Sunday, October 3, 2010

I am satiated and satisfied-Baba said


பாலாஜி படேல் நிவாச்கார் என்பவர் தினமும் வந்து பாபாவுக்கு சேவை செய்வார். பாபா நடக்கும் பாதையை பெருக்கி அலம்பி விடுவார். தன்னுடைய வயலில் விளைந்த அனைத்தையும் பாபாவிடம் வந்து தந்தார். பாபா எதைத் தந்தாரோ அதை வைத்துக் கொண்டு அவரும் அவருடைய குடும்பத்தினரும் மகிஷ்சியோடு வாழ்ந்தனர்.
ஒரு முறை பாலா ஷிம்பி வீட்டில் வருடாந்திர சிராத்தம் நடந்தது. அதில் வர வேண்டியவர்களுக்கு மேல் மூன்று மடங்கு அதிகமாக விருந்தினர் வந்து சாப்பிட்டனர். அவள் பாபாவின் உடியை அவற்றின் மீது போட்டுவிட்டு பரிமாறினாள் . வந்தவர் அனைவரும் திருப்தியாக உணவை அருந்தி விட்டுச் சென்றனர். உணவு அத்தனை பேருக்கும் போதுமானதாக இருந்ததே வினோதம் மற்றும் ஒரு முறை புரந்தரே என்பவர் சீரடிக்கு வந்து பாலா ஷிம்பே வீட்டில் தங்கினார் . பாபா அவரிடம் மதியான ஆரதிக்குப் பின் தான் இரண்டு , மூன்று பகீர்களுடன் உணவு அருந்த வருவதாகவும் கூறினார்.
மதியம் ஐந்து பகீர்களுடன் பாபா வந்தார் சாப்பிட்டு விட்டுப் போனார். இன்னும் சிலர் வர உள்ளார் என்றார். அடுத்து இருபது பகீர்கள் வந்து உணவு அருந்திச் சென்றனர். எடுக்க எடுக்க உணவு குறையவே இல்லை. வந்தவர்கள் திருப்தியாக உணவு அருந்தி விட்டுச் சென்றனர். அடுத்து பத்து பகீர்கள் வந்து உணவு அருந்திச் சென்றனர். உணவு குறையவே இல்லை. வந்தவர்கள் திருப்தியாக உணவு அருந்தி விட்டுச் சென்றனர். அனைவரும் சென்றதும் அவர்கள் சென்று பாபாவுக்கு தட்சிணையும், வெற்றிலை பாக்கும் தந்து சாப்பிட அழைத்தனர். அவர் சிரித்துக் கொண்டே கூறினார் ' நான் முழு திருப்தியுடன் வயிறு நிறைய சாப்பிட்டு விட்டேன்' அதன் பின் பாபா அவர்களை சாப்பிடச் சொன்னார் . என்ன அதிசயம் அவர்கள் சாப்பிட்டும் உணவு மீதி இருந்தது. மீதி இருந்தஉணவை அவர்கள் மும்பைக்கும் எடுத்துச் சென்றனர். பாபாவின் லீலையை என்ன எனச் சொல்வது?
(Translation into Tamil : Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.