய குல தெய்வம். அவர் வருடத்துக்கு ஒரு முறை அங்கு சென்று வழிபடுவது உண்டு. அவர் தன் குடும்ப வாழ்கையில் ஈடுபாடு இல்லாமல் இருந்தார். வருமானத்துக்கு தட்டான் வேலை செய்தாலும் அதில் வந்த வருமானம் போதவில்லை என்பதினால் அவருக்கு கனவில் வந்த தெய்வ கட்டளையின்படி பிட்சை எடுத்து தமது குடும்பத்தை காப்பாற்றி வந்தார். பாபாவுடன் தொடர்பு ஏற்பட்டவுடன் அவருக்கு குடும்பத்தில் இருந்த கொஞ்ச நஞ்ச பற்றும் அறவே போய் விட்டது.
மால்சபதிக்கு இரண்டு மகன்களும், நன்கு மகள்களும் இருந்தனர். அவர்களுடைய பெயர்கள்- ஜானகிபாய், சீதாபாய், ரகுமாபாய், விதாபாய் என்பன. அவருடைய இரண்டு மகன்களில் ஒருவன் இளம் வயதிலேயே மரணம் அடைந்து விட்டார். ஆனால் அதன் பின் பாபா வற்புறுத்தியதினால் 1986 ஆம் ஆண்டு மரணம் அடைந்து விட்ட மார்தாந்த் என்ற இன்னொரு மகன் வெகு காலம் பின்னர் பிறந்தான்.
சீரடியில் காஷிராம் ஷிம்பே, அப்பா ஜாகலே மற்றும் மால்சபதி போன்ற மூன்று பேர்களும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் மூவரும் இணைந்ததின் காரணம் அந்த மூவருமே சீரடிக்கு வந்த அனைத்து சாதுக்கள், சன்யாசிகள் மற்றும் தெய்வப் பிறவிகளுக்கு தேவையான இடம், சாப்பாடு, உணவு போன்றவற்றை செய்து வந்ததினால்தான். வந்த விருந்தாளிகளுக்கு காஷிராம் உணவும், ஜகாலே எரி பொருட்களையும், மால்சபதி அவர்களுடைய கால் கைகளை பிடித்து விட்டும் சேவை செய்வார்கள்.

அப்போது பாபா தமது பதினாறாம் வயதில் சீரடிக்கு வந்து விட்டு சென்று விட்டாராம். அதன் மூன்று ஆண்டுகளுக்குப் பின் அவர் மீண்டும் அங்கு வந்தாராம்.

தூப்கேத் என்ற கிராமத்தில் இருந்த சாந்த்பாய் என்பவர் வீடு திருமண கோஷ்டியுடன் பாபா வந்தாராம். மால்சபதி வீட்டின் எதிரில் இருந்த கண்டோபா ஆலயத்தில்தான் கல்யாண கோஷ்டி தங்கியது. பாபா திருமண கோஷ்டியை விட்டுப் பிரிந்து போய் கண்டோபா ஆலயத்தின் பக்கம் வந்தார். அப்போது கண்டோபா ஆலயத்திற்கு வந்திருந்த மால்சபதி அந்த பகீர் உருவில் இருந்த பாபாவின் தேஜஸ்சைக் கண்டு வியந்தார். எப்போதும் வந்த தெய்வீக மனிதர்களை வரவேற்பது போலவே அவரையும் 'ஆவோ சாயி' என அன்புடன் வரவேற்றார். ( பாபா மால்சபதியை முதலில் சோனார்த்தா என்றும் பின்னர் பகத் எனவும் அழைத்தார் ) .
அவரை வரவேற்றதும் மால்சபதி அவருடன் சில்லுமை பகிர்ந்து கொண்ட பின் அவர் முஸ்லிம் எனக் கருதி மசூதிக்கு அழைத்துச் சென்றார். அவரை அங்கு தங்க வைத்தபின் தன்னுடைய நண்பர்களுக்கும் அவரை அறிமுகம் செய்து வைத்தார். அவர்களும் பின்னர் பாபாவின் பக்தர்கள் ஆயினர். அவர்கள் அனைவரும் சேர்ந்து பஜனைகளைப் பாடுவார்கள், ஆடுவார்கள், சில நேரத்தில் கிராமத்தினரும் அதில் கலந்துகொள்வார்கள்
மால்சபதி கூறியது போல முதலில் வந்த பாபா காவி நிறத் துணிதான் அணிந்து இருந்தார். ஷிம்பே அவருக்கு பச்சை நிற உடையை தைத்துக் கொடுக்க அதை சில காலம் அணிந்து வந்த பாபா அதன் பின் வெள்ளை உடைகளையும், வெள்ளை தலை கட்டையுமே கடைசி வரை அணிந்தார்.
