Wednesday, September 29, 2010

Baba's Photo protects from theft

மும்பையில் பிம்பல்கோன் என்ற இடத்தில் பிளேகு என்ற நோய் கடுமையாக தாக்கிய நேரம். அங்கு இருந்த டபிள்யு . சி. முங்கே என்ற வக்கீல் பிளேகு நோய்க்கு பயந்து தமது வீட்டினரை பண்ணைக்கு அழைத்துச் சென்று விட்டார். ஒரு நாள் இரவு வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக் கொண்டு இருக்கையில் திருடர்கள் வந்து வீட்டின் சுவற்றில் ஓட்டை போட்டு உள்ளே வந்து திருட முயன்றனர். அந்த ஓட்டை செய்த சுவற்றில்தான் பாபாவின் படம் மாட்டப்பட்டு இருந்தது.
உள்ளே வந்த திருடன் முதலில் இருநூறு ரூபாய் மற்றும் நாலாயிரம் ரூபாய் பத்திரம் இருந்த பெட்டியை வெளியில் இருந்தவனிடம் தந்தான். அடுத்து பத்தாயிரம் ரூபாய் மதிப்பில் இருந்த நகை பெட்டியை எடுத்துத் தந்தான். அனைத்தையும் சுவற்றில் இருந்த படத்தில் இருந்து பாபா பார்த்துக்கொண்டே இருந்தார்.
அவ்வளவுதான், முன்கேயின் கனவில் பாபா தோன்றி நடக்கும் திருட்டை பற்றிக் கத்திக் கூற அவர் எழுந்து வந்து பெரும் கூச்சல் போட அனைவரும் எழுந்து வந்து திருடர்களை துரத்தினர் . மறுநாள் காலை தேடியபோது சிறிய பெட்டி மட்டுமே கிடைத்தது. ஆனால் சிறிய பெட்டியில் இருந்த இருநூறு ரூபாயை மட்டும் காணவில்லை. மற்றவை கிடைக்கவில்லை . அன்று இரவு மீண்டும் ஒரு கனவு. அப்துல்லா பாபாவும் முன்பின் தெரியாத இரண்டு பகீர்களும் அவர் கனவில் வந்தனர். விசேஷமாக எதுவும் நடக்கவில்லை.
சில நாட்கள் பொறுத்து முங்கே சீரடிக்கு சென்று இருந்த போது தனது கனவில் வந்த அதே பகீர்களை பார்த்தார். அவர்களை வணங்கிவிட்டு வந்தார். அடுத்த சில நாட்களில் தத்த பிருமச்சாரி என்பவர் முன்கேயின் வீட்டிற்கு சாப்பிட வந்து திருட்டுப் போன அனைத்து பொருட்களும் ஒரு மார்வாடியின் கடையில் கிடைத்து விட்டன என்றார். அடுத்து அந்த ஊரில் இருந்து வந்த போலீஸ் அதிகாரியும் அங்கு வந்து முன்கேயிடம் விஷயத்தைக் கூறி அவரை அழைத்துச் சென்று பொருட்களை அடையாளம் காட்டுமாறு கூறினார். திருட்டு போன அனைத்து நகைகளும் கிடைத்து விட்டன. இது பாபா எந்த அளவுக்கு தனது பக்தர்களை காத்து வருகின்றார் என்பதை விளக்கும்.
(Translation In tamil : Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.