Tuesday, September 21, 2010

I will not give Udi


பாயாஜியின் வாழ்வில் சில முக்கியமான சம்பவங்கள் நடந்தன. பாயாஜி பாபாவுக்கு மிகவும் நெருக்கமான பக்தர். அவர் மீது பாபாவுக்கு நிறையவே அன்பு உண்டு. அவருடைய வாழ்வில் நடந்த இரு முக்கியமான நிகழ்சிகள் இவை.
1) பாயாஜி பயிர் தொழில் செய்து வந்தார். ஒரு முறை பலரும் தத்தம் வயல்களில் கரும்பை பயிர் செய்தனர். அப்போது பாயாஜிக்கும் அதை செய்யத் தோன்ற பாபாவிடம் கேட்டதற்கு பாபா வேண்டாம் என்று கூறி தடுத்து விட்டார். ஆனாலும் ஒரு முறை ஆவல் மிகுதியினால் கரும்பை பயிரிட்டு விட்டார். விளைவு? முந்நூறு ரூபாய் நஷ்டம் . பாபாவின் பேச்சை மீறியதற்கு கிடைத்த பரிசு!
2) 1913 ஆம் ஆண்டு பாயாஜியின் தந்தை எப்போதும் போல குதிரை மீது சவாரி செய்து விட்டு வீடு திரும்பினார். வீடு வந்ததும் பக்கவாத நோய் வந்து படுக்கையில் விழுந்தார். பாயாஜி பாபாவிடம் சென்று உடிப் பிரசாதம் கேட்டார். பாபா அதற்கு ' உனக்கு நான் உடி தரமாட்டேன். அல்லா மாலிக் ஹை ' என்று கூறி விட்டார். பாயஜிக்கு மிகவும் வருத்தமாகி விட்டது. ஆனால் மூன்றாம் நாளே அவருடைய தந்தை காலமாகி விட்டார்.
பாயாஜி தினமும் மசூதிக்குச் சென்று பாபாவின் கால்களை மசாஜ் செய்து விடுவார். அவருக்கு தான் மிகவும் பலசாலி என்ற எண்ணம் உண்டு. மசாஜ் செய்த பின் பாபாவை தூக்கிக் கொண்டு போய் துனியின் முன்னால் அமர வைப்பார். ஒரு நாள் துவாதசி. அன்று எப்போதும் போல மசாஜ் செய்த பின் பாபாவை தூக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. அன்று பாபா அவருக்கு இரண்டு பாடங்களை போதித்தார் . முதலாவது கர்வம் கொள்ளாதே. இரண்டாவது உன் தந்தையின் மறைவுக்கு வருத்தப் படாதே. பாபா கூறினார் ' எதற்காக நீ அவர் மறைவுக்கு வருந்த வேண்டும். அவர்தான் அடுத்த ஐந்து மதங்களில் திரும்பி வரப் போகின்றாரே.
பாயஜிக்கு அடுத்த ஐந்து மாதத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
(Translation into Tamil by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.