Friday, October 15, 2010

Mhalsapathy -Sai Baba's intimate devotee -Part 3



பாபா தனது பக்தர்களுடைய வியாதிகளையும் தான் வாங்கிக் கொண்டு அவர்களைக் காத்து வந்துள்ளார் . அந்த சில சம்பவங்களை மல்சபாதியின் மகன் கூறினார் ' இது நாற்பது ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை இது . என்னுடைய தாயார் தன்னுடைய சகோதரனின் வீட்டுக்குச் சென்று இருந்தாள். என்றும் போல மல்சபாதி சீரடியில் பாபாவுடன் அமர்ந்து இருந்தார். திடீரென பாபா 'என்னுடைய ஒரு பக்தர் முதுகில் கொப்பளம் வந்து அவதிப்படுகின்றாள். இதோ பார் எனக்கும் முதுகில் கொப்பளம் வந்து விட்டது . ஆனால் இது சரியாகிவிடும் ' என்றார். என்னுடைய தந்தை பாபாவின் முதுகில் இருந்த கொப்பளத்தைப் பார்த்தார். மிகவும் வலி தந்து கொண்டு இருந்த அது இரண்டு அல்லது மூன்று நாளில் குணமாகிவிடும் என பாபா கூறினார். மூன்று நாட்களுக்குப் பின் அந்த கொப்பளம் உடைந்து விட்டது. இரண்டு நாட்களுக்குப் பிறகு ஊரரில் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் என்னுடைய தாயாருக்கு வந்திருந்த காயம் பற்றியும் அது உடைந்து தற்போது நலமாக உள்ளால் என்ற செய்தியும் வந்து இருந்தது. அதை படித்ததுமே எங்களுக்குப் புரிந்தது என்னுடைய தாயாரின் காயத்தை பாபா தானே ஏற்றுக் கொண்டு அவளை குணப் படுத்தி உள்ளார் என்பது. என்னுடைய தந்தை கூறினார் ' பார்த்தாயா மார்தாண்டா, உன் அம்மாவைக் காப்பாற்ற பாபா அவளுடைய துயரத்தை தானே எடுத்துக் கொண்டு அவதிப்பட்டு உள்ளார் '.

ஒரு நாள் மலசபாதி உணவு அருந்த வீட்டிற்குச் சென்றார். அது இரவு நேரம். பாபா கூறினார் ' பத்திரம் ஜாக்கிரதையாகச் செல். வழியில் உனக்காக இரண்டு பெரிய திருடர்கள் காத்திருக்கிறார்கள்' . தன் வீட்டுக்குச் சென்றவர் தமது வீட்டின் வாசலிலும், பக்கத்திலும் இரண்டு பெரிய பாம்புகள் இருந்ததைக் கண்டார். இன்னொரு நாள் பாபா கூறினார், 'பத்திரம், வழியில் உனக்காக ஒரு திருடன் காத்திருக்கின்றான் '. அதனால் இரவு லாந்தருடன் மசூதிக்கு வந்தவர் வெளியில் ஒரு பெரிய பாம்பு இருந்ததைப் பார்த்துக் கத்தினார். அனைவரும் வந்து அதை அடித்துக் கொன்றனர்.
1908 ஆம் ஆண்டு. மல்சபாதியின் வீட்டில் ஒரே நேரத்தில் அனைவரும் உடல் நலமின்றி படுத்து விட்டனர். மருத்துவர் வந்து அனைவருக்கும் மருந்துகள் கொடுத்துச் சென்றார். ஆனால் அதை கேட்ட பாபா கூறினார் அதை மருத்துவரால் குணமாக்க முடியாது. நானே குணப் படுத்துகின்றேன் எனக் கூறி விட்டு தனது தடியை எடுத்துக் கொண்டு துவாரகாமாயியை சுற்றி சுற்றி வந்தவாறு கூறினார், 'வா உன்னை நான் கவனித்துக் கொள்கிறேன்'. அனைவரும் விரைவில் குணம் அடைந்தோம்.
இன்னொரு முறை மல்சபாதியின் மனைவி அவளுடைய பெற்றோர் வீட்டிற்குச் சென்று இருந்தாள். அப்போது அவளுக்கு தொண்டையில் புண் வந்து அவதிப் பட்டாள். குணம் அடையவில்லை. அதே நேரத்தில் சீரடியில் இருந்த பாபா மலசபாதியிடம் கூறினார் ' உன் மனைவிக்கு தொண்டைப் புண் வந்துள்ளது. அதை நான் குணப் படுத்துகிறேன். வேறு யாராலும் அதை குணப் படுத்த முடியாது' . மல்சபாதிக்கு பாபா மீது அபாரமான நம்பிக்கை. அதற்கு ஏற்ப அவருடையமனைவியின் தொண்டைப் புண் உடனே குணமானது.
என்னொரு முறை பாபா மல்சபாதியிடம் கோபர்கோனில் உள்ள அச்னகோனில் உள்ள ராம்பாபு லோந்தே என்பர் வீட்டிற்கும், டோர்ஹளே என்பவரின் மகள் வீட்டிற்கும் செல்ல வேண்டாம் என்றும் அவர்கள் உன்னை அவமானப்படுத்தி விடுவார்கள் எனவும் மல்சபாதிக்கு கூறினார். ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தினால் வேறு வழியின்றி மல்சபாதிக்கு அவர்கள் வீட்டிற்குச் செல்லும்படி ஆகியது. அங்கு சென்றவர் அவமானப்பட்டார்.
மற்றொருமுறை மல்சபாதி அர்தான்கோடு என்ற கிராமத்துக்கு செல்ல வேண்டியதாயிற்று. பாபா அங்கு கலவரம் வரும் என்பதினால் அவரை அங்கு செல்ல வேண்டாம் எனக் கூறி இருந்தார். ஆனால் அங்கு செல்ல வேண்டிய கட்டாயம் வந்து விட மல்சபாதி அங்கு போக வேண்டியதாயிற்று . திடீரெனஒரு சின்ன பிரச்சனையினால் அந்த ஊரில் இருந்தவர்களிடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி அடித்துக் கொள்ளத் துவங்கினர். பாபாவின் அருளினால் மல்சபாதி அங்கிருந்து தப்பி வந்து விட்டார்.

