Wednesday, September 1, 2010

Baba's miracles:I heard baba's voice-Manjunath.

என் அனுபவம்

நான் பாபாவின் குரலைக் கேட்டேன் , பிப்ரவரி, 2008
எஸ் .மஞ்சுநாத், கரூர்

நான் ஒருமுறை பஸ்ஸில் பயணம் செய்துகொண்டு இருந்தேன் . வழியில் அந்த பஸ் ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டது. ஆனால் அது பெரிய விபத்து அல்ல பயணிகள் கதறி அழுதனர் , சுற்றிலும் ஒரே குழப்பம் . நானும் கீழே விழுந்து விட்டேன். என்றாலும் பெரிய அடிபடவில்லை . தூக்கத்தில் இருந்ததினால் என்ன நடக்கிறது எனப் புரியாமல் மனம் குழம்பியது. நான் தனியாக விழுந்த இடம் சற்று தள்ளி இருந்தது . அங்கிருந்து மற்றவர்களை பார்க்க முடிந்தது. சிலர் பஸ் டிரைவருடன் சண்டை போட்டுக்கொண்டு இருக்க , வேறு சிலர் தன்னுடைய உடமைகளை தேடிக் கொண்டு இருந்தனர் .

அப்போதுதான் அந்த அதிசயம் நிகந்தது. ‘கண்களை மூடிக் கொள்’ என்ற குரல் எங்கிருந்தோ வந்தது. கண்களை மூடிக்கொண்டேன் . அவ்வளவுதான், எங்கிருந்தோ பறந்து வந்த கண்ணாடி துண்டுகள் , பஸ் கதவில் இருந்து என நினைகிறேன், என் கன்னத்தில் வந்து விழுந்தது . சிறிது நேரத்தின் பின் கண்களை விழித்துப் பார்த்தேன் . அப்போதுதான் தெரிந்தது என் கண்கள் காயம் படாமல் காப்பாற்றியது நான் வணங்கும் தெய்வமான சாயினாதரே என ! கண்களை மூடிக்கொண்டு நான் தலையை குனிந்து கொள்ளாமல் இருந்திருந்தால் என் கண்கள் குருடாகி இருந்திருக்கும் அல்லவா ? நான் சிறு வயது முதலேயே சாயி சரித்திரம் படித்து வந்தவன். ஆகவேதான் எனக்கு தெரிந்தது என்னுடன் பேசியது அந்த சாயினாதரே !! என் பக்தி அதனால் இன்னும் அதிகரித்தது என்று கூறத்தான் வேண்டுமா ?



இன்னும் ஒரு சம்பவம். என்னுடைய தந்தை ஒரு டாக்டர் . அவர் சாயி பக்தரும் கூட . அதனால்தான் என் தாயாரும் சாயி பக்தியாக இருந்தாள் . அப்போது என்னுடைய தங்கை அமெரிக்காவில் இருந்தாள் . அவள் நிறை மாத கர்பிணி . என் தயார் அவளுக்கு உதவ 6 அல்லது 7 வது மாதத்திலேயே அங்கு சென்று இருந்தாள் . அடிக்கடி தொலைபேசியில் அவளுடைய உடல் நலம் பற்றிக் கூறுவாள் . வயிற்றில் உள்ள குழந்தை மிகவும் குறைந்த எடையிலேயே உள்ளது எனவும் அது நல்லதல்ல என டாக்டர்கள் கூறுவதாகவும் தகவல் கொடுத்தாள் . அவளுடைய மற்றும் அவள் கணவருடைய ஜாதகத்தை ஆராய்ந்த ஜோதிடர் அவர்களுக்கு குழந்தை பாக்கியமே இல்லை என்று கணித்தார் .

சில நாட்கள் சென்றன .என் சகோதரியை பிரசவத்திற்கு மருத்துவ மனையில் சேர்த்தனர். அன்று இரவு மருத்துவ வார்டில் என் தாயார் தூங்கிக்கொண்டு இருந்தவள் சட்டென்று விழித்தபொழுது , ஒரு நீண்ட அங்கி அணிந்துகொண்டு இருந்த பெரிய உருவம் , என் தங்கையின் படுக்கை அருகில் நின்று கொண்டு அவள் தலையை தடவுவதை கண்டாள். அது யார் ? தான் சுய நினைவுக்கு வரும் முன்னரே அந்த உருவம் வெளியில் சென்று விட்டது . வந்தது யார் எனப் பார்க்க வெளியில் சென்றால் ஆஸ்பத்தரி வார்டு முழுவதும் நிசப்தமாக இருந்தது , எவரும் உள்ளே நுழைய முடியாத அளவு காவலும் இருந்தது . அப்படியென்றால் வந்தது யாராக இருக்கும் ? அப்போது நேரம் விடியற்காலை 3 அல்லது 3.30 இருக்கும். என் அம்மாவோ வந்தது சாயினாதரே என நம்பி அந்த அதிகாலையிலேயே எங்களுக்கு போன் செய்தாள் . என் தந்தையோ ' நீ ஒரு மனப் பிரமையில் இருக்கிறாய், நம் குழந்தைக்கு ஒன்றும் ஆகாது என ஆறுதல் கூறினர் .


அன்று காலை சகோதரிக்கு பிரசவ வலி எடுத்தது . டாக்டர் வந்தார் , தாயாருக்கு ஒரே கவலை. என்ன அதிசயம் தாயும் சேயும் நலமாக இருக்கும்படி சுகப்ரசவம் ஆகா டாக்டருக்கே ஒன்றும் புரியவில்லை . நேற்றுவரை சிக்கலான கேஸ் , குழந்தை இறந்தே பிறக்கும் என எண்ணிய கேஸ் இன்று என்ன ஆயிற்று ? அமெரிக்க டாக்டர்களுக்கு ஆச்சரியம் அடங்கவேயில்லை . எப்படி தம்முடிய பரிசோதனை கணிப்பு அதிசயமாக மாறி இருந்தது என்று. இன்று அந்த குழந்தையின் வயது எட்டு . அவள் இந்தியாவுக்கு வந்தபொழுது அவள் ஜாதகத்தை ஆராய்ந்து குழந்தை பாக்யியம் இல்லை என்று கணித்த ஜோதிடரிடம் மீண்டும் சென்றபோது அவருக்கும் அது புரியவில்லை . அடித்துச் சொன்னார் , அவள் ஜாதகத்தின் பிரகாரம் அவளுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பதே உண்மை . அப்படி என்றால் அது எப்படி மாறிவிட்டது? இது எங்கள் குடும்பத்தின் நம்பிக்கையின்படி பாபாவின் அருள்தானே தவிற வேறு என்னவாக இருக்க முடியும் ? பாபாதான் பிரசவ தினத்தின் அன்று வந்து அவளை காப்பாற்றி உயிர் கொடுத்து உள்ளார் என்பதே உண்மை .
(Translated in Tamil by Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.