Sai Charita - 12
"ஸ்ரீ ஸாயி ஸத்சரிதம்."
[மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]
(Converted into Two line Tamil verse by : Dr. Sankarkumar, USA)
இலம்பகம் – 12
ஸாயி லீலைகள்
[1.காகா மஹாஜனி, 2. வக்கீல் துமால், 3. திருமதி நிமோண்கர், 4. முலே சாஸ்திரி, 5. ஒரு டாக்டர் ஆகியோரின் அனுபவங்கள்.
******
அடியவர்எவ்விதம் பாபாவின்தர்பாரில் வந்தனர்மகிழ்ந்தனர் என்பதைக்காண்போம்.
---
தீயவர்அழிவும் நல்லோர்நலனுமே இறையவதாரம் செய்திடும்வேலை
ஞானியர்பணியோ இதனினும்வேறாம் நல்லவர்கெட்டவர் இருவரும்ஒன்றே
தீயவர்செய்கையைக் கண்டவர்வருந்தி நல்வழிப்படுத்தும் பணியினைக்கொள்வார்
உலகவாழ்வெனும் கடலினைக்குடிக்கும் அகஸ்தியர்போல இவர்செயல்அமையும்
இருளைவிரட்டிடும் ஆதவன்போலிவர் அறியாமையழித்து ஒளிபெறச்செய்வார் இறைவனும்ஞானியும் ஒருவரேஆவார் இத்தகுஞானியே நம்மவர்பாபா [650]
ஞானம்நிரம்பியும் உலகினைநேசித்தும் பற்றுதல்இன்றியே அவரும்வாழ்ந்தார்
அருளெனும்பொக்கிஷக் கதவவர்திறந்தார் அடியவர்க்குதவிட என்றுமேவிழைந்தார்
ஆயினும்அவர்தம் திருவுளப்படியே அனைவரும்அங்கே வரவும்முடிந்தது
நேரம்இன்னும் வரவில்லைஎன்றால் அவரதுநினைவே ஒருவர்க்குவாராது
பார்க்கவிழைந்தவர் பலரும்அவரது தரிசனம்இன்றியே நாளைப்போக்கினர்
பாலுக்கலைபவர் வெண்ணையைக்கொண்டு மகிழ்வதுபோலே தரிசனம்வேண்டிக்
காத்தவர்க்கிந்த லீலைகள்உதவும் சென்றவர்யாரும் தங்குதல்கூட
ஸாயியின்ஆணை இருந்தால்மட்டுமே! செல்வதும் இருப்பதும், கிளம்புதல்அனைத்தும்
அவர்தம்ஆணையின் பேரிலேநடந்தன. சங்கல்பம்யாவுமே ஸாயியின்முடிவே!
இதனைச்சொல்லும் ஒருகதைகளை இங்கேஇனிமேல் நாமும்காண்போம்!
'காகா மஹாஜனி'::
கோகுலாஷ்டமி விழாவைக்காண காகாமஹாஜனி ஷீர்டிசென்றார்
தரிசனம்செய்ததும் பாபாகேட்டார், "வீடுதிரும்பிட எப்போஉத்தேசம்?"
கேள்வியின்தன்மையைப் புரிந்திட்டமஹாஜனி ஆணைப் படியே செய்வதாய்ச்சொன்னார் மறுநாள்கிளம்பிட பாபாசொன்னதைக் கேட்டவர்மறுப்பின்றி வீடுதிரும்பிட
வேலையில்இவர்க்காய் காத்தலைஅறிந்தார் நோய்வாய்ப் பட்ட முதலாளிஇவரைத் திரும்பவும்வரும்படி எழுதியகடிதம் ஷீர்டிசென்று மீண்டும்வந்தது!
'வக்கீல் பாவ் ஸாஹேப் துமால்'::
இதனினும்மாறாய் இப்படிஒன்று நிகழ்ந்தவிதத்தினை இங்கே காண்போம்.!
