Wednesday, September 29, 2010

Complete Guide for first time visitor to Shirdi

 

அன்பானவர்களே
சாயி பக்தரான ரோஹித் என்பவர் சீரடிக்கு முதன் முதலாகச் செல்லும் சாயி பக்தர்களுக்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக அங்கு என்ன ஏற்பாடுகள் உள்ளது, எதையெல்லாம்பார்ப்பது என்பதை செய்தியாக தொகுத்துக் கொடுத்துள்ளார். அவருக்கு நம் நன்றியைத் தெரிவிப்போம்
மனிஷா

ரோஹித்தின் கட்டுரை
கீழ் கண்ட சீரடி வரை படம் இணைய தளங்களில் கிடைக்கும். ஆனால் சரியான இடத்தை அடையாளம் கண்டு பிடிக்க வசதியாக இருக்கும் வகைக்கு சிறியதாக x என குறிப்பிடப்பட்டு உள்ளவற்றை A முதல் Z வரை என மாற்றிக் காட்டி உள்ளேன்.
சீரடி வரை படம்
A- மன்மாடு நகர் மெயின் ரோடில் - பக்தர்கள் இரண்டாவது நம்பர் கேட்டில் இருந்து சமாதி தரிசனம் செல்லும் வழி. அதற்கு நுழைவு கட்டணம் கிடையாது. தரிசனத்துக்கு செல்லும் ஹாலில் காட்டப்பட்டு உள்ள வழி வழியே பக்தர்கள் சமாதி ஆலயத்துக்கு செல்ல வேண்டும்.
B- மெயின் கேட்
C - பொது ஜன தொடர்பு அதிகாரி அலுவலகம்
D - மெயின் கேட் நம்பர் 2 (இது தற்போது மூடப் பட்டு விட்டது. )
E - பாபாவின் பத்தகங்கள், VCD மற்றும் காலண்டர் போன்றவற்றை விற்கும் சீரடி சமஸ்தானத்தின் புத்தக நிலையம்.
F - சீரடி சத்யவிரத கூடம்
G - சீரடி சாயி சமஸ்தான தொழிலாளிகள் கூட்டுறவு சங்க விற்பனை நிலையம்
H - கூட்டம் மிகுதியாக உள்ள நேரத்தில் வெளி நாட்டவர் மற்றும் மிக முக்கிய மனிதர்கள் செல்லும் வழி.
I - கடுகு எண்ணை, பூஜை பொருட்கள், பிரசாதம் போன்றவை விற்கப்படும் கடைகள்
J - தரிசனத்துக்கு செல்பவர்களது வரிசையை காண மிகப் பெரிய அளவில் வைக்கப்பட்டு உள்ள ஜன்னல்.
K - கூட்டம் மிகுதியாக உள்ள நேரத்தில் வயதானோர், ஊனமுற்றோர் , மற்றும் சீனியர் சிடிசன் (மனிதர்கள்) செல்லும் வழி.
L - கேட் நம்பர் 3
M -கமெரா, செல்போன் போன்றவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க ஸ்ரீ சாயிபாபா சன்ஸ்தான் வைத்துள்ள நடமாடும் வண்டி ( க்ளோக் ரூம்)
N - சாயி காம்ளெக்ஸ் எனப்படும் பொது விற்பனை நிலைய கூடம்
O - தக்ஷண முக்தி மாருதி ஆலயம்
P - அப்துல்லா பாபாவின் குடுசை
Q - பாபாவின் உருவச் சிலையை பார்க்க செல்லும் வழி. இந்த வழியில் சென்றால் சமாதிக்கு செல்ல முடியாது.
R - தரிசனத்துக்குப் பிறகு வெளியே செல்லும் வழி. ஆனால் கூட்டம் மிகுதியாக உள்ள நேரத்தில் வயதானோர், ஊனமுற்றோர் , மற்றும் சீனியர் சிடிசன் (மனிதர்கள்) செல்லும் வழி.
S - நன்கொடை அளிக்கும் இடம்
T - செய்திகளை தரும் அறை. முன்னர் இது உடி மற்றும் பிரசாத விநியோக அறையாக இருந்தது.
