Preserve this Photo -Sai Baba
ஒரு முறை குரு பூர்ணிமா தினம் வந்தது. அன்றைக்கு ஜோதிந்த்ராவும் சீரடிக்குச் சென்று இருந்தார். அன்று குரு பூர்ணிமா என்பதினால் பல பக்தர்கள் நடந்தும், மாட்டு வண்டியிலும் வந்து அவரவர் தகுதிக்கு ஏற்ப பிரசாதமும் கொண்டு வந்தனர். சிலர் நோட்டுபுத்தகங்களையும், சிலர் பாபாவின் படத்தையும் கொண்டு வந்தனர். அதை பாபா தொட்டுவிட்டுத் தந்தால் பூஜை அறையில் வைக்கலாம் என்ற ஆசை.
கூட்டம் மிகுதியால் அனைவரும் முண்டி அடித்துக் கொண்டு பாபாவிடம் சென்று அவரை வணங்கினர். அப்போது ஜோதிந்தராவிடம் பாபா கூறினார் ,' ஜோதிந்த்ரா என் மீது அனைவரும் நடந்து செல்கின்றார்கள், எனக்கு உடம்பெல்லாம் வலிக்கின்றது, என்னைக் காப்பாற்று'. ஜோதிந்த்ராவுக்கு ஒன்றும் புரியவில்லை. பாபா உயரமான இடத்தில் அமர்ந்து கொண்டு இருக்கையில் அது எப்படி நடக்கும்? அப்போது பாபா அவரிடம் ஒரு குறிப்பிட்ட இடத்தைக் காட்டி அங்கே சென்று என்னை காப்பாற்று என்றார். கூட்டம் அளவுக்கு மீறி இருந்ததினால் பாபா கூறிய இடத்திற்குச் சென்றால் கூட்டத்தினர் தம்மையும் துகைத்து எடுத்து விடுவார்கள் என ஜோதிந்த்ரா பயந்தார். பாபா அவருக்கு தைரியம் தந்து அங்கு போகுமாறு கூறினார். பாபா காட்டிய இடத்தை அடைந்த ஜோதிந்த்ரா அங்கு பாபாவின் படம் ஒரு இடத்தில் கிடந்ததைக் கண்டு அதை எடுத்து வந்தார். அதன் மீதே கூட்டத்தினரும் பார்க்காமல் நடந்து சென்று கொண்டு இருந்தனர். எதோ ஒரு பக்தர் கூட்டா மிகுதியால் கவனிக்காமால் அதை தவற விட்டுச் சென்று இருந்துள்ளார்.
அதை வங்கிப் பார்த்த பாபாவின் முகத்தில் அமைதி. சற்று நேரத்துக்குப் பின் அதை ஜோதிந்த்ராவிடம் தந்து 'இந்த படத்தை பத்திரமாக வைத்துக் கொள்' என்றார். மேலும் அவருக்கு தனது பாதுகையும், சில நாணயங்களையும் தந்து அனுப்பினார். இன்றும் அதை ஜோதிந்த்ராவின் குடும்பத்தினர் பூஜை அறையில் வைத்து வணங்கி வருகின்றார்கள்.
பாபாவின் படம்: இன்னொரு சம்பவம்.
ஒரு முறை சீரடிக்கு இரண்டு பக்தர்கள் சென்று இருந்தனர். அவர்களில் ஒருவர் வீ. எஸ். ஜோஷி என்பவர். அவர்கள் குருஸ்தானில் ஆரத்தியை பார்த்துக் கொண்டு இருந்த போது பாபாவின் படத்தில் நரசிம்ம மூர்த்தியே தெரிந்தார். ஒரு நாள் அல்ல தொடர்ந்து மூன்று நாட்கள் அவர் அந்த காட்சியையே கண்டார். மூன்றாம் நாள் ஆராத்தி முடிந்ததும் பாபாவிடம் உடி பிரசாதம் பெற்றுக் கொண்டு கிளம்புகையில் நினைத்தார், கிராமத்தில் சென்றால் அனைவரும் உடியை கேட்பார்களே, என்ன செய்யலாம் என நினைத்தபடி மீண்டும் பாபாவிடம் சென்ற போது அவர் மனதை புரிந்து கொண்ட பாபா அவரிடம் எட்டு அண்ணாவைத் தந்து சீரடியில்உள்ள அனைத்து கடைகளிலும் கிடைக்கும் உடி தன்னுடைய பிரசாதமே எனக் கூறி கடையில் இருந்து அதை வாங்கிப் கொண்டு போகுமாறு கூறினார்.அடுத்த நாள் பாபா அனைவருக்கும் இனிப்பு பர்பியை பிரசாதமாகத் தந்தார். அது மிகவும் சுவையாக இருந்ததினால் அதையும் கிராமத்துக்கு கொண்டு போக நினைத்து பாபாவிடம் சென்றனர். அன்றும் பாபா அவர்களின் மனதை புரிந்து கொண்டு அவர்களை நிறைய பிரசாதத்தை எடுத்துப் போகுமாறு கூறினார். அவர்களும் மிகவும் மகிழ்சியுடன் அவற்றை எடுத்துச் சென்றனர்.
சில தினங்கள் கழிந்தன. ஜோஷி தனது நண்பரான கட்கே என்பவரிடம் பத்து ரூபாயை கொடுத்து அதை சீரடிக்கு எடுத்துச் சென்று பாபாவுக்கு தட்ஷனையாகத் தருமாறும் அவரிடம் இருந்து ஒரு போட்டோவை வாங்கி வருமாறும் கூறி அனுப்பினார்.
சீரடிக்கு சென்ற கட்கே பாபாவை நமஸ்கரித்துவிட்டு பத்து ரூபாய் தட்ஷ்ணயைத் தந்தார். ஆனால் புகைப்படத்தை பற்றி கேட்க தைரியம் இல்லாமல் நின்றார். அதன் பின் விடை பெற்றுக்கொண்டு செல்லும் முன் பாபா அவரை அழைத்தார், வேண்டுமானால் தன்னை ஒரு புகை படம் எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறினார்.ஆனால் அதை விற்று லாபம் சம்பாதிக்கும் நோக்கம் இருக்கக் கூடாது என கட்டளை இட்டார்.
பாபாவின் படம்: இன்னொரு சம்பவம்.
( இது சாயி சரித்திரத்தில் உள்ளது)
கீர்தன்கர் என்பவர் பாபாவின் பக்தர். அவர் ஒரு முறை சீரடிக்கு சென்று இருந்த போது பாபா அவரைக் காட்டி மற்றவர்களிடம்அவர் எனக்கு நான்கு வருடங்களாக தெரியும் என்றார். கீர்தங்கருக்கு ஒரே வியப்பு. என்னை எப்படி பாபாவுக்கு நான்கு வருடங்களாகத் தெரிந்து இருக்க முடியும் ? நான் என்றுதானே வந்துள்ளேன் என யோசனை செய்து மண்டையை குழப்பிக் கொண்டார். திடீரென அவருக்குப் புரிந்தது. நான்கு வருடங்களுக்கு முன்னர் ஒரு இடத்தில் பாபாவின் படத்திற்கு தான் நமஸ்கரித்து வழிபட்டது நினைவுக்கு வந்தது. ஆகா பாபாவை நேரில் பார்ப்பதும், படத்தில் பார்ப்பதும் ஒன்றுதான்.( இது சாயி சரித்திரத்தில் உள்ளது)
Loading
0 comments:
Post a Comment