Tuesday, September 21, 2010

Strange conversation and activities of Baba with deep message


அன்பானவர்களே,
இந்த தளததில் நான் வெளியிடும் அனைத்தும் பாபாவின் உபதேசங்களையும், மறைமுகமாக அவர் கூறியவற்றையும் பக்தர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே வெளியிடுகின்றேன். அவற்றை முதலில் படிப்பதில் புரிந்து கொள்ள முடியாது என்பதினால் மீண்டும் ஒருமுறை படித்தால் மட்டுமே அவருடைய லீலைகளின் அர்த்தம் தெரியும்.
மனிஷா
-------------------------------------------------------------------------------------------------
தாஸ் கணு மகராஜின் அனுபவம்..........
1989 ஆம் ஆண்டு மசூதியின் உள்ளே மேல்தளத்தில் உத்தரத்தில் இருந்து ஒரு கட்டிலைப் போன்ற பலகை அந்தரத்தில் ஊஞ்சல் ஆடிக்கொண்டு இருந்ததை பலரும் கவனித்தனர். அது மிகவும் மெல்லிய நூலினால் உத்தரத்தில் கட்டப்பட்டு இருந்தது. அதன் மூலையில் விளக்குகள் வேறு எரிந்து கொண்டு இருந்தன. அது எப்படி அங்கு தொங்குகின்றது என்பதைப் பார்த்தவர்கள், பாபா அதன் மீது உறங்குவதையும் கண்டனர். அனைவருக்கும் ஒரே ஆச்சரியம் . ஏணி கூட இல்லாமல் அதில் ஏறி எப்படி பாபா உறங்குகின்றார்.
அந்த அதிசயத்தைக் கேள்விப்பட்ட தாஸ் கணுவுக்கு தானும் அதைப் பார்க்கும் அவல் வர அங்கு சென்று அந்த காட்சியைக் கண்டு வியந்து நின்றார். அதை தெரிந்து கொண்ட பாபா அவர் மீது கோபமுற்று அந்த உஞ்சல் பலகையை எடுத்து உடைத்து விட்டார். எப்படி அவரால் உத்தரத்தில் அத்தனை மெல்லிய நூலில் கட்டப் பட்டு இருந்த பலகையில் உறங்குவது சாத்தியமாயிற்று? எரியும் விளக்கு காற்றில் ஆடி ஆடி கயிற்றை அறுத்து விடாதா? பாபா அஷ்டமா சித்தி என்ற எட்டு சித்திகளையும் பெற்றவர். அவர் தன்னுடைய சக்தியை மற்றவர்களுக்குக் காட்டி பெருமை பட்டது இல்லை. அதுதான் இதற்கும் காரணம்.
 சம்பவம்-1
தினமும் மத்தியானத்தில் ஒன்று முதல் இரண்டு மணி வரை எவரையும் பாபா பார்க்க மாட்டார். அவர் உள்ளே அமர்ந்து கொண்டு முடிச்சுப் போட்டு வைத்துள்ள ஒரு வெள்ளை துணியை அவிழ்பார். அதில் பலவிதமான நாணயங்கள் இருக்கும். அவற்றை எடுத்து தடவிக் கொடுப்பார். இது காக்காவுக்கு, இது பாபுவிற்கு, நானாவிற்கு என தானே கூறிக்கொண்டே அதை தேய்ப்பார். எவராவது எதேர்ச்சையாக வந்து விட்டால் அவசரம் அவசரமாக அவற்றை மீண்டும் மூடி வைத்து விடுவார். அந்த நாணயங்களை தடவித்தந்தபடி எதையு கூறிக்கொண்டு இருந்தது மந்திரம் ஓதுவது போல இருக்கும். ஆனால் எதற்காக அப்படி செய்தார் என்பது எவருக்குமே தெரிந்தது இல்லை. பாபாவும் கூறியது இல்லை.
 சம்பவம்-2
ஒரு நாள் தாஸ் கணுவுடன் பாபா பேசிக்கொண்டு இருந்தார். அப்போது பாபா ஒரு சம்பவத்தைப் பற்றி அவரிடம் கூறினார் ' நான் புந்தம்பாவில் இருந்தேன். அப்போது இரண்டு பிரிவினர்களுக்கு இடையே சண்டை நடந்து கொண்டு இருந்தது. அங்கு ஒரு குடுவை நிறைய நாணயங்கள் இருந்தன. அதை எடுத்துக் கொள்வதில்தான் அவர்களுக்குள் சண்டை. அதைப் பார்த்த நான் அவர்களுக்குத் தெரியாமல் அந்த குடுவையை எடுத்து வந்து விட்டேன். அவர்கள் சண்டை போட்டு முடிந்த பின்னர்தான் தமக்கு கிடைக்க இருந்த பணம் பறி போய் விட்டதுஅவர்களுக்கு தெரிந்தது. அதைக் கண்டு புலம்பினர். நான் நினைத்தேன்
நான் யார்?
இந்த செல்வம் என்பது என்ன?