U - தரிசனத்துக்கு செல்லும் பக்தர்கள் பார்க்க திறந்த வெளி தொலைகாட்சி உள்ள இடம்
V - பாபாவை குளிப்பாட்டிய நீரைத் பக்தர்கள் குடிக்க வசதியாக வைக்கப்பட்டு உள்ள தண்ணீர் கூலர்.
W - தரிசனத்துக்குப் பின் வெளியேற பின்புற வாசல். இதன் வழியாக நுழைவு சீட்டு பெற்றுள்ள மிக முக்கிய மனிதர்கள் செல்லலாம்.
X - சாயிபாபா மியுஸியம்
Y - உடி மற்றும் பிரசாதம் விநியோகிக்கும் இடம்.
Z - மெயின் கேட் நம்பர் 4
கேட் நம்பர்-1
இதன் வழியாக உள்ளே சென்றால் ஆலய வளாகத்துக்குள் எங்கு வேண்டுமானாலும் சுற்ற முடியும். உடி பிரசாதம் பெற்றுக் கொண்டு அப்துல்லா பாபா சமாதி, தத்யா மற்றும் நானாவளி சமாதி, சாயிபாபா மியுஸியம் மற்றும் துவாரகாமாயி போன்ற இடங்களைப் சென்று பார்க்க முடியும். ஆனால் லேந்தி பாக் மற்றும் பாபாவின் கிணறு போன்ற இடங்களுக்கு செல்ல முடியாது. அது போல எவரும்இந்த கேட்டில் இருந்து வெளியில் போக முடியாது. இந்த கேட் பொது ஜன தொடர்ப்பு அலுவலகம் எதிரில் அதாவது நந்ததீப்பிற்கு பின்னல் உள்ளது.
மெயின் கேட் நம்பர் - 2
ஆலயத்தின் வடக்குப் பகுதியில் பிம்பல்வாடி சாலையில் உள்ளது கேட் நம்பர்- 2. முன்னர் இதன் வழியே உள்ளே செல்லவும் வெளியேறவும் வசதி இருந்தது. இது தற்போது மூடப்பட்டு விட்டது. இதற்குப் பதிலாக அதற்குப் பின்புறத்தில் உள்ள உள்ளே நுழையும் கட்டணம் எதுவும் இல்லாத கேட்டின் வழியாக சென்றால் தரிசனத்துக்கு செல்லும் மூல கூடத்தை அடையலாம். வரிசையில் நின்று கூடத்தின் உள்ளே இரு புறமும் தடுப்புகள் போடப்பட்டு உள்ள வழியில் சென்று சமாதி ஆலயத்தை அடைந்து தரிசனம் செய்யலாம்.
கேட் நம்பர் - 3
பிம்பல்வாடியில் இருந்து கிழக்கு புறமாக வரும் வழியே கேட் நம்பர் - 3 இதன் வழியாக உள்ளே செல்லும் பக்தர்கள் அதன் மூலமே வெளியிலும் வருவார்கள். அங்கிருந்து முக்தி ஹனுமான் ஆலயத்துக்கும் சாவடிக்கும் செல்லலாம். இதன் உள்ளே நுழைந்து இடப்புறத்தில் உள்ள வழியாக முக்கிய தரிசனத்துக்கு செல்லும் இடத்தை அடையலாம். வலப்புறம் உள்ள வாசல் வழியே வயதானவர்கள், அங்ககீனர்கள் போன்றவர்கள் செல்லலாம். வயதானவர்கள்மற்றும் ஊனமுற்றோர்களுடன் கூட உதவிக்கு ஒருவர் செல்லலாம். அது போல அவர்களுடைய குழந்தைகளும் செல்ல முடியும். வெளிநாட்டவரும், வெளி நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் சான்றுக்காக தமது பாச்போர்டைக் காட்டி உள்ளே செல்லலாம்.
