All About Sri Sai Satcharitra Parayan.
சாயி சரித பாராயணம்
சாய்ராம்
இன்று சாயி பாராயணம் செய்வதின் பலன், சாயி சரித்திரம் என்பது என்ன, அது எப்படி எழுதப்பட்டது என்பது பற்றி எல்லாம் நான் கூற விரும்புகின்றேன். அதை படிப்பதினால் பல நன்மைகள் கிடைக்கின்றன என்பதை அனுபவபூர்வமாக கண்டவள் நான். அதை எப்படி படிப்பது என்பது அவரவர் விருப்பம். பாபா தன்னைப் பற்றி எழுத வைத்த ஹெமன்ட்பந்திற்கு எப்படி அருளினார் என்பதை சாயி சரித்திரத்தில் இருந்து தந்துள்ளேன். பராயண விதிகளையும், சாயி புராணம் வந்த கதையின் சுருக்கத்தையும் தந்துள்ளேன்.
மனிஷா
சாயி சரித்திரம் எப்படி எழுதப்பட்டது ?
1) ஹெமட்பன்ட் முதலில் சாயி பாபாவின் அற்புதமான லீலைகளை எழுதத் துவங்கியபோது , அதை படிக்கும் அனைவருக்கும் அது போதனையாக மட்டும் இல்லாமல் அது அவர்களின் பாபங்களைத் துடைக்கும் ஒரு மார்கமாக இருக்கும் எனக் கருதினார். ஆகவேதான் அவர் பாபாவின் வாழ்க்கை சரித்திரத்தை எழுதத் துவங்கினார்.
2) முதலில் தான் அதை எழுதத் தகுதி அற்றவர் என நினைத்தார் . அவர் கூறினார் ’’ நான் என்னுடைய நெருங்கிய நண்பர்கள் பற்றியே அறிந்து கொள்ள முடியாத மனிதனாக இருக்கும் பொழுது , நான் என்னுடைய மனதையே புரிந்து கொள்ள முடியாதவனாக இருக்கும் பொழுது , வேதங்களினால் கூட புரிந்து கொள்ள முடியாத முனிவரைப்ப் பற்றி நான் என்ன எழுத முடியும் ?’ ஒரு முனிவரைப் பற்றி மற்றொரு முனிவர்தான் கூற முடியுமே தவிர என்னால் எப்படி அவருடைய குணாதிசயங்களை எடுத்துக் கூற முடியும் ? அப்படி செய்யப் போய் தான் கேலிக்கு இடமாகி விடக்கூடாதே என்ற கவலையில் சாயி நாதரின் அருளையே வேண்டினார்.
3) அந்த நேரத்தில் பாபா பற்றி பல புத்தகங்கள் வெளியாகி இருந்தன . ஆகவே அதுபோன்ற இன்னொரு புத்தகம் எதற்கு என்ற எதிர்ப்பும்,கருத்துக்களும் தோன்றின. அதற்கு பதில் இப்படி கிடைத்தது . ''சாயி பாபாவின் வாழ்க்கை ஒரு கடலைப் போன்றது . அதில் சென்று குளிக்கும் பக்தர்கள் தாம் காணும் முத்துக்களை எல்லாம் மற்றவர்களும் பார்த்து மகிழும் வகைக்கு உதவுவார்கள் . அவரைப் பற்றிய உவமைகள் , கதைகள் மற்றும் போதனைகளை படித்தால் அனேக நன்மை கிடைக்கும் . ஞானம் அற்றவர்கள் ஞானம் பெறுவார்கள் , அறியாமை விலகும் , துன்பம் மறையும். இந்த சம்சார சாகர உலகிலும் சரி , ஆன்மீக உலகிலும் சரி இரண்டிலும் ஆனந்த நிலையை அடைவார்கள். அதைப் படிப்பவர்கள் வேதங்களை படித்து பிருமன் நிலையை அடைந்து , எட்டு யோகத்தையும் வென்று , பேரானந்த நிலையில் த்யானம் செய்வது போன்ற நிலையை ஒருவர் அடையலாம்.
