Devotee In Contact With Baba ---part-1- Madhav Rao Deshpande-
அன்பானவர்களே,
சாயி சரித்திரத்திலும் சாயி பற்றிய அற்புத சம்பவங்களை எழுதப்பட்டு உள்ள பிற புத்தகங்களில் இருந்தும் பாபாவின் மகிமையை தெரிந்து கொள்ள நாம் ஆசைபடுவது உண்டு. அப்படிப்பட்ட சம்பவம் போல என் வாழ்விலும் ஒரு முறை ஒரு சம்பவம் நடந்துள்ளது.
நான் நாக்பூரில் இருந்த நேரம் அது. எங்கள் வீட்டில் இருந்த வேலையாள் நான் சாயி பாபாவை வணங்குவதை கவனிப்பான். ஒரு முறை அவன் என்னிடம் கேட்டான், 'நீங்கள் பாபாவின் மீது நம்பிக்கை கொண்டவரா?' நான் 'ஆமாம்' என்றேன். ஆனால் அவன் எந்த பாபாவைக் குறிப்பிடுகின்றான் என்பது எனக்குத் தெரிந்து இருக்கவில்லை. அவன் கூறினான், 'மேடம், நான் ஒவ்வொரு மாதமும் இங்குள்ள தர்காவில் ஒரு பாபாவைப் பார்க்கப் போவேன். உங்களுக்கு ஒன்றுமில்லை என்றால் நீங்களும் வரலாம், நான் அழைத்துச் செல்கிறேன்' என்றான். நான் நானாக இல்லை. என்னை அறியாமல் சரி எனக் கூறி விட்டேன்.
சில நாட்கள் பின் அவன் என்னிடம் கேட்டான், 'இன்று வெள்ளிக் கிழமை, தர்காவுக்கு செல்லலாமா?' எப்போதுமே புனித இடங்களுக்கு செல்வதில் எங்களுக்கு தயக்கம் இருந்தது இல்லை. ஆகவே நாங்கள் கிளம்பி விட்டோம். அந்த தர்கா அமைதியான இடமாக இருந்தது. தெய்வீகம் நிறம்பி வழிந்த அந்த இடம் மனதுக்கு இதமாக இருந்தது. எங்களுக்கு அங்கு சென்றதில் மன நிறைவாக இருந்தது. அது ஒரு அற்புதமான அனுபவம்.

சில மாதங்கள் கழிந்தன. நான் இணையதளத்தில் செய்திகளைப் பார்த்துக் கொண்டு இருந்தபோது தாஜ்ஜுதின் பாபாவைப் பற்றிப் படித்தேன். அதைப் படித்து அளவில்லா ஆனந்தம் அடைந்தேன். ஏன் எனில் நாங்கள் சென்ற தார்கா அவருடைய சமாதியே. இன்று மீண்டும் அவரைப் பற்றி பாபா சாமாவிடம் கூறியதை படிக்க நேர்ந்தது. அந்த கதையை கீழே கொடுத்துளேன்.
மனிஷா ஒரு முறை பாபா கூறியதை ஏற்று சாமா நாக்பூரில் பாபுசாஹிப் புட்டியை தரிசித்து விட்டு வந்தார். அதைத் தவிர நாக்பூரின் தெற்குப் பகுதியில் இருந்த தாஜ்ஜுதின் பாபாவையும் பார்த்துவிட்டு வந்தார்.
ஒருநாள் பலரும் பாபாவை சுற்றி அமர்ந்து இருந்தனர். அப்போது பாபா கேட்டார் ' சாம்ராவ் நீ எந்த எந்த இடங்களுக்கு எல்லாம் சென்றாய்? சாமா கூறினார், 'தேவா நான் நாக்பூருக்கு சென்றேன்'. பாபா மீண்டும் கேட்டார், நாக்பூருக்கு சென்றாயா? அங்கு தெற்கு பகுதியில் இருந்த தங்க மரத்தைப் பார்த்தாயா?

