Sunday, October 3, 2010

Why did Baba demand DAKSHINA ?


அன்பானவர்களே
சாயிபாபாவின் சரித்திரத்தில் தட்சணை பற்றி சில செய்திகள் உள்ளன . முதலில் தட்சணை என்பது என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.
தட்சணை என்பது பற்றில்லாமல் இருக்கும் வாழ்கைக்கும், நாம், நமது என்பதை ஒழிக்கவும் ஆகும் என பாபா நினைத்தார். சில நேரத்தில் பக்தர்கள் என்ன தர நினைத்தார்களோ அந்த அளவே தட்சணை கேட்பார். சில நேரத்தில் இல்லை என்றாலும் வருபவர்களின் சட்டைப் பையை காலி செய்து அனுப்புவார். காரணம் அவருக்கு மட்டுமே தெரியும். அப்படி அனைத்தையும் வாங்கிக் கொண்டு விட்டவர்கள் கையில் காசில்லாமல் திரும்பிச் செல்லும்போது பாபா ஏதாவது ஒரு உருவை எடுத்து வழியில் சென்று அவர்களை காப்பாற்றி அவர்கள் இடத்துக்கு சங்கடம் இல்லாமல் அழைத்துச் சென்று விடுவார். அப்படி அவர் செய்ததிற்கு மூல காரணம் வருபவர்களுக்கு முதலில் நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பதற்காகவே.
மனிஷா



முதலில் பாபா எவரிடம் இருந்தும் தட்சணை பெற்றது இல்லை. வருபவர்கள் தானாகவே ஒரு அணா இல்லை இரண்டு அணாவைத் தந்தால் அந்த பணத்த்சில் புகையிலை அல்லது எண்ணை வாங்குவார். சிலர் யோசிப்பது உண்டு ' என்னடா இவர் பகீர் எனக் கூறிக்கொண்டு தட்சணை ஏன் பெற்றுக் கொள்கின்றார்? சிலர் எண்ணுவதுண்டு, 'பகீர்களுக்கு கையில் காசு இருக்காது, ஆகவே ஏதேனும் தானம்செய்யலாம் ' என. அவர்கள் ஒரு அணா தந்தால் பாபா அதை பெற்றுக் கொள்வார். இரண்டு அணாவைத் தந்தால் ஒரு அண்ணாவை திருப்பி விடுவார்.
இந்து தர்ம சாஸ்திரங்களிலும் உபநிஷத்திலும் கூறப்பட்டு உள்ளது 'சாதுக்களையும் சஞாசிகளையும் பார்க்கப் போனால் வெறும் கையுடன் போகக் கூடாது.' பாபா வங்கிக் கொண்டதட்ஷணைக்கு அர்த்தம் உள்ளது.
1) ஒரு ரூபாய் என்பது ஜீவன் அல்லது பிரும்மனைக் குறிக்கும்.
2) இரண்டு ரூபாய் என்பது நம்பிக்கை, விசுவாசம் மற்றும் கடமைகளைக் குறிக்கும் ( சாயி சத் சரிதாவின் பாகம் 18 -19 )
3) நான்கு ரூபாய் என்பது மனம், புத்தி, சித்தம் மற்றும் அகங்காரங்களை அடக்கி குருவிடம் அடைக்கலம் அடைந்ததைக் குறிக்கும்.
4) ஐந்து ரூபாய் என்பது ஐந்து இந்திரியங்களைக் குறிக்கும்.
5) ஆறு ரூபாய் என்பது ஆறு தீய குணங்களைக் குறிக்கும். தக்கர்ட் தம்பதிகளை ஒரு முறை பாபா ஆறு ரூபாய் தருமாறு கேட்டபோது அவர்களிடம் அது இல்லை. தக்கர்டின் மனைவி வருந்தினாள். அதற்கு தக்கர்டின் மனைவியிடம் தக்கர் கூறினார், உனது உடலில் உள்ள ஆறு தீய குணங்களைதான் பாபா கேட்கின்றார் , பணத்தை அல்ல'. பாபா அதை ஆமோதித்தார்.
6) ஒன்பது ரூபாய் என்பது பக்தி மார்கத்தின் நவ வித்ய பக்தியாகும்.
7) பதினைந்து ரூபாய் என்பது இதிகாசங்கள் புராணங்களில் இருந்து பெற்ற பாடங்களை பாபா குடி இருக்கும் இதயத்தில் வைத்து இருப்பது ஆகும் . ஒரு முறை பாபா நார்கேயிடம் பதினைந்து ரூபாய் கேட்டபோது அவரிடம் பணம் இல்லை. பாபா கூறினார், நீ யோகா வஷிஷ்டாவை படித்திருகின்றாய் அல்லவா அதில் இருந்து பதினைந்தைத் தா.
8) பதினாறு ரூபாய் என்பது முழு சரணாகதியைக் குறிக்கும்.
சில நேரங்களில் பாபா கேட்டு வாங்கிய தட்சணை அதிகமாகவும் இருக்கும், குறைவாகவும் இருக்கும். பாபா மகா சமாதி அடைந்த போது அவரிடம் சல்லி காசுகூட இல்லை. பாபா தங்கங்களை வங்கிக் கொள்ள மாட்டார். அவரை பொறுத்தவரையில் வந்தவர்கள் பொருள் ஆசைகளில் இருந்து மனத்தால் விடுதலை பெற வேண்டும் என்பதற்காகவே தட்சிணை வாங்கினார்.
சாயி லீலா என்ற பத்திரிகையில் பாபா பெற்று வந்த தட்சிணை குறித்து பீ. வீ. தியோ என்பவர் இப்படி எழுதி உள்ளார்:-
''பாபா அனைவரிடம் இருந்தும் தட்ஷணையை கேட்டுப் பெற்றது இல்லை. அவர்களாக விரும்பிக் கொடுத்தால் வாங்கிக் கொள்வார், சில சமயத்தில் அவற்றையும் வாங்கிக் கொள்ள மாட்டார். சிலரிடம் மட்டுமே அவர் தட்சணை கேட்டதுண்டு. வருபவர்கள் பாபா கேட்டால் தரலாம் என எண்ணி வந்தால் அதை முதலிலேயே அறிந்து இருந்த பாபா அவர்களைக் கேட்க மாட்டார். வருபவர்கள் பாபாவின் மனதுக்கு விரோதமாக கொடுத்தாலும், அவர் முன்னாலேயே அவற்றை அவர்கள் வைத்தாலும் அதை தொட மாட்டார். அவற்றை திரும்ப எடுத்துச் செல்லுமாறு கூறி விடுவார். வருபவர்களின் தகுதிக்கு ஏற்பவே அவர் தட்சணை பெற்றுக் கொள்வார். ஏழைகளிடமும், பெரும் பணக் காரர்களிடம் இருந்தும் பாபா தட்சணை பெற்றுக் கொள்ள மாட்டார்.
அதே போல பாபா தட்சிணை கேட்டுத் தராமல் இருந்தவர்கள் மீதும் அவர் கோபம் அடைய மாட்டார். எவராவது எவரிடமாவது தட்சணை கொடுத்து அனுப்பி இருந்தால் அவர்கள் மறந்து விட்டாலும் பாபா அவர்களின் நினைவுக்கு அதை கொண்டு வந்து வாங்கிக் கொள்வார். வேறு சமயங்களில் எவராவது அதிக அளவு தட்சணை தந்தால் அதில் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு மீதத்தை திருப்பி விடுவார். வந்தவர்கள் முதலிலேயே அதிகம் யோசித்துக் கொண்டு வந்து குறைவாகக் கொடுத்தால் மீதியை கேட்டு வங்கி விடுவார். அது போல குறைவாக கொடுக்க எண்ணி வந்தவர்கள் அதிகம் தந்தால் அதிகமானதை திருப்பி விடுவார். ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு முறை மட்டுமே தட்சணை பெற்றுக் கொள்வார்.
வந்த பணத்தில் தான் சில்லு வாங்கவும், துனிக்கு எரி பொருளுக்கும் தேவையானதை மட்டும் வைத்துக் கொண்டு மீதியை எவருக்காவது தருவார். இன்றைக்கு சாயி சமஸ்தானத்தின் சொத்துக்கள் அனைத்தும் ராதாகிருஷ்ண ஆயேயின் அறிவுரைப் படி செல்வந்தர்களும் பக்தர்கள் காணிக்கயிலும் வாங்கியவையே .