4) ஹெமண்ட்பன்ட் உடனடியாக பாபாவை பற்றிய செய்திகளை சேகரிக்கத் துவங்கினார். பாபாவை நேரடியாக காண முடியாதவர்களுக்கு தான் எழுத உள்ள புத்தகம் ஒரு வரப்ரசாதமாக இருக்கும் . ஹெமண்ட்பன்ட் தன்னுடைய மமதையை பாபாவின் காலடியில் போட்டுவிட்டு தன்னை அவரிடம் முழுமையாக சரணடைய வைத்துக் கொண்ட பின்னரே அதை எழுதத் துவக்கினார் . இந்த ஜன்மத்தில் மட்டும் அல்லாது , அடுத்த ஜன்மத்திலும் தனக்கு இதே மாதிரியான ஆனந்த வாழ்வு கிடைக்க பாபா அருள் புரிவார் என அவர் நினைத்தார்
5) ஹெமண்ட்பன்ட் சாயி பாபாவிடம் நேரடியாகச் சென்று அவருடைய அனுமதியைக் கேட்காமல் திரு மாதவராவ் தேஷ்பாண்டே என்பவரை தன சார்பில் பாபாவிடம் அனுப்பினார். மாதவராவ் தேஷ்பாண்டே பாபாவிடம் சென்று கூறினார் '' அண்ணா சாஹீப் உங்களுடைய வாழ்க்கை சரித்திரம் எழுத விருப்பம் கொண்டு உள்ளார். நான் ஒன்றும் அல்லாத பரதேசி என்று நீங்கள் கூறி விடாமல், அதை எழுத அவருக்கு முழு சம்மதம் தெரிவித்து, அவருக்கு உதவினால் போதும். உங்கள் அருள் ஒன்றே அதை எழுத அவருக்கு துணை புரியும். உங்களுடைய துணை இல்லாமல் எவருமே எதையும் செய்ய முடியாது என்றார். '' என்றார். அதைக் கேட்ட பாபா மிகவும் நெகிழ்ந்து போனார் . அவருக்கு சிறிது உடியை கொடுத்த பின், அவருடைய தலையில் கையை வைத்து ஆசிர்வதித்து '' என்னைப் பற்றிய செய்திகளை அவன் சேகரித்து வைத்துக் கொள்ளட்டும், அவற்றை கோர்வையாக எழுதிவர நான் அவனுக்கு உதவுகின்றேன். அவன் என்னுடைய கருவியே தவிர என்னுடைய சரித்திரத்தை நான்தான் அவன் மூலம் என்னுடைய பக்தர்களுக்காக எழுதுவேன் . முதலில் அவனுடைய மண்டை கர்வத்தை என் பாதத்தில் போட்டுவிட்டு என்னிடம் சரண் அடையட்டும். அவனுக்கு நானே உதவுவேன். என்னுடைய வாழ்க்கை என்பது என்ன? அவனுடைய வீட்டில் அனைத்தையும் நான் செய்கின்றேன். அவன் முதலில் கர்வத்தை துறக்கட்டும். அவனுக்குள் நான் புகுந்து கொண்டு என்னுடைய சரித்திரத்தை நானே அவன் மூலம் எழுதுவேன். என்னுடைய கதையை படிப்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்கும். அவர்களுக்கு மன நிம்மதியும், மகிழ்ச்சியும் கிடைக்கும். அவன் எவர் மீதும் தன்னுடைய கருத்தை திணிக்காமல் இருக்கட்டும். மற்றவர்கள் கூறுவதை மறுக்கவும் வேண்டாம். எதைப் பற்றியும் கவலையும் பட வேண்டாம். ''
6) அதன் பின் பாபா ஹெமண்ட்பன்ட்திற்கு தனது சம்மதத்தை தெரிவித்த பின் .'' சாயி சரித்திரத்தை நீ எழுதுவதற்கு எந்த தடையும் இல்லை. எதைப்பற்றியும் கவலைப் படாமல் உன்னுடைய கடமையை செய்.என்னை நம்பு. என்னுடைய கதையை படிப்பதின் மூலம் அனைவருக்கும் பேரானந்தமம் கிடைக்கும் , அவர்களுடைய அறியாமை விலகி மனதில் மகிழ்சி கிடைக்கும். அன்பும் பக்தியும் பெருகும், அளவற்ற ஞானத்தையும் பெறுவார்கள்.'' என்றார்.
