Fakir has not premitted me to give you .
உனக்குத்தர கடவுள் எனக்கு அனுமதி தரவில்லை
ஒருமுறை அவரை சீரடிக்கு வருமாறு பாபா அழைத்தார் என சாமா அவர்கள் கடிதம் எழுத அவர் சீரடிக்குச் சென்று சுமார் பத்திமூன்று மாதம் இருந்தார். தனக்கு ஒரு வேலை இல்லையே என்ற கவலை சிறிது கூட இல்லை. பரதேசி போன்ற வாழ்வு அவருக்குப் பிடித்து இருந்தது.
ஒருநாள் பாபா பலருக்கும் தன்னுடைய அங்கியை கொடுப்பதை தூரத்தில் இருந்து பார்த்தவண்ணம் இருந்தார். மனதில் தோன்றியது. 'எனக்கும் ஒன்று கொடுத்தால் நான் அதை பஜனைகள், பிரார்த்தனைகளின் பொழுது போட்டுக் கொள்ளலாமே'.
பாபா அனைவருக்கும் குர்பானியை ( அங்கி) தந்தபின்னும் அவரிடம் இன்னமும் சிறிது குர்பானி இருந்தது. அனைவரும் சென்றபின் நார்கேயை அழைத்த பாபா அவர் தலையை தட்டிக் கூறினார் ' இந்த பரதேசியை தவறாக நினைக்காதே. அந்த பரதேசி ( கடவுள்) உனக்கும் ஒரு குர்பானியைத் தர எனக்கு உத்தரவு தரவில்லையே. என்ன செய்வது?'
நார்கே அதிசயித்து நின்றார். பாபா தன் மனத்தை அத்தனை தூரத்தில் இருந்தும் அறிந்துகொண்டு விட்டாரே!
Courtesy:Translation into Tamil by Santhipriya.

Loading
0 comments:
Post a Comment