Sunday, November 15, 2009

Sai Baba Loved Tatya Saheb Noolkar-Amazing story of the Locket.

சாயி பாபா அன்பை பெற்ற தத்யஸாஹிப்


அன்பார்ந்தவர்களே
நமக்கெல்லாம் சாயிநாதர் எப்படி வரும் அனைத்தையும் அறிந்தே இருக்கின்றார் என்பது தெரியும் । சாயி சரித்திரத்திலும் அப்படிப்பட்ட லீலைகள் பல கூறப்பட்டு உள்ளன . எந்த ஒரு சாயி பக்தனுக்கும் சாயி அனைத்தையும் அறிந்தே உள்ளார் என்பதில் சந்தேகமே இருக்காது . ஏன் எனில் ஒவ்வொரு நிமிடமும் நாம் சாயியின் கண்காணிப்பில் உள்ளோம் என்பது உண்மை அல்லாவா ? அவருக்கு முன் காலம் , நடக்கும் காலம் மற்றும் வரும் காலம் குறித்தும் அனைத்தும் தெரியும் என்பதே உண்மை . இதோ இந்த கதையை படியுங்கள் :

தத்யஸாஹிப் என்பவருடைய மகனான ஸ்ரீ ரகுநாத் விஸ்வநாத நூல்கர் என்பவர் நமக்கு அனுப்பி உள்ள இந்த கடிதத்துடன் தன்னுடைய தந்தை மீது சாயி எத்தனை அன்பு கொண்டு இருந்துள்ளார் என கூறி உள்ளதை படியுங்கள் . 20.12.1912 தேதியிட்ட அந்த கடிதத்தை திரு சாமா தன் கைப்பட எழுதி உள்ளார் .
சீரடடியில் இருந்த என்னுடைய தத்தா 1911 ஆம் ஆண்டு இறந்து போனார் . அவருடைய வயது அப்போது 48. அதன்பின் என்னுடைய தந்தை என்னுடைய பாட்டி ஜானகிபாயின் ஆசைக்காக ஒரு பக்கம் தாத்தாவின் படத்தையும் மறுபுறம் பாபாவின் படத்தையும் வைத்த லாக்கெட் ஒன்றை செய்தார் . அதை அவர் சீரடிக்கு அனுப்பி பாபாவின் கையால் தொட்டு ஆசி வாங்கியபின் திருப்பி அனுப்புமாறு நண்பருக்கு அனுப்பினார் .அங்கு என்ன நடந்தது என்பதை சாமா தன் கைப்பட எழுதி உள்ள மராட்டிய மொழியிலான கடிதத்தை படியுங்கள் .

சீரடி 20.12.1912
தாழ்மையுடன் வணக்கம்
நேற்று அதாவது 19 ஆம் தேதியன்று ஆரத்தி நடக்கையில் சாயி மகாராஜிடம் போஸ்ட்மன் வந்து நீங்கள் அனுப்பிய பார்சலை தந்தார். அதை வாங்கிக் கொண்டு அந்த பெட்டியால் தன் முகத்தை துடைத்துக் கொண்டபின் அந்த பெட்டியை முத்தம் கொடுத்தார் . பாபா கூறினார் ‘ இதில் இரண்டு மனிதர்கள் உள்ளனர் . அப்படி கூறிவிட்டு அதை என்னிடம் தந்தவுடன் அந்த பெட்டியை திறந்து அதில் இருந்த லாக்கெட்டையும் , உன் அம்மா எழுதி வைத்து இருந்த கடிதத்தையும் அவரிடம் தந்தேன் . அதை அவர் அங்கு வந்தவர்களிடம் எல்லாம் காட்டி ‘ இந்த மனிதர் என்னை அவருடன் இணைத்துக்கொண்டு சென்றுவிட்டார் ' என்றார் . ‘ லாக்கெட்டையும் என்னிடம் தந்து பத்திரமாக வைக்கச் சொல்லி உள்ளார் . உன் அம்மாவுக்கு என் வணக்கங்கள் .
சாயிதாஸ்
மாதவ தேஷ்பாண்டே