பிம்பல்வாடியில் இருந்து கிழக்கு புறமாக வரும் வழியே கேட் நம்பர் - 3 இதன் வழியாக உள்ளே செல்லும் பக்தர்கள் அதன் மூலமே வெளியிலும் வருவார்கள். அங்கிருந்து முக்தி ஹனுமான் ஆலயத்துக்கும் சாவடிக்கும் செல்லலாம். இதன் உள்ளே நுழைந்து இடப்புறத்தில் உள்ள வழியாக முக்கிய தரிசனத்துக்கு செல்லும் இடத்தை அடையலாம். வலப்புறம் உள்ள வாசல் வழியே வயதானவர்கள், அங்ககீனர்கள் போன்றவர்கள் செல்லலாம். வயதானவர்கள்மற்றும் ஊனமுற்றோர்களுடன் கூட உதவிக்கு ஒருவர் செல்லலாம். அது போல அவர்களுடைய குழந்தைகளும் செல்ல முடியும். வெளிநாட்டவரும், வெளி நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் சான்றுக்காக தமது பாச்போர்டைக் காட்டி உள்ளே செல்லலாம்.
ஆலயத்தின் தெற்கு புறத்தில் உள்ள கேட் நம்பர் -4
அதன் இடது புறத்தில் கடைகள் உள்ளன. வலது புறத்தில் உள்ள கடைகள் வழியாகச் சென்றால் மன்மாட்/நகர மெயின் ரோடு கேட்டை அடையலாம். அது போல இடதுபுறமாக உள்ள கடைகள் வழியே சென்றால் துவாரகாமாயியை அடையலாம். கேட் நம்பர் -4 வழியே உள்ளே சென்றால் லேந்தி பாக் மற்றும் நந்திதீப் என்ற இடங்களுக்கு இடையே இரும்பு கம்பிகளினால் போடப்பட்டு உள்ள தடுப்புப் பகுதியை அடையலாம். அதன் வழியே நடந்து சென்றால் (தடுப்புகளின் இடையில் உள்ள பகுதி வழியே ) லேந்தி பாக், பாபாவின் கிணறு போன்ற இடங்களுக்குச் சென்று வெளியே செல்லும் மன்மாட்/ நகர் மெயின் ரோடு கேட்டை அடையலாம். நந்திதீபை பார்க்க விரும்புபவர்கள் கேட் நம்பர்- 4 வழியே உள்ளே நுழைந்து லேந்தி பாக், பாபாவின் கிணறு போன்ற இடங்களுக்குச் சென்று வெளியே வந்து கேட் நம்பர்- 1 இன் வழியாக உள்ளே வந்து நந்திதீபத்திற்குச் செல்ல வேண்டும். கேட் நம்பர் -4 என்பது அப்துல்லா பாபா மற்றும் நானாவளி/தத்ய சமாதிகளுக்கு எதிரில் உள்ளது.
மன்மாட்/ நகர மெயின் ரோட்டில் இருந்து உள்ளே செல்லும் கேட் நம்பர் 4. இந்த கேட் மூலம் ஆலயத்திற்கு உள்ளே சென்றால் பாபாவின் முகத்தை வெகு தூரத்தில் இருந்து பார்க்க முடியும் .

தரிசனத்திற்கான விசேஷ அனுமதி சீட்டு
சாதாரணமாக வெளிநாட்டினர் , வெளி நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் போன்றோர் பொது ஜன தொடர்பு அதிகாரிகளை சந்தித்து தமது பாஸ்போர்ட்,கிரீன் கார்ட், அல்லது வெளிநாட்டு சான்றிதழை காட்டி விசேஷ அனுமதி சீட்டு பெற்று கொள்ளலாம். ஆனால் சான்றுகள் அனைத்தும் உண்மையான பிரதிகளாக இருக்க வேண்டும். அனுமதி வேண்டுகோளை அரசு உயர்அதிகாரிகளிடம் இருந்து பெற்று வந்தாலும் அனுமதிச் சீட்டுதருவார்கள்
வெளி நாட்டில் வாழும் இந்தியர்கள், வயதானோர், உடல் ஊனமுற்றோர், மற்றும் வெளிநாட்டவர் போன்றோர் சமாதி தரிசனத்திற்கு முன்னர் உதி பிரசாதம் தரப்பட்டு வந்த இடத்தின் எதிரில் ( ஆலய வரை படத்தில் 'R' என குறிக்கப் பட்டு உள்ளது ) 'K' என்ற வழி வழியாக செல்லலாம். அதே நேரத்தில் VIP எனப்படும் மிக முக்கியமானவர்கள் வரை படத்தில் உள்ள 'W' என்ற வழியே செல்ல வேண்டும். மிக முக்கியமானவர்கள் பட்டியலில் உள்ளவர்கள் கூட வயதானோர் மற்றும் உடல் ஊனமுற்றோர்கள் சீனியர் சிடிசன் போன்றோர் அனுமதிக்கப்படும் நுழை வாயில் வழியேயும் செல்லலாம். தரிசன நுழைவு சீட்டு பெறுவதைத் தவிர வேறு பிரச்சனைகளுக்கும் பொது ஜன தொடர்பு அதிகாரியை சந்திக்கலாம்.
