Wednesday, September 8, 2010

Prayer for Sai devotees across the globe

Seva Volunteered by Sai Bhakt

சாயி பக்தர்களுக்காக
சாயி பக்தரின் வேண்டுகோள்

ஜி. பீ. சின்ஹா என்ற சாயி பக்தரிடம் இருந்து வந்துள்ள கடிதத்தை இங்கு பிரசுரிக்கின்றேன். நாம் நமக்காக பிரார்த்தனை செய்து கொள்கின்றோம். ஆனால் அதே நேரத்தில் இரு கரங்களையும் கூப்பி மற்றவர்களின் நலனுக்காக பிராத்தனைபுரிவது என்பது பெரிய புண்ணிய காரியம்.
கீழ் கண்ட கடிதத்தை படித்து விட்டு நீங்கள் சின்ஹாஜியை உங்களுக்காக பிரார்த்தனை செய்ய அணுகலாம்.
மனிஷா


சாயிராம் மனிஷா,
நான் சீரடிக்கு சென்று வந்தது முதல் சாயி பாபாவின் பக்தர்களுடைய துயர் தீர்க்க அவர்களுக்காக பாபாவிடம் நான் பிரார்த்தனை செய்ய வேண்டும் என மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது. என்னுடைய அனுபவத்தின்படி மற்றவர் உங்களுக்காக பிராத்தனை செய்தால் அதற்கு நல்ல பலன் கிடைகின்றது. ஆகவே பாபாவின் பக்தர்களுக்காக நான் பிரார்த்தனை செய்ய முடிவு செய்து விட்டேன். அவரவர்களுக்கான பிரச்சனைகளை கீழ் கண்ட இ -மெயில் முகவருக்கு எழுதினால் நான் அவர்களுக்காக பாபாவிடம் பிராத்தனை செய்வேன்.
email ID
1to1withGP@gmail.com <1to1withGP@gmail.com&gt
குறிப்பிட்ட வியாதிஸ்தர்கள் தமது புகைபடத்தையும் அனுப்பினால் பிரார்த்தனைக்கு அது மேலும் உதவும். ஆனால் அது அவரவர் விருப்பம். தயவு செய்து கடிதங்களை அனுப்புபவர்கள் உங்களுடைய முகவரியை தெளிவாக குறிப்பிடுங்கள் . எனக்கு வரும் கடிதங்களின் சாரத்தை எந்த காரணத்தை ஒட்டியும் வெளியிட மாட்டேன் என உறுதி கூறுகின்றேன். பாபாவின் இந்த சேவகன் பாபாவிடம் செய்யும் பிரார்த்தனைக்கு வரும் கடிதங்களின் புனிதத்தை எந்த விதத்திலும் பாதிக்க விடமாட்டான் என்பதை பாபாவின்பக்தர்களே தயவு செய்து நம்புங்கள்
பாபா இந்த சேவை மூலம் நமக்கு அருள் தரட்டும்.
ஜி. பீ. சின்ஹா
(Translation into Tamil by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.