அந்த கடிதத்தில் இருந்து தத்யஸாஹிப் நூல்கர் மீது சாயி எத்தனை அன்பு கொண்டு இருந்திருக்கிறார் என்பது புரியும் . தத்யஸாஹிப் தன்னுடன் இணைத்துக் கொண்டு பேசியதினால்தான் இந்த லாகேட்டில் இரண்டு மனிதர்கள் உள்ளனர் என்று கூறி உள்ளார் . மேலும் ‘ இந்த மனிதர் என்னை அவருடன் இணைத்துக் கொண்டு சென்றுவிட்டார் ‘ என்று கூறியதின் மூலம் அவர் இறந்த பிறகு பாபாவின் ஆத்மாவுடன் கலந்து விட்டார் என்பதை தெரிவித்து உள்ளார் . அதனால்தான் அது குறித்து சாயி சரித்திரத்தில் எழுதி உள்ள ஹெமட்பன்ட் ‘ நூல்கர் ஆசிர்வதிக்கப் பட்டவர் . அவர் சீரடியில் தன் உயிரை விட்டாலும் கடவுளுடன் கலந்து விட்டார் . தன் உயிர் பிரியும் முன் எவர் ஒருவர் தான் எப்படி இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்கின்றார்களோ அதை அடைவார்கள் . கடவுளின் காலடியில் கலந்துவிட முடிவு செய்து விட்டால் அவர்களுக்கு மீண்டும் பிறப்பு கிடைப்பதில்லை .
நார்கே என்பவர் அது குறித்து ஆராய்ந்து இப்படிக் கூறுகின்றார் . ‘ எவர் ஒருவர் பாபாவை வெளிப்படையாக மட்டுமே பார்த்து ஒரு எண்ணத்தை தன்னுள் ஏற்படுத்திக் கொள்கின்றார்களோ அவர்கள் தவறு செய்பவர்கள் . பாபா தன்னிடம் வந்து உதவி கேட்பவர்களுக்கு தன்னால் ஆனா உதவியை செய்கின்றார் . இந்த உலகில் வெளிப்படையாகத் தெரியும் காரியங்களை பார்த்தே ஒவொருவரும் தத்தம் எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர் . ஏனெனில் அவர்கள் சரீர ஆசை கொண்டு வாழ்பவர்கள் . அவர்களுக்கு ஒருவருடைய இதயத்தில் என்ன உள்ளது என்பதை ஊடுருவிப் பார்க்கும் திறமை இல்லை . அதனால்தான் முதலில் இருந்தே நார்கேயின் நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டிருந்த சாயிநாதர் அவரை புதிசாலியானவர் என்ற பொருளில் 'ஹுஷார்' என்பாராம் .
சில நேரங்களில் நார்கே சற்று அசட்டையாக இருக்கும் பொழுது அவரிடம் மந்தியாக உள்ளாயே என்ற பொருளில் நீ ஒரு 'துப்யா’ என்பாராம் . பாபா பல நேரங்களில் இந்த உலகில் மட்டும் அல்ல வேறு உலகிலும் சென்று வாழ்கின்றார் என்பது அவரை நன்கு புரிந்து கொண்டவர்களுக்கு மட்டுமே தெரியும் . அவர் கூறியது அனைத்தும் மிகவும் எளிமையாக , நேரடியாக , உவமைகளுடம் கூடியதாக கதைகளைப் போல இருக்கும் . அதை சாதாரண முறையில் எடுத்துக் கொண்டு விளக்கத் துவங்கினால் அது அர்த்தம் இல்லாமல் தோன்றும் ஆனால் அதன் உள் அர்த்தம் உண்மையாக அவரை புரிந்து கொண்டவர்களுக்கு மட்டுமே தெரியும் . ஒருமுறை பாபாவின் பிரசங்கத்தை கேட்ட ஒருவர் நார்கேயிடம் கூறினாராம் , என்ன மனிதர் இவர் . நான் எந்த சாதுவும் பணத்தை பற்றியே பேசிக்கொண்டு இருந்ததாக கேட்டதில்லை .’ பாவம் அவருக்கு என்ன தெரியும் , பாபா பேச்சின் இடை இடையே பைசா , பைசா எனக் கூறுவது பலமுறை ஒருவருடைய தகுதியை குறிக்கிறது என்பது ? பாபாவை புரிந்து கொள்வது கடினாம் , ஏன் எனில் அவர் ஒரு புதிர்
Translated into Tamil by Santhipriya)


Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.