துமாலெனும்வக்கீல் 'நிபாடு'க்குச்சென்றிடும் வழியினில்ஷீர்டி வந்தவர்கண்டார்
மேலொருவாரம் தங்கியேசென்றிட பாபாசொல்லவும் அதன்படிசெய்தார்
வழக்கினைவிசாரிக்கும் நீதிபதியும் வயிற்றுவலியினால் அவதியுறவே [660]
வழக்கின்விசாரணை தள்ளிப்போனது ஏழு நாட்கள் சென்றபின்தொடர
முடிவில்’துமாலும்’ வழக்கினைவென்றார்! கட்சிக்காரரும் விடுதலைஆனார்!
'திருமதி நிமோண்கர்'::
'நிமோனின்’ வதள்தார் ‘நானாஸாஹேப் நிமோண்கர்’ என்னும் பெருந்தகைஒருவர்
இல்லத்துணையுடன் ஷீர்டிவந்து மசூதிசேவையில் தம்பணிசெய்தார்
பெலாபூரில் இருந்திட்டதம்மகன் உடல்நலமின்றி இருப்பதைஅறிந்து
தாயவள்துடித்துச் சென்றிடநினைத்தார் நிமோண்கரோமறுநாள் திரும்பிடப் பணித்தார்
இருதலைக்கொள்ளி எறும்பாய்த்தவித்தத் தாயவள்நிலைக்கு பாபாஇரங்கினார் ‘ஸாதேவாதா’ முன்னம்நின்ற பாபாவைத்தொழுதிட, கனிவுடன் பாபா
"கவலையின்றி பெலாப்பூர்சென்று நான்குநாள்தங்கிப் பின்னரேவா!"
எனுமொருஇனிய அமுதவார்த்தைகள் தாயின்காதில் தேனாய்ப்பாய்ந்தன!
நானா ஸாஹேப் செய்ததோர் முடிவும் ஸாயியின் தீர்ப்பால் தோற்றுப் போனதே!
செல்வதும் இருப்பதும், கிளம்புதல்அனைத்தின் சங்கல்பம்யாவுமே ஸாயியின்முடிவே!
'நாஸிக் முலே சாஸ்திரி' ::
ஜோதிடக்கலையும் ஆறுசாஸ்திரமும் இன்னும்பலவும் கற்றதோர்அந்தணர்
‘முலே சாஸ்திரி’ எனுமோர்அக்னிஹோத்ரி ‘பாபுஸாஹேப்பூட்டி’யைக் காண ஷீர்டிவந்தார்
வந்தவர்பின்னர் பாபாவைக்கண்டிட பலருடன்சேர்ந்து மசூதிசென்றார்
பாபாஅங்கே சொந்தப்பணத்தில் மாம்பழம்வாங்கி பக்தருக்களித்தார்
நாற்புறம்அழுத்தி சாற்றினைத்தேக்கிப் பழத்தைஉறிஞ்சிடும் வகையினில் தருவார்
பெற்றவர்அதனை முழுவதும்பருகிக் கொட்டையும்தோலும்எறிந்திடஇயலும்!
வாழைப்பழத்தைத் தாமேஉரித்துத் தோலைத்தன்னிடம் வைத்தவர்தருவார்
பாபாகையின் ரேகைபார்த்திட சாஸ்திரிவேண்டிட மறுத்திட்ட பாபா [670]
நான்குவாழைப் பழங்களை அவரது கையிலளித்தார்
வாடாதிரும்பிய முலேசாஸ்திரி நீராடியபின் பூசனைசெய்தார்
லெண்டியைநோக்கிச் சென்றிட்டபாபா 'செந்நிற ஆடை உடுத்திடச்சற்று
செந்நிறப்பொடியைக் கொண்டுவா' என்றிட பக்தர்கள்விழித்தனர்
மதியவழிபாடு தொடங்கிடும்நேரம் முலேசாஸ்திரியை ஜோக் அழைத்தார்
மாலையில்வருவதாய்ச் சொன்னதும்பாபு ஸாஹேப் மட்டும் வழிபடச்சென்றார்
ஆசனமமர்ந்து ஆரத்தியேற்ற ஸாயிபாபா, பூட்டியைப் பார்த்து
புதிதாய்வந்த பிராமணனிடம் தக்ஷிணை வாங்கிடப் பணித்தார்
தகவலறிந்த முலேசாஸ்திரி 'தாம்ஏன் தரணும்? சீடனல்லவே'
என்றேகுழம்பி பூசையைநிறுத்தி விவரமறிந்திட மசூதி சென்றார்
தூயவரெனவேத் தம்மைக்கருதியே தூரத்தில்நின்றே மலர்களையெறிந்தார்
எறிந்தவர்கண்ட காட்சியில்வியந்து கைகளிரண்டையும் கூப்பியேநின்றார்!
