Monday, May 28, 2012

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 38.

சாய் அனுபவம் - 38

(Translated into Tamil by Mrs. Ramya )

அனைவருக்கும் சாய் ராம் !
பாபா தின நல்வாழ்த்துக்கள் !
இவ்வுலகில் உள்ள அனைவருக்கும் தந்தையான நம் சாய் பாபா கடவுளின் அவதாரம்.நம் பாபாவின் மகிமையை அளவிட முடியாது.அவரது அன்பானது கடலை போன்று ஆழத்தையும், வானத்தை போல எல்லைய இல்லாமலும் உள்ளது.அவரது லீலைகளை பலவாறாக நாம் அறிய பெற்று வருகிறோம். அவரது அற்புதத்தை தேட முயலும் ஒரு பக்தனின் தாகம் தணியாதது ஆகும்.
பாபா தன் பக்தர்களுடன் கொண்டுள்ள தொடர்பு தனித்துவம் வாய்ந்த அறிவிக்கேட்டாத செயல் ஆகும்.அவர் தன் சக்தி மூலம் தன் பக்தனை குணமாக்குவதும், பாதுக்கப்பதும், ஆசிர்வதிப்பதும்  நம் அறிவுக்கு அப்பாற்ப்பட்ட செயல்.
ஒவ்வொரு வாரமும் பக்தர்கள் தங்கள் அனுபவங்களை இந்த தளத்தின் மூலமாக பகிர்ந்துக் கொள்வதால், நம்மால் ஓரளவு நம் தாகத்தை தணிக்க முடிகிறது.சில சாய் பக்தர்களின் அனுபவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.அதை கவனமுடன் படித்து பாபாவின் அன்பை புரிந்துக் கொள்வோம்.
ஜெய் சாய் ராம்.
மனிஷா 
---------------------------------------------------------------------------------------

