Wednesday, September 15, 2010

Karma -Part -3



பாபா தொடர்ந்து கூறினார், 'நானா, ஒருவர் செய்யும் அன்னதானம் மூன்று வகையானதாக உள்ளது . அவை
1) பலருக்கும் தருவது
நீங்கள் பணக்காரர் என்றால் ஜாதி பேதமின்றி, ஆயிரக்கணக்கானவர்களுக்கு உணவு தர வேண்டும். அதற்காக கடனை வாங்கி செலவு செய்யக் கூடாது.
2) தொடர்ந்து தருவது
ஏழைகள், பிச்சைகாரர்கள், தனது படிப்பிற்காக ஏதேனும் தொழில் செய்து கொண்டு படிக்கும் மாணவர்கள் போன்றவர்களுக்கு தருவது.
3) எப்போதாவது தருவது.
பண்டிகைகள், திருமணங்கள் மற்றும் மத சம்பந்தமான விழாக்கள் என்பவற்றில் உறவினர் , நண்பர்கள் என பலரையும் அழைத்து உணவு தருவது
அது போலவே நாம் தரும் துணிகள் தானமும் உள்ளன.
நம்மால் முடிந்த அளவில் மட்டும் துயரத்தில் உள்ளவர்களுக்கு உதவ வேண்டும். ஒருவர் பதவியில் உள்ளபோது அதை துஷ்ப்ரயோகம் செய்து பணம் பெறக்கூடாது . செய்யும் தொழிலுக்கு ஏற்ற வேலையை ஒரு கடமையாக செய்ய வேண்டும். ஒருவரை அவமானப்படுத்துவதோ, அளவுக்கு மீறிய அலங்காரங்களை செய்து கொள்வதோ தவறு.
தான் செய்யும் நல்லது கேட்டதைப் பற்றி ஒருவர் அறிந்து இருக்க வேண்டும். ஒருவருக்கு குழந்தை பிறந்தால் அதற்காக கர்வம் கொள்ளக் கூடாது. வேலையாட்கள், வேலைக்காரிகள் போன்ற அனைவரையும் அன்புடன் நடத்த வேண்டும். நமக்கு நடக்கும் நல்லவை கெட்டவை போன்ற அனைத்துக்கும் காரணம் பூர்வ ஜென்ம கர்மாகளே. எவருக்காவது தனது உறவினரோ, நண்பரோ பூர்வ ஜென்மத்தில் யாராக இருந்திருந்தார்கள் என்பது தெரியுமா? அவர்கள் மறைந்த பின் அவர்களுடன் அந்த பிறவியும் சென்று விடுகிறது அல்லவா. நம்முடைய தொடர்ந்த ஆசைகள்தான் நமக்கு தொடர்ந்து பிறப்புக்களை ஏற்படுத்திக் கொண்டே உள்ளது. எவன் ஒருவன் தனது சுற்றார், உறவினர், குழந்தைகள் என்பார்களைக் கொண்டு தற்பெருமை கொள்கின்றானோ அவனுக்கு மனதில் முடிவில்லா ஆனந்தம் கிடைக்காது.
நாம் ஒரு தாங்கும் இடத்துக்குப் போய் இருந்த பின் நமதல்ல என திரும்பி வருவதைப் போலவே நம்முடைய ஆசைகளையும் துறந்து விட வேண்டும். நம்முடைய கடமையை நாம் தொடர்ந்து செய்து கொண்டு இருக்க வேண்டும். நாம் அனைவரையும் படைத்தது ஒரே ஒரு கடவுள்தான். ஆனால் நமக்கு நம்மால் பிறந்த குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து , நல்ல கல்வி அறிவு தந்து, அளவுக்கு மீறிய அளவு பணம் தராமல் , பிற்காலத்தில் அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து வைத்திருப்பது நம் கடமை. நான் செய்தேன் என இறுமாப்பு கொள்வது தவறு. கடவுள் நமக்குக் கொடுத்ததை நாம் பிறந்து விட்டதினால் செய்ய வேண்டிய நம்முடைய கடமையின்படி செய்து விட்ட திருப்தியுடன் வாழ பழக்கிக் கொள்ள வேண்டும்.
நாம் செய்யும் எந்த செயலிலும் நல்ல அறிவோடு வேலை செய்து அதை வெற்றி அடையச் செய்ய வேண்டும். இந்த உலகத்தில் இருந்து நம்மை தனிமயக்கிக் கொள்ளக் கூடாது. நம்முடைய கடமையை செய்தபின் அது தரும் நல்ல பலனைப் பார்த்துவிட்டு நம்முடைய கடமையை செய்து விட்ட மன திருப்பதி கொள்ளவேண்டுமே தவிர அதற்காக கர்வப்படக் கூடாது.
நாம் உயிருள்ளவரை நமது உடலை பேணிக் காக்க வேண்டும். இறந்த பின் அழக் கூடாது. தனிமையில் வந்தவர் தனியாகவே போவார். இந்த உடலை இயக்குவது ஐந்து இந்திரியங்களே. எப்படி காற்று காற்றுடன் கலந்து விடுகின்றதோ, தீ, அணைந்த பின் அடங்கி விடுகின்றதோ, அது போலத்தான் அந்த ஐந்து இந்திரியங்களும் தாம் பிறப்பு எடுத்ததற்கான வேலையை முடித்துக் கொண்டு திரும்பச் சென்று விடுகின்றன. இந்த உடல் மண்ணுக்குச் சொந்தமானது. ஒருவர் மறைந்தால் அடுத்தவர் பிறக்கின்றார். ஆகவே பிறந்தாலும், இறந்தாலும் அழுவது தவறு, நாம் நமது மனதை அந்த இரண்டு நிலைகளிலும் ஒன்றாகவே வைத்து இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.'
பாபா தொடர்ந்து உதாரணங்களைத் தந்தார். ' இந்த பூமியில் விதையைப் போட்டால் அது விளைந்து பயிராக உதவும் வகைக்கு வானம் மழை பொழிகின்றது , சூரியன்ஒளி தருகின்றது. சில நாட்களில் விதைத்த விதை பயிராகின்றது. அப்போது அந்த சூரியனும், வானமும் எங்களால்தான் அது நடந்தது என குதித்து தாண்டவம் ஆடுகின்றனவா ? அவற்றைப் போலவே நாமும் இருக்கப் பழகிக் கொண்டால் துன்பம் எது, துயரம் எது?'
அவற்றைக் கூறிய பின் தான் இன்னும் பலவற்றை அவருக்கு பின்னர் உறைப்பதாக பாபா கூறியவுடன் அவர் கால்களை பிடித்துக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டார் நானா. அவர் கூறினார் ' பாபா உங்களுடைய உபதேசங்கள் என்னுடைய அறியாமையை ஓரளவு விலக்கி விட்டது.' அதன் பின் நிம்மோன்கரும் அவரும் பாபாவை வணங்கிவிட்டுச் சென்றனர். பாபாவின் உபதேசத்தைக் கேட்ட தாஸ் குண மகராஜ் ' எவர் ஒருவர் பாபாவின் இந்த உபதேசங்களைப் படிகின்றார்களோ அவர்கள் அமிருதத்தைப் பருகியது போன்ற நிலையை அடைவார்கள்'--
பாகம்-4 ....தொடரும்......
(Translation in tamil : Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.