பாபாவை தூரத்தில் இருந்து தரிசித்தால் போதும் என நினைக்கும் பக்தர்கள் 'Q' என குறிப்பிடப்பட்டு உள்ள வாசல் வழியே செல்லலாம். அந்த வரிசை மூன்றாம் நம்பர் கேட்டின் வாசலில் துவங்குகின்றது. ஆனால் அதில் சென்றால் சமாதி தரிசனத்துக்கு அருகில் செல்ல முடியாது.
கட்டுப்பாடுகள்
வெளி நாட்டில் வாழும் இந்தியர்கள், மற்றும் வெளிநாட்டவர் போன்றோர் மிக முக்கியமானவர்களுக்கு தரப்படும் அனுமதி சீட்டைப் பெற்றும் உள்ளே செல்லலாம் . அனுமதி கேட்டு கொடுக்கப்பட்டு உள்ள படிவத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி சீட்டு தரப்படும். ஒரு படிவத்தில் சுமார் ஆறு அல்லது பத்து நபர்களுக்கு மட்டுமே அனுமதி தருகின்றனர். அதற்கு மேல் வருபவர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி தரப்படுவது இல்லை.
வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் அங்கு வருவதற்கு முன்னரேயே பொது ஜன தொடர்பு அதிகாரிக்கு தகவல் அனுப்பியோ அல்லது எவர் மூலமாவது தொடர்பு கொண்டோ அனுமதி சீட்டுகளை பெற்றுக் கொள்ள ஏற்பாடுகள் செய்து கொள்ளலாம்
பொது ஜன தொடர்பு அதிகாரி அலுவலகம் குறிப்பிட்ட நேரத்தில்தான் திறக்கப்படும் என்பதினால் முன் பதிவு செய்து கொள்ளவேண்டும்.
வயதானோர், உடல் ஊனமுற்றோர் போன்றவர்கள் தற்போது அதிக சிரமம் இன்றி தனி நுழைவு வாயில் மூலம் உள்ளே செல்லலாம். ஆனால் அதிக கூட்டம் உள்ள நேரங்களிலும் அவர்கள் மூன்றாம் நம்பர் கேட்டின் வழியே உள்ளே சென்று மற்ற நுழைவு சீட்டு உள்ளவர்கள் வரிசையில் நின்றே உள்ளே செல்ல முடியும்
கூட்டம் அதிகம் நிறைந்த நாட்களில் உள்ள கட்டுப்பாடுகள்
விடுமுறை நாட்கள், விசேஷ தினங்கள், பண்டிகை நாட்கள் போன்ற தினங்களில் விஷேச நுழைவு சீட்டுகள் கொடுக்கப்படுவது இல்லை. அந்த நாட்களில் காவலர்கள் வெளி நாட்டில் வாழும் இந்தியர்கள், மற்றும் வெளிநாட்டவர் போன்றவர்களை அவர்கள் காட்டும் பாஸ்போர்ட் போன்ற அடையாள அட்டையை சரி பார்த்துவிட்டு வரிசையில் நிற்க வைக்காமல் தனி நுழை வாயில் மூலம் அதாவது 'H' என வரை படத்தில் குறிப்பிடப்பட்டு உள்ள சனி பகவான், விநாயகர் மற்றும் மகாதேவர் சன்னதிகளின் எதிரில் உள்ள ,வாயில் மூலம் உள்ளே செல்ல அனுமதி தருகின்றனர். ஆனால் அது அந்த அந்த காவலாளிகளின் திறமைக்கு ஏற்பவே நடைபெறுகின்றது. ஆனால் அனைத்துமே வரும் கூட்டத்தைப் பொறுத்தே கடை பிடிக்கப் படுகின்றது.