மறைந்த'குருகோலப் ஸ்வாமி'யின்வடிவினைக் கண்ணெதிரேயவர் பாபாவில்கண்டார்!
பேச்சினைமறந்து, கனவல்லநிஜமே என்றேயுணர்ந்து திகைத்தேநின்றார்
ஆரத்திப்பாடலை அனைவரும்பாடிட இவரோதமது குருவினையழைத்தார்
பெருமையுணர்ந்து சிறுமையையொழித்து குருவின்காலடி தாமேபணிந்தார்
எழுந்தவர்கண்டார் பாபாதக்ஷிணை வாங்கிடும் நிகழ்வினை
பேரருட்சக்தியின் பெருமையையறிந்து தாமும்தக்ஷினை தந்துமகிழ்ந்தார்
செந்நிறத்துணியினை உடுத்திடும்சொல்லின் பொருளினையுணர்ந்த பக்தரும்மகிழ்ந்தார்
எவரால்விளக்கிட இயலுமிந்தப் புனிதரினற்புத லீலைமகிமையை! [680]
'ஒரு டாக்டர்'::
மாம்லத்தாரொருவர் தமதுநண்பராம் மருத்துவரொருவரை ஷீர்டியழைத்தார்
'ராமனேதெய்வம்! முகமதியர்முன்னர் பணிந்திடமாட்டேன்' என்றவர்மறுத்தார்
'பணிந்திடவேண்டா! வந்தால்போதும்' என்றவர்சொல்லிடச் சென்றிட விசைந்தார்
ஷீர்டியடைந்து மசூதிசென்றதும் அனைவர்க்கும்முன்னே டாக்டரே பணிந்தார்
காரணம்கேட்ட நண்பரைப்பார்த்து ராமரையங்கே கண்டதைச்சொன்னார்
திரும்பியநொடியினில் மீண்டுமங்கே பாபாஇருந்திடக் கண்டதும்வியந்தார்
பாபாதனக்கு அருள்செயும்வரையினில் மசூதிசெல்லவோ உணவினையுண்ணவோ
மாட்டேனென்றொரு சபதம்கொண்டவர் மூன்றுநாட்கள் இப்படிச்செய்தார்
நான்காம்நாளில் நண்பரொருவரின் அழைப்பினையேற்று மசூதிசென்றார்
'ஓ,டாக்டரா? யாரும்மையழைத்தது? ஏனிங்குவந்தீர்?' என்றேபாபா
வினவியசொல்லால் மனம்மிகவுருகிட அன்றையவிரவே அருட்காட்சிகண்டார் திரும்பிவந்தும் பதினைந்துநாட்கள் அதேநிலையினில் அவரும்களித்தார்
வேறெதும் நினைவின்றித் தனதுகுருவையே நினைத்திடல்வேண்டும்
என்பதேயிந்தக் கதைகள்காட்டிடும் நீதியென உணர்வோம். [687]
இன்னும்பல லீலைகளை அடுத்தினிக் காண்போம்!
ஸ்ரீ ஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!
[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
(To be continued)
Loading
0 comments:
Post a Comment