சாய் பாபாவின் ஆதிர்வாதங்கள்

ஜெய் சாய் பாபா
மனிஷா அவர்களே
நலமாக இருக்கிறீர்களா? நான் எனது சாய் அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள நினைக்கிறேன்.இதை மற்ற பக்தர்களிடம் நீங்கள் இந்த தளத்தின் மூலம் பகிர்ந்துக் கொண்டால் மிகவும் பெருமைக்குரியவராக இருப்பீர்கள் .எனது பெயரையும், மின்னஞ்சல் முகவரியும் கொடுக்க வேண்டாம் எனக் கேட்டு கொள்கிறேன். உங்களுக்கு என் கதையில் ஏதாவது மாறுதல் ஏற்படுத்த வேண்டும் எனத் தோன்றினால், உங்கள் வசதிக்கேற்ப மாற்றிக் கொள்ளுங்கள்.
உங்களின் உதவிக்கு நன்றி .
ஜெய் சாய் ராம்
கடந்த வாரம் எனது சாய் விரத கடைசி வாரத்தை பற்றி நான் மின்னஞ்சல் மூலம் தெரிவித்து இருந்தேன்.என் கணவருக்கு வியாழக் கிழமை இரவு வேலை இருந்ததால், என்னை அன்று கோவிலுக்கு அழைத்து செல்ல முடியாது எனவும் , அதற்கு பதிலாக சனி கிழமை அழைத்து செல்வதாகவும் கூறி இருந்தார்.வியாழன் அன்று கோவிலுக்கு செல்லாமல் இருப்பதும் எனக்கு கஷ்டமாக இருந்தது.மேலும் அன்று என் கணவருடன் சேர்ந்து பாபா கோவிலுக்கு செல்ல முடியாமல் போகும் என எண்ணி மிகவும் வருந்தினேன்.எனவே புதன் கிழமை அன்றே நான் மட்டும் தனியாக காரை ஒட்டி செல்ல நினைத்து முகவரியை குறித்துக் கொண்டேன்.கோவில் எங்கள் வீட்டில் இருந்து மிகவும் தொலைவில் உள்ளது.மேலும் சாலை நெரிசல் அதிகம் உள்ள, நெடுஞ்சாலையை கடந்து செல்ல பயமாகவும் இருந்தது.
எனவே புதன் இரவு, எனது தோழியின் முகவரியை காட்டும் சாதனத்தில் இருந்து ,கோவிலின் முகவரியை நகல் எடுத்துக் கொண்டேன்.அடுத்த நாள் வியாழன் காலை 5 மணிக்கு எழுந்து பூஜையை முடித்துவிட்டு, அலுவலகத்திற்கு செல்லும் முன் ,என் பெற்றோர்களை குழந்தைகளுடன் மாலை கோவிலுக்கு செல்ல தயாராகும்படி கூறினேன்.
அன்று அலுவலகத்தில் இருந்து சற்று நேரமாக வந்து, குளித்துவிட்டு பூஜையை முடித்தேன்.எனது பெற்றோர்களும், குழந்தைகளும் தயாராக இருந்தனர். பாபாவை வேண்டிக் கொண்டும் அவர் நாமத்தை துதித்துக் கொண்டும் புறப்பட தயாரானேன். இங்கே இரண்டு விஷயங்கள் என்னை பயமுறுத்தின. ஒன்று நெடுஞ்சாலையை பெற்றோர்களையும் , குழந்தைகளையும் வைத்துக் கொண்டு ஒரு மணி நேர பயணத்தில் எப்படி காரை ஓட்டி செல்வோம் என்பதும் , மற்றொன்று எனது சிறிய மகன் அப்போது தான் சளி மற்றும் காய்ச்சலில் இருந்து சற்று குணமடைந்து சோர்வாகி இருந்தான்.ஒரு மணி நேரம் அவன் காரில் அமர்த்துவது கடினம் என்பதாகும்.
பாபாவின் கருணையால் நாங்கள் நல்லவிதமாக கோவிலை அடைந்தோம்.ஆனால் நான் ஒரு அரை மணி நேரமாக கோவிலை தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.எப்படியும் ஆரத்தியை பார்த்து விட வேண்டும் என எண்ணினேன்.ஆனால் கோவிலை அடைந்த சமயத்தில் ஆரத்தி முடிந்து இருந்தது.சிலர் மட்டுமே இருந்தனர். மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும் நான் பாபாவை தரிசித்து, பிரசாதங்களை அனைவருக்கும் கொடுத்தேன்.இங்கே இன்னொரு சோதனை .நான் 9 தெலுகு விரத புத்தகங்களை வாங்கி இருந்தேன்.ஆனால் அங்கே இருந்தவர்கள் வட இந்தியர்கள்.அவர்களுக்கு ஆங்கிலமும் ஹிந்தியும் தான் தெரியும்.
சில தெலுகு மக்கள் இருந்தாலும்,அவர்களுக்கு தெலுகு படிக்கத் தெரியவில்லை.எனது பிரசாதங்கள் அனைத்தும் முடிந்து இருந்தன.ஆனால் புத்தகங்கள் மட்டும் என்னிடம் இருந்தது.நான் பாபாவிடம், விரதத்தில் நான் ஏதும் தவறு செய்து இருந்தால் மன்னித்துவிடுங்கள் என்றேன்..திரும்பவும் நான் பாபாவிடம் சென்று வேண்டினேன்.எனது தோழி அங்கே வந்தார்.அவர் என்னிடம் ஒரு புத்தகத்தை வாங்கிக் கொண்டார்.மேலும் அவருடைய தோழியை அறிமுகப்படுத்தி அவரையும் வாங்க செய்தார்.அவர் பாபாக்கு அபிஷேகம் செய்தார்.