அவர் தங்கி இருந்த மசூதி மிகவும் சேதம் அடைந்து இருந்தது. அப்போது நானா சாஹேப் அதை புதிப்பிக்க எண்ணினார். அவர் மசூதிக்கு வந்து வெளியில் நின்று கொண்டு இருந்தபோது பாபா கேட்டார் ' பகத் வெளியில் நிற்பவர் யார்?' . மால்சபதி வந்தவர் நானா சாஹேப் என்பதை கூறினார். பாபா மேலும் கேட்டார் ; பகத், வந்துள்ளவர் மசூதியை புதியதாகக் கட்டுகிறேன் என்கின்றாரே. நீ என்ன நினைகின்றாய்? இதை புதிதாக கட்ட வேண்டுமா, இல்லை இப்போது உள்ள இடமே நன்றாக உள்ளதா?'
மால்சபதி கூறினார், 'அவர் புதிதாகவே கட்டட்டும். நாம் இருவருக்கும் தங்கவும், படுத்து உறங்கவும் சௌரியமாக இருக்கும்'. அதற்கேற்ப நானாவை உள்ளே அழைத்தனர். புதிய மசூதி கட்ட ஏற்பாடு ஆயிற்று. மால்சபதி நல்ல முகூர்த்த நேரத்தில் தேங்காய் உடைத்து அதை ஆரம்பித்தார்.
பாபா மசூதியிலும், சாவடியிலும் மாறி மாறித் தங்குவார். மசூதியில் அவர் தங்கத் துவங்கியதும் அவருக்கு துணையாக மால்சபதியும், தாத்யா படேலும் பாபாவுடன் படுத்து உறங்குவார்கள். அந்த இருவருக்கு மட்டுமே பாபாவுடன் படுத்து உறங்க பாக்கியம் இருந்தது.
1895 ஆம் ஆண்டு. பாபாவின் முழுமையான தெய்வீகத்தை அறிந்து கொண்ட மால்சபதி அவருடனே இருந்து கொண்டு தனது குடும்ப வாழ்வில் இருந்த பற்றை முற்றிலும் துறந்தார். ஒருமுறை மால்சபதியின் கனவில் கண்டோபா வந்து, உன்னால் தட்டான் தொழிலை செய்ய முடியாமல் போனால் உணவுக்கு என்ன செய்வாய்? ' எனக் கேட்க மால்சபதி ' சுவாமி எனக்கு உங்களுடைய கருணை இருந்தால் போதும் . வேலை இல்லை என்றாலும் என்னால் இருக்க முடியும்' என்று கூறிவிட்டு அன்றில் இருந்து தான் செய்து வந்த தட்டான் தொழிலை விட்டுவிட்டு பிட்சை எடுத்து சாப்பிடத் துவங்கினாராம்.
குடும்ப வாழ்வில் பற்றைத் துறந்தவர் சாப்பிட மட்டுமே வீட்டிற்குச் சென்றார். மற்ற நேரத்தில் பாபாவுக்கு பணிவிடை செய்தார். இரவு மசூதியில் பாபாவுடனேயே தங்கினார். ஒரு நாள் பாபா கூறினார் ' பகத் இந்த பகீர் கூறுவதைக் கேள். உனக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் இருக்கிறார்கள். நீ வீட்டிற்குப் போ. உனக்கு இன்னொரு மகன் பிறப்பான். '
மால்சபதிக்கு இன்னொரு மகனை பெறுவதில் இஷ்டம் இல்லை. ஆகவே பாபாவின் பேச்சை கேட்கவில்லை என்பதினால் ஒரு நாள் பாபா அவரை வலுக் கட்டாயமாக ஷிண்டேயுடன் வீடிற்கு அனுப்பி வைத்தார். அது கிருஷ்ண ஜனமி தினம். அடுத்த ஆண்டு அதே தேதியில் அவருக்கு ஒரு ஆண் மகன் பிறந்தான். அவனுக்கு மார்தாண்ட் என பெயர் இட்டனர்.
அந்த குழந்தை வளர்ந்து சற்று பெரியாவானதும் ஒரு நாள் பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என அடம் பிடிக்க அவனை அடிக்க மல்சாபதி வந்தார். அந்த பையன் பாபா மடி மீது அமர்ந்து கொண்டான். அவனை அழைத்து அடித்தார் மல்சாபதி. அதற்கு பாபா கூறினார் ' மால்சா, நீ உன் பையனைப் பற்றிகவலை படாதே, அவனை நான் பார்த்துக் கொள்கின்றேன்.
மார்தாண்ட் பெரியாவனாகியதும் மார்தாண்ட் மகராஜ் என்ற பெயரைப் பெற்று சீரடியில் உள்ள மல்சாபதி சமாதிக்கு அருகில் சென்று அமர்ந்து கொள்வார். பாபா தான் கூறியபடியே அவரிடம் நிறைய பக்தர்களை அனுப்பி வந்தார்.
மார்தாண்ட் ஒருமுறை தெரிவித்தார். ' பாபா தன்னுடைய தாயார் யார், தந்தை யார் என்ற அனைத்து விவரங்களையும் மல்சபாதியிடம் கூறி இருந்தார். ஆனால் நாட்டில் நிலவிய மதப் பிரச்சனைகளினால் அதை எவரிடமும் கூறக் கூடாது எனக் கூறி இருந்தார். அந்த உண்மையை தன்னுடைய தந்தை தனக்கும் கூறி உள்ளார் என மார்தாண்ட் தெரிவித்தார்.
