Wednesday, October 20, 2010

Five blessed homes from where Baba took Bhiksha


அன்பானவர்களே
சீரடியில் பாபா தினமும் சென்று பிட்சை கேட்டு பெற்ற ஐந்து வீடுகளை பற்றியும் அவர்களை எப்படி அழைத்து பிட்சை பெற்றார் என்பதும் அவர்கள் தந்த பிச்சையை அவர்கள் காட்டிய அன்பின் அடையாளமாக அவர் ஏற்றதும் படிக்க படிக்க ஆனந்தம் தருபவை. அந்த பொன்னான நேரங்கள் மீண்டும் வராது
மனிஷா

ஷாகாராம் படேல் ஷேல்கேயின் வீடு

கிழக்கு புற வாயிலைக் கொண்ட இந்த வீடு சாவடியின் எதிரில் உள்ளது. சக்காராம் ஒரு செல்வந்தரான விவசாயி. அவருக்கு தானா பாயி என்ற மனைவியும் திரியம்பக் என்ற மகனும் உண்டு. பேத்தியின் பெயர் ஹரி பஹு. வாமன ராவ் கோண்டார்கர் மற்றும் ஷேல்கேயின் வீட்டிற்கு இடையே நின்று 'சாகாராம் ரோடி தேதோ (சாகாராம் ரொட்டி தா ) ' என பாபா கூவுவார்.
திரியம்பக் பாபாவின் சன்ஸ்தானுக்கு நிறைய நிலம் தந்து உள்ளார். ஷேல்கே குடும்பத்தினர் நரசிம்மர் ஆலயத்தை கட்டி உள்ளனர். அது அவர்களுடைய வீட்டுக்கு பக்கத்தில்தான் உள்ளது. நரசிம்மர் ஆலயத்திற்குள்தான் திரியம்பக், அவர் மனைவி தானா பாயி மற்றும் ரம்கீர் பாஹு போன்றவர்களின் சமாதிகள் உள்ளன.
வாமனராவ் கோண்ட்காரின் வீடு

ஷாகாராம் படேல் ஷேல்கேயின் வீட்டிற்கு எதிர்புறம் வலது பக்கத்தில் உள்ளது இந்த வீடு. வாமனராவும் சீரடியில்தான் பிறந்து வளர்ந்தவர். அவர் வசதியான குடும்பத்தில் வந்தவர். சீரடியிலும் அதை சுற்றி உள்ள பகுதியிலும் சுமார் ஐநூறு ஏக்கர் நிலத்தை வைத்து இருந்தனர். லேந்தி பாக் மற்றும் அதன் சுற்றுப்புற நிலங்களும் அவர்களுடையதுதான். லேந்தி பாக்கை அவர்கள் மொறேஷ்வர் பிரதான் என்பவருக்கு விற்று இருந்தனர். அதை மொறேஷ்வர் சாயி சன்ஸ்தானுக்கு நன்கொடையாகத் தந்து விட்டார். வாமனராவ் வீடு பாபா பிட்சை கேட்டுப் பெற்ற வீடு என்பது சாயி சரித்திரத்திலும் குறிப்பிடப் பட்டு உள்ளது. இந்த வீட்டில் உள்ள ஏணி வழியேதான் பாபா ஏறி ராதாகிருஷ்ண ஆயியின் வீட்டுக்குச் செல்வாராம். வெண்கு காம்பிலேகார் என்பவர் அந்த ஏணியை வாங்கி வந்தார். அதற்கு பாபா இரண்டு ரூபாய் தந்தார். மற்றவர்கள் அந்த ஏணியின் விலைக்கு அதிகம் தந்து விட்டதாக பாபாவிடம் கூறினார். பாபா அதற்கு எந்த பொருளுக்கும் சரியான விலையை சரியான நேரத்தில் தர வேண்டும் என்று கூறி விட்டார். காம்பிலேகாருக்கு குழந்தை இல்லாமல் இருந்தது. பாபா இரண்டு ரூபாய் தந்ததும அவருக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர், செல்வமும் நிறைந்தது. வாமனராவ் 1964 ஆம் ஆண்டு மறைந்தார். அவர் விட்டுச் சென்றுள்ளபணிகளை அவருடைய வம்சாவளியினர் தொடர்ந்து செய்து கொண்டு உள்ளனர்.


ஐந்து வீடுகளில் பாபா பிட்சை எடுக்கச் சென்ற
போது பயன் படுத்திய பாதுகைகள்.

பய்யாஜா பாயி கோடி படேல் வீடு

இவர்களின் வீடு சாயி குடீருக்கு பக்கத்தில் உள்ளது. பய்யாஜா மா பெரும் செல்வந்தரை திருமணம் செய்து கொண்டு சீரடிக்கு வந்தவர். வீட்டு வேலை அனைத்தையும் தானே செய்தவர். அவருக்கு சமைபடிலும் மற்றவர்களுக்கு உணவு தருவதும் பிடித்தமானவை. அவரைப் பொறுத்தவரை உணவே பிரும்மா என நினைத்தவர். பாபா முதன்முதலில் சீரடிக்கு வந்த பொது அவள்தான் அவருக்கு தினமும் பிட்சை தந்தாராம். பாபாவை தேடிபோய் பிட்சை தந்ததும்தான் தான் உணவு அருந்துவாராம். பாபா மசூதிக்கு வந்ததும் அவருக்கு அது சௌகரியமாகி விட்டது.
பாபாவுக்கு அவள் தினமும் புதியதாக சமைத்த உணவையே தருவார். பாபா ஒருமுறை அவளுக்கு என்ன வேண்டும் எனக் கேட்டார். அவளோ தனது மகன் தத்யாவுக்கு நல்லதை செய்ய வேண்டும் என்றால். ஏன் எனில் மூண்டு மனைவிகள் இருந்தும் அவருக்கு குழந்தைகள் இல்லாமல் இருந்தது. அதன் பின் பாபாவின் அருளினால் அவர்களுக்கு மூன்று மகன்களும் இரண்டு மகள்களும் பிறந்தனர்.


