Thursday, May 29, 2014

Sai Charita - 22


"ஸ்ரீ ஸாயி ஸத்சரிதம்."  

[மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]


(Converted into Two line  Tamil verse  by : Dr. Sankarkumar, USA)

இலம்பகம் – 22


பாம்புக்கடியிலிருந்து மீட்புதவி - 1. பாலாஸாஹேப் மிரீகர், 2. பாபுஸாஹேப் புட்டி, 3. அமீர் சக்கர், 4. ஹேமாத்பந்த் - பாம்புகளைக் கொல்வதைப் பற்றி பாபாவின் கருத்து.
***************

ஸாயியைத் தியானம் எப்படிச் செய்வது?

இறையவன் தன்மையை எவரும்இதுவரை அறிந்ததுமில்லை
எவரும் அவர்தம் ரூபத்தைஆழ்ந்து தெரிந்ததுமில்லை [1130]

வேதமும்ஆதி சேஷனும்கூட முழுமையாய்இதனைச் சொன்னதுமில்லை
ஆயினும்அவனது பாதமேகதியென அடியார்மட்டுமே அறிந்திருப்பார்

விடுதலையென்னும் உயரியவழியை அடைந்திடும்மார்க்கம் இதுவொன்றே
இதனைச்செய்திட ஹேமாத்பந்தும் நமக்கொருவழியைச் சொல்லுகின்றார்

தேய்பிறைநிலவும் ஒவ்வொருநாளாய்ச் சற்றேதேய்ந்து மறைகிறது
வளர்பிறைநாட்களில் நிலவினைக்காண மக்கள்அனைவரும் காத்திருப்பார்

ஆயினும்முதலிரு தினங்களில்ஒளியோ நிலவோஒன்றும் தெரிவதில்லை
மூன்றாம்நாளின் நிலவினைஇரண்டு கிளைகளின்வழியே கண்டிடலாம்

காணாநிலவினைக் கண்டிடும்வழியினைக் கண்டவர்அங்கே மகிழ்கின்றார்
இதுபோல்நாமும் பாபாயெனுமொரு நிலவின்வடிவினைக் கண்டிடமுயல்வோம்

ஸாயிபாபா அமரும்வடிவினைக் கண்களின்முன்னே காணுங்கள்!
இடக்கால்மீது வலக்கால்மடித்து அற்புதமாய்அவர் இருக்கின்றார்!

இடக்கைவிரல்கள் வலதுபதத்தில் படரும்மகிமையைப் பாருங்கள்!
இருவிரல்வழியே வலக்கால்பெருவிரல் தரிசனம்நமக்குக் கூறுவதென்ன?

அகத்தினையொடுக்கி பணிவினைப்பெருக்கி என்பெருவிரலை இருகிளைவழியே
நீயும்கண்டே அதனொளியினில்தியானிக்க பக்தியுமுனது வசமாகும்

ஸாயிபாபா வாழ்ந்திட்டவாழ்க்கை முறைமையைச்சற்றே நாம்காண்போம்!
அவரதுஇருப்பால் ஷீர்டிகிராமம் புண்ணியக்ஷேத்ரம் என்றேயானது

ஆயிரமாயிரம் மக்களங்கே வந்துஅவரருளினைப் பெற்றேயுய்ந்தனர்
அளவிடாஅன்பும் வியத்தகுஞானமும் எங்கும்நிறைந்த அவரதுதன்மையும் [1140]

எவரால்இங்கே சொல்லிடவியலும்? அனுபவம்பெற்றவர் அருளினைப்பெற்றார்!
மௌனமாயிருக்கையில் பிரம்மவடிவாம்! அடியவர்சூழ்ந்திட அருளின்பிரவாகம்!

கதைகள்சொல்லியும், நகைச்சுவைபேசியும், ஐயமின்றியும், சீற்றம்கொண்டும்
பற்பலவிதமாய் பாபாதோன்றி ஒவ்வொருவர்க்கும் ஆசிகள்தந்தார்

அறிவால்அறிந்திட இயலாவாழ்வே ஸாயிபாபாவின் வாழ்வின்முறைமை!
பார்த்தும்கேட்டும் பழகியும்சிரித்தும் மனத்தில்இன்னமும் திருப்தியேஇல்லை!

மீண்டும்மீண்டும் அவரதுலீலையைக் கண்டிடும்ஆசையே மனத்தில்பொங்குது!
அளவிடமுடியாப் பண்புக்கூற்றின் ஒருதுளிமட்டும் இங்கே சொல்லிட விழைகின்றேன்

பேராபத்துகள் நேர்ந்திடும் நிலையினை உணர்ந்தவர் தடுத்த லீலைகளிங்கே!

