Allah Will Bless Him .
அங்கி தந்த விஷயத்திற்குப் பின்னர் நார்க்கே வாழ்வில் இன்னொரு சம்பவம் நடந்தது. வேலை நிரந்தரமாக இல்லாமல் இப்படியாக இடம் இடமாக அலைந்து கொண்டு இருந்தால் என்ன ஆகும் என நார்க்கேயின் உறவினர்கள் கவலைப்பட்டனர் . நார்க்கே மிக அதிக தூரத்துக்கு போய்க் கொண்டே இருந்ததினால் அவருடைய தாயார் தன் மகன் தாங்கள் இருக்கும் இடத்தின் பக்கமாகவோ இல்லை சீரடியிலோ அவர் தங்க வேண்டும் என பாபாவிடம் வேண்டிக்கொள்ள , பாபா கூறினார் ‘ கவலைப் படதே அவனை பூனாவில் தங்க வைக்கிறேன் ’
நார்க்கேயிர்க்கு பல இடங்களில் இருந்தும் வேலைக்கு அழைப்பு வந்தது . அவர் பாபாவிடம் சென்று அவருடைய கருத்தைக் கேட்ட பொழுதெல்லாம் சில சமயத்தில் பாபா விசித்திரமாக பர்மாவுக்குப் போ என்பார் . பர்மாவோ கல்கத்தாவையும் தாண்டி இருந்தது . அவரிடம் சென்று நார்கே எங்கு வேலையை எடுத்துக் கொள்வது எனக் கேட்ட பொழுதெல்லாம் அவர் பூனாவுக்குப் போ , அங்கு போ அல்லது இங்கு போ எனக் கூறினாலும் , முடிவில் பூனாவையும் சேர்த்தே சொல்வாராம் .
1916 ஆம் ஆண்டில் நார்கேயிர்க்கு பனரசில் ப்ரோபாச்சர் வேலையும் , பர்மாவில் வேறு ஒரு நல்ல வேலையும் கிடைத்தது பாபாவிடம் சென்ற பொழுது அவர் பர்மாவுக்குப் போ மற்றும் பூனாவுக்கும் போ’ எனக் கூறினார் நார்க்கே மனதுக்குள் சிரித்துக் கொள்வார் நானோ பூவியல் படித்தவன், சுரங்கங்களே இல்லாத பூனாவில் எனக்கு என்ன வேலை கிடைக்கும் ? ஏன் பாபா ஒவ்வொரு முறையும் பூனாவையும் சேர்த்துச் சொல்கின்றார் ?
1917 ஆம் ஆண்டில் பூனா பல்கலைகழகத்திற்கு ஒரு பூவியல் பட்டதாரி தேவையாக இருந்தது . நார்க்கே அதற்கு விண்ணப்பித்தப் பின் பலரையும் சென்று பார்த்தார் . அனால் அந்த வேலை மிகவும் நல்ல வேலை என்பதினால் பலரும் பெரிய பெரிய இடத்தில் இருந்து சிபார்சுகளை எடுத்துக் கொண்டு வந்து இருந்தனர் .
அவர் அதற்காக பூனாவுக்குச்சென்று இருந்த பாபா அவரைத் தேடினாராம் அவரிடம் நார்க்கே பூனாவுக்கு வேலை விஷயமாகப் போய் இருப்பதை மற்றவர்கள் கூறிய பொழுது பாபா கூறினாராம் ‘அவனுக்கு அல்லா அருள் புரிவார் ’
அதன் பின் நார்க்கேயிர்க்கு எத்தனை குழந்தைகள் என பாபா கேட்டபொழுது அவருக்குப் பிறந்த எந்த குழந்தைகளுமே உயிருடன் இல்லை எனக் கூற அப்போதும் பாபா 'அவனுக்கு அல்லா அருள் புரிவார் ' எனக் கூறினாராம் 1918 ஆம் ஆண்டில் பூனாவில் அந்த வேலை நார்க்கேக்குக் கிடைத்தது அதே வேலையில் 1919 ஆம் ஆண்டில் அவர் நிரந்தரமாக்கப் பட்டார் அதன் பின் அவருக்கு நான்கு மகன்கள் பிறந்தனர் அனைவரும் உயிருடன் இருந்தனர் நார்க்கே வாழ்க்கையில் ஸ்திரமாக ஆனது பாபாவின் அருளினால்தானே ?
(Translated into Tamil by Santhipriya)
© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading
0 comments:
Post a Comment