Devotee In Contact With Baba--- Part-3 Madhav Rao Deshpande.
நான் ஒரு முறை ஜூன் மாதம் என் பெற்றோர்களுடம் இந்தியாவில் சென்று வசித்தேன். அன்று எனக்கு சரியான தலைவலி. எந்த மருந்தும் அதைக் குறைக்கவில்லை. கடுமையான தலை வழியால் இரவு தூக்கம் வராமல் தவித்தேன்.
மறு நாள் செவ்வாய் கிழமை. இந்த தலை வலியுடன் நான் எங்கே எழுந்து ஹனுமாருக்கும் பாபாவுக்கும் பூஜைகளை செய்வது? நள் இரவு. சற்று தூங்க ஆரம்பித்தேன். கனவு ஒன்று வந்தது. அதில் ஹனுமான் பெரிய உருவை எடுத்தவாறு நின்று கொண்டு இருந்தார். எனக்கு அவருடைய பாதங்கள் மட்டுமே தெரிந்தன. அவருடைய பாதங்களில் என் தலையை வைத்துப் பதித்தேன். நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்க்க முயன்றேன் . அவர் முகம் தெரியவில்லை. அத்தனை உயரம். தூக்கம் கலைந்தது. விழித்தேன், மணி காலை 4.30 ஆகி இருந்தது. ஒரு கப் தண்ணீர் குடித்து விட்டு உறங்கினேன். மூன்று மணி நேரம் உறங்கிவிட்டு எழுந்தேன் . காலையில் எழுந்தவளுக்கு எந்த தலை வலியும் இல்லை. ஹனுமாருக்கும் நன்றி கூறிவிட்டு எழுந்தேன்.
காலை குளித்துவிட்டு ஹனுமான் சாலிசாவை படித்துக் கொண்டு இருந்தவளுக்கு மீண்டும் மீண்டும் கனவில் வந்த காட்சியே நினைவுக்கு வந்தது. ஹனுமான் எத்தனை தூய பக்தி கொண்டு இருந்திருந்தால் ராம லஷ்மணர்கள் மயங்கி விழுந்த பொது சஞ்சீவி மலையை தூக்கி வந்து காத்தார்.அப்போது பாபாவின் கதை ஒன்று நினைவுக்கு வந்தது.
பாபா ஹனுமானுக்கு மிக்க மரியாதை கொடுத்தவர். அவர் தினமும் நடந்து செல்லும்போது ஹனுமான் ஆலயத்தைக் கடந்துதான் போக வேண்டும். அப்போதெல்லாம் அவர் அந்த ஆலயத்தின் முன் நின்றவாறு எதோ சைகை செய்வார். உங்களுக்கு நினைவிருக்கும், தக்கர்ட் கதையில் ஒரு முறை அவர் பாபாவின் காபினியை காயப் போட்டுக் கொண்டு இருந்தபோது அதை தூக்க முடியாமல் போனபோது ஹனுமானை நினைக்க பாபா உடனே அவரிடம் நீ ஏன் ஹனுமானை நினைகின்றாய் எனக் கேட்டார்.

நான் பாபாவிடம் அளவில்லா பக்தி கொண்டவள். ஆலயத்துக்கு சென்றால் கூட அனைத்திலும் பாபாவின் உருவையே பார்க்க முயலுவேன். சிறு வயதில் இருந்தே பாபா மீது அளவற்ற்ற பக்தி கொண்டு இருந்ததினால் என்னால் மற்ற தெய்வங்களை வணங்க முடியவில்லை. என்னக்கு என் பெற்றோர் என்ன கூறியும் என்னால் மற்ற கடவுட்களை வணங்க முடியவில்லை என்றாலும் பாபா ஒருமுறை எனக்கு கூறி விட்டதினால் எனக்கு என் வாழ்வில் ஏற்பட்ட சில பிரச்சனைகளினால் ஹனுமானையும், விஷ்ணுவையும் வணங்கத் துவங்கினேன். நான் எப்போது பாபாவையும் ஹனுமாரையும் தொடர்ந்து வணங்கிவருகின்றேன்.
மனிஷா ஒரு முறை சாமாவுக்கு சில சந்தேகம் எழுந்தது.
சியாமா எதோ தன்னுடைய நெருங்கிய நண்பரிடம் பேசுவது போலக் கேட்டார், ' கியா ரே, தேவா, ராமாயணத்தில் ராமார் பரந்து விரிந்திருந்த கடலைக் கடக்க ஒரு கோடி வானரங்கள் ஒரு பாலத்தைக் கட்டியதாகவும் அதைக் கடந்தே ராமர் லங்காவை அடைந்து, யுத்தம் புரிந்து ராவணனை அழித்தார் என்று. அது நிஜமாக இருக்குமா?'
பாபா கூறினார், ' ஆமாம் அது நிஜம்தான்'.
சாமா கேட்டார், 'அப்படி என்றால் அத்தனை குரங்குகளும் எங்கு உட்கார்ந்து இருந்தன?'
பாபா கூறினார் ' அவை மரங்களிலும், அவற்றின் கிளைகளையும் சிறு எறும்புகள் போல அமர்ந்து இருந்தன'
சாமா கேட்டார் ' அதை நீங்கள் பார்த்தீர்களா ' .
'ஆமாம் பார்த்தேன் ' என்றார் பாபா.
சாமா கேட்டார் ' என்ன உங்களை நான் முதன் முதலில் பார்த்தபோது நீங்கள் அரும்பு மீசையுடன் இருந்தீர்கள் , அப்படி என்றால்?......நீங்கள் எப்படி அந்த வானர சேனையை சென்று பார்த்து இருக்க முடியும் .'
பாபா அமைதியாகக் கூறினார் ' சாமா, உனக்கும் எனக்கும் பல ஜென்மங்களாகத் தொடர்பு உள்ளது. உனக்கு அது தெரியாது, எனக்குத் தெரியும்'
ஆச்சரியப்பட்ட சாமா கேட்டார்' அப்போது உங்களுக்கு என்ன வயது?'. பாபா கூறினார் ' இப்போது என்னைப் பார்' .

சாமாவினால் அதை நம்ப முடியவில்லை. பாபா எப்போதும் அதே இளமையுடன்தான் இருந்தாரா? பாபா கூறினார் ' நான் இந்த துவாரகாமாயியில் அமர்ந்து கொண்டு பொய் கூற மாட்டேன். நான் சொல்வது அனைத்தும் உண்மை. இது உன் மீது சத்தியம்'
எத்தனை அழகாக பாபா கூறியுள்ளார். அவர் கூறும் அனைத்தும் அர்த்தம் உள்ளவையாகவே இருந்தன. பலமுறை அவர் உவமைகளைக் கூறி சொன்னபோதெல்லாம், அதை மற்றவர்கள்புரிந்து கொள்ளவில்லை. ஆனால் அவற்றில் பல உண்மைகள் பொதிந்து கிடந்தன.
பாபா தான் நேரிலேயே அதை கண்டதாகக் கூரியதின் மூலம் பாபாவே ராமர் என்பது புலனாகும். அவர் பரம பிரும்மா. பல முறை பாபா தான் கடவுளின் சேவகன் என்று கூறினாலும் தானே உண்மையான கடவுள் என்பதை தாஸ் குண மகராஜுக்கு பாபாவே நேரடியாகக் கூறி உள்ளார். நாம்தான் அவரை கண்களைத் திறந்து பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்.
(Translated into Tamil by Santhipriya )

Loading
0 comments:
Post a Comment