மேலும் சேஜ் ஆரத்தியும் அரங்கேறியது. மாலை ஆரத்தியை பார்க்காவிட்டாலும் சேஜ் ஆரத்தி,அபிஷேகத்தை பார்க்க தான் பாபா என்னை தாமதமாக வர வைத்தார் என மகிழ்ச்சி அடைந்தேன்.இருந்தாலும் மற்ற புத்தகங்களை கொடுக்க தெலுகு பேசும் பக்தர்களை தேடிக் கொண்டிருந்தேன்.சேஜ் ஆரத்தி காரணமாக ஒவ்வொரு பக்தர்களாக சேர ஆரம்பித்தனர்.கடைசியாக என் புத்தகங்களை தெலுகு பக்தர்களுக்கு கொடுக்க முடிந்தது.எனது குழந்தைகளும் கோவிலில் அமைதியாக இருந்தனர். என்னை தொந்திரவு செய்யவில்லை. எல்லாம் நல்லவிதமாக முடிய இரவு 10 . 45 வீடு வந்து சேர்ந்தோம்.
நான் இந்த விரத்தை என் கணவருக்காக தொடங்கினேன்.அவருக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டினேன்.அவருக்கு வேலை இருந்தது. ஆனால் அது அவர் சம்மந்தப்பட்டது இல்லை.மேலும் வாரத்தில் இரண்டு நாள் மட்டும் தான் வேலை.உண்மையாக சொல்ல வேண்டும் எனில் எங்களிடம் பணமோ, வீட்டிற்கு தேவையான பொருட்களோ இல்லை.எனவே என் கிரெடிட் அட்டை மூலமாக எல்லாவற்றையும் வாங்கினேன்.அதற்கு பணம் செலுத்தவும் பணம் இல்லை.எனவே உடனடியாக பணத்திற்கு உதவுமாறு பாபாவை வேண்டினேன்.மேலும் எங்களுக்கு சொந்த தொழில் உள்ளது.ஆனால் சரக்குகள் வெளியேறாமல் இருந்தன.நான் பாபாவிடம் என் கணவருக்கு வேலை கிடைக்க இன்னும் நேரம் இருக்கிறது என நீங்கள் நினைத்தால், என் சொந்த தொழிலாவது சரியாகி, சரக்குகளை விற்க உதவுகள் என வேண்டினேன்.
எனக்கு அடுத்த நாள் வெள்ளி கிழமை வங்கியில் இருந்து அழைப்பு வந்தது.அன்று உகாதி என்பதால் நான் வேலையாக இருந்தேன்.சனி அன்று வங்கிக்கு அழைத்து பேசியதில், என் கணக்கில் பணம் இல்லாமல் போகி பல நாட்கள் ஆனது எனவும், உடனே பணம் செலுத்துமாறும் கூறினார்கள்.என்னிடமோ,என் கணவரிடமோ பணம் இல்லை.என் இளைய மகன் கணக்கிலும் பணம் இல்லை.என் மூத்த மகன் கணக்கில் பணம் உள்ளதா என பார்த்தேன்.
அந்த கணக்கில் நாங்கள் எப்போதும் பள்ளி கட்டணத்தை செலுத்தி வைப்போம்.நான் அந்த கணக்கை பார்த்த போது அதில் அதிகமான பணம் இருந்தது.நான் குழம்பி போய் என் கணவரிடம் காண்பித்தேன்.அவர்,பள்ளியில் இருந்த பணத்தை எடுக்காமல் விட்டு இருந்தால் தவிர அதில், அத்தனை பணம் இருக்க வாய்ப்பு இல்லை, கணினியில் போட்டு பெரிய எழுத்துகளால் பார் என கூறிவிட்டார். ஆனாலும் அதில் பணம் இருந்த விவரத்தை நான் ஆரம்பத்தில் இருந்து சோதனை செய்து பார்த்தேன்.ஆனால் கடந்த 1 2 வருடமாக நாங்கள் அந்த கணக்கை திறந்து கூட பார்த்தது இல்லை. என்றோ செலுத்தி வைத்த பணத்தையும் மறந்திருக்கிறோம்.
என்னால் அதை நம்பவே முடியவில்லை.அதில் இருந்த பணம் எனது சம்பளத்தை விடவும் அதிகமாக இருந்தது.அந்த பணத்தில் இரண்டு மாதத்திற்கு எங்களால் வீட்டிற்கு தேவையான பொருட்களையும் வாங்கி,அனைத்து கட்டணங்களையும் கட்ட முடியும்.நான் பாபாவிடம் மில்லியன் முறைகள் நன்றி சொன்னேன்.
சில சமயம் என் கணவர் இரண்டு முறை பணத்தை என் மகனில் கணக்கில் அனுப்பி இருந்திருக்கிறார்.அந்த பணம் தான் இன்று சேர்ந்து இருந்தது.இதை எனக்கு சரியான சமயத்தில் காட்டிய பாபாவின் மகிமை அற்புதமானது.
மனிஷா அவர்களே. இந்த அனுபவத்தை இந்த தளத்தில் சேர்த்துவிடுங்கள். என் கணவருக்கு வேலை கிடைத்தால் இதை பற்றி நான் பகிர்ந்துக் கொள்வேன் என பாபாவிடம் சொல்லி இருந்தேன்.என் கணவருக்கு அவருக்கு சம்மந்தப்பட்ட வேலை கிடைக்காவிட்டாலும், அவருக்கென ஒரு வேலை கிடைத்தது.
இது மிக நீளமான அனுபவம்.வேண்டுமெனில் சுருக்கிக் கொள்ளுங்கள் .என் கணவருக்கு நான் நினைத்தபடி பாபாவின் கருணையால் வேலை கிடைத்தால்,அதை பற்றியும் இங்கே சொல்கிறேன்
என்றும் பாபாவின் நினைவுடன்
ஜெய் சாய் பாபா
கீதா
--------------------------------------------------------------------------------------

