Saturday, October 30, 2010

Sai Baba's Experience-Sai devotee Sridevi.


அன்பானவர்களே,
நான் வெகு நாட்களுக்குப் பின்னர் மீண்டும் இந்த இணையதளத்தில் எழுதும் பணியை துவக்குகின்றேன். பாபாவின் அருளினால் ஒரு நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்குச் சென்று கொண்டு இருந்ததினால் இணைய தளத்தை கவனிக்க முடியாமல் போய்விட்டது. அதற்கு இடையில் என் நலனைக் குறித்து கவலை தெரிவித்த வாசகர்களுக்கும், பொறுமை காத்தவர்களுக்கும் என் நன்றி. இதோ இன்று பாபாவின் பக்தையான ஸ்ரீ தேவி என்பவரின் அனுபவத்தைப் படியுங்கள்.
மனிஷா
ஸ்ரீ தேவியின் அனுபவம்

அன்புள்ள மனிஷாஜி,
நான் சாயிபாபாவை பற்றி ஒரு வருடத்துக்கு முன்னர்தான் என் மாமி மூலம் அறிந்து அவரை சரண் அடைந்தேன் . அது முதல் எனக்கு அவர் பல விதங்களிலும் தன்னுடைய கருணைக் காட்டி காப்பாற்றி உள்ளார்.
நான் இப்போது கூறப்படும் விஷயம் இரண்டு மாதங்கள் முன்னர் நடந்தது.
நான் எனக்கு உடல் நலமில்லை என்பதினால் பிறந்த வீட்டிற்குச் சென்று இருந்தேன். அங்கு என்னுடைய தாயாருக்கும் உடல் நலமில்லை. அவள் வயிற்று வலியால் அவதிப் பட்டுக் கொண்டு இருந்தாள். ஆகவே அவளை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியதாயிற்று. நாங்கள் சென்று கொண்டு இருந்த ஆட்டோவிலேயே அவள் ரத்த வந்து எடுத்தாள். உடல் நிலை மூசமடையத் துவங்கியது. என்ன செய்வது எனத் தெரியவில்லை. எனக்கு மிகவும் கவலையாகிவிட்டது. ஆகவே அவளைக் காப்பாற்றுமாறு பாபாவையே வேண்டத் துவங்கினேன். அது இரவு நேரம். போகும் வழியில் ஒரு கடையில் பாபாவின் படம் வரையப்பட்டு இருந்தது. அதில் இருந்த பாபா என்னையும் என் தாயாரையும் நோக்கி கையை நீட்டி ஆசிர்வதிப்பது போல இருந்தது. அந்தப் படத்தைப் பார்த்ததுமே எனக்கு மனதில் தைரியம் வந்தது. மனமும் அமைதி அடைந்தது.
மருத்துவ மனைக்குச் சென்றதுமே அவர்கள் சிகிச்சைத் துவக்கினார்கள். இரண்டே மணி நேரத்தில் என்னுடைய் தாயார் குணம் அடையத் துவங்கினார். அது பாபாவின் கருணையே. அதைப் பற்றி நான் எழுத வேண்டும் என நினைத்தும் எழுத முடியாமல் இருந்தது. ஆனால் என் தாயார் என்று மீண்டும் உடல் நலமின்றி இருந்ததினால் அந்த சம்பவத்தைப் பற்றி எழுத முடிவு செய்தேன். தயவு செய்து இதை பிரசுரிக்கவும். இதன் மூலம் உலகெங்கும் உள்ள பாபாவின் பக்தர்களது மனதில் அவர் மீதான நம்பிக்கை மேலும் வளரட்டும்.
நன்றி
ஸ்ரீ தேவி

(Translated into Tamil by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.