சாயி குடீர் பாயாஜி அப்பா கோடி படேல்

இவர் பெரிய நிலத்தின் சொந்தக்காரர். பிர்கோன் என்ற இடத்தில் போலீஸ் வேலையில் இருந்தவர். மகாசமாதி அடைவதற்கு முன் பாபா எவருடைய வீட்டில் இருந்தும் பிட்சை பெற்று உள்ளார். பாபாவுக்கு தனது பதிநூராம் வயதில் இருந்தே சேவை செய்ய ஆரம்பித்தவர். மசூதியில் நமாஸ் படிக்கும்போதுதான் மட்டும் அல்ல மற்றவர்களையும் மெளனமாக இருக்கும்படி பாபா கூறுவாராம்.
அவர் அனைவருக்கும் தந்த இனிப்பு முதல் மற்ற அனைத்துமே அனைவருக்கும் சமமாக இருக்கும். பாயாஜி அப்பா கோடி படேலின் தந்தையின் மரணத்தைப் பற்றி அவர் மரணம் அடைவதற்கு முன்பே பாபா அவரது மகனிடம் கூறினாராம். பாபா அவருக்கு தினமும் நான்கு ரூபாய் தந்தார். பாபா அவரிடம் அதை தரும்போது 'இவற்றை சாப்பிட்டுவிட்டு மலத்தைப் போல வெளியேற்றி விடாதே' என்றாராம். ஆகவே படேல் அந்த பணத்தை சேர்த்து வைத்து அதில் எண்பத்தி நான்கு ஏக்கர் நிலம் வாங்கினாராம். பாபா மகா சமாதி அடையும் முன் பாயாஜி அப்பா கோடி படேலிடம் பாபா , ' நான் போகிறேன். நீதான் இதை பார்த்துக் கொள்ள வேண்டும். அனைத்து பிராமணர்களும் என்னுடன் இங்கு இருப்பார்கள்' என்று கூறினாராம்.
நந்தாராம் சக்லேசாவின் வீடு


நந்தராம் வட்டிக்கு கடன் தருபவர். பெரும் செல்வந்தர். ஆனால் கருணை உள்ளம் படைத்தவர். அவருடைய தாத்தா ராஜஸ்தானில் இருந்து சீரடிக்கு வந்து தங்கியவர். அவர்களுடைய வீட்டில்தான் தினமும் கடைசியாக பிச்சை எடுக்க பாபா செல்வார்.
அவர்களுடைய குடும்பத்தின்மீது பாபாவுக்கு ஆலாதி பிரியம் உண்டு. அவர் பிச்சை எடுக்கச் சென்றால் நந்தராமின் மனைவியை ' ஏ,பாகடி , பிச்சை போடு 'என்பார். பகடி என்றால் திக்கு வாய். அவளுக்கு திக்குவாய் இருந்ததினால் பாபா அப்படி செல்லமாகக் கூப்பிடுவார். அவள் பிச்சை எடுத்து வர நேரமாகினால் அவளை திட்டுவார். சில சமயம் அவளை பூரண போலி செய்து கொடு எனக் கேட்பார். தன தின்றது போக மீதியை மற்றவர்களுக்குத் தந்து விடுவார்.
1911 ஆம் ஆண்டு சீரடி முழுவதும் பிலேகு நோயினால் அவதிப்பட்ட போது நாதுராம் அங்கிருந்து சென்றுவிட பாபாவிடம் அனுமதி கேட்க குதிரையில் ஏறிப் போனார். ஏன் எனில் அவர்கள் குடும்பத்தினரின் கண்கள் சிவப்பாக மாறி ஜுரம் வரத் துவங்கின. ஆனால் பாபா அவருக்கு உடி கொடுத்து விட்டு 'உன்னை நான் மரணம் அடைய விடமாட்டேன்' என உறுதி மொழி தந்தார். அவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை .நலம் அடைந்து விட்டனர்.
நந்தராமின் பாட்டி ராதாபாய் என்பவர் தனது குடும்பத்தில் இருந்த ஆண் பிள்ளைகள் அனைவரும் அகால மரணம் அடைகின்றார்களே என பாபாவிடம் கேட்டபோது அவர் அவளுக்கு மூன்று மாம்பழங்களைத் தந்து சாப்பிடச் சொன்னார். அதன் பின் அவர்களுக்கு மூன்று பிள்ளைகள் பிறந்து அனைவரும் நலமாக இருந்தனர்.
புட்டிவாடி என்ற இடத்திற்கும் துவாரகாமயிக்கும் இடையில் இருந்த பகுதியை பாபாவுக்குத் தானமாகத் தந்து விட்டனர். அதனால்தான் சமாதி ஆலயத்தை பெரிதாக்க முடிந்தது. மேலும் அவர்கள் குடும்பத்தினர் விநாயகர் மற்றும் ஹனுமான் ஆலயத்தின் தரைகளை சீர்படுத்த பண உதவி செய்தனர். 1946 ஆம் ஆண்டு நந்தராம் மரணம் அடைந்ததும் அவர் விட்டுச் சென்ற நற்பணிகளை அவருடைய வம்சத்தினர் தொடர்ந்து செய்து கொண்டு வருகின்றனர்.
(Translated into Tamil by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.