'பாலாஸாஹேப் மிரீகர்'::

கோபர்காங்வின் மாம்லத்தாரர் ‘பாலாஸாஹேப் மிரீகர்’ எனுமொரு அடியார்
‘சிதலீ’யென்னும் பகுதிக்குச்சென்றிடும் வழியினில் ஷீர்டி வந்தடைந்தார்

பணிவுடன்பாபா பதங்களில்வீழ்ந்து அவருடன்பேசிக் கொண்டிருந்தார்
பேச்சின்நடுவே ஸாயிபாபா அவரைப்பார்த்தொரு கேள்வியைக்கேட்டார்

'உமக்குஎமது துவாரகாமாயியைத் தெரியுமா?' எனக்கேட்டு மேலும்தொடர்ந்தார்
"இங்கேயிருக்கும் அன்னைமிகவும் அன்பேஉருவாய் அடியரைக் காப்பாள்

அவளதுமடியினில் ஒருமுறையமர்ந்தால் அனைத்துத்துயரும் முடிந்துவிடும்
அவளதுநிழலில் இளைப்பாறுவோர் எல்லையில்லா ஆனந்தமெய்துவர்"

உதியினையளித்து ஆசிகள்தந்து கிளம்பிடும்நேரம் பாபாகேட்டார்,
"'லம்பாபாபா'என்னும் பாம்பினைத் தெரியுமா நுமக்கு?' என்றவர்சொல்லிக்

கையினைப்பாம்பின் படம்போலாட்டி மேலும்பாபா சொல்லலானார்
"துவாரகாமாயி காத்திடும்போது அவளதுகுழந்தையைப் பாம்பென்னசெய்யும்?" [1150]

பாபாசொன்னதன் பொருளினையறிந்திடக் கூடியிருந்தவர் ஆவலுற்றார்
ஷாமாவையுடன் துணையாய்ச்சென்று பயணம்செய்திட பாபாபணித்தார்

ஷாமாசென்று மிரீகரைக்கேட்க வேண்டாமெனஅவர் மறுத்துவிட்டார்
செய்திகேட்டபாபா, 'அதுதான்விதியெனில் அப்படியேஅது நிகழட்டும்' என்றார்

மீண்டும்இதுபற்றிச் சிந்தனைசெய்த பாலாஸாஹேப் ஷாமாஉடன்வர வேண்டிட்டார்
இருவரும்கிளம்பி இரவினில்சிதலீ மாருதிகோயிலை அடைந்திட்டார்

கோவிலருகினில் மேடையிலமர்ந்து இருவரும்பேசிக் கொண்டிருந்தார்
பாலாஸாகேப் இடுப்பினிலிருந்த மேல்துண்டின்மேல் பாம்பொன்றுஅமர்ந்து

சலசலவெனநகர்ந்த சத்தம்கேட்டப் பணியாளொருவர் விளக்கினைக்கொணர்ந்தார்
பாம்பினைக்கண்டு அனைவரும்பதறித் தடியாலடித்து அதைக்கொன்றார்

தீர்க்கதரிசனமாய் பாபாசொன்ன வார்த்தையின்பொருளை அறிந்தாரனைவரும்
பாலாஸாஹேப் மிரீகர்கொண்ட அன்பும்பக்தியும் மேலுமங்கேபலமாச்சு!

'பாபு ஸாஹேப் பூட்டி'::

‘நானா ஸாஹேப் டேங்க்லே’யென்னும் ஜோசியர் சொன்னார் பூட்டியிடம்
'இன்றைய நாள்ஓர் அமங்கல நாளாம்! உமக்கு மரணம் சம்பவிக்கும்'

இருப்புக் கொள்ளாமல் தவித்தபாபு ஸாஹேப்பூட்டி மசூதிவந்தார்
அவரைப் பார்த்து பாபாசொன்னார், 'நானா இங்கே சொல்லுவதென்ன?

மரணமென்று அவரும்சொன்னால் அதனால் நீரும் பயப்பட வேண்டாம்
எங்ஙனம்சாவு நும்மைக்கொ[ள்]ளுமென அவரிடமேபோய்க் கேளுங்கள்'

மாலையில்கழிப்பிடம் நோக்கிச்செல்லுகையில் பாம்பினையங்கே அவர்கண்டார்
கல்லினையெடுத்தச் சேவகனையோர்த் தடியினைக்கொணர யவர்சொன்னார் [1160]

தடியினையவனும் அங்கேகொணர்கையில் பாம்புமெங்கோ சென்றுமறைந்தது
'அஞ்சவேண்டா'யெனுமொருமொழியினை நானாஸாஹேப் நினைவூர்ந்தார்.

