Wednesday, September 29, 2010

Everything of yours will become gold



ஹர்தாவில் இருந்தவர் சோட்டு பையா பரால்கர் என்பவர். பாபாவின் பக்தர். பாபாவிடம் மிக அதிக ஈடுபாடு கொண்டவர். பாபாவுக்கும் அவரை மிகவும் பிடிக்கும். அது 1914 ஆம் ஆண்டு. அவர் சீரடிக்கு சென்று இருந்த போது ராமகிருஷ்ண ராவ் என்ற ஓவியரும் அங்கு வந்திருந்தார், பாபாவின் ஓளிமயமான அழகைக் கண்டவர் அவரைக் கேட்காமலே அவரை 07 .06 .1914 அன்று ஓவியமாக வரைந்து விட்டார். காகா மகாஜனி மற்றும் திக்ஷித் போன்றோர் அதை பார்த்துவிட்டு மிகவும் மகிழ்ந்தனர். ஆனால் அதை பாபா விரும்ப மாட்டார் எனத் தெரிந்ததினால் அந்த படத்தை ஒரு வெள்ளை துணியால் மூடி வைத்துவிட்டனர்.
பாபா நல்ல மூடில் வந்தவுடன் அதைக் காட்டலாம் எனக் காத்து இருந்தனர். மதிய ஆரத்தி முடிந்தது. சாமா மெல்ல பாபாவிடம் சென்று அந்த ஓவியர் வரைந்துள்ள படத்தைப் பற்றிக் கூற பாபா கோபமடைந்தார்' என்னை ஏன் படம் போடுகின்றார்கள். எடுத்து வா அந்த படத்தை. எங்கே அது' எனக் கத்தினார். அந்த படத்தை எடுத்து வந்து பாபாவிடம் காட்டினர் .முதலில் அதை கிறுக்கி அழித்துவிட கையைத் தூக்கிய பாபா சந்தமடைந்தார்.
பாபா அந்த படத்தை உற்றுப் பார்த்தார். பிறகு அனைத்து பக்தர்களையும் பார்த்தார். அந்த படத்தை சோட்டு பையாவிடம் தந்து எதை வைத்துக்கொள். உன்னிடம் உள்ள அனைத்தும் தங்கமென மின்னும் என்றார். அந்த படம் இரண்டரைக்கு மூன்று அடி அளவில் இருந்தது. தாசோட்டு பையா அதை தன் வீட்டிற்கு எடுத்துப் போய் பூஜை செய்து வரலானார். பாபா இப்படித்தான் தனது பக்தர்களுக்கு வியப்பைக் கொடுப்பார்.
(Translation into Tamil by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.