Do not eat and excrete this.
சாப்பிட்டுவிட்டு வெளியேற்றி விடாதே
அன்பானவர்களே
பாபாவுடன் மிக நெருங்கிய பக்தர்களாக இருந்த சிலருடைய வாழ்கை பற்றியும் , அவர்களுடைய வாழ்வில் பாபா செய்த விளையாட்டுக்களையும் இப்போது படிக்கலாம் .
பாபாவின் மிக நெருங்கிய பக்தர்களாக இருந்தவர்களில் பையாஜி அப்பாஜி படேல் என்பவர் முக்கியமானவர் । பிர்கொன் என்ற இடத்தில் வருமானத்துறை மற்றும் போலீசில் இருந்தவர், ஒரு நிலத்தின் சொந்தக்காரர் அவரும் சீரடியில்தான் தங்கி இருந்தார் அவர் குறித்து சாயீ சரித்திரத்திலும் குறிப்பிடப்பட்டு உள்ளதால் அவர் பாபாவின் பரிபூரண ஆசி பெற்றவர் எனத் தெரிகின்றது . அவர் வீட்டிற்கு பாபா தினமும் வந்து பிட்சை பெற்றுக்கொண்டு சென்றதினால் அவருக்கு பாபா பற்றி எல்லா வயது முதலிலேயே தெரியும் . அவர் வீட்டிற்க்கு பாபா தினமும் எட்டு முறை பிட்சை கேட்டு செல்வதுண்டு . அது சுமார் எட்டு வருடம் நடந்தது.அடுத்த மூன்று வருடங்கள் தினமும் பாபா பிட்சைக்கு நான்கு முறையும் , அதற்கு அடுத்த பன்னிரண்டு வருடம் தினமும் இரண்டு முறையும் , அடுத்த பன்னிரண்டு வருடம் தினமும் ஒரே ஒரு முறையும் சென்று பிட்சை பெற்று வந்தார் .
பையாஜிக்கு எழு வயதான பொழுது அவர் பாபாவிற்கு வேலை செய்யத் துவங்கினார். அது 1896 ஆறாம் ஆண்டு .ராமநவமியில் இந்துக்களை தனக்கு சந்தனம் எட்டு வணங்குமாறும் , முஸ்லிம்களை உர்ஸ் தினத்தன்று தன எதிரில் அமர்ந்து குரான் ஒதுமாரும் கூறுவார் . ராமநவமி துவங்கியது . இந்துக்களை தனக்கு சந்தனம் இட்டும் , முஸ்லிம்களை குரான் படிக்குமாறும் பாபா கூறினார் . அந்த நிகழ்ச்சி அப்பா குல்கர்னி என்பவர் நடத்தினார் . அவர் ஒரு கையாடல் வழக்கில் மாட்டிக்கொண்டு பாபாவின் அருளினால் தப்பித்தவர் . பாபாவின் உடலில் இந்துக்கள் சந்தனம் தடவ அதை அவர் எடுத்து மசூதியின் சுவற்றில் தடவ மற்ற முஸ்லிம்களும் அதுபோலவே செய்தனர் . அதன் பின் பாபா அந்த சந்தனத்தை எடுத்து மகால்ச்பதி என்பவர் நெற்றியிலும் மற்ற முஸ்லிம்களின் நெற்றியிலும் இட்டார் . மகாலச்பதியும் பாபாவின் நெற்றியில் சந்தனப்பொட்டு வைத்தார் .
பாபா அதன் பின் நமாஸை படிக்க சொல்லிவிட்டு தானும் நமாஸ் படித்தார் . எது சனிக்கிழமைகளில் நடந்தது . அதன் பின் அனைவருக்கும் வழங்க பேடா என்ற இனிப்பு வந்ததும் அதை அனைவருக்கும் பாபா வழங்கினார் . பாபா உர்ஸ் கொண்டாடுவதில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கருத்துவேறுபாடு வரும் எனத் தெரிந்து இருந்ததினால்தான் இந்துக்கள் மற்றும் முஸ்லிம் என அனைவருக்கும் சந்தனம் இட்டார் .பையாஜியின் தந்தையான நானா சாஹிப் சங்டோர்கரே அந்த செலவுகளை ஏற்றுக்கொண்டார் .
பையாஜிக்கு வயது பதினொன்று ஆனபொழுது ஒருநாள் பாபா அவரை மாடு மேய்க்கப் போகவேண்டாம் எனத் தடுத்துவிட்டார் . திடீரென அனைவர் மீதும் கோபம் கொண்டு அங்கு இருந்த நான்கு பாத்திரங்களை கிழே போட்டு உடைத்தார் அது வர உள்ள எதோ கேட்ட காரியத்தை உணர்த்துவது போல இருந்தது . தன்னுடைய பின் கையில் பூம் பூம் என ஊதிக்கொண்டார் . அப்போது மணி ஒன்பது அல்லது ஒன்பதரை இருக்கும் . பையாஜியின் தந்தையின் சகோதரியின் முப்பது வயதான மகன் ஜுரத்தினால் இறந்துவிட்ட செய்தி வந்தது .
அடுத்த பதினான்கு வருடங்கள் பாபா பையாஜிக்கு தினமும் நான்கு ரூபாய் தந்து வந்தார் । அவரிடம் பாபா தான் தந்த பணத்தை எவருக்கும் கடன் தரவேண்டாம் எனவும் , அதை எவருக்கும் இனாமாகக் கூட தரவேண்டாம் எனக் கூறி இருந்தார் . அதை சாப்பிட்டுவிட்டு வெளியேற்றி விடாதே என்றாராம் . அதைக் கொண்டு பையாஜி 84 ஏக்கர் நிலம் வாங்கினார் . அதன் பின் என்ன நடந்தது ? அடுத்த கட்டுரையில் அது வரும் .
(Translated into Tamil: Santhipriya)
© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading
0 comments:
Post a Comment