Friday, May 30, 2014

Sai Charita - 37"ஸ்ரீ ஸாயி ஸத்சரிதம்." 

[மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]


(Converted into Two line  Tamil verse  by : Dr. Sankarkumar, USA)

இலம்பகம் – 37


"சாவடி ஊர்வலம்"
****************

வேதாந்தத்தின் கருத்துகள்சிலதைச் சொல்லியப்பின்னர் ஹேமாத்பந்த்தும்
சாவடியூர்வலம் பற்றியவர்ணனை இவ்விலம்பகத்தில் நமக்குச்சொல்கிறார்.

முன்னுரை::

வாழ்ந்ததும்புனிதம் அன்றாடநடைமுறை ஒழுக்கமும்புனிதம் செயல்முறைபுதுமை
பிரம்மானந்தப் பெருநிலையினிலும், ஆன்மஞானத்தின் அடக்கத்துடனும்

செயல்பலசெய்தும் அவற்றினிலிருந்தே தனித்துஒதுங்கியும், சும்மாயிருந்தும்
சோம்பலின்றியும் அளவிடமுடியா ஆழங்காணா அலைகடல்போலும்

இருந்திடுமவர்குணப் பெருநிலையதனை எவ்விதம்யானும் உரைத்திடவியலும்!
ஆடவரனைவரும் சோதரராவார்; பெண்டிரெல்லாமோ தாய்,சோதரியானார்.

தூயநிரந்தர பூரணபிரம்மச் சாரியாம்அவரது கூட்டுறவால்பெறும்
ஆன்மீகஞானம் என்றுமெம்முடன் நிரந்தரமாகத் திகழ்ந்திடட்டும்.

அவரதுபாதக் கமலங்களுக்குச் சேவைகள்செய்தும், அனைத்திலுமவரை
கண்டுமகிழ்ந்தும், திருநாமத்தினை நாளும்நினைந்தும் புண்ணியம்பெறுவோம்.

'சாவடி ஊர்வலம்'::

முன்னரேசொல்லிய வண்ணம்ஸாயி மசூதியிலோர்நாள் சாவடியிலோர்நாள்
என்றிடும்வகையினில் நித்திரைகொள்வதை மஹாசமாதி அடையும்வரையிலும் [2030]

மாறிமாறியே செய்துவருகையில் ஆயிரத்தொள்ளாயிரத் தொன்பதுடிசம்பர்
பத்தாம்நாள்முதல் சாவடியடைந்ததும் முறையாய்வழிபட அடியார்தொடங்கினர்

சாவடிசென்றிடும் முறைவரும்நேரம் அடியாரெல்லாம் மசூதிசூழ்வர்.
முன்மண்டபத்தில் அனைவருமமர்ந்து சிலமணிநேரம் பஜனைசெய்வர்.

துளசித்தோட்ட வடக்குத்திசைக்கும் பாபாமுன்னுள இடைப்பகுதியில்
அழகியரதமொன்று நின்றிருந்தது. இசைக்கருவிகளுடன் ஆண்களும்பெண்டிரும்

ஸாயியின்ஈர்ப்பால் அங்கேகுழுமி பஜனைசெய்தனர். வெளிப்புறமுள்ளத்
திண்ணையில்சிலரும் தீவட்டிகளை ஒழுங்குபடுத்திட மற்றும்சிலரோ

பல்லக்குஒன்றினை அலங்கரித்தனர். பிரம்புக்குச்சியைக் கையிலேந்தியே
ஒருசிலபேர்கள் ஜெயஜெயபாடினர். ஜரிகைத்துணிகளும் எரியும்ஜோதியும்

மசூதியழகை மேலும்பெருக்கிட 'ச்யாம்கர்ண' என்னும்குதிரையும்
அலங்காரமாய் வாசலில்நின்றது. தாத்யாபாடீல் மசூதிவந்து

தன்கைகளினால் பாபாஅக்குளில் தூக்கியெழுப்பிடும் சமயம்வரையிலும்
அமைதியாகவே பாபாஇருப்பார். வழக்கமாயணியும் கஃப்னியையணிந்து