அது எவருடையது?
எதற்காக அதை அடைய அவர்கள் சண்டை போட வேண்டும்?
நானே அந்த குடுவையின் சொந்தக்காரன், நானே அந்த குடுவையும் கூட!
அதன் அர்த்தம் தனக்கு பொருள் மீது ஆசையில்லாத நிலையையும், அதை அடையவே இந்த உலகில் நிலவும் போட்டியையும் பொறாமையும் குறிக்கும்.
இன்னொருமுறை பாபா கூறினார்
' என்னுடைய தாயார் தனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்ததை ( பாபா பிறந்ததை) எண்ணி மகிழ்ந்தாள் , ஆனால் நானோ அவளுடைய மகிழ்ச்சியைகண்டு வியந்தேன்.
என்னை அவள் எப்போது உற்பத்தி செய்தாள்?
நான் உண்மையிலேயே அவளால உற்பத்தி ஆனவனா?
நான் முன்னரே இந்த உலகில் இல்லாதவனா ?
அதற்காக அவள் ஏன் இப்படி மகிழ்ச்சி அடைய வேண்டும் ?
ஒரு சமயத்தில் பாபா தானே கடவுள் என்றார். '' என்னைப் பார், நான் சாக்ஷாத் கடவுளே'
மற்றொருமுறை எவரோ ஒருவர் பாபாவிடம் வந்து 'சிரா' என்ற இனிப்பு பண்டத்தை வழங்கினார்கள். பாபா தாஸ் கணுவிடம் உனக்கு அது கிடைத்ததா என்றார். அவருக்கு என்னைக் கண்டால் பிடிக்காது என்பதினால் கொடுக்கவில்லை என்றார் தாஸ் கணு. அதற்கு பாபா கூறினார் '
எவரும் உனக்கு எதிரானவர்கள் என்று கருதாதே
உனக்கு எவர் எதிரியாக இருக்க முடியும்?
எவர் மீதும் வெறுப்பு உணர்வு கொள்ளாதே
அனைவரும் ஒருவர்தான்.
சாயிச்சரித்திரத்தின் 18 -19 ஆம் பகுதியில் சாயிபாபா மற்றவர்களை குறை கூறக்கூடாது என்பதையும், ஆத்மா முன்னேற்றத்தை பற்றியும், நல்லவற்றையே நினைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது போல் அது இருந்தது.
பாபா கூறினார் ' உன்னைப் பற்றி மோசமாக எவர் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் கூறட்டும். நீ பதில் கூறாமல் அதை பொறுத்துக் கொண்டு இருக்கப் பழகி விட்டால் நீ மன மகிழ்ச்சி பெறுவது மட்டும் இன்றி என்னிடம் நெருங்கி விடுவாய்.' பாபாவின் அறிவுரைப்படி அனைத்திலும் , அனைவரிடத்துள்ளும் ஒரே கடவுள் உள்ளார் என்னும்போது அவருடையஅறிவுரைகளை கடைபிடித்து மன மகிழ்ச்சி அடையலாமே?
ஹேமபந்த் என்பவர் சாயி சத்சரித்திராவில் எழுதி உள்ளார் ' பக்தர்களின் வேண்டுகோட்களை நிறைவேற்றும் சத் குருவே, உன்னுடைய பாத கமலங்களை நாங்கள் என்றும் மறவாது இருக்க வேண்டும். இந்த சம்சார சாகரத்தில் பிறப்பையும் இறப்பையும் கொண்டுள்ள எங்களுக்கு இனி பிறவாமை என்ற நிலைக்கு அருளைத் தாரும், அதை உணர்ந்து கொள்ளும் மனதை தா , அலை பாயும் மனதை தடுத்து நிறுத்தாவிடில் ஆத்மா ஞானம் பெற முடியாது. இறுதியில் எம்முடன் துணைக்கு எம் மனைவியோ, மகனோ இல்லை நண்பர்களோ வர முடியாது என்பதுதெரிகின்றது .
ஆகவே நீங்களே எமக்கு விடுதலை தந்து முக்தியை தர வேண்டும். எங்களுடைய வாய் ஓயாமல் உன் பெயரை உச்சரித்தபடியே இருக்க வேண்டும், எங்களுடைய மனதில் தூய எண்ணங்களே நிறைந்து இருக்க வேண்டும், சொத்து, சுதந்திரம் என அனைத்தையும் துறந்து தலை கனத்தையும் நாங்கள் அழித்துக் கொள்ள வேண்டும். அந்த நிலையைத் தந்து என்றும் உன் நினைவுடனேயே இருக்க எமக்கு அருள் புரிய வேண்டும். அலை பாயும் எங்கள் மனதை தடுத்து நிறுத்து, எண்களின் அறியாமையை விலக்கு, உன்னுடைய அமிருதம் போன்ற லீலைகளை படித்து மனம் மகிழும் நிலையைத் தா. என்றும் உன் கருணை எங்களுக்கு இருக்கட்டும்.
(Translation into Tamil : Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.