Friday, November 13, 2009

Shri Sai Satcharitra Free Distribution Service.

இலவச சாயி சரித்திர புத்தக விநியோகம்


அன்பானவர்களே
சாயிராம்
குருபூர்ணிமா தினத்தன்று ஆரம்பித்த இலவச சாயி சரித்திர புத்தக விநியோகத்தை சில காரணத்தினால் நிறுத்தி வைத்து இருந்தோம். அதை இப்போது முறைப்படி விநியோகிக்க மீண்டும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்துக்கள் கீதையும், ராமாயணத்தையும் , கிருஸ்துவர்கள் பைபிளையும், முஸ்லிம்கள் குரானையும் , சீக்கியர்கள் குரு கிரந்தத்தையும் புனிதமாகக் கருதி விரும்பிப் படிப்பது போல இதுவும் சாயி பக்தர்களுக்கு வேத புத்தகமாக உள்ளது. இந்த புத்தகம் வீட்டில் இருப்பதே பெரிய புண்ணியம்.
இந்த புத்தகத்தை முதலில் மராத்திய மொழியில் திரு. கோவிந்த ரகுநாத் டபோல்கர் என்பவர் எழுதினர். அவருக்கு பாபா ஹெமட்பன்ட் என்ற பெயரை சூட்டி இருந்தார். தற்போது இந்த புத்தகம் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு பாபா பக்தர்களிடம் உள்ளது.

சாயி சரித்திரத்தில் பாபா நிகழ்த்திய பல அற்புத சம்பவங்களும், அவருடைய பொன் மொழிகளும், அறிவுரைகளும் உள்ளன. அந்த புத்தகத்தை படிப்பதினால் ஏற்படும் பலன்களையும், அதை எப்படி படிக்க வேண்டும் என்ற விதி முறையும் அதில் கூறப்பட்டு உள்ளன. அதை படிப்பதினால் எந்த ஒருவருக்கும் சொர்க பாக்கியம் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
திரு. டபோல்கர் சாயி சமாஜத்தை திறமையுடன் நிர்வாகித்துக் கொண்டு இருந்தார். ஆகவே அவருக்கு பாபா தந்த ஹெமட்பன்ட்என்ற பெயர் சரியானதே. இன்றைக்கு சாயி பாபா சந்தான் டிரஸ்ட் அந்த புத்தகத்தை அச்சிட்டு, அனைவரும் வாங்கிடும் வகையில் மிகக் குறைந்த விலையில் விற்க ஏற்பாடு செய்து உள்ளது.
ஏற்கனவேhttp://www.shirdisaibabakripa.org/2009/02/all-about-sri-sai-satcharitra-parayan.htmlஎன்ற இணையதளத்தில் அந்த புத்தகத்தை படிக்கும் முறையையும் பலன்களையும் கூறி உள்ளேன்.

சாயிநாதரே எனக்கு இந்த இணையதளத்தை துவக்க அருள் புரிந்து உள்ளார். இந்த சிறிய சேவையின் மூலம் பலருடைய அனுபவங்களையும் மற்றவர்கள் தெரிந்து கொள்ள உதவுகிறேன் என்பது திருப்தியாக உள்ளது. இந்த இணையத்தளத்தின் மூலம் அன்பர்கள் சாயிபாபாவின் உடியை தவிர சாயி சரித்திரத்தையும் அவரவர்களுக்குத் தேவையான மொழியில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
இந்த காரியத்தை என்னால் சகோதரி அனுராதா இல்லை என்றால் செய்து இருக்க முடியாது. அவருடைய ஆலோசனைப்படியே இலவச புத்தக விநியோகத் திட்டத்தை இந்த இணையதளம் மூலம் நான் செய்தேன். தில்லியில் உள்ள ஸ்ரீ சாயி சேவா சாமாஜத்தை இது குறித்து அணுகியபோது அவர்கள் அன்புடன் அதற்கு உதவ முன் வந்தனர்.

சாயி சரித்ரம் மராத்தி, ஆங்கிலம் , ஹிந்தி , தமிழ் , தெலுங்கு , கன்னடம் ,குஜராத்தி ,பெங்காலி , சிந்தி , உருது , பஞ்சாபி, ஒரியா , ரஷ்யா, நேபாளி போன்ற மொழிகளில் அச்சிடப்பட்டு உள்ளது .ஆனால் தற்போது சிந்தி மொழியில் உள்ள புத்தகம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

உங்கள் கவனத்திற்கு
(1) * இந்த குறி உள்ள இடத்தை கண்டிப்பாக நிறப்ப வேண்டும்.
(2) வார்த்தைகளை சுருக்கி எழுதாதீர்கள்
(3) தபால் செலவுக்கு U।S. $ 15 அல்லது ரூபாய் 750.00 அனுப்ப வேண்டும் (இந்தியாவைத் தவிர வெளி நாடுகளில் உள்ளவர்கள் கண்டிப்பாக இதை அனுப்ப வேண்டும்)
(4) தில்லியில் உள்ளவர்கள் கீழ்கண்ட விலாசத்தில் இதை நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்.
திரு ரமேஷ் பாண்டே
B-3C, ஸ்கிப்பர் ஹவுஸ்
62-63, நேரு பிலேஸ் ,
புது தில்லி - 110 019
தொலைபேசி எண் :: 011-26217139, 65679121, மொபைல் : 9310064134, 9810064134).
(5) புத்தகம் 15 முதல் 60 நாட்களுக்குள் கிடைக்கும்
(6) மேலே கூறப்பட்டுள்ள நாட்களுக்குள் கிடைக்காதவர்கள் மட்டுமே எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் .
(7) புத்தகம் கிடைத்ததும் கிடைத்த விவரத்தை அவசியம் தெரியப்படுத்த வேண்டும்
(8) ஒருவருக்கு ஒரு மொழியில் மட்டுமே, ஒரே ஒரு புத்தகம் அனுப்பப்படும்

