Wednesday, November 11, 2009

Shirdi Sai Baba Temple in Pune.


பூனாவில் சீரடி ஆலயம்

நான் பூனாவில் இண்டாவது வகுப்பில் படித்துக்கொண்டு இருந்தபோது என்னுடைய பெற்றோர்கள் தவறாது வியாழக்கிழமை மற்றும் மாதத்தில் ஒருநாள் அன்னதானத்திற்கு சாயி ஆலயம் செல்வதுண்டு. அது எனக்கு பசுமையாக நினைவில் உள்ளது. நான் இரண்டு வருடங்கள் முன்பு பூனாவுக்கு சென்றிருந்த பொழுது என் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சாயினாதரை தரிசனம் செய்த பின் அந்த ஆலயத்தில் சிறுது நேரம் தங்கிவிட்டு வர எண்ணினேன். அந்த ஆலயம் வந்ததே பெரிய கதை.

பூனா சிவாஜி நகரில் உள்ள மூத்தா நதிக்கு அருகில் உள்ளது ஒரு சிறிய இடம். தாமோதர்பந்த் ரசானே என்பவர் சாயினாதருடன் வாழ்ந்து கொண்டு இருந்தவர். ரசானே சவல் என்ற பெயர் கொண்ட அந்த இடம் அவருக்கு சொந்தமானது. 1945 ஆம் ஆண்டு தாமோதர்பந்த் ரசானேயின் மகனான நானா சாஹிப் ரசானே அந்த இடத்தில் இருந்த தம்முடைய வீட்டில் இருந்த அறைகளை சாயி பாபா ஆலயமாக மாற்றி வழிபடத் துவங்கினார்.

கேட் என்ற இடத்தில் இருந்த போலீஸ் பிரிவில் திரு மகாதேவ் நிக்கம் என்பவர் வேலையில் இருந்தார். அவரும் தீவீர சாயி பக்தர் என்பதினால் அவரையும் நானா சாஹிப் ரசானே அந்த ஆலயத்தின் பணிக்கு அழைக்க திரு மகாதேவ் நிக்கம் தனது வேலையை விட்டுவிட்டு அங்கு பூசாரியாக வேலைக்கு வந்து விட்டார். அவர் நல்ல பிரும்மசாரி. தனது கழுத்தில் சாயிபாபா தந்திருந்த தனது விழுந்த பல்லை தாயத்தாக கட்டிக்கொண்டு இருந்தார். அங்கு வந்ததும் தம்மிடம் இருந்த தாயத்தை அந்த ஆலயத்துக்கு கொடுத்துவிட்டார். அந்த தாயத்து அவருக்கு கிடைத்த கதை விசித்திரமானது .

காஷிபாய் என்ற திருமணம் ஆனா பெண்மணி நிப்பத் என்ற இடத்தில் வசித்து வந்தார். அவளுடைய துரதிஷ்டத்தினால் அவளுடைய கணவர் கல்யாணம் ஆனா சில காலத்திலேயே மரணம் அடைந்து விட்டார்.அவள் அப்போது கர்பவதி. அவளுக்கு சில நாட்களில் ஒரு குழந்தை பிறந்தது. அதன் பெயரை மாதவ் என வைத்தாள். அவளுக்கு வேறு வசதி இல்லை என்பதினால் சீரடியில் இருந்த தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து தங்கினாள். மாதவுக்கு அப்போது வயது ஒன்று ஆகி இருந்தது. ஒரு வயலில் வேலை செய்து கொண்டு இருந்தாள். பிள்ளை ஒரு பிரச்சனையாக இருந்தது. அவனை எங்கு விட்டுவிட்டு வயலில் வேலைக்கு செல்வது ?

ஆகவே அவள் தனது பிள்ளையை சாயி பாபாவின் மசூதியில் காலையில் விட்டுவிட்டு சென்றபின் மாலையில் வந்து அவனை அழைத்துச் சென்றுவிடுவாள். சாயி பாபாவிடம் குழந்தை இருந்ததினால் அவள் கவலைப் படவில்லை. தினமும் அவள் வந்து குழந்தையை அழைத்துக் கொண்டு செல்லும் முன் பாபாவை வணங்கிவிட்டுச் சென்றுவிடுவாள். இது சுமார் நான்கு அல்லது ஐந்து வருடம் தொடர்ந்தது.