சிறுதடியொன்றை அக்குளில்தாங்கி சிலீம்,புகையிலை அடங்கியதுணியைத்
தோளினில்போட்டு கிளம்பிடும்நேரம், ஜரிகைசால்வையை தாத்யாபாடீல்

ஸாயியின்மீது அழகாய்ச்சாற்றிட, காற்பெருவிரலால் துனியின்கட்டையைப்
பின்னுக்கிழுத்து, வலதுகையினால் விளக்கையணைத்து பாபாகிளம்புவார்.

தாரைதப்பட்டைகள் தம்மொலிஎழுப்பிட,வாணவேடிக்கைகள் வண்ணஜாலம்பொழிய
வாத்தியக்கருவிகளை அடியார்மீட்டிட, பஜனைகள்பாடிட, ஆடவர்பெண்டிர் [2040]

நடனமாடிட, கொடிகளைக்கம்பினை ஒருசிலர்பிடித்திட, மசூதிப்படிகளில்
பாபாவந்ததும் பல்தார்கள் கட்டியம்கூறுவர். அடியார்சிலரும்

சாமரம்வீசிட, மஹால்ஸாபதி வலதுகையையும்,தாத்யாபாடீல்
இடதுகையையும் தாங்கிப்பிடித்திட, பாபுஸாஹேப் ஜோக்[G]என்பவர்

குடைபிடித்திட, 'ஷ்யாம்கர்ண' முன்னேநடந்திட, அடியார்விரிக்கும்
துணிகளின்மீது, சாவடிநோக்கி மெல்லநடக்கிறார் நம்ஸாயிபாபா!

அடியாரனைவரும் மகிழ்ச்சியடைந்திட ஆரவாரகோஷம் விண்ணைப்பிளந்திட
வீதிமுனைக்கு ஊர்வலம்வந்ததும், சாவடிநோக்கி பாபாநிற்கிறார்.

சுடரொளிவீசும் சூரியன்போல பாபாமுகமும் பிரகாசம்வீசிட
யாரோஒருவரை அழைப்பதுபோல மேலுங்கீழுமாய் கைகளையசைத்திட

வடக்குத்திக்கை நோக்கியேஸாயி அங்கேநிற்கையில் காகாஸாஹேப்
குலால்பொடியினை மலருடன்கலந்து பாபாமீது அடிக்கடிதூவுவார்.

இந்தக்காட்சி தந்திடுமழகை வார்த்தையில்சொல்லிட இயன்றிடவில்லை.
ஆவேசம்பொங்கிட மஹால்ஸாபதி குதித்துக்குதித்து நடனமாடியும்

இவற்றாலெல்லாம் ஒருமுகச்சித்தம் குலைந்துவிடாமல் நிற்பதைக்கண்டு
அடியவரெல்லாம் அதிசயித்திடவே, சுந்தரஊர்வலம் மெதுவாய்நடக்குது.

ஆண்களும்பெண்களும் ஏழைபணக்காரரும் ஒன்றாயாங்கே திரண்டுநின்றனர்.
அன்பும்பக்தியும் ஒருங்கேசேர்ந்து அடியார்க்கூடவே நடந்திடுமழகினை

அங்கேமலர்ந்த ஆனந்தக்களிப்பினை இனிவரும்காலம் பார்த்திடவியலுமோ!
எனினும்நமது மனக்கண்களில் இந்தக்காட்சியை என்றுமேகாணலாம்! [2050]

வெண்மைக்கூரையும், கண்ணாடிவிளக்குமாய் சாவடிமுழுவதும் அழகாய்விளங்குது.
சாவடியடைந்ததும் ஆசனம்விரித்து திண்டைவைத்து ஸாயியைஅதன்மேல்

அமரச்செய்து, தாத்யாபாடீல் கோட்டொன்றை அணிவிக்க, அடியார்பலரும்
அவரவர்வழிகளில் பாபாவுக்கு கிரீடம்சாத்தியும், மாலைகள்பூட்டியும்,

சந்தனம்மற்றும் நறுமணத்திரவியம் அனைத்தும்பூசியும் அழகுபார்த்தனர்.
தலையணிகலனை அடிக்கடிமாற்றியும் பாபாசற்றும் தடுத்திடவில்லை!

