Sai Miracle-Sai saved my son- Anshu.
2-3 நாட்களுக்கு முன் தான் கள்ளம் கபடமற்ற சிறு குழந்தைகளை பாபா எப்படி பாதுகாக்கிறார் என்பதை விளக்க ஒரு கதையை ‘என் சகோதரன் என்னை காப்பாற்றினர் ’ என வெளியிட்டு இருந்தேன் . இப்போது அன்ஷு எனபவரின் குழந்தையை பாபா காப்பாற்றிய மகிமையை அவரே கூறுகின்றார் கேளுங்கள் .
2009 ஆம் ஆண்டு , மே மாதம் ஏழாம் தேதி . முன்றரை வயதான என் பையனுக்கு நான் உணவு அளித்துக்கொண்டு இருந்தேன் . நாங்கள் இருந்தது மூன்றாம் மாடியில் . ஜன்னலில் உட்கார்ந்து கொண்டு உணவு அருந்திக்கொண்டு இருந்தவன் தவறி கீழே விழுந்தான் . கீழேயோ டிஷ் ஆண்டென்னா , பல செடி கொடிகள் இருந்தன. அவன் புல்லில் விழுந்து விட்டான் ,அழுது புலம்பினான் . சாயீ , சாயீ எனக்க கதறியவண்ணம் ஓடிசென்ற நான் பாபாவை வேண்டிக் கொண்டே அவன் நெற்றியில் பாபாவின் வீபுதியான உடியை தடவி அதை நீருடன் கலந்து அவனுக்குத் தந்தேன் . உடனேயே எமேர்ஜன்சி அம்புலன்சிற்கு போன் செய்து வண்டியை வரவழைத்து ஆஸ்பத்தரிக்கு அழைத்து சென்றேன் . என் மனதில் இருந்த வேதனையை மறக்க மனதி சாயி ஜபம் செய்துகொண்டே இருந்தேன் .
பிள்ளையோ அழுதுகொண்டே இருந்ததினால் மூன்றாம் மடியில் இருந்து விழுந்துவிட்ட அவனை உடனேயே எக்ஸ்ரே எடுக்க அனுப்பினார்கள் . நானோ சாயீ, சாயீ என கதறிக்கொண்டு இருந்தேன் . டாக்டர்கள் CT ஸ்கேன் முதல் எக்ஸ்ரே வரை அனைத்தையும் எடுத்துவிட்டு எதிலும் எந்த பாதிப்பும் இல்லை எனக் கூறினர். அனால் குழந்தையோ விடாது அழுதுகொண்டு வயிற்றில் வலி , வலி என்று அழுதான் . அகவே அவனுக்கு MRI ஸ்கேன் எடுக்க ஏற்பாடு ஆயிற்று . டாக்டர்கள் மாலையில்தான் வந்தார்கள் . அதிலும் எல்லாம் சரியாகவே இருக்கிறது என்றனர் . ஆனால் குழந்தை வயிற்று வலி என்பதினால் சாப்பிட எதுவும் கொடுக்கவில்லை . என்ன அதிசயம் ! மூன்றாவது மாடியில் இருந்து விழுந்தாலும் வயிற்றின் உள்ளையோ, வெளியிலோ எந்த காயமும் எல்லை , பயத்தில் அழுது இருந்தான் . டாக்டர்களே அதிசயித்தனர் . மூன்றாம் மடியில் இருந்து விழுந்தாலும் அடிபடாமல் காப்பற்றி இருந்தது சாயீநாதர் என்பதே எங்கள் நம்பிக்கை . அவர் இல்லாவிடில் வேறு யார் அவனை காப்பற்றி இருக்க முடியும் ? சத்குரு சாயீ எங்கள் குடும்பத்தை என்றும் ரட்சித்து காப்பாற்றியே வருகின்றார். சாயிக்கு நிகரானவர் யார் ? உரக்க கூறுங்கள், ஜெயகுரு, உரக்க கூறுங்கள், சாயிபாபாவுக்கு ஜெய் ,அனந்தகோடி பிரம்மாண்ட நாயக ராஜாதிராஜ யோகிராஜ் பரபிரம்ம சச்சிதானந்தா சமரத் சத்குரு சாய்நாத் மகாராஜ் ஜெய் ஹோ ...