மாதவராவ் ( சாமா) சற்று புத்திசாலி. அவருக்கு புரிந்துவிட்டது பாபா தாஜ்ஜுதின் பாபாவைக் குறிப்பிட்டுப் பேசுகிறார் என்று. உடனே கூறினார், ' தேவா நான் தாஜ்ஜுதின் பாபாவின் தரிசனத்துக்கு நாக்பூரின் தெற்குப் பகுதியில் இருந்த ரகோஜ்ஜி ராஜி போசலே தோட்டத்துக்கு சென்றேன். ' 'அதற்குப் பிறகு எங்கு சென்றாய்.?' பாபா கேட்டார். 'நான் அங்கிருந்து அமராவதிக்கும் சென்று பெட் கோன் என்ற இடத்தில் இருந்த நாராயண மகராஜையும் சந்தித்தேன்' என்றேன்.
மாதவராவ் பாபாவை சில சமயம் கிண்டல் அடிப்பார். ஆகவே மேலும் தொடந்தார் ' தேவா உங்களுக்குத் தெரியுமா, பலரும் சென்று நாராயண மகராஜை தரிசனம் செய்கிறார்கள்' பாபாவின் பதிலை அவர் ஆவலுடன் எதிர்பார்த்தார். ஆனால் பல முறை அதையே கூறியும் பாபா மௌனமாக இருந்தார். கடைசியாக சுமார் பத்து நிமிடத்துக்குப் பிறகு பாபா கூறினார் , 'நம்முடைய தந்தையே அனைவரின் தந்தையும். அவர் அடிப்பார், உதைப்பார், ஆனால் அவர் கருணையும் காட்டுவார், வேறு யாருக்கு அப்படிப்பட்ட அந்த எண்ணம் வரும்? நான் உனக்கு தந்தைபோல . நீ ஏன் மற்றவரைப் பற்றி நினைக்க வேண்டும்? '
அப்படி பாபா கூறியது மாதவராவுக்கு மட்டும் அல்ல அனைத்து பக்தர்களுக்கும்தான். பாபா கூறினார் ' மற்றவரிடம் உள்ள குறையைக் கூறாதே. சத்புருஷர்களைப் கேலி செய்யாதே, உனக்குப் பிடித்த குருவிடம் பூரண பக்தி வை. ஆனால் மற்றவர்கள் முன் அவர்களையும் மதித்திடு' பாபா எப்போதும் கூறுவார் ஒருவர்தன் இஷ்ட தெய்வத்தை மதிக்க வேண்டும்.

பாபாவுக்கும் சாமாவுக்கும் அற்புதமான உறவு உண்டு. ஒருமுறை பாபா சாமாவிடம் தன் கையால் எடுத்த உடியைத் தந்தார். பாபா தானே எடுத்து தன் கையால் கொடுத்தது என்பதினால் சாமா அதை மிகவும் பத்திரமாக இரண்டு மண் குடுவையில் போட்டு வீட்டில் வைத்து இருந்தார். அதை விசேஷ தினங்களில் மற்றவருக்கும் கொடுப்பார். அந்த விஷயம் வீட்டில் இருந்த பெண்களுக்குத் தெரியாது. ஒருநாள் அவர் மும்பை போய் இருந்த போது வீட்டை சுத்தப் படுத்திய அந்த பெண்மணிகள் மண் சட்டியில் சாம்பல் கிடக்கிறதே என எண்ணி அதை குப்பையை எடுத்துப் போகும் இடத்தில் வைத்துவிட்டனர்.
அன்று இரவு சாமாவுக்கு கனவு ' சாமா , எழுந்திடு, நீ ஜாக்கிரதையாக இத்தனை நாளும் வைத்து இருந்த உடியை குப்பை கூளத்தில் போட்டு விட்டனர். உடனே போய், அதை எடு ' விழுண்தடித்துக் கொண்டு சீரடிக்கு ஓடினார் சாமா. குப்பை கூளத்துடன் வைத்து இருந்த உடி மண் பானையை எடுத்து வந்து பத்திரமாக வைத்துக் கொண்டார். நல்ல வேளையாக பாபா தந்த உடி தப்பியது. பாபா சமாதி அடைந்த போது அதை எல்லாம் கூறிக் கூறி அழுதுகொண்டே இருந்தார் சாமா. 'பாபா உன்னை என்னவெல்லாம் கூறி உள்ளேன், எத்தனை படுத்தி உள்ளேன் , துக்கத்திலும் இன்பத்திலும் நீதானே என்னுடன் பங்கு கொண்டாய் ' என அழுதார்.
' பாபா உன்னை சின்ன சின்ன விஷயத்துகெல்லாம் தொந்தரவு செய்து உள்ளேன், உன்னை புளுகன் என்றேன், திருடர் என்றேன், முட்டாள் பகிர் என்றேன், வெட்கமில்லாத பிச்சைக்காரன் என்றேன் , உன்னை விட புத்திசாலி என எண்ணினேன். அப்படியும் நீ என்னிடம் அன்பு காட்டினாய். நான் எத்தனை மூடன்' எனகூறிக் கூறி தாங்க முடியாமல்அழுதார்.

(Translated into Tamil by Santhipriya)
Loading
0 comments:
Post a Comment