தரிசன நுழைவு சீட்டுகள் கிடைக்கும் இடம் :-  சீரடியில்
எக்ஸிகுடிவ் ஆபீசர் ,
ஸ்ரீ சாயிபாபா சன்ஸ்தான் டிரஸ்ட் , சீரடி
போஸ்ட் . சீரடி 423 109 , தாலுக்கா ரஹாத் ,
அஹ்மத்நகர் மாவட்டம் (மகாராஷ்டிரா )
போன் : +91-2423-258500 (I.V.R)
பேக்ஸ் நே . ஆபீஸ் :+91-2423- 258870 & பீ. ஆர். வோ .ஆபீஸ் : +91-2423-258770
வெப்சைட் : www.shrisaibabasansthan.org & www.sai.org.in
ஈ _மெயில் : saibaba@sai.org.in & saisandesh_anr@sancharnet.in saibaba@shrisaibabasansthan.org
மும்பையில்
(தற்போது மும்பை அலுவலகத்தில் நுழைவு சீட்டு தரப் படுவதில்லை என்றாலும் அங்கு சென்று உதவி பெறலாம். )
எக்ஸிகுடிவ் ஆபீசர் ,
ஸ்ரீ சாயிபாபா சன்ஸ்தான் டிரஸ்ட் , சீரடி
'சாயி நிகேதன் ', 804-8,
டாக்டர் அம்பேத்கர் ரோடு , தாதர் ,
மும்பை - 400014
தொலைபேசி : +91- 22 - 24166556/ 24161293
பேக்ஸ் நே : +91- 22 - 24150798
ஈ _மெயில்: saidadar@bom3.vsnl.net.in
தரிசனத்திற்கு செல்ல வரிசையாக நிற்கும் பக்தர்களின் வசதிக்காக வழி எங்கும் தண்ணீர் குடிக்க வசதி செயப்பட்டு உள்ளது. அங்காங்கே உள்ள தொலை தூரக் காட்சிப்பெட்டிகள் மூலம் மற்ற இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும் வரிசையில் நிற்பவர்கள் காண முடிகின்றது. வழி நெடுக அவர்கள் உட்கார்ந்து கொள்ளவும் வசதி உள்ளது.
முன்னர் இருந்த தக்ஷிண முக்தி ஹனுமான் ஆலயம் இடிக்கப்பட்டு புதிய ஆலயம் எழுப்பப்பட்டு உள்ளது. பாபாவின் சாவடியையும் இரண்டாகப் பிரித்து இடப்புறம் உள்ள வாயில் வழியே பெண்களும், வலப்புற வாயில் வழியே ஆண்களும் உள்ளே செல்ல அனுமதிக்கப் படுகின்றார்கள்.
ஆலயத்துக்கு செல்பவர்கள் அவசியம் திக்ஷித் வாடாவின் அருகில் உள்ள சாயி பாபா காட்சியகத்திற்கு செல்ல வேண்டும். அங்குதான் சாயி பாபா உபயோகித்து வந்த பாத்திரங்கள், அவர் உடுத்தி இருந்த காபினி, சில்லும், கிராமபோன் பாடல் பெட்டி, அவரை ஏற்றிச் சென்ற பல்லக்கு, பாதுகைகள், மாவு அரைக்கும் யந்திரம், அவர் உண்ட மண் பானை போன்ற அனைத்தும் காட்சிப் பொருட்களாக வைக்கப்பட்டு உள்ளன.

நந்ததீப்
பக்தர்கள் தமது விருப்பம் நிறைவேற தீபங்களை ஏற்றி வைக்கும் நந்ததீப் என்ற இடம் . சாயிபாபா தினமும் விளக்கேற்றி வந்த எ இடத்தில் பக்தர்களும் சென்று தமது வேண்டுகோட்களை வைத்து விளக்கு ஏற்றலாம். அந்த இடத்தில் இருந்த இரண்டு மரங்களுக்கு இடையேதான் பாபா விளக்கை ஏற்றி வந்தார்.