'அமீர் சக்கர்'::

கோபர்காங்வில் ‘ கொராலே’என்னும் ஊரினில்பிறந்தவர் ‘அமீர்சக்கர்’
இறைச்சிவிற்கும் குலத்தைச்சேர்ந்தவர் பேரும்புகழும் பெற்றிருந்தார்

மூட்டுநோவால் வருந்திய'சக்கர்' பாபாதிருவடி சரண்புகுந்தார்
சாவடியில்அவர் தங்கிடபாபா அன்புடனங்கே அனுமதித்தார்

வசதிகளேது மில்லாச்சாவடி வாசம்அவர்க்குக் கிட்டியபோதும்
வாசலில்தினமும் இருமுறைபாபா தரிசனமவர்க்குக் கிட்டியதே

சாவடியூர்வலம் நடக்கும்நாளிலும் பாபாஅவர்க்கு அருகிருந்தார்
ஒன்பதுமாதம் இப்படியாக பாபாஅவர்க்கு அருள்புரிந்தார்

ஆயினுமோர்நாள் சக்கர்சட்டென சாவடிவிட்டுப் புறப்பட்டார்
கோபர்காங்வில் சத்திரமொன்றில் தனியேவந்து தங்கிவிட்டார்

சாகும்நிலையில் கிடந்தஃபக்கீர் ஒருவர்தண்ணீர் வேண்டிக்கொள்ள
சக்கரும்அவர்க்குக் குவளையொன்றில் நீர்கொடுத்ததும் அவர்மாண்டார்

தம்மேல்குற்றம் வருமெனப்பயந்து இரவோடிரவாய் ஓடிவந்தார்
பாபாநாமம் சொல்லியவாறே ஷீர்டிவரைக்கும் ஓடிவந்தார்

கவலைகள்தீர்ந்து நோய்குணமாகி பாபாவுடனே அவர் வாழ்ந்தார்
ஓர்நாளிரவில் பாபாஏதோ பிசாசுஒன்று மோதுதென்று சொல்லிடவே

அப்துலென்பவர் விளக்குடன்வந்துத் தேடிப்பார்க்கப் பாம்பொன்று
படுக்கையினூடே ஊர்ந்துசெல்லல் கண்டதும்பாம்பைக் கொன்றுவிட்டார் [1170]

குறித்தநேரத்தில் கூக்குரலெழுப்பி பாபா அமீரின் உயிர்காத்தார்
ஸாயிபாபா அருளும்திறனை அறிந்தசக்கர் மெய்சிலிர்த்தார்
'ஹேமாத்பந்த்' [தேளும், பாம்பும்]::

'பாகவதம்'மற்றும், 'பாவார்த்தராமாயணம்' எனுமிருநூல்களை பாபாசொன்னப்
பரிந்துரையின்படி காகாஸாஹேப் தீக்ஷித்தினமும் படித்துவந்தார்

ஹேமாத்பந்தும் தினமும்அதனைக் கேட்டிருந்துப் பலனடைந்தார்
ஹனுமார்ராமரின் பெருமையைப்பரிட்சை செய்திடும்கட்டம் படிக்கையிலே

தம்மைமறந்து மந்திரம்போல அனைவரும்ரசித்துக் கேட்டிடும்போது
மேலேகிடந்த துண்டின்மீதொரு கருந்தேள் கிடப்பதை யவர்கண்டார்

அமைதியாகத் துண்டினைமடித்து தோட்டம்வந்து அதையெறிந்தார்!
மற்றொருமுறையொரு பாம்பு இதுபோல் ஜன்னலருகினில் அமர்ந்திருக்க

பலரும்கண்டுப் பதற்றத்துடனே கம்பினைக்கொண்டு அதையடிக்க
அடியேதும்படாத பாம்பும்தானே நகர்ந்துசென்று மறைந்ததுவே!

'பாபாவின் கருத்து' ::

முக்தாராம்எனும் பக்தர்சொன்னார் 'வாயிலாஜீவனது தப்பிச்சென்றது'
அதனைமறுத்த ஹேமாத்பந்த்தோ கொல்லுதல்சரியென வாதிட்டார்

விவாதம்பற்றிய சேதிகேட்ட பாபாசொன்னது பின்வருமாறு:
'தேளானாலும் பாம்பானாலும் அனைத்துமுள்ளே இறைவனுண்டு

அனைத்தையும்ஆட்டும் பொம்மலாட்டக் காரர்கடவுள்! அவரதுஆணை
ஒன்றால்மட்டுமே நல்லதும்கெட்டதும் இவ்வுலகினிலே நிகழ்ந்திருக்கும்

அவரைச்சார்ந்தே உலகினிலிருக்கும் அனைத்துமிங்கே நிகழ்கிறது
எனவேநாமும் அனைத்துயிர்கள் மீதுமன்பு செலுத்தவேண்டும். [1180]

கொலையும் சண்டையும் அனைத்தையும்விடுத்துப் பொறுமையாயிருக்கப்
பழகிக்கொண்டால் கடவுளனைவரைக் காத்திருந்தே நலம்புரிவார்.' [1181]

ஸ்ரீ ஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!
[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
                                                                                                                                   (To be continued)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.