Friday, May 30, 2014

Sai Charita - 51


"ஸ்ரீ ஸாயி ஸத்சரிதம்."  

 [மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]


(Converted into Two line  Tamil verse  by : Dr. Sankarkumar, USA)

இலம்பகம் – 51


'முடிவுரை' ::

நூலினிறுதியாம் ஐம்பத்திரண்டாம் இலம்பகமிங்கே ஐம்பத்தொன்றானது.
மராத்தியமுறைப்படி இதுவரைகூறிய இலம்பகங்களின் கருத்துச்செறிவைப்

பாடல்கள்வழியே அட்டவணைபோல் கொடுக்கப்போவதாய் ஹேமாத்பந்த்
கூறியிருந்தும் அப்படியெதுவும் அவரதுபிரதியில் இல்லையென்பதால்,

'பி.வி.தேவ்'எனும் பாபாஅடியவர் அவற்றைத்தொகுத்து இங்கேவழங்கினார்.
புனிதநூலின் முடிவுரையாகவே நாமுமிதனைக் கருதிக்கொள்வோம்.

எழுத்துப்பிரதியை பிழைகள்திருத்தி அச்சிடும்வரையில் ஹேமாத்பந்த்தும்
வாழ்ந்திடவில்லை என்பதாலிதனை எழுதியவண்ணமே அச்சிடலானது.

ஸத்குரு ஸாயி மஹிமை ::

விருப்புவெறுப்பின்றியும், உயர்வுதாழ்வின்றியும், பக்தரனைவரை சமமாய்க்கருதி,
அனைத்துயிரினிலும் பேதமில்லாமல், அனைத்துப்பொருளிலும் சூழ்ந்திருப்பாரோ,

அந்தஸாயியின் பாதம்பணிந்து முழுவுடல்கிடத்தி நமஸ்கரித்திடுவோம்.
நினைத்தபொழுதிலே, ஸ்மரித்தபொழுதிலே விருப்பம்யாவையும் நிறைவேற்றிடுவார்.

உலகியலிச்சைகள் முழுதுமாய்நிறைந்த வாழ்க்கைக்கடலைக் கடப்பதும்கடினம்.
மோகவலைகள் பெரிதாயெழுந்து, தீயஎண்ணமாம் கரையைநோக்கி

வேகமாய்வருகையில், மனோபலமெனும் மரங்களைவேருடன் அடித்துவீழ்த்திடும்.
அஹங்காரமெனும் சூறைக்காற்று கடுமையாய்வீசி, கடல்கொந்தளிக்கும்.

துவேஷம்,கோபம் என்னும்முதலைகள் பயமேதுமின்றிச் சுற்றித்திரிந்திடும்.
நான்,எனது,எனும் எண்ணமும்சந்தேகமும் நீர்ச்சுழல்களாய் விடாமல்சுற்றிடும்.

திட்டுதல்,வெறுத்தல் பொறாமையென்னும் எண்ணற்றமீன்கள் விளையாடிக்களிக்கும்.
இத்தகுபயங்கரக் கடலானாலும் ஸமர்த்தஸாயியிதை அழித்திடவல்லவர். [2680]

அவரைநம்பிடும் அடியாரெதற்கும் பயங்கொண்டிடாமல் இந்தக்கடலைக்
கடந்துசென்றிடப் படகாய்வந்து காத்தருள்புரிவார் நமதுஸாயி!

பிரார்த்தனை ::

ஸாயியின்பாத கமலமிரண்டிலும் நம்தலைவைத்து பிரார்த்தனைசெய்வோம்:
'எமதுமனங்கள் இங்குமங்குமாய் அலைந்துதிரியாமல் உம்மையேவிரும்பட்டும்.

ஸாயிஸத்சரிதம் எல்லாரில்லங்களில் தினமும்பாராயணம் செய்யப்படட்டும்.
முறையாய்த்தினமும் படித்திடுமடியார்த் துயர்களையெல்லாம் தீர்த்திடச்செய்வீர்.'

பல ச்ருதி [பாராயண பலன்] ::

கோதாவரியில் புனிதநீராடி, ஷீர்டியிருக்கும் ஸமாதிமந்திரை வணங்கித்துதித்து
ஸத்சரிதத்தைப் படிக்கவோகேட்கவோ செய்திடும்பக்தரின் உடல்,பொருள்,ஆவியைத்

தாக்கிடும்தீங்குகள் உடனேமறையும். தற்செயலாக ஸாயியின்கதைகளை
நினைப்பதன்மூலம் ஆன்மீகவாழ்வில் நாட்டம்வந்து பாவங்கள்தொலையும்.

பிறவிச்சுழலைத் தவிர்த்திடவிரும்பிடின், இதனைப்படித்துச் சரணடைந்திடுக.
இதனுள்மூழ்கி முத்துக்களெடுத்துப் பிறர்க்கும்தந்திடத் தொல்லைகள்தீரும்.