ஒரு முறை மல்சபாதியின் தந்தைக்கு வருட சிராத்தம். அப்போது ஒரு நாய் அங்கு வந்தது. எப்போதும் போல நாய்க்கு ஒரு ரொட்டித் துண்டை போடுமாறு மல்சபாதி தனது மனைவியிடம் கூறினார். அனால் அவள் அதை தரவில்லை. நாய் போகவில்லை என்பதினால் மல்சபாதி அதை அடித்து விரட்டினார். அன்று இரவு பாபா மல்சபாதியிடம் கூறினார் ' இந்த ஊரில் பார். இன்று காலையில் ஒரு நாய்க்கும் என் போல நாதியட்ற கதியே ஏற்பட்டு உள்ளது '.
ஒரு முறை இன்னொரு நாய் மல்சபாதியின் வீட்டிற்குச் சென்றது, அதன் வாயில் இருந்து எச்சில் சொட்டிக் கொண்டே இருந்தது. அருவருப்பாக இருந்த அதை அடித்து விரட்டினார் மல்சபாதி. அன்றும் பாபா கூறினார் ' பெரிய எதிர்பார்ப்புடன் நான் பகத் வீட்டிற்குச் சென்றேன், அடிதான் கிடைத்தது'. அன்று மாலை தாஸ் கனு மகராஜ் தமது பிரசங்கத்தில் அதே போன்ற ஒரு கதையை எதேற்சயாகக் கூறினார். ஒரு முறை வித்தோபா தமது பக்தன் நாம்தேவ் வீட்டுக்கு வாயில் பிரெட்டை வைத்துக் கொண்டு நாய் உருவில் சென்றார். அவரை அடையாளம் கண்டு கொண்ட நாம்தேவ் வீட்டின் உள்ளே இருந்து ஒரு பத்திரத்தில் நெய்யைக் கொண்டு வந்து, வெறும் பிரட்டை சாப்பிடுவதற்கு பதிலாக அதை நெய்யுடன் சேர்த்து சாப்பிடுமாறு சொன்னார்.

பாபா மல்சபாதியை பண ஆசை இன்றி இருக்க வைத்து இருந்தார். ஒரு முறை மும்பை தாதரில் இருந்து தனது கடுமையான ஆஸ்துமா நோய்க்கு குணம் காண ஹன்ஸ்ராஜ் என்பவர் சீரடிக்கு வந்து இரண்டு-மூன்று மாதம் தங்கினார். அப்போது ஏழ்மை நிலையில் இருந்த மல்சபாதியை பார்த்து அவர் அவருக்கு பத்து ரூபாய் தந்தார். அதை மல்சபாதி ஏற்க மறுத்து விட்டார். மற்றவர்கள் மூலம் தந்தும் அதை அவர் வாங்கிக் கொள்ளவில்லை என்பதினால், திக்ஷித்திடம் அதை தந்து பாபாவிடம் கொடுத்து அவர் மூலம் மல்சபாதிக்கு தருமாறு கேட்டுக் கொண்டார். திக்ஷித் பணத்தை பாபாவிடம் தர 'அது எத்தனை ரூபாய்' என பாபா கேட்டார். பத்து ரூபாய் என்றதும் அதை நானாவிடமே வைத்திருக்குமாறு கூறிவிட்டு, பின்னர் அதை மற்றவர்களுக்கு தானம் தந்து விடுமாறு பாபா கூறினார். இப்படியாக மல்சபாதி என்றுமே பண ஆசை இல்லாமலேயே இருந்து வந்துள்ளார். அவருடைய ஆசை எல்லாமே பரமார்தனை காண்பதே என ஹெமன்ட் பந்த் என்பவர் எழுதி உள்ளார்.
பாகம் -4.........தொடரும்
(Translated into Tamil by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.