அமைதியாகவே அவரவர்புரியும் செயல்களனைத்தையும் உள்ளன்புடனே
ஏற்றுமகிழ்கிறார். வியக்கத்தக்க அழகோவியமாய் பாபாதிகழ்கிறார்.

நானாஸாஹேப் நிமோண்கரென்பவர் குஞ்சரம்சுற்றிய அழகியக்குடையை
மேலேபிடித்திட, பாபுஸாஹேப் வெள்ளிச்சொம்பால் பாதம்கழுவியே

அர்க்கியபூஜை அனைத்தும்செய்து, சந்தனம்பூசி, தாம்பூலமளிக்கிறார்.
அடியவரனைவரும் பாதம்பணிந்திடம், ஆங்கேஒருசிலர் சாமரம்வீசிட

சிலீம்குழாயை ஷாமாஎடுத்து தாத்யாகையில் கொடுத்ததுமவரும்
ஒருமுறைத்தானே சுவாசமிழுத்தப்பின் பாபாவிடத்தில் அதனைத்தருகிறார்.

பாபாபுகைத்தப் பின்னரதுவும் மஹால்ஸாபதியின் கைகளில்தந்திட
அதற்குப்பின்னர் அனைவரிடத்துமாய் அந்தக்குழாயும் வலம்வந்திடும்.

குயவர்காலால் மிதியுண்டிடினும், வெயிலில்பலநாள் வருந்தியபோதிலும்
பாபாகைகளில் அதுதவழ்ந்திடவும், அவரதுமுத்தம் பெற்றிடும்பேறும்

இந்தச்சிலீம் பெற்றதன்பாங்கினை ஹேமாத்பந்த்தும் உயர்வாய்ச்சொல்கிறார்.
அடியாரெல்லாம் பூமாலைசெண்டுகள் ஸாயிக்குச்சூடியும் இதனாலெல்லாம் [2060]

எள்ளளவேனும் கவலைப்படாமல் நடுவுநிலைமையாய் ஸாயிவிளங்கினார்.
இறுதிநிகழ்வாய் வாத்தியகோஷம் விண்ணொலியெழுப்பிட இரவுஆரத்தியை

பாபுஸாஹேப் நடத்திமுடித்ததும் ஒருவர்பின்னொருவராய் அன்பர்களனைவரும்
ஸாயியைவணங்கி விடைபெற்றப்பின் தத்தமில்லம் திரும்பிச்சென்றிட,

தாத்யாபாடீலும் சிலீம்,பன்னீர், அத்தர்,செண்ட் முதலானவைகளை
ஸாயிக்குஅளித்து புறப்படயெழுவார்! அந்தச்சமயம், அன்புததும்பும்

மெல்லியக்குரலில், அவரைப்பார்த்து, 'பார்த்துக்கொள்ளென்னை! வேண்டுமெனில்போ!
இரவுவேளையில் அவ்வப்போது இங்கேவந்து விசாரித்துக்கொள்' என்பார்பாபா.

சரியெனச்சொல்லி தாத்யாகிளம்பிட, ஐம்பதுஅறுபது வெள்ளைத்துண்டுகளை
ஒன்றன்மேலொன்றாய் விரித்துப்போட்டுத் தமதுபடுக்கையைத் தயார்செய்து

ஸாயிபாபா இளைப்பாறச்செல்கிறார்! படிப்பவரனைவரும் ஒவ்வொருநாளும்
உறங்கச்செல்கையில் இந்தக்காட்சியை மனதில்நினைந்து இளைப்பாறிடுக! [2066]

ஸ்ரீஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!
[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
(To be continued)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.