Monday, March 1, 2010

B.V Narsimha Swami ji-Swami Ji's Mahasamadhi Continued- Part 2.

மகாசமாதி தொடர்ச்சி........பாகம்-2
தான் மகாசமாதி அடைவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் நரசிம்ம சுவாமிஜி கூறி இருந்தார் :- சாயி நாதரின் ஆன்மீக பயணத்தில் முக்கிய பங்கு அந்த இயக்கத்தை நிருவியவறுக்கு உள்ளது . ஆகவே சாயி ஆன்மீக இயக்கத்திக்கு தலைவராக சாயி சமாஜத்தை நிறுவியவரே இருப்பார் . அந்த இயக்கத்தை வழி நடத்திச் செல்ல வசதியாக இருக்க ஆலயத்தின் பின்புறம் அமைக்கப்பட உள்ள குடுசையில் அவர் வசிப்பார் .

அந்த இடத்தில் ஒரு வாசகசாலை , ஆஸ்பத்திரி , அச்சகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த கலைக்கூடம் , வெளி ஊர்களில் இருந்து வருபவர்கள் தங்க இடம் , குளியல் அறை , ஏழைகளுக்கு உணவு தரும் இடம் போன்றவை உள்ளன . தரிசனத்திற்கு வருபவர்களுக்கு கண்டிப்பாக பிரசாதம் தரப்படுகின்றது . 1957 ஆம் ஆண்டு நடந்த ஆராதனை விழாவில் ஏழுக்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள் வந்தனர் . 1957 ஆம் ஆண்டு முதல் அகில இந்திய சாயி சமாஜத்தின் துவக்கத்தை குறிக்கும் வகையிலும் , அதை நிறுவியவரின் நினைவாகவும் ஆராதனை விழா நடைபெறுகின்றது .

அவருக்கு எழு தடவைகளுக்கு மேல் விபத்துக்கள் ஏற்பட்டு உள்ளன . அவருடைய இயக்கத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளன . ஆனாலும் அவை எதுவும் அவரை சோர்ந்து போக விடவில்லை .
அந்த இடத்திற்கு விஜயம் செய்த ரிகே அவர்கள் கூறினார்கள் ‘’ இந்த இடத்தில் சாயி வசிக்கின்றார் . இங்கு தூய்மையான தெய்வீகம் நிலவுகின்றது . இது இன்னொரு துவாராகாமாயி ’’.
எண்பத்தி மூன்று வயது வரை வாழ்ந்த நரசிம்மஸ்வாமி கடந்த இருபது ஆண்டுகளில் நமக்கு அறிவு , திறமை மற்றும் அனுபவம் என்பது என்ன என எடுத்துக் காட்டியது மட்டும் இல்லாமல் , தூய்மையான தபம் செய்பவர்களுக்கு கிடக்கும் பரிசும் என்ன எனக் காட்டி உள்ளார் .

நரசிம்மஸ்வாமி விட்டுச் சென்று உள்ள சாயி இயக்கத்தை இனி நாம்தான் எடுத்துச் சென்று முன்னேற வேண்டும் .பாபாவின் போதனைகளையும் நரசிம்மசுவாமியின் அருளையும் , அன்பையும் நம்முடன் எடுத்துச் சென்றவாறு இந்த உலகில் பரவி உள்ள பசி , பட்டினி , கருத்து வேறுபாடுகள் , மத விரோதம் , குறுகிய எண்ணங்கள் , அறியாமை , தேச விரோத செயல்கள் போன்றவற்றை விலக்க முயலவேண்டும் . எல்லாவற்றுக்கும் மேலாக முதலில் நாம் நம்மை மாற்றிக் கொள்ளவேண்டும் . அவர் எழுதி உள்ள அஸ்டோத்திரம் , சஹஸ்ரநாமம் போன்றவற்றை நாம் உச்சரிக்கும் பொழுது அவருடைய ஆத்மா நம்முடன் இருப்பதை உணர முடியும் .

மற்றும் அவர் படைத்த பல படைப்புக்களில் இன்னமும் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார் என்றால் அதன் காரணம் அவருடைய தூய்மையான பக்தியால் எழுந்தவை அவை . பூத உடலை துறந்து விட்டாலும் இன்றும் அவர் வாழ்ந்து இருந்த குடிலில் சூட்சமமாக வாழ்ந்து கொண்டு இருப்பதை நாம் உணர முடியும் .
ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்த பின்

நரசிம்மஸ்வாமி மஹா சமாதி அடைந்தபின் அவர் வெற்றிடத்தை விட்டுச் சென்றார். ஆலயத்திற்கு வருபவர் எண்ணிக்கை குறைந்தது. ஆனால் அது தற்காலிக நிலைதான். மெல்ல மெல்ல மீண்டும் சாயி சமாஜத்தில் கூடம் நிறம்பி வழியத் துவங்கியது.