7) அதைக் கேட்ட ஹெமண்ட்பன்ட் மனதில் தைரியம் வந்தது. தன்னுடைய வேலை பெரும் பெருமை பெரும் என்ற நம்பிக்கையும் வந்தது. அதே நேரம் தேஷ்பண்டேயிடம் பாபா கூறினார் '' எவன் ஒருவன் என்னுடைய பெயரை பக்தியுடன் உச்சரித்தபடி இருப்பானோ அவனுடைய முன்னும் பின்னும் நான் நின்றுகொண்டு இருப்பேன். என்னுடன் எவர் உண்மையான பக்தியும் அன்பும் கொண்டு பழகுகின்றார்களோ அவர்கள் இந்த கதையை படிப்பதின் மூலம் மகிழ்சி அடைவார்கள். என்னை நம்பு. எவர் ஒருவர் என்னைப் பற்றி நினைத்துக்கொண்டே இருக்கின்றார்களோ அவர்களுக்கு நான் நிச்சயம் முடிவில்லா ஆனந்தத்தையும், அனைத்தையும் தருவேன். என்னுடைய கடமை என்ன என்றால் எவன் என்னையே நினைத்திருப்பானோ , எவன் என்னிடம் முழுமையாக சரண் அடைந்து விட்டானோ, எவன் என்னை பக்திபூர்வமாக ஆரத்திக்கின்றானோ அவர்களுக்கு நான் இந்த ஜென்மத்தில் இருந்து விடுதலை தருவேன். என்னையே நினைத்துக் கொண்டு, என் பெயரையே உச்சரித்துக் கொண்டு, என் கதையையே படித்துக் கொண்டு என்னையே பூஜித்துக் கொண்டு இருப்பவனுக்கு இந்த சம்சார வாழ்வில் எப்படி பற்றுதல் இருக்கும்? அவர்களை நான் மரணத்தின் பிடியில் இருந்து விலக்குவேன். என் கதையையே கேட்டுக் கொண்டு இருப்பவர்களுக்கு நோய் நொடிகள் வராது. அதுவே வாழ்கையில் கிடைக்கும் ஆனத்தம். அவர்களுடைய தலைகனத்தை விலக்குவேன், அவர்களுடைய மனது முழுவதும் பக்தியினால் நிறைந்து இருக்கும். அதுவே பேரானந்த நிலை. சாயி, சாயி என எவன் கூறிக் கொண்டே இருக்கின்றானோ அவனுடைய தீமைகளும், பாபங்களும் விலகும்.
8) ஒவொருவருக்கும் கடவுள் ஒவ்வொரு வேலையைத் தருகின்றார். சிலருக்கு ஆலயம் அமைக்கவும், சிலருக்கு நதிக்கரைகளில் தங்கும் இடம் அமைக்கவும் ( காட்), சிலரை தன்னுடைய பெருமையை பாடிக்கொண்டு இருக்குமாறும், சிலரை புனித யாத்திரைக்கும் அனுப்புகின்றார். என்னையோ தன்னுடைய சரித்திரத்தை எழுத வைத்துள்ளார். எல்லா வேலைகளையும் செய்தாலும், எதையுமே முழுமையாக செய்து முடிக்க முடியாத ஹெமண்ட்பன்ட்அந்த வேலைக்கு லாயக்கு இல்லாதவர்தான். எவரால் சாயி பாபாவின் உண்மையான வாழ்க்கை பற்றி எழுத முடியும் ? ஆனாலும் தன்னிடம் தன்னுடைய கர்வத்தை இறக்கி வைத்துவிட்ட ஹெமந்த்பந்த்தை