மாதாவுக்கு ஐந்து வயதான பொழுது அவர் பாபாவுக்கு சிறுசிறு வேலைகளை செய்யத் துவங்கிவர பாபா அவனுக்கு தினமும் ஒரு ரூபாய் தந்தார். கஷிபாயிக்கு தெரியும் பாபா தினமும் பலருக்கும் பணம் தந்து வந்தார் என்பது. ஒரு நாள் அவள் பாபாவிடம் சென்று கேட்டாள் ' பாபா நீங்கள் தினமும் பலருக்கும் ரூபாய் ஐம்பது , இருபத்தி ஐந்து, முப்பது, எனத தந்தாலும் பல சிறுசிறு வேலைகளை செய்யும் என் பிள்ளைக்கு மட்டும் ஒரே ஒரு ரூபாய் மட்டுமே தருகின்றீர்களே அது ஏன் ?
பாபா கூறினாராம் ' காஷிபாயி இதோ பார், நான் மற்றவர்களுக்கு கொடுக்கும் தானத்தை நிறுத்தி உள்ளதாக இருக்கின்றேன். ஆனால் உன்னுடைய மகனுக்கு மட்டும் நான் தொடர்ந்து தானம் தருவேன். உன்னைப்போன்ற விதவைகளை காப்பாற்றுவது என் கடமை'
காஷிபாயிக்கு பாபா கூறியது விளங்கவில்லை. அவள் கூறினாள் ' என்னுடைய கணவர் இறந்து ஐந்து வருடமாகி விட்டது. நான் அன்றில் இருந்து கணவர் இல்லாத விதவை' அதைக் கேட்ட பாபா கோபம் கொண்டு அவளைக் கத்தத் துவங்க பயந்து போன அவள் மசூதியை விட்டு வெளியில் வந்து தன்னுடைய வீட்டிற்கு திரும்பி விட்டாள். அதன் பின் அவள் மசூதி பக்கமே இரண்டு மூன்று நாட்கள் போகவில்லை என்பதினால் பாபாவே அவளை கூப்பிட்டு வர ஆளை அனுப்பினார்.

பாபா முன் சென்று நின்றவள் பயந்து போய் இருந்தாள். பாபா அவளிடம் மிகவும் சாந்தமாகப் பேசிய பின் ஆடிக்கொண்டு இருந்த தன்னுடைய ஒரு பல்லைப் பிடுங்கி அதை சிறிது உடி என்ற வீபுதியுடன் கலந்து அவளிடம் தந்து அதை பத்திரமாக வைத்துக் கொள்ளும்படியும் கூறிய பின் அது அவளை காப்பாற்றும் என்றார்.
மாதவ் பெரியாவனாகியபின் அவனுடைய தாயார் மறைந்து போனாள். அவர் மாதவராவ் என்ற பெயர்கொண்டு நிப்பத் கிராமத்திலேயே வாழலானார். ஒருமுறை அவருக்கு நல்ல காய்ச்சல் வந்து படுத்திருந்த பொழுது பாபா அவருடைய கனவில் வந்து ' விரைவில் உன்னைக் காண ஒருவர் வருவார். அவரிடம் நீ அந்த தாயத்தை தந்துவிட வேண்டும்'

அன்றே மகாதேவ் நிக்கம் என்பவர் திரு மாதவராவிடம் வந்து தனக்கும் 'அவரிடம் நீ சென்று அந்த தாயத்தை வாங்கிக் கொண்டு வந்து விட வேண்டும் 'எனக் கனவு வந்தது என்பதினால் அவரைத் தேடி அங்கு வந்ததாகக் கூறினார்। இருவருக்கும் ஒரே நேரத்தில் அந்த கனவு வந்து இருந்ததினால் பாபாவின் ஆணைப்படி அந்த தாயத்தை அவரிடம் தந்து விட்டார். பல வருடங்கள் அந்த தாயத்தை தன்னிடம் வைத்திருந்த திரு. மகாதேவ் நிக்கம் அதை அந்த ஆலயத்துக்கே தந்து விட்டார். அதை அந்த ஆலயத்தில் உள்ள பாபாவின் பாதுகைக்கு கீழே வைத்து உள்ளனர். 1950 ஆம் ஆண்டில் அந்த ஆலயம் சாயிதாச மண்டல் என்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

Courtesy:Translated into Tamil by Santhipriya
Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.