Wednesday, September 15, 2010

Karma Part-1

KARMA  ( PART-1)

கர்மா
அன்பானவர்களே,
சாயி பாபா தாஸ் குண மகராஜுக்கு செய்த போதனைகளைப் படியுங்கள். இந்த உபதேசங்களை படிக்கையில் நமது மனம் நம்மை அறியாமலேயே ஆனந்தம் அடைவதைக் காணலாம்.
மனிஷா

ஒரு நாள் நானா சாஹெப் சாயிபாபாவிடம் வந்து அவருடைய கால்களில் விழுந்தார். தனக்கு மன நிம்மதி இல்லை என்றும், வாழ்கை வெறுப்பாக உள்ளது என்று கூறி ' பாபா எனக்கு வாழ்கை வெறுத்து விட்டது. சாஸ்திரங்கள் வாழ்க்கையே ஒரு மாயை எனக் கூறுகையில், எனக்கு இனியும் அதனுடன் வாழ விருப்பம் இல்லை. என்னை இந்த அடிமை விலங்குகளில் இருந்து விடுவிப்பீரா என் அன்பார்ந்த சகோதரரே. எத்தனைக்கு எத்தனை ஒருவன் இன்பத்தை எதிர்பார்கின்றானோ அத்தனைக்கத்தனை துன்பத்தை அல்லவா அடைகிறான்' என்றார்.
அதைக் கேட்ட பாபா சிரித்தார் ' நானா நீ மிகவும் எளிமையானவன். உனக்கு இந்த முட்டாள்தனமான யோசனை எங்கிருந்து வந்தது? என்னையும் சேர்த்தே சொல்கின்றேன் , நாம் வாழும் இந்த இகலோக வாழ்கையில் செய்ய வேண்டியவற்றை செய்யாமல் இருக்க முடியாது. பேராசை, பொறாமை, தலைகனம், ருசி, பார்வை, மனகனவுகள் போன்ற அனைத்தையும் கொண்டதே ஒருவரின் வாழ்கை. அதனால் பீடிக்கப்பட்டு உள்ளவர்களின் மனமும் அவைகளிடம் சிக்கிக் கொள்வது இயற்கையே. அவற்றை நம்மால் நம்முடைய வாழ்வில் இருந்து எளிதாக பிரித்து வைக்க முடியாது. அது போல நமக்கு உள்ள உறவிர்னர், சகோதர சகோதரிகள் போன்ற அனைவருமே நம்முடைய வாழ்வின் ஒரு அங்கங்கள்தான். அவர்களுடைய தொடர்புக்களை வேண்டாம் என்று ஒதுக்கி விட முடியாது, வேண்டும் எனவும் வைத்திருந்து அவஸ்தைப் படுவதே இந்த வாழ்கையின் தத்துவம்.
நானா மீண்டும் கூறினார் , ' பாபா பூர்வஜன்ம வாழ்கையை கடவுள் நடத்தி விட்டார். ஆனால் இந்த ஜென்மத்தில் எனக்கு அது வேண்டாம். என்னை இந்த சம்சார சாகரத்தின் துயரங்களில் இருந்து விடுதலை செய்வீர்களா?
பாபா மீண்டும் அதைக் கேட்டு சிரித்து விட்டுக் கூறினார் ' நானா , நீயே இந்த பிறப்பிற்கான காரணகர்த்தா. ஆகவே அவற்றை அத்தனை சுலபமாக விலக்கி வைக்க முடியாது. நம்முடைய இன்ப துன்பங்கள் அனைத்திற்கும் காரணமே நம்முடைய பூர்வ ஜென்ம கர்மாதான். இந்த பூமியில் பிறந்து விட்ட எவருமே, மனிதர்கள் ஆனாலும் சரி, புழு பூச்சிகள், விலங்குகள் என அனைத்து உயிருள்ள ஜீவன்களும் கர்ம வினையை அனுபவித்தே தீர வேண்டும். அதை விலக்கி வைக்க முடியாது'
அதற்கு உதாரணமாக பாபா மேலும் பலவற்றைக் கூறினார். .... ' விலங்குகள், புழு பூச்சிகள், சன்யாசிகள், சாதுக்கள், யோகிகள், ஊர்வனவைகள், திருமணம் ஆனவர்கள், மனிதர்கள் என அனைவரும் அவரவர் கர்மாக்களுக்கு ஏற்ப அவர்களுக்கு விதிக்கப்பட்டு உள்ள பிறப்பு எடுத்து அவர்களுக்கு கிடைத்துள்ள வாழ்கையில் வாழ்ந்து வருகின்றனர். நானா உனக்கு மட்டும் தனியான வாழ்வு கிடைக்காது. விலங்குகளிலும் பேதத்தைப் பார். சில காய்கறிகளை உண்கின்றன. சில அழுகிப்போன பதார்த்தங்களை, சில மாமிசங்களை உண்ணுகையில், அன்னப் பறவையைப் பார், அவைகளுக்கு தாமரை இலைகளைத் தின்னும் பாக்கியம் உள்ளது .
கர்மா என்பது அனைத்து ஜீவன்களும் உண்ணும் உணவை மட்டும் அல்ல அவரவர்களுடைய உடல் அமைப்பையும் நிர்ணயித்து உள்ளது. இன்னொரு உதாரணம் . பயங்கரமான புலியைப் பார். சில காடுகளில் சுதந்திரமாகத் திரிகையில், இன்னும் சில மனிதர்கள் கட்டிய சங்கிலியில் இருந்து கொண்டு ஊர் ஊராகச் சென்று அவர்கள் ஆடுவிக்கும்படி ஆடிக்கொண்டு உள்ளன. நாயைப் பார். ஒரு சில மிகப் பெரிய பணக்காரர் வீடுகளில் சுகமாக வசித்துக் கொண்டு இருக்கையில், ஒரு சிலநாய்கள் தெருத் தெருவாக உணவைத் தேடி அலைந்து கொண்டு உள்ளன.
பசுக்களைப் பார். சிலவற்றுக்கு ஆரோகியமான உணவு கிடைக்கையில், ஒரு சில தெருவில் கிடைப்பதை உண்டு வாழ்கின்றன. ஒரு சிலர் பணக்காரர்கள் , என்னும் பலர் ஏழைகள் , குழந்தை இல்லாதவர், குழந்தைகள் உள்ளவர் என்று மனிதர்களில்தான் எத்தனை பேதங்கள் உள்ளன ......
இந்த கட்டுரை பதினோரு பாகங்களைக் ( Part -1 to Part -11 ) கொண்டது.

பாகம்-2 ............தொடரும்
(Tamil Translation : Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.