 
பாபா பெற்ற தட்சணை குறித்து கவனத்தைக் கவரும் 
வகைக்கான ஒரு கதை உள்ளது.

ஒரு முறை பிரதான் என்ற நீதிபதி சீரடிக்கு வந்தார். வரும் முன் அவர் பாபாவுக்கு இருபது ரூபாய் தட்சணை கொடுக்க எண்ணினார். அந்த காலத்தில் இருந்த பண நோட்டுகள் வெள்ளி நாணயங்களாகவே இருந்தன. வந்ததும் பிரதான் நினைத்தார் பல வெள்ளி நாணயங்களைத் தருவதைக் காட்டிலும் ஒரு தங்க நாணயத்தை தந்து விட்டால் என்ன என எண்ணி பாபாவிடம் ஒரு தங்க நாணயம் தந்தார். இது என்ன என பாபா கேட்டதற்கு பிரதான் விளக்கம் தந்தார். பாபா தனக்கு தங்க நாணயம் வேண்டாம் என்றும் அதற்கு பதில் வெள்ளி நாணயமே தருமாறு கேட்டார்.
ஒரு தங்க நாணயத்தின் விலை பதினைந்து வெள்ளி நாணயமே ஆகும். ஆகவே பிரதான் பாபாவுக்கு பதினைந்து வெள்ளி நாணயத்தைத் தந்ததும் பாபா கூறினார் ' நீங்கள் இன்னும் எனக்கு இந்து ரூபாய் தர வேண்டும் ' பிரதான் முழித்தார். பாபா கூறினார் ' நீங்கள் வீட்டில் இருந்து கிளம்பிய போது இருபது ரூபாய் தருவதாக எண்ணி விட்டு இங்கு வந்து பதினைந்து ரூபாய் தந்தால் எப்படி ? அதைக் கேட்ட பிரதான் அசந்து போய் நின்றார். பாபாவுக்கு தன் மனது எப்படி தெரிந்திருந்தது?
(Translation into Tamil : Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.