Sunday, October 3, 2010

What you say you must do


அன்பானவர்களே
சாயி சரித்திரத்தில் இப்படி கூறப்பட்டு உள்ளது :-' சத்குருவானவர் ஒரு வழிகாட்டி போல. அவரே நாமை இந்த சம்சார சாகரத்தில் இருந்து நம்மை வெளியில் அழைத்துச் சென்று கரை சேர்ப்பார். அவரிடம் முழுமையாக சரண் அடைந்தவர்களை அவர் கை விட மாட்டார். ஆனால் அவர் மீது முழுமையாக நம்பிக்கை வேண்டும். எந்த ஒருவன் எப்போதும் சாயியின் நினைவுடனே இருக்கின்றானோ அவனுக்கு கடவுளின் தரிசனம் நிச்சயம் கிடைக்கும். அவனுடைய பிராத்தனைகள் நிறைவேறும், உயர்ந்த ஆன்மீக நிலையைஅவன் அடைவான்.
இதற்கு உதாரணமாக உள்ள இந்த கதையைப் படியுங்கள்.
மனிஷா


பூனாவில் கணேஷ் பித் என்ற இடத்தில் வசித்தவர் கஷிராம். 1913 -14 ஆம் ஆண்டுகளில் பிளேக் நோய் பரவி இருந்தது. காஷிராம் பாபாவின் மீது நம்பிக்கை வைத்து அங்கேயே இருந்தார். பலர் தமது வீட்டையும் மற்றதையும் விட்டு விட்டு மற்ற இடத்துக்கு ஓடி விட்டனர். காஷிராம் தன்னுடைய மகன் ரகுநாதையும் அவன் மனைவி மற்றும் குழந்தையை அவனுடைய மாமனார் வீட்டிற்கு செல்லுமாறு கூறி விட்டார். ரகுநாத் அதற்கு முன் சீரடிக்குச் சென்று பாபாவை தரிசித்த பின் மாமனார் வீடு செல்ல முடிவு செய்து இருந்தார். என்ன காரணத்தினாலோ கிளம்புகையில் அதை மறந்து விட்டார். ஏன் எனில் அது அதிகம் பயணம் செய்து போக வேண்டிய இடம்.
அவர் பயணம் செய்து கொண்டு இருந்த வண்டி தூந்த் என்ற இடத்தை நெருங்கியது. அது வரை மிகவும் நலமாக இருந்த மகன் திடீரென வழியில் உடல் நலமின்றி இறக்கும் தருவாய்க்கு போய் விட்டான். அதைக் கண்ட அவனுடைய மனைவுக்கும் காய்ச்சல்வந்தது.
அவர்கள் மாமனார் வீட்டிற்க்குச் சென்றபோது மனைவியின் நிலையும் மிகவும் மோசமாகிவிட்டது. ஜுரமோ அதிகமாகிக் கொண்டே போயிற்று. உதவிக்கு ஒரு டாக்டர் கூட கிடைக்கவில்லை. அப்போது எதிர்பாராத விதமாக ஒருவர் வந்து டாக்டரை அழைத்து வந்தார். வந்த டாக்டரும் அந்து வியாதியை தன்னால் குணப் படுத்த முடியாத நிலைக்குப் போய் விட்டதாகக் கூறிச் சென்று விட்டார். மனம் கலங்கிய ரகுநாத் பாபாவை பிராத்தனை செயத் துவங்கினார். அன்று மாலை நான்கு மணிக்கு பாபா வடக்கு புற வாயில் வழியே உள்ளே வந்தார். அவர் வந்தது எவருக்கும் தெரிய வில்லை. வந்தவர் அந்த உடல் நலமுற்ற பெண்மணியின் பக்கத்தில் அமர்ந்தார். கையில் இருந்த உடியை அவள் நெற்றியில் தடவினார். அவள் உடலை தன் கையால் தடவினார். அவள் நெற்றியில் கை வைத்தவாறு கூறினார் 'சொன்னால் செய்ய வேண்டும் . அப்படி செய்யாமல் இருந்து விட்டு பின்னர் வருந்தக் கூடாது. '
அப்போது சில சிறுவர்கள் சப்தம் போடா அதைக் கேட்டு ரகுநாத் திரும்பினார். வந்தவர் மறைந்து விட்டார். அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை. தனது மனைவியின் நெற்றியில் உடியை தடவியது யார்? பாபாவே வந்திருக்க வேண்டும் என நம்பினார். அன்று இரவு ஒன்பது மணிக்கு ஜுரம் குறையத் துவங்கியது. விரைவில் அவர்கள் அவள் நலம்அடைந்தாள் .
சத்குருக்களின் மிருதுவான கைகளில் விசேஷ சக்தி உண்டு. அந்த கைகளினால் அவர்கள் நம்மை தொடும்போது நமது மனதில் உள்ள அனைத்து உலக ஆசைகளையும் அழித்து விடுகின்றார். நம்முடைய பூர்வ ஜென்ம பாபங்கள் விலகி ஓடும். அப்போது தலைக்குமேல் ஏறிய கோபம் உள்ளவர்களின் மனம் கூட சாந்தமாகி விடும். சாயிபாபாவின் அற்புதமான உருவத்தைக் காணும்போது நம்மை அறியாமலேயே நம் இதயம் மகிழ்ச்சியால் நிறம்பும்.
(Translation into Tamil : Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.