Saturday, May 17, 2014

Sai Charita - 4


"ஸ்ரீ ஸாயி ஸத்சரிதம்." 
[மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]


(Converted into Two line  Tamil verse  by : Dr. Sankarkumar, USA)

இலம்பகம் – 4 


ஷீர்டிக்கு ஸாயிபாபாவின் முதல் விஜயம் - ஞானிகளின் வருகை - ஷீர்டி ஒரு புண்ணிய தீர்த்தம் - ஸாயிபாபாவின் தோற்றம் - கௌலிபுவாவின் கருத்து - விட்டலின் பிரசன்னம் - க்ஷீர்ஸாகரின் கதை - பிரயாகையில் தாஸ்கணுவின் குளியல் - ஸாயிபாபாவின் அயோனி ஜன்மமும், அவரின் முதல் ஷீர்டி விஜயமும் - மூன்று சத்திரங்கள்.
------------------------------------

ஸாயியின்சரிதம் எழுதிடும்நிலையினை போனமுறையானதிலேப் பொதுவாகக்கூறினேன்

ஸாயியின்ஷீர்டி விஜயம்பற்றிய கதையினையிங்கே யானும்சொல்லுவேன்

'ஞானிகளின் வருகை':

'தருமம்அழிந்து தீமைகள்தோன்றிட நானேமீண்டும் அவதரிக்கின்றேன்'
எனவேகீதையில் கண்ணன்சொன்னான் இதுவேஆண்டவன் அவதாரநோக்கம்

நால்வகைமக்களும் தம்கடமைத்தாம்மறந்து தம்வழிபிறழ்ந்தே சென்றிடும்போதும் படித்தவர்கர்வம் தாம்கொளும்போதும் அடுத்தவர்தீவழி சென்றிடும்போதும்

மதமெனும்போர்வையுள் மாற்றிடும்போதும் இதமதைமறந்து போரிடும்போதும் மறையவர்தமது வழிபிறழ்போதும் யோகிகள்தியானம் மறந்திடும்போதும்

முக்தியைமனிதர் துறந்திடும்போதும் ஞானியர்உலகில் அவதரிக்கின்றனர்

நிவ்ருத்தி,ஞானதேவ், முக்தாபாய்,நாமதேவ், கோராகோனாயி, ஏகநாத்,துக்காராம்

நரஹரி,நர்ஸிபாயி ஸஜன்கஸாயி,ஸவதா, ராமதாஸ்இன்னும் ஞானியர்பலரும் இத்தரைவந்து மனிதரைஉய்த்தனர் பாபாவும்அத்தகு விஜயம்செய்தாரே

'ஷீர்டி ஒரு புண்ணிய தீர்த்தம்' ::

அஹமதுநகரின் கோதாவரியின் ஆற்றங்கரையும் புண்ணியம்படைத்தது
அநேகஞானியர் அவதரித்ததினால் இந்தப்பகுதியும் பெருமையுடைத்து

கோபர்காங்கில் புனிதகோதாவரி ஆற்றைக்கடந்ததும் ஷீர்டிதரிசனம்!
‘மங்கல்வேடா’’ ஸஜ்ஜன்கட்மற்றும் ‘நரோபாச்சிவாடி’ தலங்களைப்போன்றே

ஷீர்டிக்ஷேத்ரமும் ஞானியர்பலரும் அவதரித்ததால் பெருமைபெற்றது
புண்ணியபூமியாம் ஷீர்டிக்ஷேத்ரம் புண்ணியர்ஸாயி வரவால்ஒளிர்ந்தது.

