Wednesday, September 29, 2010

If you reveal it to any one, you will die


பாபா துவாரகாமாயியில் சமாதி அடைந்த அன்று பாயாஜியுடன் இருந்தார். அங்கு இருந்த காகா திக்ஷிதை அங்கிருந்து போகச் சொல்லி விட்டு பாயாஜிக்கு ஒரு நீதிக்கதையை கூறினார். அதன் பின் ' இதை நீ எவருக்காவது கூறினால் நீ மடிந்து விடுவாய். நான் போகின்றேன். வாடாவை நீ கவனித்துக் கொள். அனைத்து பிராமணர்களும் இங்கு என்னுடன் இருப்பார்கள். ' இப்படிக் கூறி விட்டுசமாதி அடைந்தார்.
அந்த வார்த்தைகளைக் கூறிய பின் நானா நமோல்கர் பாபாவின் வாயில் சிறிது தண்ணீர் ஊற்றினார். பாபாவின் முகவாய்கட்டையை கையில் பிடித்துக் கொண்டு இருந்த பாயாஜி மீது சாய்ந்த பாபா அவர் தோளின் மீதே சமாதி அடைந்தார்.
பாபா மறைந்த பின் ஒரே குழப்பம் . பாபாவின் அனைத்து சொத்துக்களையும் அரசு எடுத்துக் கொண்டது. முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் அவருக்கு இறுதி காரியத்தை செய்வதில் தகராறு ஏற்பட்டது. பாபா உயிருடன் இருந்தபோது அவருடன் இருந்து அவருடைய சொத்தை அனுபவித்தவர்கள் பணத்தைக் கொண்டு தனி இடம் கட்டி அதில் பாபாவை புதைக்க வேண்டும் என்றனர். ஆனால் பாயாஜி பாபாவின் விருப்பபடியே அனைத்து இறுதி காரியங்களையும்தாகி வாடாவில் செய்து அவரை அங்கேயே அடக்கம் செய்தார்.
கோபர்கோனை சேர்ந்த குல்கர்னியும், ரஹாதா பௌஜிதார் சாகா என்பவரும் இந்துக்களும் முஸ்லிம்களும் அங்கு கூடி தமது கருத்தைக் கூறுமாறும், எந்த கருத்துக்கு ஆதரவு அதிகம் உள்ளதோ அதன்படி செய்யலாம் என முடிவு செய்தனர்.
முஸ்லிம்கள் நூறுபேர் கையெழுத்து போட்ட மகஜரைத் தர , பாயாஜி இருநூறு பேர்கள் கையெழுத்து போட்ட மகஜரைத் தர, அவர்கள் கருத்துக்கு அதிக ஆதரவு இருந்ததால் அதன்படி பாபாவை அடக்கம் செய்தனர். பாயாஜி தந்த மகஜரில் திஷிட், பாபு சாஹேப் ஜோக், பாலா சாஹேப் போன்ற பிரபலமானவர்கள் கையெழுத்து போட்டு இருந்ததினால் அதற்கு எதிர்ப்பு கிடைக்கவில்லை. பாபாவின் உடல் தாகி வாடாவில் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
(Translation into Tamil by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.