படிவத்தைப் பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

Please click HERE to go to the website to fill up the form

எங்கள் இணையதளத்தில் கீழ் கண்ட மொழியில் உள்ள சாயி சரித்திர புத்தகத்தை டௌன்லோடு (இறக்குமதி) செய்து கொள்ளலாம் .
பெங்காலி Download Link 18.2 MB
ஆங்கிலம் Download Link 1.43 MB
ஆங்கிலம் (Concise or Prose Version) Download Link 4.74 MB
ஆங்கிலம் (Translated by Zarine) Download Link 12.3 MB
குஜராதி Download Link 4.57 MB
ஹிந்தி Download Link 8.17 MB
கன்னடம் Download Link 59.8 MB
மராத்தி Download Link 5.72 MB
சிந்தி Download Link 16.4 MB
தமிழ் Download Link 22.11 MB
தெலுங்கு Download Link 46.2 MB
உருது Download Link 21.5 MB

(9). எந்த மொழியில் புத்தகம் வேண்டுமோ அதைக் கேட்கவும்
(10) சாயி சேவை சமாஜத்தில் உள்ள பிரதிக்கு ஏற்பவே புத்தகம் அனுப்பி வைக்கப்படும்
(11) புத்தகம் கிடைத்த விவரத்தை எங்களுக்கு போஸ்ட் மூலம் தெரியப்படுத்தவும்
(12) இந்தியாவிற்குள் சாய் சரித்திரம் குரியர் அல்லது ஸ்பீட் போஸ்ட் மூலமும் வெளிநாட்டிற்கு பதிவு தபாலிலும் அனுப்பப்படும்/
(13) எவருக்கேனும் இந்த பணியில் காணிக்கை செலுத்த விருப்பம் இருந்தால் பணம் அனுப்ப வேண்டிய பேங்க் முகவரி ஸ்ரீ சாயி சேவா சமிதி , நேரு ப்லேஸ் , பேங்க் அகவுன்ட் எண் : 61011113724 , ஸ்டேட் பேங்க் ஒப் பிகானீர் அண்ட் ஜெய்பூர், புது தில்லி கிளை.
வெளிநாட்டில் உள்ளவர்கள் செக் அல்லது பேங்க் டிராபிட் அல்லது வயர் மூலமும் அனுப்பலாம் . அனுப்ப வேண்டிய முகவரி சீரடி சாயிபாபா டெம்பில் சொசைட்டி FCRA/SB Account No.2741101001563 ,கனரா பேங்க், கிரடர் கைலாஷ்-II ,புது தில்லி -110048 , இந்தியா


சாயி சரித்திரம் கிடைத்ததும் நீங்கள் செய்ய வேண்டியவை :

(1) இதில் கொடுக்கப்பட்டு உள்ள படிவங்கள் மாதிரிப் படிவங்களே. அதை நிரப்பி அனுப்பிவிட்டால் அதை நாங்கள் ஏற்றுக்கொண்டு விட்டதாக அர்த்தம் இல்லை. புத்தகம் கிடைத்தவுடன் கிடைத்த விவரம் அனுப்புவது அவசியம். இதில் உள்ள படிவங்களை டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளவும்.

MODEL form for acknowlegement

Please click HERE to go to the website to fill up the form
படிவத்தைப் பெற மேலே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்
MODEL form for declaration .
Please click HERE above to go to the site to fill up the form
படிவத்தைப் பெற மேலே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

(2) முதலில் கிடைத்த விண்ணப்பத்திற்கு ஏற்பவே புத்தகம் வரிசைப்படி அனுப்பப்படும்.
(3) ஸ்ரீ சாயி சேவா சமிதி , நேரு ப்லேஸ், தில்லி அல்லதுசாயி பாபா டெம்பில் சொசைடி , சாய்தாம் , டிகவோன் ரோடு, செக்டார்-86 , பாரிதாபாத்-121002 என்ற இடங்களில் வைத்து உள்ள பிரதிக்கு ஏற்பவே புத்தகங்கள் அனுப்பப்படும்.
(4) பிரதிகள் கிடைக்க 15 முதல் 60 நாட்கள் ஆகலாம் . ஆகவே காத்திருக்கவும்
(5) அதன் பின்னரும் உங்களுக்கு பிரதி கிடைக்கவில்லை எனில் உங்கள் முகவரியுடன் கோரிக்கையை அனுப்ப வேண்டிய ஈமெயில் முகவரி hetalpatil@saimail.com.
(6) இந்த விஷயத்தில் எந்தவித முடிவும் எடுக்க சாயி சேவா சமிதி மற்றும் சாயி பாபா டெம்பில் சொசைடிக்கு முழு உரிமை உண்டு
(7) ஒருவர் இல்லத்தில் இருந்தும் ஒரே ஒரு கோரிக்கை மட்டுமே ஏற்கப்படும்
நன்றி: ஸ்ரீ சாயி சரிதா E- புத்தகங்களை எடுத்துக் கொள்ள அனுமதித்தவர்கள்
www.saileelas.org and Shirdi Sai Baba Sansthan Trust.
(Translated into Tamil by Santhipriya)


Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.