காலணிகள் வைக்கும் இடம்

ஆலயத்திற்கு வருபவர்கள் தமது காலணிகளை ஆலயத்தின் வெளியில் உள்ள காலனி வைக்கும் இடத்தில் வைப்பதே சிறந்தது. ஆலயத்தின் உள்ளே செருப்புகளை எடுத்துச் சென்று அவற்றை வைக்க இடத்தைத் தேடி அலைவதற்குப் பதில் அதற்கென ஏற்பாடு செயப்பட்டு உள்ள இடத்தில் வைப்பதே முறையானது.
தொலை காட்சி பெட்டிகள்
சமாதி ஆலயம் மற்றும் துவாரகாமயியில் நடக்கும் அனைத்தையும் தொலைதூரப் பெட்டிகள் மூலம் ஆலயத்தின் பல பகுதிகளிலும் காட்டியவண்ணம் உள்ளனர். முக்கியமாக காகட ஆரத்தி வெளியில் இருந்து பார்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும். பெரும் கூட்டத்தினருடன் உள்ளே முட்டியடித்துக் கொண்டு பாபாவின் தரிசனத்தைக் காண நிற்பவர்களை விட வெளியில் உள்ளவர்களுக்கு பாபாவின் சிலைக்கு செயப்படும் பூஜைகள் தெளிவாகத் தெரிகின்றன. அதற்குக் காரணம் கமெரா மூலம் பாபாவை மிக நெருக்கத்தில் அடிக்கடி காட்டுவதுதான். அது போல பாபாவின் சமாதி ஆலயத்தில் உள்ள பாபாவை வெளியில் நின்றவாறே தரிசனம் செய்யும் நிலைக்கு அதன் சுவர்களில் ஜன்னல்கள் பொருத்தப் பட்டு உள்ளன. உள்ளே நடக்கும் ஆரத்தி, பூஜை போன்றவைகள் வெளியில் உள்ள தொலை தூரப் பெட்டிகள் மூலமும் காட்டப் படுகின்றது.
கடைகள்
"ஸ்ரீ சாயி சன்ஸ்தான எம்ப்லாயீஸ் கிரெடிட் கோ -ஆபரேடிவ் சொசயிட்டி , சீரடி மூலம் உள்ளே குளிர் பானங்கள், தண்ணீர், ஐஸ் க்ரீம், பால், லஸ்ஸி , போன்ற பொருட்களை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சனீஸ்வரர், கணேஷா மற்றும் மகாதேவர் ஆலயத்தின் அருகில் பூஜை சாமான்களை விற்கும் கடைகளும், பிரசாதம் விற்கும் கடைகளும் உள்ளன.
ஸ்ரீ சத்ய சாயி பூஜை கூடம்
இந்த கூடத்தின் முதல் மாடியில் பக்தர்கள் அபிஷேக பூஜைகள் செய்யும் வசதியும் கீழே சத்யநாராயணா பூஜை செய்யும் வசதியும் உள்ளன. நூற்றி ஒரு ரூபாய் கட்டணத்தை செலுத்தினால் அங்கு எவரும் பூஜையை செய்யலாம். அந்த பூஜைகள் நடைபெறும் நேரங்கள்:
முதல் குழு - 7.00 AM to 8.00 AM
இரண்டாம் குழு - 9.00 AM to 10.00 AM
மூன்றாம் குழு - 12.30 PM to 1.30 பம்
சாயி காம்ப்ளெக்ஸ்
ஆலய நுழை வாசலான இரண்டாம் நம்பர் கேட்டில் இருந்து மூன்றாம் நம்பர் கேட் வரை பரந்துள்ள இடத்தில் மிகப் பெரிய சாயி காம்ப்ளெக்ஸ் என்ற வியாபரத் தளம் உருவாகி வருகின்றது.