சாய் பாபாவின் லீலைகள்

எனது பெயர் மோகன்.எனது சொந்த ஊர் ஹைதராபாத்.நான் தற்சமயம் அமெரிக்காவில் இருக்கிறேன்.இவை அனைத்தும் 1988 ஆண்டு முதன் முதல் பெங்களூரில் உள்ள சாயி கோவிலுக்கு சென்ற பின் தான் நடந்தது.சரியான வேலையில்லாததால் நாங்கள் பொருளாதாரத்தில் கொஞ்சம் சிரமப்பட வேண்டிய சூழல் இருந்தது.அப்போது எனக்கு அவ்வளவாக பாபா மீது நம்பிக்கை இல்லை.மன்னித்துவிடுங்கள் பாபா.ஆனால் என் மனைவி அதிகமான நம்பிக்கை வைத்து இருந்தார்.பலவிதமான அற்புதங்கள் என் வாழ்வில் ஏற்பட்டு பல மாற்றங்களும்,பாபாவின் மீதான என் நம்பிக்கையும் அதிரித்தது.
1 .பாபாவின் அற்புதத்தால் எனக்கு நல்ல முறையில் குழந்தை பிறந்தது.பிரசவம் மிகவும் சிரமம் எனவும், குழந்தை அல்லது தாய் மட்டுமே பிழைக்க முடியும் என மருத்துவர் கூறினார்.ஆனால் பாபாவின் மகிமையால் இருவருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் நல்ல முறையில் எல்லாம் நடந்தது. என் மனைவிக்கு பாபா மீது நம்பிக்கை அதிகம் ஆனது .
2 .நிலையான வேலை இல்லாமல் தவிக்கும் போது நான் பாபாவை வேலை வாங்கிக் கொடுக்கும்படியும், அதற்கு ஷீரடிக்கு வரவதாகவும் வேண்டினேன்.அவரின் அற்புதத்தால், எனக்கு அரசு வேலை கிடைத்தது.எனது வாழ்க்கை தரமும் உயர்ந்தது.பாபாவின் மீதான நம்பிக்கை பல வழிகளில் உயர்ந்தது.
3 .பலவிதமான சுழலில் எங்களுக்கு ஏற்பட்ட பல சிக்கல்களை நாங்கள் பாபாவிடம் வேண்டி தான் சரி செய்தோம்.பாபாவும் அதற்கு செவி சாய்த்து அவரின் ஆசியையும்,அன்பையும் எங்கள் குடும்பத்திற்கு அளித்தார்.
4 .முதல் முறை எனது விசா நிராகரிக்கப்பட்டது. நான் என நம்பிக்கையை இழந்துவிட்டேன்.பின் பாபாவை வேண்டினேன்.எனக்கு அடுத்த முறை விசா கிடைத்தது.நான் அமெரிக்காவிற்கு செல்ல முடிந்தது.நாம் பாபாவை தொடர்ந்து தியானிக்கிறோமோ இல்லையோ பாபா நம்மை என்றுமே காக்கிறார்.
பாபாவிற்கு என்ன எப்போது, மற்றும் எது செய்ய வேண்டும் எனத் தெரியும். நாம் செய்ய வேண்டியது அவர் மீது நம்பிக்கை ,உண்மை மற்றும் பொறுமையை வைப்பது மட்டுமே..எப்போதும் அவரை நினையுங்கள்.எங்களின் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்தது.பாபாவின் மிது வைக்க வேண்டிய அன்பு மற்றும் நம்பிக்கையின் எளிய வழியை புரிந்துக் கொண்டோம்.
பாபாவின் ஆசிகள் அனைவர்க்கும் கிடைக்கட்டும்
---------------------------------------------------------------------------------