'ஸாயிபாபாவின் ஸத்வகுணரூபம்' ::

ஷீர்டியின்பெருமை ஸாயீபாபாவால்! அவரதுபண்பினை நாமிங்கேகாண்போம் கடந்திடமுடியா வாழ்வினைவென்றார் சாந்தியும்அமைதியும் அவரதுபெட்டகம் [120]

கர்ணனையொத்த வள்ளலின்தகைமையர் சாராம்சத்தின் சாரமும்இவரே
அழிந்திடும்பொருளில் ஆசையேயில்லை; ஆன்மீகஉணர்வே அவரதுஎல்லை

ஆழியைப்போலவர் உள்ளமும்தூய்மை அமுதம்பொழிந்திடும் வார்த்தைகள்உண்மை ஏழையும்செல்வரும் அவர்கென்றும்ஒன்றே;
புகழ்ச்சியும்இகழ்ச்சியும் என்றும்சமமே

ஆடல்பாடல் கேட்டவர்மகிழ்ந்தார் ஆயினும்ஸமாதி நிலையினில்வாழ்ந்தார்

அல்லாவின்நாமம் அவரதுநாவினில்! எல்லாரும்தூங்கினும் அவர்விழித்திருந்தார்

அமைதியின்வடிவமாய் அவரேதிகழ்ந்தார்; இமைப்பொழுதும்அவர் உலகையேநினைந்தார் ஆயிரம்கதைகள் அவர்சொல்லிடினும் மௌனம்ஒன்றே தனதெனவாழ்ந்தார்

மசூதியில்சாய்ந்து அமர்ந்தபோதினும் காலையும்மாலையும் உலவிடும்போதினும்

ஆன்மநிலையினில் என்றுமேவாழ்ந்தார் சித்தராயினும் சாதகராயவர்நடித்தார்

எளிமைபணிவு இவரேஸாயி! புனிதரின்திருவடி ஷீர்டியின்மகிமை
ஞானேச்வரைப்போல் ஏகநாதர்போலவே ஷீர்டிஇவரால் புனிதம்பெற்றது

பண்டரிபுரிபோல் காசிராமேச்வரம்போல் ஷீர்டிமண்ணும் பாபாவால்புனிதமடைந்தது

ஸாயியின்தரிசனம் யோகசாதனம் அவருடன்பேசுதல் பாபவிமோசனம்

பாதம்கழுவுதல் த்ரிவேணிகுளியலாம் திருவடிநீரினை அருந்திடஆசையகலும் அவரிடும்ஆணையே நான்மறைவேதம் உதியினைஇடுதலே பாபவிமோசனம்

இராமருமிவரே கிருஷ்ணருமிவரே பரப்பிரம்மமெனு சத்யமமுவிவரே
ஸத்சித்ஆனந்த நிலையுமிவரே சகலலோகமும் இவரதுஎல்லை

தரிசனம்ஒன்றே அமைதியைத்தந்திடும் பண்டரிபுரத்தின் பாண்டுரங்கனின்
தரிசனம்தந்திடும் நிறைவினைப்போலவே ஷீர்டிஸாயி மகிழ்வினைத்தந்தார் [130]

'கௌலிபுவாவின் பிரகடனம்' ::

வயதுமுதிர்ந்த அடியவர்ஒருவர் ‘கௌலிபுவா’வெனும் நாமம்கொண்டவர்
தொண்ணூற்றைந்து வயதுகளாயினும் தன்னுளம்நாடியே ஷீர்டிவருவார்

'பண்டரிநாத ஆண்டவனிங்கே வாழ்கிறார்பாரீர்'! அவரே இவராம்!
என்றவர்கூறிய அருள்வாக்கினைக் கேட்டேமகிழ்ந்த அன்பர்கள்கோடி!

'விட்டல் தாமே தோன்றினார்' ::

இறையவன்நாமத்தை ஏழுதினங்கள் பாடிடும்பணியினை ‘தாஸ்கணு’விடம்
'விட்டல்வருவான் பாடுகதினமும்! விட்டல்தரிசனம் நுமக்கேகிடைக்கும்

ஊக்கமும்பக்தியும் கொண்டேபாடுக!' என்றொருநாளினில் பாபாசொன்னார்

‘காகாஸாஹேப் தீக்ஷித்ன்தியானத்தில் விட்டல்வந்ததைக் கண்டவர்மகிழ்ந்தார்

'கண்டதும்பற்றும்! இல்லையேல்அகல்வான்! உறுதியும்கவனமும் மிகமிகவேண்டும்!