சாயி பிரசாதாலய
இந்த இடத்தில் சாயி பாபாவின் பிரசாத சாப்பாட்டை சாப்பிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அது உள்ள இடம் :
"ஸ்ரீ சாயி பிரசாதாலையா "
போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் , சீரடி,
நிம்கோன் ஷிவ் ரோடு ,
நிம்கோன் கோர்ஹலே ,
சீரடி
யாத்ரீகர்கள் தங்கும் இடம்
2009 ஆம் ஆண்டு மக்கர சங்கராந்தி தினத்தன்று சீரடி சன்ஸ்தான் பத்தொன்போது கோடி ரூபாய் செலவில் யாத்ரீகர்கள் தங்கும் இடத்தைக் கட்டி உள்ளது. அதில் சுமார் ஆயிரத்து அறநூறு பேர்கள் தங்க முடியுமாம். மூன்றாம் மாடிவரை அனைத்து வசதிகளையும் கொண்ட முன்னூத்தி முப்பத்தி நான்கு அறைகள், நான்காவது மாடியில் எண்பது குளிர்சாதன பெட்டி இணைப்புகள் கொண்ட அறைகள் உள்ளன. கூட வரும் வண்டி ஓட்டிகள் தங்கும் அறைகள், சாப்பாட்டு வசதி, கார்களை நிறுத்தும் இடம், இருபத்தி நன்கு மணி நேரமும் மின்சார இணைப்பிற்கு தேவையான ஜெனரடர்கள், விளையாட்டு அரங்கம், தோட்டம் போன்றவை உள்ளன. சமையலுக்கு சோலார் குக்கர்கள் போன்றவை பயன் படுத்தப்படுகின்றன.தாங்கும் அறைகளுக்கு முன் பதிவு செய்ய முடியாது. முதலில் வருபவர்களுக்கு முதல் இடம் என்பதே கொள்கை.
மற்றவைகள்
கார்களை நிறுத்தும் இடத்தின் இரண்டாவது நுழை வாசல் முன்னால் லட்டு வினியோக அறை உள்ளது. தத்திய கோடி சமாதிக்கு முன்னாள் உடி வினியோக அறை உள்ளது. தூப ஆரத்திக்குப் பின் ஒரு பக்தருக்கு ஒன்று என உடி பொட்டலங்கள் வினியோகிக்கப்படும். உடி விநியோக அறை திறக்கப்படும் நேரங்கள்
07:00AM To 11:30AM, 13:00PM To 18:00PM AND 19:00PM To 22:00
செல்போன் எனப்படும் தொலைபேசிகளை உள்ளே எடுத்துச் செல்ல முடியாது என்பதினால் அவற்றை பாதுகப்பாக வைத்திருக்க நகரும் வண்டிகள் உள்ளன. அவற்றில் நாம் நமது செல்போன் மற்றும் காமேரக்களை தந்து விட்டால் அதற்கான ரசீது கொடுப்பார்கள். ஆலய தரிசனம் முடிந்ததும் மீண்டும் வந்து ரசீதைக் காட்டி பொருட்களை பெற்றுச் செல்லலாம்.
ஆலயத்தை சுற்றி பல இடங்களிலும் காணிக்கை செலுத்தும் பெட்டிகள், தண்ணீர் அருந்தும் வசதி போன்றவை வைக்கப்பட்டு உள்ளன. இப்பொழுதெல்லாம் பாபாவின் சிலையை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய காரணத்தினால் சிலைக்கு பாதகம் செய்யக் கூடிய பால், பன்னீர் மற்றும் தேன் அபிஷேகங்களை செய்ய அனுமதிப்பது இல்லை.
பாபாவின் மங்கள ஸ்நான் மற்றும் காகட ஆரத்தின் போது அதை காண விரும்பும் பல ஆயிரக் கணக்கான பக்தர்களின் விருபத்தை ஏற்று இப்போதெல்லாம் உள்ளே சென்று அமர்ந்து கொள்வது நிறுத்தப்பட்டு விட்டது. அனைவரும் நின்று கொண்டுதான் ஆரத்தியை காண வேண்டும் . தடுப்புப் போட்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டு உள்ள அந்த அறையில் வலப்புறத்தில் பெண்களும், இடப்புறத்தில் ஆண்களும் நின்றவாறு பாபாவை தரிசித்தப் பின் பாபாவின் சிலைக்கு பின் புறத்தில் உள்ள கதவின் மூலம் வெளியேற வேண்டும்.
சில நேரங்களில் மிக அதிகமாக கூட்டம் உள்ள நாட்களில் துனி மா பகுதியும் மூடப்பட்டு விடுகின்றது. அப்போது துவாரகாமாயிக்கு செல்லும் பக்தர்கள் பாபா அமர்ந்து இருந்த கல்லின் வரை செல்ல முடியாமல் அந்த இடத்தை தூரத்தில் இருந்தே பார்த்துகொண்டு போகும் வகையில் படியில் ஏறிச்செல்லும் பாதை மூடப்படுகின்றது. ஆலயத்தில் உள்ள காவலாளிகள் பக்தர்களை விரைவாகச் செல்லுமாறு கூறுவதை தவறாக நினைக்கக் கூடாது. ஏன் எனில் அவர்கள் நமக்குப் பின்னால் வரிசையில் வரும் பக்தர்களும் அங்கு வந்து வணங்க வழி வகுக்க வேண்டும் அல்லவா?