பேனாவைத்தான் எடுக்க வைத்தார் என்பதைத்தவிர பாபா தானேதான் தன்னுடைய கதையை எழுதி உள்ளார் என்பதே உண்மை. ஆகவே அந்த சரித்திரத்தின் பெருமை பாபாவுக்குதான் போகுமே தவிர ஹெமண்ட்பன்துக்கு அல்ல. ஹெமண்ட்பன்ட் கூறினார், ''நான் பிராமணனாக பிறந்து இருந்தாலும் ஸ்ருதி மற்றும் ஸ்மிருதி என்ற இரண்டும் என்னிடம் இல்லை. ஆகவே எனக்கு பாபா பற்றி எழுத எந்த விதத்திலும் தகுதி இல்லை. பேச முடியாதவனை பேச வைத்த கடவுளைப்போல, முடமானவனை மலை மீது ஏற வைத்தவரைப் போல, எவர் மூலம் தான் ஒன்றை செய்ய நினைகின்றாரோ அதை அவர் செய்து கொள்வார் . ''
9) கடற்கரை விளக்குகள் கடலில் செல்லும் படகோட்டிக்கு பாறைகள் மீது மோதிக் கொள்ளாமலும் , வழி தவறிப் போகாமலும் இருக்க உதவுவது போல, இந்த சம்சார சாகரத்தில் பாபாவின் கதை மனிதர்களை வழி தவறி விடாமல் செல்ல உதவுகின்றது. அது அமிருத்தைவிட அதிக சுவை உள்ளதாகவும் வாழ்க்கை ஒரே சுமுகமாக சென்று கொண்டு இருக்கவும் உதவுகின்றது. காதுகளின் வழியே உள்ளே புகுந்து செல்லும் மகான்களின் கதைகள் உள்ளே சென்று இருதயத்தில் அமர்ந்துகொள்ள அங்குள்ள தான் என்ற மமதையும், பிற தீயவைகளும் வெளியேறிவிட, ஞானம் பெருகும். அது போலவேதான் பாபாவின் பெருமைகளும், அவர் வாழ்கையையும் கேட்கும் பொழுது நம் பாபங்கள் ஒழிகின்றன. அது மிகவும் சாதரணமாக செய்யும் சாதனாதான் . க்ருதே யுகத்தில் சாமதானத்தையும் (அமைதியான மனத்தையும் ), திரேத யுகத்தில் த்யாகமும், த்வாபர யுகத்தில் வழிபாடும், கலியுகத்தில் கடவுளின் நாம உச்சரிப்பும் தேவை. யோகா, த்யானம், யக்யம், தாரண போன்றவற்றை சாதாரண மனிதரால் செய்வது கடினம் என்பதினால், எந்த குலமோ, ஜாதியோ எந்த பாகுபாடும் இன்றி ஒருவரால் செய்யக் கூடியது நான்காம் முறையான கடவுளின் நாம உச்சரிப்புதான். நம்முடைய கவனத்தை அதில்தான் செலுத்த வேண்டும். அதுவே அனைவருடைய பாபங்களைத் துடைக்கும், மனதில் கருணையை தரும்,ஆத்மா ஞானம் பெற வழி வகுக்கும். அதனால்தான் பாபா ஹெமன்ட்பந்த் மூலம் தன்னுடைய கதையை கூற வைத்து உள்ளார். அந்த கதையை பக்தர்கள் சுலபமாக படித்தும் , புரிந்து கொண்டும் ஆனந்தத்தை அடையலாம். ஸத்ஸாயி சரிதமாலா ஒருவர் வாழ்வில் அனைத்தையும் அடைய உதவும்.