ஓம் சாயிராம்2009 ஆம் ஆண்டு , மே மாதம் ஏழாம் தேதி . முன்றரை வயதான என் பையனுக்கு நான் உணவு அளித்துக்கொண்டு இருந்தேன் . நாங்கள் இருந்தது மூன்றாம் மாடியில் . ஜன்னலில் உட்கார்ந்து கொண்டு உணவு அருந்திக்கொண்டு இருந்தவன் தவறி கீழே விழுந்தான் . கீழேயோ டிஷ் ஆண்டென்னா , பல செடி கொடிகள் இருந்தன. அவன் புல்லில் விழுந்து விட்டான் ,அழுது புலம்பினான் . சாயீ , சாயீ எனக்க கதறியவண்ணம் ஓடிசென்ற நான் பாபாவை வேண்டிக் கொண்டே அவன் நெற்றியில் பாபாவின் வீபுதியான உடியை தடவி அதை நீருடன் கலந்து அவனுக்குத் தந்தேன் . உடனேயே எமேர்ஜன்சி அம்புலன்சிற்கு போன் செய்து வண்டியை வரவழைத்து ஆஸ்பத்தரிக்கு அழைத்து சென்றேன் . என் மனதில் இருந்த வேதனையை மறக்க மனதி சாயி ஜபம் செய்துகொண்டே இருந்தேன் .
பிள்ளையோ அழுதுகொண்டே இருந்ததினால் மூன்றாம் மடியில் இருந்து விழுந்துவிட்ட அவனை உடனேயே எக்ஸ்ரே எடுக்க அனுப்பினார்கள் . நானோ சாயீ, சாயீ என கதறிக்கொண்டு இருந்தேன் . டாக்டர்கள் CT ஸ்கேன் முதல் எக்ஸ்ரே வரை அனைத்தையும் எடுத்துவிட்டு எதிலும் எந்த பாதிப்பும் இல்லை எனக் கூறினர். அனால் குழந்தையோ விடாது அழுதுகொண்டு வயிற்றில் வலி , வலி என்று அழுதான் . அகவே அவனுக்கு MRI ஸ்கேன் எடுக்க ஏற்பாடு ஆயிற்று . டாக்டர்கள் மாலையில்தான் வந்தார்கள் . அதிலும் எல்லாம் சரியாகவே இருக்கிறது என்றனர் . ஆனால் குழந்தை வயிற்று வலி என்பதினால் சாப்பிட எதுவும் கொடுக்கவில்லை . என்ன அதிசயம் ! மூன்றாவது மாடியில் இருந்து விழுந்தாலும் வயிற்றின் உள்ளையோ, வெளியிலோ எந்த காயமும் எல்லை , பயத்தில் அழுது இருந்தான் . டாக்டர்களே அதிசயித்தனர் . மூன்றாம் மடியில் இருந்து விழுந்தாலும் அடிபடாமல் காப்பற்றி இருந்தது சாயீநாதர் என்பதே எங்கள் நம்பிக்கை . அவர் இல்லாவிடில் வேறு யார் அவனை காப்பற்றி இருக்க முடியும் ? சத்குரு சாயீ எங்கள் குடும்பத்தை என்றும் ரட்சித்து காப்பாற்றியே வருகின்றார். சாயிக்கு நிகரானவர் யார் ? உரக்க கூறுங்கள், ஜெயகுரு, உரக்க கூறுங்கள், சாயிபாபாவுக்கு ஜெய் ,அனந்தகோடி பிரம்மாண்ட நாயக ராஜாதிராஜ யோகிராஜ் பரபிரம்ம சச்சிதானந்தா சமரத் சத்குரு சாய்நாத் மகாராஜ் ஜெய் ஹோ ...
அன்ஷு
Courtesy Tamil Translation:Shri Shanthipriya alias Jayaraman.
© Shirdi Sai Baba Stories In Tamil.>
Loading
1 comments:
om sai ram...
Post a Comment