ஸாயியினுருவைத் தொடர்ந்துநினைத்திட, தன்னுருமறைந்து மெய்யினையுணர்வீர்.
தன்னையுணர்தலும், பிரம்மமுணர்தலும் கடினமேயெனினும், ஸகுணபிரம்மமாம்

ஸாயியைவழிபட, முன்னேற்றம்நிகழும். கடலுடன்நதியும் கலப்பதுபோல,
பக்தனுமவருடன் ஒன்றாய்க்கலப்பான். இப்படிக்கலந்திட பந்தமுமகலும்.

ஒருவாரத்திற்குள் படித்துமுடித்திட, பீடித்தகேடுகள் யாவையும்மறையும்.
படிக்கக்கேட்டவர் தமக்குஎந்த அபாயமின்றியே காக்கப்படுவார்.

செல்வமும்,வெற்றியும் வேண்டிப்படிப்பவர் வேண்டியவண்ணமே அவற்றைப்பெறுவார்.
உண்மையும்,பக்தியும் கொண்டிதைப்படித்திட அதற்குஏற்பவே பலன்கள்விளையும். [2690]

அன்புடன்படித்திட, ஸாயிமகிழ்ந்து அனைத்துநலனும் உமக்குஅருள்வார்.
நாளொருஇலம்பகம் விரும்பிப்படித்திட எல்லையில்லாத ஆனந்தம்விளையும்.

தம்நலன்வேண்டிக் கவனமாய்ப்படித்திட,ஒவ்வொருபிறவியும் ஸாயியைநினைப்பான்.
குருபூர்ணிமா, கோகுலாஷ்டமி. ஸ்ரீராமநவமி நவராத்ரிநாட்களில்

வீடுகள்தோறும் பாராயணம்செய்திட, ஆசைகளனைத்தும் கைகூடிடுமே.
பாதமலர்களை மனதில்நினைத்திட, வாழ்க்கைக்கடலை எளிதாய்க்கடக்கலாம்.

சரிதம்படித்திட நோய்வாய்ப்பட்டோர் நலமடைந்திடுவார். ஏழையும்செல்வனாவான்.
தாழ்ந்தோரெல்லாம் உயர்நிலையடைவர். மனச்சலனங்கள் மறைந்துஒழியும்.

அன்பும்,பக்தியும் கொண்டநல்லோரே! உங்களையெல்லாம் நமஸ்கரிக்கின்றோம்.
நாளும்,திங்களும் படித்துக்கேட்ட இந்தக்கதைகளை மறந்துவிடாதீர்!

எத்தனைக்கெத்தனை ஆர்வமுடன்நீர் படிக்கின்றீரோ, கேட்கின்றீரோ,
அத்தனைக்கத்தனை நாங்களும்ஸாயியால் உவகைமிகுந்து உங்களுக்கெல்லாம்

சேவைசெய்திட உதவியாயிருப்போம். பரஸ்பரம்நாமும் ஒத்துழைத்திடுவோம்.
ஒருவருக்கொருவர் உதவிகள்செய்து ஸாயியின்கருணையால் மகிழ்வுடனிருப்போம்.

ப்ரஸாத்-யாசனா - பிரஸாதம் கோரல் ::

படித்திடும்பக்தர் ஸாயிநாதரின் பதமலர்களையே பக்தியாய்நினைந்து,
ஸாயியின்திருவுரு அவரதுகண்களில் நிலைத்துஎல்லா உயிரிலும்காண்க! [2698]

ததாஸ்து! [அப்படியே நடக்கட்டும்!]

ஸ்ரீஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!
[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]

“ஸத்குரு ஸாயி ஆரதீ”

ஆரதீ ஸாயிபாபா… ஸௌக்ய தாதார ஜீவா
சரண ரஜா தலீ.. த்யாவா தாஸா விஸாவா.. பக்தா விஸாவா [ஆரதீ]
ஜாளுநீயா அனங்க.. ஸ்வஸ்வரூபீம் ராஹே தங்க
முமுக்ஷு ஜநா தாவீ.. நிஜ டோளாம் ஸ்ரீரங்கா..- டோளாம் ஸ்ரீரங்கா [ஆரதீ]
ஜயாமநீ ஜைஸா பாவ.. தயா தைஸா அநுபவ
தாவீஸீ தயாகனா.. ஐஸீ துஜீ ஹீ மாவ..- துஜீ ஹீ மாவ [ஆரதீ]
துமசே நாம த்யாதாம்.. ஹரே ஸம்ஸ்ம்ருதிவ்யதா
அகாத தவ கரணீ.. மார்க தாவீஸி அநாதா..- தாவீஸி அநாதா [ஆரதீ]
கலியுகீ அவதார.. ஸகுண பரப்ரஹ்ம ஸாசார
அவதீர்ண ஜாலாசே.. ஸ்வாமி தத்த திகம்பர..- தத்த திகம்பர [ஆரதீ]
ஆடாம் திவஸாம் குருவாரீ.. பக்த கரீதி வாரீ
ப்ரபுபத பஹாவயா.. பவ பய நிவாரீ.. பய நிவாரீ [ஆரதீ]
மாஜா நிஜ த்ரவ்ய டேவா.. தவ சரணரஜ ஸேவா
மாகணே ஹேஞ்சி ஆதாம்.. தும்ஹாம் தேவாதி தேவா.. தேவாதி தேவா [ஆரதீ]
இச்சித தீன சாதக.. நிர்மல தோய நிஜ ஸூக
பாஜாவே மாதவா யா.. ஸாம்பாள் ஆபூலி பாக..- ஆபூலி பாக
ஆரதீ ஸாயிபாபா ..ஸௌக்ய தாதார ஜீவா
சரண ரஜா தலீ ..த்யாவா தாஸா விஸாவா ..பக்தா விஸாவா [ஆரதீ ஸாயிபாபா]
ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத் மஹராஜ் கீ... ஜெய்!
[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
ஓம் ஸ்ரீ ஸாயிராம்.