1) ஒவ்வொருவருடைய ஆசைகளையும் சாய் மகாராஜ் நிறைவேற்றித் தருவார் என்ற நம்பிக்கை
2) நோய்கள் விலக, மருத்துவம் நல்ல முறையில் கிடைக்க ,குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சன்தான பாக்கியம் கிடைக்க
3) பக்தர்களுடைய துயரங்களை துடைக்கவும் பாபாவின் அருளை வேண்டியும்
4) நல்ல அறிவு, வேலை, கல்வி, படிப்பில் ஆர்வம், படிப்பில் மேன்மை பெற என்பவைக்கு
5) தேர்வுகளில் வெற்றி பெற, வேலை கிடைக்க
6) பணத் தேவை, பொருள் கிடைக்க, குடும்ப நலன் வேண்டி
7) பாபாவிடம் பதியினால், அன்பினால்
8) ஆன்மீக ஞானம் பெற, பாபாவின் அருள் கிடைக்க, வாழ்க்கை சீராக அமைய, ஆன்மீக ஈடுபாடு பெற
9) உலக பற்றுதலைக் குறைக்க, தான் என்ற மமதையை ஒழிக்க, தன்னை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள
10) மன அமைதி பெற, வாழ்க்கை நல்ல முறையில் செல்ல
11) நண்பர்கள், உறவினர், குடும்பத்தினர் நல்லபடி இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனைக்கு என இப்படியாக பல காரியங்களுக்காக சாயி சரித்திர பாராயணம் செய்யப்படுகின்றது.
எது என்னவானாலும் சாயி பாராயணம் செய்வதின் பலன் பாபா அதை எந்த அளவில் ஏற்றுக் கொண்டு உள்ளார்என்பதை பொறுத்தே இருக்கும். ஒவ்வொரு பக்தனின் முந்தைய, இன்றைய மற்றும் நாளைய காலத்தில் வர உள்ள மனதும், குணமும், எண்ணமும் அவருக்கு தெரியும் என்பதினால் சாயி சரித்திரத்தை படிப்பவர்கள் அனைவருக்கும் பாபாவின் அருள் உடனேயே கிடைக்கும் என்பது நிச்சயம் இல்லை. அவருக்கு தெரியும் எவருக்கு என்ன தேவை என்பது. ஆகவே பாராயணத்தை படிக்கும் முன்பே ஒவ்வொருவரும் சாயிடம் முழுமையாக சரணாகதி அடைந்துவிட்டே அதை செய்ய வேண்டும் .மற்றதை அவர் பார்த்துக் கொள்வார்.
சாயி சரித்திரத்தை வெளியிடுவோர் மற்றும் அதன் முழு உரிமையாளர்
சீரடி சாயி பாபா சமஸ்தானதினரே. அவர்கள்தான் பாபாவின் சார்பாக சாயி சரித்திரத்தை வெளியிடுகின்றனர். அவர்களே அதன் முழு உரிமையாளர், அதாவது பாபாவின் சார்பில் வெளியிடுவோர் ஆவர் . மற்ற வெளியீட்டாளர்கள் சாயி சரித்திரத்தை வெளியிட்டாலும் அவர்களிடம் இருந்து அதை பெறக் கூடாது. மராத்தியில் கவிதை போன்று இருந்ததை சீரடி சாயி பாபா சமஸ்தானதினரே அனைத்து மொழியினரும் சுலபமாக படித்திரும் வகையில் மொழி ஆக்கம் செய்து பல மொழிகளில் வெளியிட்டு உள்ளனர்.

சாயி சரித்திரத்தை பாதுகாத்து வைக்கும் முறை
1) புத்தகத்தை நல்ல சுத்தமான காகிதத்தினால் சுற்றி வைக்கலாம். அதைவிட நல்லது என்ன எனில் சிவப்பு, மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத் துணியில் புத்தகத்தை மூடி வைத்திருக்கலாம்.
2) புனிதப் புத்தகங்களான குரான், கீதை, ராமாயணம போன்றவற்றை எப்படி பூஜை அறையில் வைத்து உள்ளோமோ அது போல இதையும் வைக்க வேண்டும்
3) இதை தினமும் பூஜிக்கலாம்
4) அலுவலகத்தில் வேலை செய்யும் இடங்களிலும், மாணவர்கள் புத்தக அலமாரியிலும், பயணம் செய்பவர்கள் பெட்டியிலும், நோயாளிகள் தங்கள் தலைமாட்டிலும் புத்தகத்தை வைத்து இருக்கலாம்। ஆனால் அதை மிக பத்திரமாக பாதுகாக்க வேண்டும். அதை பாராயணம் செய்ய கடுமையான நியமங்கள் எதுவும் கிடையாது.