இல்லையெனில்அவன் சீக்கிரம்செல்வான்' என்றேபாபா தீக்ஷித்திடம்சொன்னார்

கண்டகாட்சியை யொத்தபடத்தினை அன்றுமாலையே வியாபாரியொருவன்
கொண்டுதந்திட ஸாயிவார்த்தையின் மெய்ப்பொருள்கண்டு தீக்ஷித்வியந்தார்!

'பகவந்த்ராவ் க்ஷீர்ஸாகரின் கதை' ::

‘க்ஷீரஸாகர்’தன் தந்தையின்பூசனை மறந்தவர்வரவே பாபாசொன்னார்

'மறந்தவர்நினக்கவே நானிவண்இழுத்தேன் நானவர்க்குணர்த்தி நல்வழிசொல்வேன்'!

'தாஸ்கணுவின் பிரயாகைக் குளியல்' ::

கங்கையும்யமுனையும் சந்திக்குமிடத்தில் முங்கிக்குளிப்பது மானுடர்க்கியல்பு தாஸகணுவும் தான்செல்லவேண்டி பாபாவைக்கேட்டதும் 'பிரயாகையிங்கே

என்னிடமிருக்கு' என்றிவர்சொல்லி காற்கட்டைவிரலின் இடுக்கையின் நடுவே கங்கையின் நீரைக் கொணர்ந்திவர் காட்டிட, அற்புதம்கண்டு தாஸ்கணுமகிழ்ந்தார்.

'ஸாயிபாபாவின் அயோனி ஜன்மமும், அவரின் முதல் ஷீர்டி விஜயமும் '::

பல்வேறுமஹான்கள் பிறப்பின்இரகசியம் எவரிவண்அறிவார் அதுபோல்பாபா
பதினாறுவயதுப் பாலகனாய்இவர் வேப்பமரத்தடியினில் ஓர்நாள்தோன்றினார் [140]

நாநாசோப்தாரின் தாயின்வருணனை நமக்கெலாம்இவரது தோற்றத்தைச்சொல்லுது!

'வேப்பமரத்தடி யினிலோர்பாலகன் தாபமிலாமல் அமர்ந்திடக்கண்டேன்
அன்புருவாய்அவன் அமர்ந்தகோலம் யாரிவன்என்னும் கேள்வியைக்கேட்டது

கண் மலர்ந்திவனும் காட்டியக் கோலத்தால் சுந்தரமாய் இவன் கவர்ந்தான்அனைவரை

யாசகம்தேடி அலையவுமில்லை அமர்ந்தநிலையினில் மாற்றமுமில்ல யாரிவன்எனும்வினா அனைவரின்மனத்திலும்! 'சாமி'பிடித்தொரு ஆசாமியாட

மண்வெட்டிக்கொண்டொரு மண்ணைத்துளைத்தார் நிலவறையொன்றினில் நால்விளக்கெரிய பனிரெண்டுஆண்டுகள் பயிற்சி செய்தவன் என்றேசொன்னார் ‘கண்டோபா’கடவுளும்!

தன்குருதவம்செய் இடமிதுஎன்றே இளைஞன்கூறிட கதவம்மூடியது
குருவின்சமாதி இதுவெனஉணர்ந்தே மஹால்ஸாபதியும் வந்தனம்செய்தார்

'மூன்று வாதாக்கள்' ::

'ஸாதே வாதா' என்றோரிடமும் அங்கே உருவாச்சு
கட்டிட மொன்றும் அங்கேஎழுந்து தங்குமிடமாச்சு

கால்முறிவான காகாஸாகேப் தானொரு'வாதா' கட்டிமுடித்தார்
இராமநவமியும் விமரிசையாக அந்தவருடமே துவங்கலாச்சு

பூட்டியென்பவர் எழுப்பியஎழிலிடம் பாபாஉறங்கும் இன்றையஸமாதிமந்திர்
இன்னும்கதைகள் நிரம்பியசெய்திகள் அடுத்த இலம்பகத்தில்  தொடர்வேன்யானும்! [148]

ஸ்ரீ ஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!

[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
(To be continued)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.