Wednesday, November 18, 2009

Believe in Guru-Experience of Devotee Bhasker.


அன்பானவர்களே,
பாபா தன்னிடம் முழுமையாக பக்தி கொண்டு தன்னிடம் சரண் அடைந்தவர்களின் துயரை நீக்குகின்றார் ,அவரிடம் நம்பிக்கை கொண்டவர்களை கை விடுவது இல்லை. சாயி சரித்திரத்தில் உள்ளது பாபாவின் இந்த வாக்கு. '' என்னிடம் முழுமையாக சரண் அடைந்து விட்டால் உன்னிடமும் நான் அப்படியேதான் இருப்பேன். இந்த மஸூதியில் அமர்ந்து கொண்டு நான் உண்மையைத் தவிர வேறு எதையும் கூறுவது இல்லை. இங்கு சாதனாக்கள் இல்லை, ஆறு வித சாஸ்த்திரங்களும் இல்லை. குரு மீது நம்பிக்கை வை. அவரே அனைத்தையும் செய்பவர் என்று நம்பு. எவன் ஒருவன் தன்னுடைய குருவே ஹரி, ஹரன் மற்றும் பிரம்மா என்ற அவதாரத்தின் மறு உருவம் என நினைக்கின்றானோ அவனே ஆசிர்வதிக்கப் பட்டவன். '' இனி பாஸ்கருடைய கதையைப் படியுங்கள்.
மனிஷா

ஓம் ஸ்ரீ சாயிராம்
சாயிராம் சகோதரி மனிஷா ,
நான் சாயிபாபாவின் பக்தன். நான் வேலை செய்யும் இடத்தில் நடக்கும் அரசியலினால் அவதிப்படுகின்றேன். அமெரிக்காவில் உள்ள ஒரு கம்பெனியில் சாப்ட்வேர் இன்ஜினியர் பணியில் உள்ளவன் நான். என்னுடைய வேலையை திறமையுடனும், குறிப்பிட்ட நேரத்திலும் செய்து முடிக்க வேண்டும் .
என்னுடைய குழுவில் உள்ள ஒருவன் நன்கு வேலை செய்வதில்லை. அவன் செய்யும் அனைத்தையும் நான்தான் சரி செய்து தரவேண்டும். என் வேலையைத் தவிர அவனுடைய வேலையையும் சேர்த்தே செய்ய வேண்டி இருந்தது. ஆனால் அவன் மிகவும் கெட்டிக்காரன். அனைவரையும் தனது பேச்சால் கவர்ந்து விடுவான். நான் அவனுடைய வேலைத் திறமையின்மையை என்னுடைய முதலாளியிடம் கூறினால் அவர் என்னை விட்டே அவனை மாற்றச் சொல்வார். ஏன் எனில் அவன் என் கீழ் பணி செய்பவன்.
அவன் என்னுடைய முதலாளியையும் தன்னுடைய பேச்சினால் கவர்ந்து இருந்தான். அவனுடைய திறமையின்மையை பற்றியும், அவனுடைய வேலையையும் நானே செய்வது பற்றியும் எங்களுடைய உயர் அதிகாரிக்கும் தெரியும். அவர் வாடிக்கையாளருக்கு முன்னால் அவனை விட்டுக் கொடுக்க சம்மதிக்க மாட்டார்.
அவர் இட மாற்றம் பெற்றார். ஆனாலும் அவர் வேலை வந்தால் வேண்டும் என்றே அவனுக்கு கொடுப்பார். அவருக்கு தெரியும் அவனிடம் போகும் வேலையை முடிவாக நான்தான் செய்ய வேண்டி இருக்கும் என. அவனிடம் வேலையை கொடுத்துவிட்டு என்னைப் பார்த்து நக்கலாக சிரிப்பார். என்னுடைய முதலாளி என்மீது என்ன காரணத்தினாலோ திருப்பதி அடையவில்லை. அதனால் என்னுடைய வருடாந்திர வேலை திறமை மதிப்பீடு குறைவாகவே இருந்தது. அதனால் என்னால் வேலையையும் விட முடியாத நிலைமை. எற்கனவே உலகம் முழுவதிலும் இருந்த பொருளாதார விழ்ச்சியினால் வேறு வேலை கிடைப்பது கஷ்டமாக இருந்தது.
அதனால் எனக்கு மனநிம்மதி இல்லை, அதிக சோர்வடைந்தேன். என்னுடைய பொறுமையை பாபா மிகவும் சோதனை செய்வதாக எண்ணினேன். '' பாபா, நான்தான் வேலை செய்கின்றேன் என்பது உண்மையாக இருந்தாலும், என்னுடைய மற்ற உதவியாளான் பெயரைத் தட்டிக் கொண்டு போகிறான், அதனால் என் திறமை வெளிச்சத்துக்கு வராமல் உள்ளது. நீதான் இந்த சங்கடத்தில் இருந்து என்னைக் காக்க வேண்டும் . என்னால் இனியும் அவர்கள் என்னை அவமானப் படுத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாது பாபா, என்னைக் காப்பாற்று பாபா, என்னை காப்பாற்று '' என மனதில் அழுதேன்.
ஒரு நாள் என்னுடைய மனைவி அவள் தோழி ஒருவள் கூறியதாக பாபாவின் ஒன்பது வார விரதம் குறித்துக் கூறினாள். அவர்கள் சிகாகோவில் இருந்தனர். அவர்களுக்கும் ஏராளமான பிரச்சனை இருந்ததாம். கணவன் உடல் நலம் இல்லை, வேலைக்கு பிரச்சனை என பல பிரச்சனைகள். அவளுக்கு ஒரு நலம் விரும்பி சாயி பாபாவின் ஒன்பது நாள் விரதத்தை பற்றிக் கூற, அவளும் அதை கடைபிடிக்க, அவளுடைய பிரச்சனைகள் ஒழிந்தனவாம்.
அதை நம்பி நானும் சாயியின் ஒன்பது நாள் விரதத்தை கடை பிடித்து முடித்தேன். அவ்வளவுதான். ஒரு நாள் என்னுடைய உயர் அதிகாரி முன்னிலையில் எங்களுடைய வாடிக்கையாளர் கூறினார் '' எந்த ஒருவனுடைய திறமையையும் அவன் செய்யும் வேலையை பொறுத்தே அமைய வேண்டுமே தவிர மற்றவர் உதவியுடன் செய்த வேலையை தான் செய்தது போல காட்டிக் கொள்வது மிகவும் தவறு'' . அது தன்னைக் குத்திக்காட்டுவது போல இருந்ததினாலோ என்னவோ மறுநாள் முதல் என் கீழ் வேலை செய்த வேலை திறமையின்மையுடன் இருந்தவன் , என்னிடம் ஆலோசனைக் கேட்டு , என்னிடம் மரியாதை வைத்து அவனுடைய வேலைகளை ஒழுங்காக செய்யத் துவங்கினான்.
அந்த மாற்றம் பாபா செய்த அற்புதமே தவிர வேறு ஒன்றும் இல்லை. பாபா அப்படியாக என்னுடைய நெடுநாளைய மனத்துயரை நீக்கினார். அவருக்கு நான் என்றும் நன்றி உள்ளவனாகவே இருப்பேன்.
ஓம் சாயிராம்
பாஸ்கர்

Translation into Tamil - Shantipriya.
Wallpaper -Brother Rahul.
Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.