நரசிம்மஸ்வாமி புத்தகப் பிரியர். அவர் ஆறாயிரத்துக்கும் அதிகமான புத்தகங்களை வாங்கி வாசக சாலையில் வைத்திருந்தார். அவர் பெயரால் அமைந்த வாசக சாலையை 1957 ஆம் ஆண்டு , ஆராதனை நாளன்று, அன்றைய மத்திய உள்துறையின் இணைய அமைச்சரான பீ. என். தத்தார் என்பவர் திறந்து வைத்தார். அது முதல் வருடாவருடம் நிறுவனருடைய நினைவாக ஆராதனை விழா நடந்து வருகின்றது.

நரசிம்மஸ்வாமிக்கு பஜனைகளில் ஆர்வம் அதிகம் உண்டு. துவாரகாமாயி பிரதம சிஷ்ய கோஷ்டி என்ற அமைப்பினை நடத்தி வந்த சுந்தரேச ஐயர் என்பவர் வாராவாரம் சனிக்கிழமைகளில் சாயி சமாசத்துக்கு வந்து பஜனைகளை நடத்தினார். 1959 ஆம் ஆண்டுமுதல் தனுர்மாத விடியற்காலை பஜனைகளும் துவங்கின. 1940 ஆம்ஆண்டுகளில் நரசிம்மஸ்வாமி சாயி லட்சார்சனைகளை துவக்கியது அறுபத்தி ஆறாம் ஆண்டுகளில் சாயியின் கோடி அர்ச்சனைகளாக மாறின.

1958 ஆம் ஆண்டில் பதவியில் இருந்து ஒய்வு பெற்ற ராமசாமி ஐயங்கார் என்பவர்
சீரடியில் இருந்து துனியின் நெருப்பைக் கொண்டு வந்தார்। அதை ஆலய ஹோமகுண்டத்தில் போட்டு இன்றுவரை தொடர்ந்து எரிந்து கொண்டிருக்க வைத்துள்ளனர். என். கே. சுப்பாராவ் என்ற மற்றொரு பக்தர் சாயியின் துவாரகாமாயி படத்தை தந்து, அந்த ஹோமகுண்டம் எரிந்து கொண்டிருக்க தனி அறையையும் கட்டித் தந்தார். முன் கூடத்தில் இருந்த கிருஷ்ணா-ராம-சிவா-மருத்யாடி ரூப சாயியின் படம் ஆலயத்தின் பின்புறம் கொண்டு செல்லப்பட்டு குருசதன் என்ற பெயரில் மாறியது. 1962 ஆம் ஆண்டில் பல் சிகிச்சை மையமும் திறந்து வைக்கப்பட்டது .
.........தொடரும்

Posted so Far :

B. V Narsimha Swamiji-Introduction .
Chapter 1-B.V Narsimha Swami ji-Birth and Childhood.
Chapter 2.-B.V Narsimha Swami ji -Life in Salem.
Chapter 3-B.V Narsimha Swami ji-Public Life.
Chapter 4-B.V Narsimha Swami ji- Turning Point .
Chapter 5.B.V Narsimha Swami ji-In Search of God.
Chapter 6. B.V Narsimha Swami ji -Life in Ramana Maharshi Ashram.
Chapter 7. B.V Narsimha Swamiji-Towards Pandharpur.
Chapter 8. B.V Narsimha Swami ji -From 1932-1934 part 1.
Chapter 9.B.V Narsimha Swami ji-From 1932-1934 continued.
Chapter 10.B.V Narsimha Swami ji-Life in Sakori.
Chapter 11. B.V Narsimha Swami ji-Face to face with Master .
Chapter 12. B.V Narsimha Swami ji-Sai Prachar.
Chapter 13.B.V Narsimha Swamiji-Baba Himself Favors the Movement.
Chapter 14. B.V Narsimha Swami ji-Early Days of His mission .
Chapter 15. B.V Narsimha Swami Ji-Only Aim.
Chapter 16.B.V Narsimha Swami ji-Early Days of His Mission
Chapter 17.B.V Narsimha Swami ji -Lockets and Calenders.
Chapter 18. B.V Narsimha Swami ji-Lectures and Discourses.
Chapter 19.B .V Narsimha Swami ji-Meeting The Disciple.
Chapter 20. B.V Narsimha Swami ji-Efficient System For Sai Prachar-Part 1.
Chapter 21.B.V Narsimha Swami ji-Efficient System For Sai Prachar-Part 2.
Chapter 22.B.V Narsimha Swami Ji -Swami Ji's Mahasamadhi Part-1.

Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.