Tuesday, September 21, 2010

See me in All forms-Shirdi Sai Baba



 
அன்பானவர்களே
சாயி பாபா விலங்குகளை கூட அன்புடன் நடத்தினார். அவர் பல ரூபங்களில் இருந்தார்
சாயி சரித்திரத்தில் திருமதி தர்கட்திற்கு பாபா கூறியதை படியுங்கள் ''சில நேரத்தில் நான் நாயாகவும், பன்றியாகவும், எறும்பு, ஈ என பல உருவங்களை எடுத்தும் உலகை சுற்றி வருவேன். அனைத்திலும் நான் அவனைக் காண்பவன். ஆகவேஎவரும் வேறுபாடுகளை நிறுத்தினாலே என்னைக் காண முடியும்''
அதன் பின் அவள் நாய் வந்தாலும், வீட்டை சுற்றி அசிங்கம் செய்யும் பன்றி வந்தாலும் அவற்றை துரத்தாமல் உணவு தருவது உண்டு.
ஒரு முறை துவாரகாமயியில் சாயிபாபா இருந்தபோது அவர் தினமும் உணவு தரும் ஒரு நாய் என்றும் போல அங்கு வந்தது. அதை மது பால்சே என்பவர் அடித்து விரட்டினார். அதைக் கண்ட பாபா கோபமுற்று அவரை பார்த்துக் கத்தினார், 'அது என்னைப் பார்க்க வந்துள்ளது. இனிமேல் அதை ஏதும் செய்தால்..என்ன செய்வேன் எனத் தெரியாது ...'

இன்னொரு சம்பவம்

மும்பை தாதரில் இருந்தவர் ஹன்ஸ்ராஜ் வனிவா என்பவர். பாபாவின் தீவீர பக்தர். அவருக்கு மூன்று வேளை சாப்பாட்டிலும் தயிர் தேவை. அதை அவர் மிகவும் விரும்பி சாப்பிடுவார். தயிர் இல்லாவிடில் சாப்பிட முடியாது. அதனால் நாளடைவில் அவருக்கு கடுமையான சளியும் ஆஸ்துமாவும் வந்து அவதிப்பட்டார். நோயின் கடுமை அதிகமானதினால், இருமத் தொடங்கினார், பக்கத்து வீட்டில் இருந்தவர்களுக்கும் அவருடைய இருமல் சப்தம் வேதனையாக இருந்தது. என்ன மருந்து கொடுத்தும் அது குணமாகாததினால் வேறு வழி இன்றி பாபாவிடம் சென்றனர். பாபாவும் அவருக்கு குழந்தைக்கு கூறுவது போல தயிரை விட்டு விடும்படி அறிவுறுத்தினார்.
ஆனாலும் அவரால் தயிர் சாப்பிடுவதை விட முடியவில்லை. ஒரு முறை சீரடிக்கு மனைவியுடன் சென்று ஒரு ஹோட்டல் அறையில் தங்கினார். அவர் அணு தன மனைவியிடம் தயிரை செய்து ஒரு உரியில் கட்டி தொங்க விட்டு வைக்குமாறுக் கூறுவார். தான் வெளியில் செல்லும்போது கதவை பூட்டிவிட்டுச் செல்வார். அங்கிருந்து துவாரகாமாயிக்குச் சென்று மதியான ஆரத்தியை முடித்துக் கொண்டு வந்து உணவு அருந்துவார். ஆனால் தான் கூறியும் ஹன்ஸ்ராஜினால் தயிர் சாப்பிடும் பழக்கத்தை நிறுத்திக் கொள்ள முடியவில்லையே என எண்ணிய பாபா தினமும் தான் ஒரு பூனையாக மாறி, அவர் அறைக்குச் மேல் வழியாக உள்ளே புகுந்து, உரியில் உள்ள தயிர் முழுவதையும் சாப்பிட்டு விட்டு வந்து விடுவார். இப்படி சுமார் அறுபது நாட்கள் நடந்தது. ஹன்ஸ்ராசுக்கு ஒரே கோபம். ஆகவே ஒரு நாள் ஹன்ஸ்ராஜ் அந்த பூனையை பிடிக்க ஒழிந்து கொண்டு காத்திருந்தார். மதியான ஆரத்திக்கு கூடச் செல்லவில்லை. அவர் மனைவி மட்டும்சென்றாள்.
பூனை வந்தது, தயிரை சாப்பிட்டு விட அதை தடியால் ஓங்கி அடித்தார் ஹன்ஸ்ராஜ். அடிபட்ட பூனை ஓடி விட்டது. அன்று மாலை கணவனும் மனைவியும் பாபாவை பார்க்கச் சென்றனர். அப்போது பாபா மற்ற பக்தர்களிடம் கூறினார் ' என்னுடைய ஒரு பக்தன் புளிப்பு பதார்த்தத்தை சாப்பிட்டு உடம்பை கெடுத்துக் கொள்கின்றான். அதை தடுக்க நான் பூனயாகச் சென்று அந்த உணவை சாப்பிட்டு விட என்னை எப்படி அடித்து துரத்தி விட்டான் பாருங்கள்' என தன்னுடைய காபினியைத் தூக்கி அடி பட்ட இடத்தில் இருந்த காயத்தைக் காட்டினார். மற்றவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும் ஹன்ஸ்ராஜ் தெரிந்து கொண்டார், பாபாவே பூனை உருவில் வந்து தன்னைக் காப்பாற்றி உள்ளார் என. அவர் பாபாவிடம் சென்று தனது தவறுக்கு மன்னிப்புக் கேட்டார். அது முதல் அவர் தயிர் சாப்பிடவே இல்லை.


இன்னொரு சம்பவம்

மகால்சபதி தினமும் ஒரு பெட்டை நாய்க்கு உணவு தருவார். ஒரு நாள் உணவு தந்ததும் போ, போ, என அதை துரத்தினார். அதன் பின் அவர் பாபாவிடம் சென்றபோது பாபா கூறினார் ' இந்த கிராமத்தில் என்னைப் போன்ற ஒரு பெட்டை நாய் எங்கு சென்றாலும் அதை அடித்து விரட்டுகிறார்கள்'.அதைக் கேட்ட மகால்சபதி வருத்தம் அடைந்து மன்னிப்புக் கேட்டார். தனமும் தனக்கு கிடைக்கும் பிச்சையில் ஒரு பகுதியை பாபா 'கொலும்பா' என அழைக்கப் பட்ட பாத்திரத்தில் போட்டு வைப்பார். அதை அங்குவரும் பூனைகளும் நாய்களும் சாப்பிட்டுவிட்டுப் போகும். தான் துரத்தாத மிருகங்களை எவராவது அடித்தால் பாபாவால் தாங்கிக்கொள்ள முடியுமா?
(Translation into Tamil : Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.