Monday, November 16, 2009

Sai Baba's Grace-Experience of Sai Devotee Anshu.


அன்பானவர்களே,
பாபா எப்படி எல்லாம் தன்னிடம் பக்தர்களை அழைத்துக் கொள்கின்றார் என்பதற்கும் ஒருவருடைய கனவில் தோன்றி அவருடைய வாழ்வை எப்படி மாற்றினார் என்பதற்கும் உதாரணம் இந்த கதை.
மனிஷா
ஹி மனிஷாஜி,
உங்களுடைய சாயி பக்தியை நான் மிகவும் மெச்சுகிறேன். உங்கள் இணைய தளத்தினை நான் தொடர்ந்து படித்தவள். சாயிநாதர் எப்படி எல்லாம் தமது குழந்தைகளை காத்து வருகின்றார் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள என்னுடைய கதையை உங்கள் தளத்தில் வெளியிடுமாறு வேண்டுகின்றேன்.

நான் பூனாவில் வசிப்பவள். எனக்கு ஸ்ரீரடி சாயி பாபாவிடம் பக்தி இல்லை என்றாலும் அனைத்து மதத்தையும் மதிப்பவள் என்பதினால் அவர் மீது மரியாதை வைத்து இருந்தேன். 2007 -2008 ஆம் ஆண்டுகளில் எனக்கு இருந்த பல்வேறு குழப்பங்களினாலும், மன நிம்மதி இல்லாது இருந்ததினாலும் செய்வதறியாது பல்வேறு இடங்களுக்கும் சென்று கொண்டு இருந்தேன். 2008 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் . ஒருநாள் சாயி பாபா என் கனவில் வந்து என்னை சீரடிக்கு வந்து அவரை தரிசிக்குமாறு கூறினார்.

அதற்கு முன்னர் நான் சீரடிக்கு மூன்று முறை போய் இருந்தாலும் அவருடைய மகிமையை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் எந்த கனவு வந்ததும் எதோ நல்லது நடக்க உள்ளதோ என எண்ணினேன். அங்கு சென்று திரும்பியவுடன் நான் மீண்டும் அலுவலகத்திற்கு சென்றேன். எனக்கே வியப்பு. என்னுடைய வேலையில் சில மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. அலுவலக வேலையாக ஒரே வாரத்தில் நான் இங்கிலாந்து நாட்டிற்கு செல்ல வேண்டும் என்ற உத்தரவு வந்தது.
அந்த நிகழ்ச்சி அதிசயமானது. ஏன் எனில் என்னுடைய அலுவலகத்தில் அதுவரை என்னுடைய பிரிவில் இருந்து எவரையுமே வெளிநாட்டிற்கு அனுப்பியது இல்லை. அதுவே முதல் தடவை. அன்று முதல் நான் அவரை நம்பத் துவங்கினேன் . அதன்பின் பல மாற்றம் என் வாழ்வில் நடந்தது. எனக்கு இருபத்தி எட்டாவது வயதில் திருமணம் ஆயிற்று.

திருமணம் ஆனபின் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளாதார விழ்சியினால் என்னுடைய கணவரின் வேலைக்கு ஆபத்து வந்தது. உடனே நான் சாயி விரதத்தை ஆரம்பித்தேன். நான் ஒன்பது நாட்கள் சாயி விரதம் ஆரம்பித்த அன்றே என்னுடைய கணவருக்கு பிராஜெக்ட் மாற்றல் ஆயிற்று. ஒரு மாதத்திற்கு வெளி நாடு செல்ல வேண்டி வந்தது. அதையும் மிகப் பெரிய அதிசயம் என்றே கூற வேண்டும். வேலையே போக இருந்தவருக்கு புதிய பிராஜெக்ட், வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்ற சந்தர்ப்பம் கிடைத்ததை சாயியின் அருள் என்பதை விட வேறு என்ன என்று கூற முடியும்? அவை அனைத்தும் அவர் மீதான பக்தியை எனக்கு மேலும் மேலும் அதிகரிக்கவே செய்தது. அனைவரும் சாயியின் அருளை பெற இந்த என் அனுபவம் ஒரு காரணமாக இருக்கட்டும்
அன்ஷு

(Translated into Tamil by Santhipriya)
Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.