மல்சபாதி தினமும் பாபாவுடன் விடிய விடியப் பேசுவது உண்டு. பாபாவின் சமாதிக்குப் பின்னும் அவர் மசூதிக்கு ஒருநாள் விட்டு மறு நாள் சென்று உறங்குவார். அதை தான் உயிரோடு இருந்தவரைக் காப்பாற்றி வந்தார். அவருக்கும் பாபாவுக்கும் இருந்த உறவு அலாதியானது. மணிகணக்கில் சில்லும்மை ( சில்லுமில் வைக்கப்பட்டு இருக்கும் புகையிலையை) புகைத்தவாறே பல விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டு இருப்பார்கள். பாபா சில்லுமில் வைக்கப்பட்டு இருக்கும் புகையிலையை முழுவதும் பிடிக்க மாட்டார். ததா, மாதவராவ் தேஷ்பாண்டே, சியாமா மற்றும் மல்சபாதி போன்றவர்கள் இரண்டு இரண்டு தடவை புகையை இழுத்துவிட்டு மற்றவரிடம் தர அது அவர்களிடையே சுற்றிக் கொண்டு இருக்கும்.
1906 ஆண்டு தமது அனுபவம் என்ன என்பதை மறைந்து விட்ட திருமதி காசிநாத் கனிக்கர் கூறியுள்ளதைக் கேளுங்கள்.
' ஒரு நாள் எப்போதும் போல பாபா சாவடிக்கு உறங்குவதற்காக வந்தார். அங்கு என்னுடைய கணவரும், மல்சபாதியும் இருந்தனர். அவர்கள் மூவரும் சில்லுமின் புகையை எழுத்துக் கொண்டே பேசிக்கொண்டு இருந்தனர்.
அவர்கள் என்ன பேசிக்கொண்டு இருந்தார்கள் என்பது எனது கணவருக்கு புரியவில்லை. பாபா இடையிடையே மல்சபாதியிடம் கேட்டார் ' என சைத்தானே மல்சபாதி?' அதற்க்கு மல்சபாதி கூறிக் கொண்டு இருந்தார் ' பேஷக், பேஷக், அதாவது சந்தேகம் இல்லாமல் சரியே என'

அப்போது சில்லுமை பற்ற வைக்கும் கல் எங்கோ விழுந்து விட்டு இருந்தது. அவ்வளவுதான்....பாபா உக்ரஹ மூர்த்தி ஆகி கத்தத் துவங்கினார். மல்சபாதி என்ன விஷயம் என்பதை பாபாவின் கை கால் அசைபுகளில் இருந்து புரிந்து கொண்டுவிட்டார். பல நேரங்களில் பாபாவின் வார்த்தைகளும் செய்கைகளும் ஒருவருக்கும் புரியாது. அப்போது அவர்கள் மல்சபாதியிடம் சென்று விளக்கம் கேட்பதுண்டு.
ஒரு முறை காகா சாஹேப் திஷிட் தனக்கு நடந்த சம்பவத்தைப் பற்றிக் கூறினார். ' பாபாவிடம் திஷிட் கேட்டார், ' உங்களுக்கு படுக்க ஒரு பலகையை கொண்டு வரவா?'. பாபா கூறினார் ' எனக்கு தந்துவிட்டால் மல்சபாதி என்ன செய்வான்?'. திஷிட் கூறினார், ' சரி அவருக்கும் ஒன்று அனுப்புகிறேன் '. பாபா உடனே கூறினார் ' அவனுக்குமா? .............நான் தூங்குகையில், மல்சபாதியிடம் என் இதயத்தை தொட்டுப் பார், அதில் எத்தனை நாமகரணங்கள் ஓடிக்கொண்டு ஏறுகிறது என்று கூறிவிட்டு நான் ஒரு வேளை தூங்கி விட்டால் தட்டி எழுப்பு என்பேன். அவன் உட்கார்ந்தவாறே குறட்டையுடன் கூடிய தூக்கத்திக்கு சென்றுவிடுவான். அவனை நான் பகத் எனக் கூவி அழைத்து எழுப்ப வேண்டும் . ஆகவே நான் தரையில் படுப்பதே மேல்' என்றாராம்.

மல்சபாதிக்கு உலகில் எந்த ஆசையும் இல்லை. அவர் ஏழையாக இருந்தார். ஆனாலும் பாபாவுக்கு சேவை செய்வதை விரும்பி ஏற்றார். தன்னுடைய பெரும்பாலான நேரத்தை மசூதியில் பாபாவுடன் இருப்பதிலேயே கழித்தார். அது போல பாபாவுக்கும் அவர் மீது அசாத்திய அன்பு இருந்தது. பாபா அவருடைய சொல்லை தட்டியது இல்லை. அதனால் அவருக்கு அதிக அளவு ஆன்மீக அனுபவம் கிடைத்தது.
(Translation in Tamil : Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.