பாபாவுக்கு நடைபெறும் புனித ஸ்நானம் சில நிமிடங்களே நடைபெறுகின்றது. ஆகவே பக்தர்கள் அந்த இடத்தில் விரைந்து செல்ல வேண்டும். அங்கு அவரை ஸ்நானம் செய்த தண்ணீர் கிடைக்கவில்லையே என வருந்த வேண்டாம். சமாதி ஆலயத்தின் பின் புற வாசலில் அதாவது குருச்தானில் இருந்து வெளியேறும் இடத்தில் உள்ள தண்ணீர் கூலரில் அந்த நீர் செலுத்தப் படுகின்றது. அதில் இருந்து அந்த நீரை எடுத்துக் குடிக்கலாம். அதை பல பக்தர்கள் கீழே சிந்தி வீனக்குகின்றார்கள். அப்படி செய்வது தவறு. அது போலவே அந்த நீரை குடித்ததும் அங்கிருந்து உதி பிரசாதம் தரும் இடத்திற்கு சென்றால் அங்கு பாபாவின் சிலைக்கு போடப்பட்ட வெண்ணை மற்றும் நெய் பிரசாதத்தை விநியோகிகின்றார்கள். முதலில் செல்பவர்களுக்கே அது கிடைக்கும் என்பதினால் விரைவாக அங்கு செல்ல வேண்டும்.
துவாரகாமாயிக்கு செல்பவர்கள் கண்டிப்பாக அங்கு ஒரு மேடையில் வைக்கப்பட்டு உள்ள கருப்பு நிற பாண்டத்தில் உள்ள புனித நீரைக் குடிக்கத் தவறாதீர்கள். அந்த குடத்தின் மீது உள்ள கரண்டியைக் கொண்டு அதில் உள்ள நீரில் சிறிது எடுத்துக் கொண்டு சாப்பிடவும். அது பற்றி பலருக்கும் தெரியாது என்பதினால் இதைக் கூறியுள்ளேன்.
துவாரகாமாயியில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள சீரடி கிராமத்திற்குள் சென்று அங்கு உள்ள பைஜம்மா, லஷ்மி பாயின் வீடுகள், அவருடைய சமாதி, சாமாவின் வீடு, அப்துல் பாபாகுடி, மகால்சபாதியின் வீடு, அவர் வீட்டில் அவருக்கு பாபாவே தந்த பாபாவின் பாதுகைகள், நாணயங்கள், சட்கா மற்றும் பாபா தினமும் சென்று பிச்சை எடுத்து வந்த வீடுகள் போன்றவற்றை பார்க்கத் தவறக் கூடாது.
அந்த ஊரில் சென்றால் எவரைக் கேட்டாலும் அவர்கள் அந்த அனைத்தையும் காட்டுவார்கள். அதைத் தவிர பாபாவுக்கு எண்ணை கொடுக்க மறுத்தவருடைய கடை, பாபாவின் உடல் மூன்று நாட்கள் வைக்கப்பட்டு இருந்த வீடு போன்றவற்றையும் பார்க்கலாம். ஆனால் அங்கு செல்வதை மதிய நேரமாக இருக்குமாறு வைத்திருந்தால் அது நல்லது. ஏன் எனில் காலை வேளைகளில் பலரது இடமும் மூடப்பட்டு இருக்கும்.
அவற்றை எல்லாம் பார்த்து முடித்தப் பின் ஸ்ரீ சாயிநாத மருத்துவ மனைக்குப் பின் புறத்தில் உள்ள கண்டோபா ஆலயத்துக்கும் கண்டிப்பாக செல்லவேண்டும்.
( Main text edited and compiled for Tamil version by Santhipriya )

Loading

1 comments:

Anonymous said...

sai devotees
vazhga valamudan

suri

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.