பாபா எனக்கு குழந்தையை கொடுத்து அருளினார்

ஏப்ரல் 2010 ல் எனக்கும்,என் கணவருக்கும் ஷீரடியில் பாபாவின் ஆசி கிடைத்தது.என்னுடைய தோழி என்னிடம்,பாபாவின் சமாதியை நீ தொட்டால் உன் வாழ்க்கையின் தரம் மாறும் என்றாள்.நாங்கள் சமாதி கோவிலுக்கு சென்றோம் ஆனால் சமாதியை தொட முடியவில்லை.அடுத்த நாள் காலை நாங்கள் வரிசையில் நின்றுக் கொண்டிருக்கும் போது எங்களின் முன் ஒரு தம்பதி ஒரு வயது குழந்தையை வைத்திருந்தனர்.நான் அந்த குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்தேன்.நான் பாபாவிடம் இந்த முறை சமாதியை தொட வாய்ப்பு தருமாறு வேண்டினேன்.பாபாவை வேண்டும் போது, எனக்கு சமாதியில் இருந்து பூக்கள் கிடைக்க வேண்டும் எனவும் என கணவரிடம் சொல்லிவிட்டு வேண்டினேன். என கணவர் என பின் நின்று இருந்தார்.
நாங்கள் சமாதியை நெருங்கும் போது கதவு திறக்கப்பட்டு எங்களால் சமாதியை தொட முடிந்து என் ஆசை நிறைவேறியது.அங்கே இருந்த குரு சமாதியின் மீது இருந்த மலர் கொத்தை என் கணவர் கையில் கொடுத்து, இந்த ஒன்றை இருவரும் வைத்துக் கொள்ளுங்கள் என்றார் .எனக்கு மகிழ்ச்சியில் வார்த்தை வரவில்லை.பாபா என் ஆசையை நிறைவேற்றினார்.
திரும்பி வரும் போது நாங்கள் நாசிக் ரயில் நிலையத்தில் நின்று, காத்திருந்தோம்.அங்கேயும் நான் 7 ,8 மாதம் வயதுள்ள அழகான குழந்தையை பார்த்தேன்.எனக்கும் இது போல குழந்தை வேண்டும் என் ஆசைப்பட்டேன்.ஒரே மாதத்தில் நான் கர்ப்பமானேன்.நாங்கள் குழந்தைக்கு முயற்சியே செய்யவில்லை.ஒன்றை இருவரும் வைத்துக் கொள்ளுங்கள் என் அந்த குரு சொன்னது இன்று தான் புரிந்தது.
பாபாவின் அருளால் எனக்கு ஒரு அழகான குழந்தை பிறந்தது.எனது பெற்றோர்கள் அவனை சாயீஷ் என அன்பாக அழைக்கிறார்கள்.அந்த பெயரையே அவனுக்கு வைத்தோம்.பின் ஒரு வாரம் கழித்து ஷீரடியில் இருந்து எங்களுக்கு ஒரு சிடி கிடைத்தது.அதன் பின் புறம் சாயீஷ் கம்பனி என எழுதி இருந்தது.மீண்டும் பாபாவின் ஆசி கிடைத்தது எண்ணி மிகவும் மகிழ்வடைந்தோம்.

(Uploaded by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.