CONCLUDING MESSAGE  

The great effort of Shri. Sankarkumar, Doctor by profession, settled in USA deserves to be appreciated and congratulated for this feat of condensing entire Sai life story as two line verses in Tamil completely 'parayanable' in four hours  in one stretch. According to him this will be equivalent to reading  Sai Parayan and can be done in quickest of time by those employed. They will find this convenient  to read during their recess time. What a gift to Sai devotees! Perhaps Sai wanted this to be published, for the first time in the Tamil history of world especially  in this blog for the benefit of his devotees. Shri Sankarkumar is a blessed soul.  

At the same time the success story of this blog undoubtedly goes to Mrs. Manisha.Rautela.Bisht, whom I always considered as my lovable daughter, established this blog few years back co opting me as author, and further authoring me to upload Tamil content as I initially translated the material for this site. Though I am authorised to upload the contents, courtesy demanded taking her consent too as Co author, and therefore when I approached her for publishing this series, she not only instantly consented but was eager to get the English version too so that it can be uploaded in her Blog in English. Mr. Sankarkumar can take note of it and attempt. My wishes goes to both Manisha and Shri Sankarkumar. I hope readers would have thoroughly enjoyed this series. Readers can directly send their comments to Shri Sankarkumar in 
''ommuruga41@gmail.com''

        ---Santhipriya  (N.R. Jayaraman) 

அமெரிக்காவில் குடியேறி உள்ள மருத்துவரான திரு சங்கர்குமார் இந்த சரித்திரத்தை தமிழ் செய்யுள் வடிவில் அமைத்துக் கொடுத்து இருப்பதற்கு அவரை எத்தனை பாராட்டினாலும் போதாது.  சுமார் நான்கே மணி நேரத்தில் படித்து முடித்து விடக் கூடிய அளவில்  எழுதப்பட்டு உள்ள  இது  சாயி சரித்திர பாராயணம் போன்றது. அலுவலகம்  செல்பவர்கள் தமது இடைவேளையில் படிக்க வசதியாக எழுதப்பட்டு உள்ள இது அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். ஒரு வேளை  இதுவும் சாயி பாபாவின் விருப்பமாகவே இருந்திருக்கலாம்.  உலகிலேயே முதன் முறையாக  தமிழ் மொழியில் செய்யுள் வடிவில் இந்த வலை தளத்தில் வெளியிட அவர் விரும்பி உள்ளதினால்தான்  இதை  இங்கு  வெளியிட முடிந்துள்ளது. திரு சங்கர்குமார்  தெய்வ அருளைப் பெற்று இருக்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை.

அதே நேரத்தில் திருமதி மனிஷா  ரௌடிள்லா பிஸ்தும்  இந்த வலை தளத்தின் வெற்றியில் சந்தேகமே இல்லாமல் பங்கு பெறுகிறார்.  எனது அன்பு மகளைப் போலவே நான் கருதும் அவர் தனது வலை தளத்தில் என்னையும்  ஒரு ஆசிரியராக இணைத்துக் கொண்டு இதில் தமிழில் உள்ளவற்றை வெளியிட அனுமதி கொடுத்து இருந்தாலும், இந்த சாயி செய்யுள் வடிவை வெளியிட அவருடைய விருப்பத்தை  கேட்டபோது, அவர் சற்றும் தயங்காமல் அதை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டதும் அல்லாமல், இதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து தர முடியுமா என்று ஆசையுடன் கேட்டார். அது திரு சங்கர்குமார் சிந்திக்க வேண்டிய விஷயமாகும். திரு சங்கர்குமார் மற்றும் திருமதி மனிஷாவுக்கு என் பாராட்டுக்கள். செய்யும் வடிவில் தமிழில் அமைக்கப்பட்டு உள்ள இந்த சாயி சரித்திரத்தை வாசகர்கள் வரவேற்பார்கள் என்பது நிச்சயம். இதைக் குறித்த கருத்தை திரு சங்கர்குமாருக்கு வாசகர்கள் நேரடியாக எழுதலாம்.  முகவரி:  
''ommuruga41@gmail.com''

  
            - சாந்திப்பிரியா (ஜெயராமன்)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.