1) ஒவ்வொரு வாரமும் பாராயணம் செய்ய விரும்புவர்கள் ஒரு வாரத்தில் அதை படித்து முடிக்க வேண்டும் . பாராயணத்தை ஆரம்பிக்க நல்ல நாள் வியாழன் கிழமை.
2) குளித்த பின் இடத்தை சுத்தப் படுத்திக் கொண்டு, தீபம் ஏற்றி, ஊதுபத்தி ஏற்றி, பாபாவின் விபுதியான உடியை நெற்றியில் இட்டுக் கொண்டபின் படிக்கத் துவங்க வேண்டும். படிக்கும் மாணவர்கள் ஹாஸ்டலில் இருந்தாலும் இடத்தை சுத்தப்படுத்திக் கொண்ட பின் படிக்க வேண்டும் . நோயுற்று உள்ளவர்களும், குளிக்க முடியாமல் போனவர்களும், தம்மை சுத்தம் ஆக்கிக்கொண்டு, தீபம் ஏற்றிவிட்டு பாபாவின் நாமத்தை கூறிய பின் பாராயணம் செய்ய வேண்டும்.
3) பெண்கள் மாத விலக்கு சமயங்களில் அதை கையில் வைத்துக் கொண்டு படிக்கக் கூடாது. அதை மீறி அதை படித்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் வந்தால் கம்யூடரில் போட்டு படிக்கலாம் அல்லது காச்செட் மூலம் கேட்கலாம்.
4) சாயி சரித்திரம் 51 பாகங்களைக் கொண்டது. எனவே அதை ஏழு பாகங்களாக பிரித்துக் கொண்டு ஏழு நாட்களில் படித்து முடிக்கலாம். ஏழு பாகத்தையும் ஒரே வேளையில் படித்து முடிக்க முடியாதவர்கள் காலையில் நான்கும் மாலையில் மூன்றுமாகவும் பிரித்துப் படிக்கலாம்.
5) சாதாரணமாக அதை இப்படி பிரித்துப் படிக்க வேண்டும்

முதல் நாள் பாகம் 1-6
இரண்டாம் நாள் பாகம் 7-13
மூன்றாம் நாள் பாகம் 14 -22
நான்காம் நாள் பாகம் 23 -28
ஐந்தாம் நாள் பாகம் 29 -35
ஆறாம் நாள் பாகம் 36 -42
ஏழாம் நாள் பாகம் 43 -51
இரண்டாம் நாள் பாகம் 7-13
மூன்றாம் நாள் பாகம் 14 -22
நான்காம் நாள் பாகம் 23 -28
ஐந்தாம் நாள் பாகம் 29 -35
ஆறாம் நாள் பாகம் 36 -42
ஏழாம் நாள் பாகம் 43 -51
6) தினமும் பாபாவிற்கு நேவித்யமாக பழம், சக்கரை அல்லது இனிப்பு பண்டம் வைக்க வேண்டும். முடியாதவர்கள் இரண்டு நாணயத்தையும் வைக்கலாம்.
7) புதன் அன்று பாராயணத்தை முடிந்து விட வேண்டும்
8) பாராயணம் முடிந்ததும் ஏழாவது நாளன்று வீட்டிலோ ஆலயத்திலோ இன்னிப்பு பண்டம் செய்து பாபாவிற்கு காணிக்கையாக பணமும் உண்டியில் போட வேண்டும். அல்லது நமஸ்காரம் செய்து விட்டு தாம் செய்யும் உணவையே கூட பிரசாதமாக வைக்கலாம்.
9) ஒவ்வொரு நாளைய பாராயணம் முடிந்ததும் மாலையில் ஆர்த்தி காட்ட வேண்டும். இல்லை எனில் கடைசி நாளன்று அதை கண்டிப்பாக செய்ய வேண்டும்.

சாயி பாராயணம் செய்வத்தின் பலனை நான் இறுதியில் கொடுத்து உள்ளேன்
புத்தகத்தை வீட்டில் வைத்துக் கொண்டு படிக்காமல் இருக்கக் கூடாது. தினமும் சில வரிகளையாவது அதில் இருந்து படிக்க வேண்டும். தினமும் 11 அல்லது 15 தாவது பாகத்தை படிப்பது சிறப்பு. சாயி சரித்திரத்தை குழந்தைகளுக்கு கதை போல படித்துக் காட்ட அவர்கள் நல்வழியில் செல்வார்கள்.
