My Laziness and Importance of UDI MAA-Experience by Shirish
My Laziness and Importance of UDI MAA-Experience by Shirish
என் சோம்பேறித்தனமும், உடியினால் குணமான கதையும் -- பாகம் -5
என் சோம்பேறித்தனமும், உடியினால் குணமான கதையும் -- பாகம் -5
பக்தர் ஷிரிஷ் உடியினால் குணமான கதை
'' நான் சில நாட்களாக உடல் நலமின்றே இருந்தேன். அதற்குக் காரணம் தூசியினால் ஏற்படும் அலர்ஜி மற்றும் குளுமை. மறுநாள் நான் நாசிக்கில் இருந்த என் அறைக்கு திரும்பி வந்தேன். மற்ற இடங்களை விட நாசிக்கில் குளிர் அதிகம்.
அன்று மாலை தலைமயிர் வேட்டி கொள்ளச் சென்ற பின் திரும்பி வந்து குளிக்க ஆரம்பித்தேன். திடீரென குழாயில் இருந்து வந்த தண்ணீர் நின்றுவிட்டது. தலையில் போட்ட சோப்பின் ஈரம் போகவில்லை. என்ன செய்வது எனப் புரியாமல் குடிக்கும் நீரை கொண்டு வந்து சோப்பு நுரைகளை தலையில் இருந்து கழுவினேன். அதன் பின் சோம்பேறித்தனமாக இருந்த நான் மறந்து போய் என் அறையில் இருந்த குழாய்களை மூடாமல் வந்து விட்டேன். சோம்பேறித்தனம் அதிகமாயிற்று. தலையை காய வைத்துக் கொண்ட பின் சாப்பிடச் சென்றுவிட்டு அறைக்குத் திரும்பினேன். வந்து பார்த்தால் அறை முழுதும் தண்ணீர். அவசரமாக குழாய்களை மூடிவிட்டு, தண்ணீரை துடைக்க என்ன செயாலாம் என யோசனை செய்தேன். குளிக்கும்போது தண்ணீர் நின்று விட்டதினால் சுமார் இருபது நிமிடங்கள் தலை ஈரமாக இருந்ததினால் எனக்கு ஒரே தலைவலி, என்னால் முடியவில்லை.
எப்படியோ பாபாவின் அருளினால் ஒரு ஆளைப் பிடித்து அறையை துடைத்தப் பின், தலைவலி அதிகம் ஆகி விட்டதினால் படுத்துக் கொண்டு விட்டேன். ஜுரம் வரும்போல இருந்தது. வெளியில் சென்று தேநீர் அருந்திவிட்டு வந்தேன்.
எனக்கு என்ன ஆயிற்று என எண்ணியபடியே படுத்துக் கொண்டு இருந்தேன். பாபாவை நினைத்துக் கொண்டேன். சடால் என நினைவுக்கு வந்தது. நான் தவறு செய்து உள்ளேன். எழுந்தேன், சாயி சத் சரித்திரத்தில் இருந்த உடி மகிமா என்ற பகுதியைப் இரு முறை படித்தேன். உடியை எடுத்து தண்ணீரில் கலந்து குடித்தேன். இனி என்னை காப்பாற்றுவது பாபாவின் பொறுப்பு என விட்டுவிட்டேன். படுத்தவாறே 108 முறை சாயி நாம ஜெபமும் செய்தேன்.
சற்று நேரத்தில் என்னுடைய அவஸ்தைகள் குறையத் துவங்கியது. உடம்பு வேர்கத் துவங்கியது . அடுத்த இரண்டரை மணியில் மீண்டும் ஒரு முறை உடியை சாப்பிட்டேன். சில மணி நேரத்தில் நான் நலமடையத் துவங்கினேன். அப்போதுதான் பாபாவின் அறிவுரைகள் என் நினைவில் வந்தன.
1) சோம்பேறித்தனமே நம்முடைய வாழ்கையில் நமக்கு பெரிய எதிரி. என் சோம்பேறித்தனத்தினால் குழாய்களை கவனிக்காமல் இருந்ததினால்தானே அறை முழுதும் தண்ணீர் நிறம்பி அவஸ்தைப் பட்டேன்.
2) உடி அனைத்து வியாதிகளையும் குணப்படுத்தும். ஆனால் நமக்கு பாபா மீது அபார நம்பிக்கை இருக்க வேண்டும்.
Loading
0 comments:
Post a Comment