அனைத்து இடத்திலும் அதாவது ஒரு விளக்கு கம்பத்தில் இருந்து , வீடுகள் , மாளிகைகள் , பரந்த ஆகாயம் , பிரம்மா என அனைத்தையும் சுற்றியிருந்து , மனிதனோ மிருகமோ ,பாரபட்சம் காட்டாது அத்தனை ஜீவராசிகளையும் ஒரே மாதிரியாக பழகும் சாயினாதரை வணங்குகின்றோம் .
அவரை நம்பிக்கையோடு சரண் அடைந்தவர்களை அவர் கை விடுவது இல்லை
இந்த கரடுமுரடான வாழ்வில்தான்எத்தனை எத்தனை மேடு பள்ளங்கள் . தான் என்ற மமதை , உணர்ச்சிப் பெருக்குக்கள் , முதலையைப் போன்ற கோரத்தனமான கோபம் , வெறுப்பு , அனைத்தும் எனக்கே என்ற எண்ணம் , பொறாமை எனஅனைத்தும் சூழ்ந்துள்ள உலகில் சத்குரு சாயி வந்து தீமைகளை அழித்து தம் பக்தர்களைக் காக்கின்றார். அந்த கடலில் மிதந்துகொண்டு தவிக்கும் நம்மை ஒரு படகோட்டி போல வந்து காப்பாற்றுகின்றார்

பிரார்த்தனை
பலன்கள்
அவருடைய கதையை படிக்கையிலேயே ஒருவருடைய இதயத்தில் அன்பு தோன்றும்,மனதில் ஆன்மீக எண்ணம் வரும் . பாபங்கள் விலகும் . அவரை என்றும் நினைத்துக் கொண்டே இருந்தால், சாயி சரித்திரத்தை முறையோடு படித்து வந்தால் ஒருவனுக்கு அடுத்த பிறவி இல்லை .
மற்றவர்களுக்கு சாயி கதையை படிக்கச் சொல்லித் தந்ததும் உங்களுடன் பழகும் அவர்களுடைய குணம் நல்ல முறையில் மாறுவதை பார்க்கலாம் .அவர் நினைவாகவே இருக்க சம்சார சாகரத்தில் இருந்து விடுதலை பெறுவீர்கள் . எவன் ஒருவன் தினமும் குளித்து விட்டு அதை பாராயணம் செய்கின்றானோ அவனுடைய துன்பங்களும் , தொல்லைகளும் படிப்படியாக விலகும் . அவரவர் தூய எண்ணத்துடன் செய்யும் பூஜையின் பலன் அவரவர்கள் செய்த பூஜைக்கு ஏற்ப கிடைக்கும் . பணிவோடு அதை படிப்பவர் அறியாமை விலகும் , அறிவு பெருகும் , செல்வம் சேரும் .
அதை முக்கியமாக குருபூர்ணிமா, கோகுலாஷ்டமி , ராம நவமி , தசரா போன்ற தினங்களில் படிக்க அனைத்து நன்மையும் கிடைக்கும் . நோய் நொடிகள் விலகும். ஏழைகளுக்கு ஏழ்மை விலகும் .அவரை நம்புங்கள் . அவரிடம் சரண் அடையுங்கள்

முடிவுரை
உம்மை வணங்கும் அனைத்து மக்களுக்கும் நன்மை செய்வீராக , உங்கள் பார்வை அவர்கள் மீது விழட்டும் , அவர்கள் நினைவெல்லாம் உம்மிடத்தில் இருக்கட்டும்
(Re edited and Translated in to Tamil by Santhipriya)
© Shirdi Sai Baba Stories In Tamil.
To order for Free Sai Satcharitra Delivery Please Click Here.
(Re edited and Translated in to Tamil by Santhipriya)
© Shirdi Sai Baba Stories In Tamil.
Loading
0 comments:
Post a Comment